ஏழாம் வார்த்தை

16. Page


ஏழாம் வார்த்தை


இப்பிரபஞ்சத்தை மூடியுள்ள சில புதிர்களை அவிழ்க்கும் விளக்காகவும், மனித ஆன்மாவின் ஈடேற்றக் கதவுகளை திறக்கும் சாவியாகவும் காணப்படுகின்ற 'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்ளுதல்' என்பது பிரச்சினைகளைத் தீர்க்கும் மிகச்சிறந்த கருவியாக அமைவது எவ்வாறு? என்பதை நீ அறிய விரும்பினால்...,

மனிதன் பொறுமையுடன் தன்னைப் படைத்தவனிடம் தவக்குல் வைத்து தஞ்சமடைந்து, வாழ்வாதாரம் அளிப்பவனிடம் நன்றியுடன் பிரார்த்தித்து மன்றாடுவது எவ்வாறு பயனளிக்கின்றது? அவை அருமருந்தைப் போன்று மனிதனுக்குப் பயனளிக்கும் மாத்திரையாக அமைவது எவ்வாறு? என்பதை நீ அறிய விரும்பினால்..., அல்குர்ஆனுக்கு முழுமையாக செவிதாழ்த்தி, அதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு, தொழுகையை நிலைநாட்டி, பெரும்பாவங்களை விட்டும் விலகி வாழ்தல் என்பது மறுமைக்கான கட்டுச்சாதமாகவும்ளூ கடவுச்சீட்டாகவும்ளூ நிரந்தர பயணப் பாதையிலுள்ள கப்று வாழ்வின் ஒளியாகவும்ளூ முக்கியத்துவமும் பெறுமானமும் பிரகாசமும் கொண்ட கடவுச்சீட்டாகவும் அமைவது எவ்வாறு? என்பதை நீ அறிய விரும்பினால்..., இந்தச் சிறிய உருவகக் கதைக்கு செவிசாயுங்கள்.

ஒரு தடவை படைவீரனொருவன் வெற்றி, தோல்வியை மாறி மாறி வழங்கும் யுத்தகளத்தில் ஓர் திகில்கொள்ளும் சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டான். அவனது வலது, இடது புறங்களில் ஆழமான காயங்கள் பதிந்திருந்தன. அவனைத் தாக்கக் காத்திருக்கும் ஓர் சிங்கம் அவனுக்குப் பின்னால் கர்ஜித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் தூக்கு மேடை. அதில் அவனது நேசர்கள் ஒருவர் பின் ஒருவராக தூக்கிலிடப்படுகின்ற நிலையில் அடுத்து அவனது தவணைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். இவை ஒருபுறமிருக்க அவன் (தூக்கிலிடப்பட்ட பின்) நாடுகடத்தப்பட இருக்கின்ற பயணமோ மிக நீண்டது. இந்த அப்பாவி மனிதன் நம்பிக்கை இழந்தவனாக தனது நிலை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் ஹிழ்ர் (அலை) அவர்களைப் போன்ற நல்ல மனிதனொருவர் அவனது வலப்புறத்தில் தோன்றி இவ்வாறு உபதேசம் செய்தார்:

'நீ நம்பிக்கை இழக்காதே! நான் உனக்கு இரு மந்திரங்களை சொல்லித் தருகின்றேன். நீ அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தினால் அந்தச் சிங்கம் உனக்கு வசப்பட்ட குதிரையாக மாறும். அந்தத் தூக்கு மேடை உல்லாசமும் மகிழ்வும் நிறைந்த ஓய்வளிக்கும் ஊஞ்சலாக மாறும். அவ்வாறே உனக்கு இரு மாத்திரைகளைத் தருகின்றேன். நீ அவற்றை முறையாகப் பயன்படுத்தினால் துர்வாடை வீசும் அந்த இரு காயங்களும் 'முஹம்மதிய மலர்' எனப்படும் நறுமண ரோஜாக்களாக உருமாறும். அவ்வாறே நீ –பறந்து செல்வதைப் போன்று- ஒரு நாளில் ஒரு வருட தூரத்தை கடந்து செல்லக்கூடிய ஒரு பணயச்சீட்டையும் உனக்குத் தருகின்றேன். உன்னால் இதனை நம்ப முடியாவிட்டால்... நான் சொல்வது உண்மை என்பதனை அறிந்து கொள்ள இதனைக் கொஞ்சம் பரீட்சித்துப் பார்!

  ஆம்.., அந்தப் படைவீரன் அதனைக் கொஞ்சம் பரீட்சித்துப் பார்த்தபோது அந்த மனிதன் கூறுவது உண்மை என்பதனை விளங்கிக் கொண்டான். இப்படித்தான் பலவீனனான நானும் -ஸஈத்- கொஞ்சம் பரீட்சித்துப் பார்த்து அதனை உண்மை என அறிந்து கொண்டேன். பின்னர், திடீரென அந்தப் படைவீரன் சைத்தானைப் போன்று சூழ்ச்சியும் தந்திரமும் செய்து மதிமயக்கக்கூடியதொரு மனிதனைக் கண்டான். அந்த மனிதன் அதிகவர்ச்சியுடைய பொருட்களையும் அழகுமிக்க படங்களையும் சுமந்து வந்து அப்படைவீரனுக்கு முன்னால் நின்றான். 'நண்பா! வா...! நாம் மது அருந்தி, கேலிக்கூத்துக் கொண்டாடி மகிழ்வோம். இந்தக் கவர்ச்சிமிகு பெண்களின் படங்களைப் பார்த்து ரசிப்போம். இனிமையான பாடல்களைக் கேட்டும், அறுசுவை உணவுகளை உண்டும் இன்பம் அனுபவிப்போம்.'

