ஐந்தாம் வார்த்தை

12. Page

ஐந்தாம் வார்த்தை


بسم الله الرحمن الرحيم – إن اللهَ مع الذين اتقوا والذين هم محسنون

 

'நிச்சயமாக அல்லாஹ் தக்வா உடையோருடனும் நன்மை செய்வோருடனும் உள்ளான்' 


தொழுகையை நிறைவேற்றுவதும், பெரும் பாவங்களை (அழசவயட ளiளெ) விட்டு தவிர்ந்திருப்பதுமே மனிதனின் உண்மையான பணி என்பதனையும் அதுவே மனிதன் படைக்கப்பட்டதற்குப் பொருத்தமானதும் இயல்பானதும் என்பதனையும் நீர் அறிய விரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதைக்கு செவிசாயுங்கள்..!! பொதுப் போர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் களத்தில் யுத்தப் படைப்பிரிவொன்றில் பணியாற்றும் இரு படைவீரர்களில் ஒருவர் நன்கு பயிற்றப்பட்டர்ளூ தனது பணியை நேசிக்கும் கடமையுணர்வு கொண்டவர். மற்றவர் எவ்விதப் பயிற்சி நிபுணத்துவமற்றவர்ளூ தன்னையே அதிகம் நேசிப்பவர். இவ்வாறு நேர்முரணான பண்புகளைக் கொண்ட இருவர் காணப்பட்டனர்.

அவர்களில் தனது பணியை நேசிக்கக்கூடிய கடமையுணர்வு கொண்டவர் யுத்தப் பயிற்சியிலும் ஜிஹாதிலும் கவனம் செலுத்தினாரேயன்றி தனது வாழ்வாதார தேவை, உணவுத்தேவை பற்றி அறவே சிந்திப்பவராக இருக்கவில்லை. ஏனெனில், தனக்குரிய உணவு, ஆயுதம், கட்டுச்சாதம், நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளித்தல், அவசியமேற்பட்டால் தனக்கு ஊட்டிவிடுவதும் என அனைத்தும் 'நாட்டின் கடமை' என்பதை அவர் அறிந்திருந்தார். அவ்வாறே, தனது அடிப்படைப் பணி இராணுவப் பயிற்சி பெறுதலும் ஜிஹாதுக்குத் தயாராகுதலும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். என்றாலும், அவர் சில வாழ்வாதாரப் பணிகளிலும், ஆயுதங்களைத் தயார்படுத்துவதிலும், உணவு சமைப்பதிலும், பாத்திரங்களைக் கழுவி ஒழுங்குபடுத்தும் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் அவரிடம் 'நீ என்ன செய்கின்றாய்?' என்று வினவப்பட்ட போது 'நான் நாட்டுக்காக சில கட்டாயப் பணிகளில் ஈடுபடுகின்றேன்' என்றேயல்லாமல் 'நான் எனது வாழ்வாதாரத்துக்காக உழைக்கின்றேன்' என்று அவர் கூறவில்லை.

யுத்த நிபுணத்துவமற்ற சாப்பாட்டுப்பிரியரான அடுத்த படைவீரனைப் பொறுத்தவரையில் அவன் இராணுவப் பயிற்சியிலோ, யுத்தத்திலோ எவ்விதக் கவனமும் செலுத்தாது 'நான் ஏன் அதில் கவனம் செலுத்த வேண்டும்! அது நாட்டின் கடமை!!' என வினாத் தொடுப்பவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தனது வாழ்வாதாரத்தைப் பற்றியே சிந்திப்பவனாகவும் அதன் பின்னாலே அலைந்து திரிபவனாகவும் இருந்தான். இதனால் அவன் தனது இராணுவப்படைப் பிரிவையும் விட்டுவிட்டு வியாபாரம் செய்ய சந்தைக்குப் புறப்பட்டுவிட்டான். ஒரு நாள் பயிற்சி பெற்ற முதல் படைவீரர் அவனுக்கு இவ்வாறு உபதேசித்தார்:

