ஆறாம் வார்த்தை

14. Page

ஆறாம் வார்த்தை


بسم الله الرحمن الرحيم – إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة


'நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களது உயிர்களையும் உடமைகளையும் சுவர்க்கத்துக்குப் பகரமாக வாங்கிக் கொண்டான்' 

நிச்சயமாக உயிரையும் உடமையையும் அல்லாஹ்வுக்காக விற்று அவனுக்கு முழுமையாக அடிபணிவது எவ்வளவு இலாபகரமான வியாபாரம்..!! எவ்வளவு உயர்ந்த அந்தஸ்த்து..!! இதனை நீர் அறிய விரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதையை செவிமடுங்கள். ஒரு நாள் மன்னனொருவன் தனது குடிமக்களில் இருவருக்கு இருவேறு பயிர்நிலங்களை அமானிதமாகக் கொடுத்திருந்தான். அந்த இரு பயிர்நிலங்களிலும் தனித்தனியான தொழிற்சாலைகள், இயந்திர உபகரணங்கள், குதிரைகள், ஆயுதங்கள் என்பன காணப்பட்டன. தற்போது ஸ்தீரமற்ற சூழ்நிலை உருவாகி பேரழிவுதரும் யுத்தமொன்றுக்கான  நேரமாக மாறியிருந்தது. ஒன்றில் அழிவு அல்லது சேதம் எனும் நிலையே காணப்பட்டது.

தற்போது மன்னன் -தனது பூரண அருளின் விளைவாக- தனது தூதர்களில் மிக சங்கைக்குரிய ஓர் தூதரை பிரத்தியேகமாக அவர்கள் இருவரிடமும் அனுப்பிவைத்தான். அத்தூதர் உரியவர்களிடம் சென்று மன்னனின் அருள் நிறைந்த கடிதத்தை அவ்வாறே விளக்கினார் :-

• உங்களிடமுள்ள எனது அமானிதப் (அல வசரளவ) பொருள் வீணாகிப் போகாதிருக்க அதனை எனக்கே விற்றுவிடுங்கள். நான் அதனைப் பாதுகாக்கின்றேன். யுத்தம் முடிவுற்ற பின்னர் -அந்த அமானிதப் பொருள் உங்களுடையதைப் போன்று- மிகச் சிறந்த முறையில் அதனை மீள உங்களிடமே ஒப்படைத்து விடுவேன்.

•    மேலதிகமாக பெருந்தொகைப் பணமும் உங்களுக்குத் தருவேன்.

• அப்போது தொழிற்சாலையிலுள்ள அந்த அனைத்துக் கருவிகளும் உபகரணங்களும் எனது பெயரிலேயே தொழிற்படும். அதற்கான கூலியும் வெகுமதியும் ஒன்றிலிருந்து ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

• மேலும் அதிலிருந்து கிடைக்கப் பெறும் அனைத்து இலாபங்களும் உங்களுக்கே சொந்தம்.

• நீங்களோ இந்தப் பாரிய பணிகளை நிறைவேற்ற சக்திபெறாத பலவீனர்கள்ளூ தேவையுடையவர்கள். நான் அனைத்துப் பணிகளையும் அத்தியவசியத் தேவைகளையும் நிறைவேற்றித் தருவதாகப் பொறுப்பேற்கிறேன். ஆனால், அனைத்து நன்மைகளையும் வரவுகளையும் உங்களுக்கே தந்துவிடுவேன். உங்களுடைய இராணுவப் பிரியாவிடைத் தருணம் (அடைவையசல னளைஉhயசபந) வரை அதனை உங்களிடமே விட்டுவிடுவேன்.

இவைதான் ஐந்து கட்டங்களாக உங்களுக்குக் கிடைக்கும் பன்மடங்கு இலாபங்களாகும்.

நீங்கள் எனக்கு அதனை விற்காவிட்டால்,

• எல்லோரையும் போன்று அந்த அமானிதப் பொருள் உங்களை விட்டும் அழிந்து வீணாகிவிடும். எவராலும் அதனைப் பாதுகாக்க முடியாது என்பது திண்ணம்.

