NAVIGATION
ரிஸாலே-இ-நூர் தொகுப்பு
தொகுப்பாசிரியர்:
இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் அந்-நூர்ஸி
மொழிபெயர்ப்பு:
ஹைராத் மொழிபெயர்பகம்
மொழிபெயர்ப்பாளர்:
அஷ்கர் அரூஸ்
மேற்பார்வை மற்றும் திருத்தம்:
கலாநிதி ஹ{ஸைன் பாரூக்
ழியாஉர் ரஹ்மான்
வெளியீடு: வெளியீட்டிற்கான ஹைராத் நிறுவனம்;
மூலமொழி: அரபு மொழி
மொழிபெயர்க்கப்பட்ட மொழி: தமிழ்
குறிப்பு: இது, உஸ்மானிய துருக்கி மொழியில் அமைந்த புனித அல்குர்ஆனின் ஆன்மீக விளக்கவுரையான ரிஸாலே-இ-நூரின் மொழிபெயர்பாகும். மூலப் பிரதியில் காணப்படும் வசனங்களில் பொதிந்திருக்கும் துள்ளியமான அனைத்துக் கருத்துக்களையும் கவனத்திற் கொண்டு மிக நுட்பமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எமது மொழிபெயர்புச் செய்யப்ட்ட நூல்கள் வெளியிடப்படுதவதற்கு முன் நான்கு கட்டங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
1.ரிஸாலே-இ-நூரில் ஆழ்ந்த அறிவும், அரபு மற்றும் தமிழ் மொழிகளில் புலமையும் கொண்டவர்களால் இந்த மொழிபெயர்புப் பணி மேற்கொள்ளப்படல்.
2.மொழிபெயர்கப்பட்ட ரிஸாலாக்களில் கருத்துப் பொருத்தப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள துருக்கிய உஸ்மானிய மொழி, அரபு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை நன்கறிந்த ஒரு குழுவால் மேற்பார்வை செய்யப்படல்.
3. தமிழ் மொழித் துறையில் பாண்டித்தியம் பெற்றவர்களால் சரிபார்தல்.
4.மேற்பார்வை மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் வெளியீட்டுக்கான இறுதித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுதல்
இதனோடு சேர்த்து, இமாம் பதீஉஸ்ஸமான் ஸயீத் அந்-நூர்சியவார்கள்;;;; வார்த்;தைகள், ஒளிக்கீற்றுக்கள், கடிதங்கள், கதிர்கள் போன்ற தமது அடிப்படை மூலநூல்களிலிருந்து சில ரிஸாலாக்களை தெரிவு செய்து மூஸாவின் தடி, துல் பிகார், புதிர்கள், ஸிராஜ}ன் நூர், மற்றும் ஸிக்க-இ-தஸ்தீக் போன்ற தெகுப்புக்களில் ஒன்றுசேர்த்;தார். எனவே இமாம் பதீஉஸ்ஸமானால் தமது மூலநூல்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒழுங்குகள் எமது மொழிபெயர்பில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. மூலநூல்களின் கருத்துக்கள் சிதைவடையாமல் நாம் அவற்றை முன்வைக்க முயற்சித்துள்ளோம். அல்லாஹ் எமது இந்தப் பணியை அங்கீகரித்து மீஸானுல் ஹஸனாத்தில் சேர்த்து அருள் புரிவானாக.