'சகோதரனே! உனது அடிப்படைப் பணி இராணுவப் பயிற்சி பெறுதலும் யுத்தத்தில் ஈடுபடுவதுமே. நீ இதற்காகவே இவ்விடத்துக்கு வந்துள்ளாய். எனவே, எப்பொழுதும் நீ மன்னனையே சார்ந்திரு! அவன் ஒருபோதும் உன்னை பட்டினியில் போட மாட்டான். அது அவனது கடமையும் பணியும் கூட. நீயோ இயலாதவனாகவும் தேவையுடையோனாகவும் இருக்கின்றாய். உனக்கு உணவளிக்கக் கூடிய எவரையும் நீ எந்த இடத்திலும் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாய். இது யுத்தத்துக்கான நேரம்நீ அதனை நிறைவேற்றாவிட்டால் மன்னன் உன்னைப் பாவியாகக் கருதி உனக்கு தண்டனை வழங்குவான். ஆம், எமக்கு முன்னால் இரு பணிகள் இருக்கின்றன. ஓன்று மன்னனுடைய பணிளூ அது எமக்கு உணவளிப்பதாகும். சிலபோது நாம் அவனுக்குப் பணிவிடை செய்வோம்.

அடுத்தது எமது பணிளூ அது யுத்தப் பயிற்சி பெறுவதும் (அடைவையசல வசயiniபெ), யுத்தத்தில் கலந்து கொள்வதுமாகும் (அடைவையசல ளவசரபபடந). அதற்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை செய்து தந்து மன்னன் எமக்கு உதவிபுரிவான். ஐயோ! அந்த வழிபிறழ்ந்த படைவீரன் இந்தப் பயிற்றப்பட்ட படைவீரனின் உபதேசத்துக்கு செவிசாய்க்கவில்லையாயின் அவன் எவ்வளவு அபாயத்திலுள்ளான் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்!!

சோம்பேறி ஆத்மாவே!

•   அல்லோல கல்லோலப்பட்டுள்ள யுத்தகளம் என்பது குழம்பிப்போயுள்ள இவ்வுலக வாழ்வு.

•   பல படைப்பிரிவுகளைக் கொண்டுள்ள அந்த இராணுவப் படை என்பது மானிட சமூகம். அதிலுள்ள குறிப்பிட்ட படைப்பிரிவென்பது சமகால முஸ்லிம் சமூகம் (ஐளடயஅiஉ உழஅஅரnவைல ழக வாளை யபந).

• அந்த இரு படைவீரர்களில் ஒருவர் தக்வாவுடையவர்ளூ மார்க்கக் கடமைகளை அறிந்து அதன்படி கருமமாற்றும் முஸ்லிம் ளூ பெரும் பாவங்களை விடுவதற்காகவும் சிறுபாவங்களை தொடாதிருப்பதற்காகவும் ஷைத்தானுடனும் மனோ இச்சையுடனும் (றாiஅள) போரிடும் போராளி.

அடுத்தவர் தோல்வி கண்ட ஓர் பாவிளூ உண்மையாக வாழ்வாதாரம் (டiஎநடihழழன) அளிப்பவனை குற்றம் சாட்டுமளவுக்கு வாழ்க்கைச் சோலிகளில் மூழ்கியவர்ளூ அவர் தனது கடமைகளை உதாசீனம் செய்தவர்ளூ தனது ஒரு பிடி சோற்றுக்காய் எதிர்ப்படும் எல்லாப் பாவங்களையும் செய்தவர்.

• அந்த ஏவல்களும் பயிற்சிகளும்தான் இபாதத். அதில் தலையானது தொழுகை.

•   அதில் யுத்தம் என்பது பாவங்களிலிருந்தும் தீய பண்புகளிலிருந்தும் நிரந்தர அழிவிலிருந்தும் உள்ளத்தையும் ஆன்மாவையும் பாதுகாப்பதற்காக மனோ இச்சையுடனும் மனித, ஜின் வர்க்கத்திலுள்ள ஷைத்தானுடனும் மேற்கொள்ளும் யுத்தமாகும்.

•  அந்த இரு பணிகளையும் பொருத்தவரையில் ஒன்று உயிர்கொடுத்து உணவளிப்பதாகும். அடுத்தது வாழ்வளித்து வாழ்வாதாரமளிக்கும் கொடையாளியை ஆசையோடும் ஆர்வத்தோடும் வணங்கி வழிப்பட்டுவதும் அவனிடம் மன்றாடி அவனை சார்ந்து நின்று அவன் மீதே 'தவக்குல்' வைத்து அவனை நம்பி வாழ்வதுமாகும்.