•   அந்தப் பெறுமதிமிக்க வெகுமதி உங்களைவிட்டும் தடைப்பட்டுவிடும்.

• கனிப்பொருட்களும் மதிப்பற்ற இயக்கு சக்தியும் இல்லாததால் மொத்தமாகவே அந்த இயந்திர உபகரணங்களும் அவற்றின் துல்லியமான பெறுமதிமிக்க அளவுகோல்களும் தனது பெறுமானத்தை இழந்துவிடும்.

•  அதனை நிர்வகிப்பதும், பராமரிப்பதும், கட்டிக்காப்பதும் உங்கள் மீதே கடமையாக மாறும். அது உங்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும்.

• அப்போது, நீங்கள் அமானிதத்துக்கு துரோகமிழைத்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவீர்கள்.

இவைதான் ஐந்து கட்டங்களாக உங்களுக்கக் கிடைக்கும் பன்மடங்கு நஷ்டங்களாகும்.

             'எனக்காக விற்றல்' என்பது ஓர் இராணுவ வீரனைப் போல் நின்று எனக்காகப் பணியாற்றுவதாகும். அப்போதுதான் நீங்கள் சாதாரண கைதிகளாக, கைவிடப்பட்ட நபர்களாக இருப்பதற்குப் பகரமாக மகத்துவமிக்க மன்னனின் சுதந்திரமான, பிரத்தியேகக் காவலாளியாக மாறுவீர்கள்'. மன்னனின் இந்த சங்கைமிகு கடிதத்தை அவர்கள் இருவரும் செவியேற்ற பின் அவர்களில் புத்தியுள்ளவர், 'இதோ நான் முழுமையாகக் கட்டுப்பட்டவனாக மனமுவந்து அந்த அமானிதத்தை விற்கின்றேன். ஆயிரமாயிரம் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்' எனக் கூறினார். ஆனால், பெருமையும் அகங்காரமும் சுயநலமும் கொண்ட மதுப்பிரியரான மற்றவர் அந்தப் பயிர்நிலத்தில் தொடர்ந்தும் தான் நிரந்தரமாக நிலைத்திருப்பதைப் போல் பூலோக அமளி துமளிகள், பூகம்பங்கள் அனைத்தையும் மறந்து, 'முடியாது... யார் இந்த மன்னன்! நான் எனது சொத்தை விற்கவோ, எனது ஓய்வையும் இன்பத்தையும் ஒருபோதும் இழக்கவோ மாட்டேன்' எனக் கூறினான்.

             சிறிது காலத்தின் பின் முதலாம் மனிதர் அனைத்து மக்களும் ஆசைப்படுமளவுக்கு உயர்படித்தரத்தை அடைந்தார். அவர் மன்னனின் அன்பைப் பெற்று மன்னனின் மாளிகையிலேயே சந்தோசத்தோடு வாழ்ந்தார் அடுத்தவர், மக்கள் அனைவரும் அவனைப் பார்த்து கவலை கொள்ளுமளவுக்கு மோசமான நிலையை அடைந்திருந்தான். 'இவன் இந்நிலையை அடையத் தகுதியானவன்தான். இவனது சந்தோசமும் சொத்தும் இவன் செய்த தவறாலே அழிந்து போயின. இதனாலே இவன் இந்த தண்டனையையும் வேதனையையும் அனுபவிக்கின்றான்' என கூறினார்கள்.

    அதிக எதிர்பார்ப்புக்களையும் பேராசைகளையும்; தன்னகத்தே கொண்டுள்ள ஆத்மாவே! இந்த உதாரணத்தை தொலைநோக்கியாகக் கொண்டு உண்மையை உணர்ந்துகொள்...!

• இங்கு மன்னன்தான் உனது இரட்சகன்ளூ உன்னைப் படைத்தவன்ளூ நிரந்தர மன்னன்.

• அந்தப் பயிர்நிலங்கள், இயந்திர உபகரணங்கள், கருவிகள், அளவீடுகள் என்பன நீ உனது வாழ்வில் உரிமை கொண்டாடுபவையும்ளூ நீ பெற்றிருக்கும் உடல், உள்ளம், ஆன்மா என்பவையும்ளூ கண், நாக்கு போன்ற வெளிப்படையான புலனுறுப்புக்களும்; பகுத்தறிவு, கற்பனை போன்ற மறைமுகமான புலனுணர்வுகளும் ஆகும்.

• சங்கைமிகு தூதர் என்பவர் எமது கண்ணியமிக்க தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

• தெய்வீகக் கடிதம் என்பது ஞானமிகு அல்குர்ஆன் ஆகும். அதுதான் நாம் பேசுகின்ற மகத்துவமிக்க வியாபரம் பற்றி இவ்வாறு பிரஸ்தாபிக்கின்றது. 'நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களிடமிருந்து அவர்களது உயிர்களையும் உடமைகளையும் சுவர்க்கத்துக்குப் பகரமாக வாங்கிக் கொண்டான்' 

• அல்லோல கல்லோலமிக்க போர்க் களம் என்பது நிலையற்ற இவ்வுலகம். அதில் அனைத்துமே மாறுகின்றதுளூ புரள்கின்றதுளூ அழிகின்றது. அது பகுத்தறிவுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் பின்வரும் வினாவை உணர்த்தி நிற்கின்றது.



15. Page

'அனைத்தும் எமது கரங்களைவிட்டும் நலுவிச் சென்று அழிந்து மறைந்து விடும் என்றிருந்தால் ஐயோ..! அவற்றை நிரந்தரமாகத் தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லையா?' இவ்வாறு அவனும் கேள்விகளைத் தொடுத்து சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென குர்ஆனின் வானலோக எதிரொலியொன்று அவனது செவிப்பறைகளைத் தட்டியது: 'ஆம்... உண்டு. அது ஐந்து கட்ட இலாபங்களைக் கொண்ட சிறந்த ஆறுதல்மிக்க வழிமுறை'

வினா:- அந்த வழிமுறைதான் என்ன?

விடை:- அந்த அமானிதத்தை அதன் உண்மையான சொந்தக்காரனுக்கே விற்றுவிடுவதாகும். இந்த வியாபாரத்திலுள்ள ஐந்து கட்ட இலாபங்களும் வருமாறு: 

முதலாவது இலாபம்: அழியும் செல்வம் நிரந்தரத்தைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த அழியும் வாழ்நாள் சங்கைமிகு நிரந்தர நித்தியனுக்காக செலவளிக்கப்பட்டால் அது நிரந்தரமாக மாறி நிலையான விளைவைக் கொடுக்கின்றது. அப்போது அந்த வாழ்நாளின் ஒவ்வொரு கணப்பொழுதும் விதைகளைப் போல் மாறி மண்ணில் புதைக்கப்படுகின்றன. அவை புறத்தோற்றத்தில் அழுக்கு படிந்திருந்தாலும் நிலையான உலகில் சந்தோசப் பூக்களையும் கதிர்களையும் உற்பத்தி செய்கின்றன. அவை கப்று வாழ்வில் தனிமையை போக்கக் கூடியதாகவும் ஒளிமயமானதாகவும் காட்சியளிக்கும்.

இரண்டாவது இலாபம்: சுவனத்தைப் போன்ற வெகுமதி வழங்கப்படும்.

மூன்றாவது இலாபம்: ஒவ்வொரு உடல் உறுப்பினதும் உணர்வினதும் பெறுமதி ஒன்றிலிருந்து ஆயிரம் வரை உயர்த்தப்படுகின்றது. உதாரணமாக பகுத்தறிவு ஓர் கருவியாகும். நீ அதனை அல்லாஹ்வுக்காக விற்காமல் மனோ இச்சையின் படி பயன்படுத்தினால் அது பலவீனமான, தொந்தரவளிக்கக்கூடிய, துரதிஷ்டமிக்க கருவியாக மாறுகின்றது. மேலும்,  பலவீனமான உனது தலையில் கவலைமிக்க கடந்தகால சோதனைகளையும்ளூ எச்சரிக்கும் எதிர்கால அச்சுறுத்தல்களையும் சுமத்தக்கூடிய, தீங்குபயக்கும் 'அபசகுணக் கருவியாக' அது இழிநிலையடைகின்றது. இதனாலேயே பாவம் செய்த மனிதன் பகுத்தறிவின் தொல்லையிலிருந்து விடுதலை பெற பெரும்பாலும் மது அல்லது கேளிக்கையை நோக்கி விரைகின்றான்.