13. Page

உண்மைதான், எவ்விதத் தேவையுமற்றவனின் மிகத் தெளிவான அற்புதமும் மிகக் கூர்மையான அறிவு ஞானமும் கொண்ட 'வாழ்வைப்' படைத்து, அதற்கு உயிர் கொடுத்தவனே வாழ்வை தொடரச் செய்வதற்கும் உணவளிப்பதற்கும் தகுதியானவன். அவனையன்றி வேறெவருக்கும் அது அசாத்தியமே. இதற்கு ஆதாரம் வேண்டுமா...? நிச்சயமாக மிகப் பலவீனமான பகுத்தறிவற்ற மிருகமும் மிக அழகான முறையில் போசிக்கப்படுகின்றது. இதற்கு மீன்களும், பழங்களிலுள்ள புழுக்களும் மிகச் சிறந்த உதாரணங்களாகும். அவ்வாறே மிக இயலாமையுடைய மென்மையான படைப்புக்களும் மிகச் சிறந்த முறையில் போசிக்கப்படுகின்றன. இதற்கு சிறுவர்களும் மிருகங்களின் குட்டிகளும் மிகச் சிறந்த உதாரணங்களாகும்.

ஆம், உண்மையில் ஹலாலான உணவை சம்பாதிப்பதற்கான வழி பலத்திலோ தெரிவுச் சுதந்திரத்திலோ அன்றி பலவீனத்திலும் இயலாமையிலுமே உள்ளது என்பதை அறிந்து கொள்ள மீன்களும் ஓநாய்களும்ளூ மிருகக்குட்டிகளும் வனவிலங்குகளும்ளூ மரங்களும் மிருகங்களும் எவ்வாறு போசிக்கப்படுகின்றன என்பதை ஒப்புநோக்கிப் பார்ப்பதே உமக்குப் போதுமான சான்றாகும். அப்படியெனில், தொழுகையை விட்டுவிட்டு வாழ்க்கைச் சோலிகளில் ஈடுபடுபவன் யுத்தப் பயிற்சிகளையும் அகழிகளையும் விட்டுவிட்டு சந்தைக்குச் சென்று வியாபாரம் செய்பவனைப் போன்றவன்.ةமனிதன் சக மனிதனுக்கு சுமையாக வாழாதிருக்க- தொழுகையை முடித்த பின் வாழ்வாதாரமளிக்கும் தனவந்தனனின் அருட்கடாட்சம் எனும் சமையலறையிலுள்ள வாழ்வாதாரத்தை-ரிஸ்க்கை-த் தேடிச்செல்வது போற்றத்தக்கது மாத்திரமன்றி அது கௌரவமும் வீரமும் கூட. அதேவேளை இபாததாகவும் அது கணிக்கப்படுகின்றது.

உண்மையில், மனித இயல்பும் அவனது உள தயார்நிலைகளும் அவன் இபாதத்துக்காகவே படைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில், மனிதன் தனது லோகாயுதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அடிப்படை பலத்தையும் செயலூக்கத்தையும் குறைந்தபட்சம் ஓர் சிட்டுக்குருவியின் அளவேனும் கொண்டில்லை. ஆனாலும் அவன் தனது மறுமை, ஆத்மீக வாழ்வுக்கு அத்தியவசியமான இபாதத், மன்றாட்டம், அறிவு, இயலாமை என்பவற்றின் மூலம் மிருகங்களுக்கான மன்னனாகவும் தலைவனாகவும் கருதப்படுகின்றான். அப்படியெனில், மனித ஆத்மாவே! நீ உலக வாழ்வை உனது முழு மொத்த இலக்காகக் கொண்டு அதற்காகவே எப்பொழுதும் செயற்பட்டால் நீ மிகச்சிறிய சிட்டுக்குருவியின் தரத்திலேயே இருப்பாய்.

மாறாக, மறுமை வாழ்வை உனது முழு மொத்த இலக்காக வைத்து இந்த உலக வாழ்வை அதற்கான விளைநிலமாகவும் வழிமுறையாகவும் ஆக்கி அதற்கேற்ப செயற்பட்டால் நீ இவ்வுலகில் விலங்குகளுக்கான மகத்துவமிகு தலைவனாகவும்; அல்லாஹ்வின் சங்கைமிகு விருந்தாளியாகவும் அவனிடம் மண்டியிடும் பாசமிகு செல்ல அடியானாகவும் இருப்பாய்.  இதோ உனக்கு முன்னால் இரு பாதைகள் இருக்கின்றன. நீ விரும்பியதை உன்னால் தெரிவு செய்து கொள்ள முடியும். நீ அருளாளனுக்கெல்லாம் அருளாளனிடம் நேர்வழியையும் ஈடேற்றத்தையும் தேடு !!