ஆனால், நீ அதனை அதன் உண்மையான சொந்தக்காரனுக்கு விற்றுவிட்டு அவனுக்காகவே அதனைப் பயன்படுத்தினால் நிச்சயமாக அந்தப் பகுத்தறிவு இப்பிரபஞ்சத்திலுள்ள வரையறையற்ற அறிவுஞானப் புதையல்களையும், முடிவற்ற அருட்கடாட்சங்களையும் திறக்கும் புதிராக - திறப்பாக இருக்கும். இதன்மூலம் நிரந்தர இன்பத்தைப் பெற தன் சொந்தக்காரனைத் தயார்படுத்தும் 'தெய்வீக வழிகாட்டி' எனும் தரத்துக்கு பகுத்தறிவு உயர்வடைகின்றது. 

உதாரணமாக பார்வைப் புலனுறுப்பு - கண்- என்பது ஓர் யன்னல். அதனூடாக மனித உயிர் இந்த உலகை எட்டிப் பார்க்கின்றது. நீ அதனை அல்லாஹ்வுக்காக விற்காமல் உனது மனோ இச்சையின்படி பயன்படுத்தினால், அழகையும் நிரந்தரமற்ற தற்காலிக காட்சிகளையும் பார்ப்பதன் மூலம் அந்தக் கண் உடலியல் இச்சைக்காகத் தொழிற்படுகின்ற பாலியல் தரகராக மாறுகின்றது. எனினும், நீ உனது கண்னை அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருக்கின்ற அதன் உற்பத்தியாளனுக்கு விற்றுவிட்டு அவனது பாதையில், அவனது வழிகாட்டலின் கீழ் அதனைப் பயன்படுத்தினால் அந்தக் கண் பிரபஞ்சமெனும் இப்பாரிய புத்தகத்தின் வாசகனாகவும், இவ்வுலகில் தெய்வீக படைப்பிலுள்ள அதிசயங்களைக் காண்பதாகவும், புவி எனும் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் அருள் எனும் பூக்களிலுள்ள தேனை அருந்தும் பாக்கியம் பெற்ற 'தேனியாகவும்' தரமுயர்வடைகின்றது.

மூன்றாவது உதாரணம், நீ நாவின் சுவையுணர்வை அதன் ஞானமிக்க படைப்பாளனிடம் விற்காமல் உனது மனோ இச்சையின்படி குடலின் தேவைக்காகப் பயன்படுத்தினால் அந்நாவு குடல் எனும் தொழிற்சாலையினதும் குதிரைத் தொழுவத்தினதும் வாயிற்காவலாளியின் தரத்துக்கு தாழ்வடைகின்றது. மாறாக நீ அதனை தயாளனுக்கு, வாழ்வாதாரமளிப்பவனுக்கு விற்றுவிட்டால் நாவின் சுவையுணர்வு அல்லாஹ்வின் அருட்கஜானாக்களை நுணுக்கமாக பரிசோதிப்பதாகவும் எவ்விதத் தேவையுமற்ற வல்லவனின் சமையலறையிலுள்ள உணவுகளை நன்றியோடு பரீட்சிப்பதாகவும் தரமுயர்வடைகின்றது.

  பகுத்தறிவே! விழிப்புறு...!! பிரபஞ்ச சாவியின் தரத்துடன் ஒப்பிடுமிடத்து அபசகுணக் கருவி எவ்வளவு இழிவானது..!!!

பார்வைப் புலனுறுப்பே! நல்ல முறையில் பார்...!! அல்லாஹ்வின் வாசிகசாலையிலுள்ள பல்கலைகளை ரசிப்பவனின் தரத்துடன் ஒப்பிடுமிடத்து அற்ப பாலியல் தரகரின் நிலை எவ்வளவு இழிவானது..!!! நாவே! நல்லமுறையில் சுவை...!! விஷேட அருட்கடாட்சத்தை பரீட்சிப்பவனின் தரத்துடன் ஒப்பிடுமிடத்து தொழிற்சாலைக் காவலாளி, தொழுவத்தின் பாதுகாவலான் எனும் நிலை எவ்வளவு இழிவானது..!!!

இவ்வாறு நீ ஏனைய உறுப்புக்களையும் புலனுணர்வுகளையும் ஒப்பிட்டு நோக்கையில் ஒரு முஃமின் சுவனத்துக்குச் செல்ல தேவையான முழுத் தகுதியையும், ஒரு காபிர் நரகுக்குச் செல்ல தேவையான முழுத் தகுதியையும் சம்பாதித்துக்கொள்கின்றான் என்பதை அறிந்து கொள்வாய். அவர்கள் ஒவ்வொருவரும் தமது தராதரத்தை அடைந்து கொள்ளக் காரணம், முஃமின் தனது ஈமான் மூலம் தனது படைப்பாளனின் அமானிதப் பொருளை அவனது வழிகாட்டலின் கீழ் அவனுக்காகவே பயன்படுத்துவதும், காபிர் தனது படைப்பாளனின் அமானிதப் பொருளுக்கு மோசடி செய்து தனது மனோயிச்சையின் பெயரில் பயன்படுத்துவதுமாகும்.

நான்காவது இலாபம்: நிச்சயமாக மனிதன் பலவீனன், அதிகமாக சோதனைகளுக்கு உட்படுபவன்ளூ அவன் ஏழை, அதிக தேவைகளைக் கொண்டவன்ளூ மற்றும் இயலாதவன், அவனது வாழ்க்கைச் சுமையோ மிகக் கனதியானது. அவன் சங்கைமிகு பலசாலியை சார்ந்திருக்காவிட்டால்ளூ அவன் மீது தவக்குல் வைக்காவிட்டால்ளூ அவனிடம் முழுமையாக சரணடையாவிட்டால் நிச்சயமாக அவனது உணர்வுகள் நிரந்தர வேதனையில் தொடர்ந்திருக்கும். மேலும், கஷ்டங்களும் வேதனைகளும் சோதனைகளும் கவலைகளும் அவனை ஆட்கொண்டு எவ்விதப் பயனோ, விளைவோ இன்றி ஒன்றில் மதுப்பிரியனாக அல்லது கொடிய வேட்டை மிருகமாக அவனை மாற்றும்.

ஐந்தாவது இலாபம்: அந்த உடலுறுப்புக்கள், அவற்றின் உணர்வுகள் அனைத்தினதும் இபாதத்கள், தஸ்பீஹ்கள், அவற்றின் விலைமதிப்பற்ற பெறுமதிகள் என்பன –நீ அவற்றின் பால் மிகத்தேவையுடன் இருக்கும் நேரத்தில்- சுவனத்துக் கனிகளின் தோற்றத்தில் அவை உனக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் என்ற கருத்தில் துறைசார்ந்தவர்கள் மற்றும் அதனை உணர்ந்தவர்கள் யாவரும் உடன்படுகின்றனர்.

இவ்வாறு ஐந்து தராதரங்களைக் கொண்ட இந்த இலாபகரமான வியாபாரத்தை மேற்கொள்ளாவிட்டால் -அந்த இலாபங்களை நீ இழப்பதுடன்- மேலும் ஐந்து கட்ட நஷ்டங்களையும் சுமக்கவேண்டியேற்படும்.

முதலாவது நஷ்டம்: நீ அதிகமதிகம் நேசித்த உனது சொத்து செல்வமும் பிள்ளைகளும்ளூ நீ விருப்பத்தோடு அடிமைப்பட்டு வாழ்ந்த மனோயிச்சையும்ளூ நீ அனுபவித்த இளமையும், வாழ்வும் என அனைத்தும் உன்னை விட்டு நீங்குவதோடு அவற்றின் பாவச்சுமைகளையும் வேதனைகளையும் உன் முதுகில் அவை சுமத்திவிடுகின்றன.

இரண்டாவது நஷ்டம்: அமானிதத்திற்கு மோசடிசெய்த குற்றத்துக்காக நீ தண்டிக்கப்படுவாய். ஏனெனில் இந்தப் பெறுமதிமிக்க உறுப்புக்கள், புலனுணர்வுகள் அனைத்தையும் மிக அற்பமான விடயங்களில் நீ பயன்படுத்தியதால் உனக்கு நீயே அநீதியிழைத்துக் கொண்டாய்.

மூன்றாவது நஷ்டம்: இந்தப் பெறுமதிமிக்க உடல் உறுப்புக்கள், மனித புலனுணர்வுகள் அனைத்தையும் நீ மிருகத்தை விட மிக இழி தரத்துத்துக்கு தாழ்த்தியதன் மூலம் அல்லாஹ்வின் அறிவுஞானத்துக்கு எதிராக புனைந்துரைத்து அநீதியிழைத்துவிட்டாய்.

நான்காவது நஷ்டம்: 'இயலாமை, ஏழ்மை' எனும் பண்புகளைக் கொண்ட உனது பலவீனமிக்க முதுகில் 'பிரிவு, அழிவு' எனும் தாக்குதல்களால் வாழ்வின் பெரும் சுமைகளை சுமத்துவதன் மூலம் நீ நாள்தோறும் அழுதுபுலம்பி ஓலமிடுவாய். 

ஐந்தாவது நஷ்டம்: மறுமை வாழ்வின் ஈடேற்றத்துக்குத் தேவையானவற்றையும் நிரந்தர வாழ்வுக்கான அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதற்காக உனக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவு, உள்ளம், கண், நாக்கு போன்ற பரிசில்களை நரகின் வாயில்கள் திறக்கப்படுவதற்கான மோசமான அமைப்பில் நீயே மாற்றிக்கொண்டாய். இப்பொழுது நாம் வியாபாரத்தை உற்றுநோக்குவோம்..... இந்த வியாபாரம் நாம் விரண்டோடும் அளவுக்கு எமக்கு சுமையானதா? சிரமமானதா?.....!!! இல்லை, அது எவ்விதத்திலும் சுமையானதோ சிரமமானதோ அன்று. மனிதன் அடிப்படையில் ஹராத்தை நாடாத வகையில் எப்பொழுதும் தனது தேவை, விருப்பங்களை நிறைவு செய்து திருப்திப்படுமளவுக்கு ஹலாலின் வட்டம் விசாலமானது.

தெய்வீக கடமைகள் சுமையற்றதுளூ குறைவானது. அல்லாஹ்வுக்கு அடிபணிதல், அவனது படையில் இணைதல் என்பது வர்ணிக்க முடியாத இன்பத்தைக் கொண்ட கண்ணியமிக்கது. எனவே, ஓர் படைவீரன் என்றவகையில் 'மனிதனின் பணி' அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பித்து செயற்பட வேண்டும். கொடுப்பதும் எடுப்பதும் அல்லாஹ்வின் பாதையில் அமைய வேண்டும். அவனது சட்ட வரையறைக்குள் நின்று அவனது வழிகாட்டலின் கீழ் வாழ வேண்டும். தவறிழைத்து விட்டால் அவனிடம் மன்னிப்புக் கோரி மன்றாட வேண்டும். 'எமதிரட்சகனே! எமது தவறுகளை மன்னித்து விடுவாயாக! எம்மை உனது அடியார்களாக ஏற்றுக்கொள்வாயாக! மரணிக்கும் வரை உனது அமானிதப் பொருட்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக எம்மை ஆக்குவாயாக!'

-ஆமீன்-