வினா: ஆ..ஆ.. நீ இரகசியமாக என்ன முணுமுணுக்கின்றாய்?

விடை: மந்திரம்..!!!

வினவியவர்: இந்த மந்திரங்களை விட்டுவிடு...! எமது இன்பத்தைத் தொலைத்துவிட வேண்டாம்...! எமது கேளிக் கூத்துப் பரவசத்தைக் கெடுத்துவிட வேண்டாம்...! ஆஆஆ... உனது கையில் இருப்பது என்ன?

விடை: மாத்திரை...!!! வினவியவர்: அருந்தாதே..! அதை வீசிவிடு..! உனக்கு என்ன நடந்தது? நீ ஆரோக்கியமாகவல்லவா இருக்கின்றாய். இது கேலிக்கூத்துக்கான நேரம். ஆஆஆ.... இது என்ன ஐந்து அடையாளங்களைக் கொண்ட அட்டை?

விடை: பயணச்சீட்டு, விஷேட அட்டை .

வினவியவர்: அதனை கிழித்தெறியுங்கள்..! இந்த அழகிய வசந்த காலத்தைப் புறக்கணித்து விட்டு நாம் ஏன் பயணம் செய்ய வேண்டும்..!!!

இவ்வாறு அந்த மனிதன் அனைத்து சூழ்ச்சிகளையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி படைவீரனை திசைதிருப்ப மேற்கொண்ட முயற்சியில் அந்த அப்பாவி படைவீரன் கொஞ்சம் மனம் தளர்ந்து போனான். உண்மைதான், நிச்சயமாக மனிதன் ஏமாற்றமடைவதுண்டு. -நானும் இவ்வாறு சதிகாரனிடம் ஏமாந்து போயிருந்தேன்- திடீரென இடியைப் போன்றதொரு சத்தம் வலப்புறத்திலிருந்து மேலெழுந்து கூறியது: ((உன்னை எச்சரிக்கின்றேன்.... நீ ஏமாந்து விடாதே! அந்தச் சதிகாரனிடம் கூறு ''எனக்குப் பின்னாலுள்ள சிங்கத்தை கொலை செய்வதற்கான தந்திரமும்ளூ எனக்கு முன்னாலுள்ள தூக்கு மேடையை அகற்றும் சக்தியும்ளூ எனது வலது, இடது பக்கங்களிலுள்ள காயங்களுக்கு ஒத்தடமிடும் ஆற்றலும்ளூ எனக்கு முன்னாலுள்ள நீண்ட நெடு பயணத்திற்க்கு தடையாக நிற்கும் வல்லமையும் உன்னிடம் இருந்தால் இப்பொழுதே அவற்றை என் முன் செய்துகாட்டி விட்டு 'வா... நாம் கேலிக் கூத்துகளில் குதூகளிப்போம்' எனக் கூறு...! அவ்வாறு செய்ய முடியாவிடின் முட்டாளே! உன் வாயை மூடு..!! ஹிழ்ர் (அலை) போன்ற அந்த வானலோக மனிதன் கூறுவதை கூறட்டும்''))

•  இளமையில் சிரித்து தற்போது அதற்காக அழுகின்ற மனித ஆத்மாவே! அந்த அப்பாவிப் படைவீரன் நீதான் - மனிதன்.

•  அந்த சிங்கம்தான் உனது ஆயுட்காலம் ஆகும்.

• அந்தத் தூக்கு மேடைதான் பிரிவும், அழிவும். அதாவது எம்மோடு இருப்பவர்கள் அனைவரும் காலச்சுழற்சியில் எமக்குப் பிரியாவிடையளித்து விட்டு எம்மை விட்டும் மறைந்து விடுகின்றார்கள்.

• அந்த இரு காயங்கள்தான் தொந்தரவு செய்யும் எல்லையற்ற மனித இயலாமையும் நோவினைப்படுத்தும் முடிவற்ற மனித பலவீனமும் ஆகும்.


17. Page

•நாடுகடத்தல் அல்லது பயணம் என்பது 'ஆலமுல் அர்வாஹ்' இல் தொடங்கி தாயின் கருவறை, குழந்தைப் பருவம், முதுமைப் பருவம் உலகம், கப்று, மஹ்ஷர், ஸிராத் என நீண்டு செல்லும் சோதனைமிக்க பயணமாகும்.

•அந்த இரு மந்திரங்களும்தான் அல்லாஹ்வையும மறுமை நாளையும் ஈமான் கொள்ளுதல் ஆகும்.

ஆம்.. மரணம் என்பது 'அந்தப் பரிசுத்த மந்திரத்தின்' மூலம் ஓர் முஃமினை உலக சிறைச்சாலையிலிருந்து சுவனத்துப் பூந்தோட்டங்களுக்கும் அருளாளனின் சந்நிதானத்துக்கும் சுமந்து செல்கின்ற –புராக் எனும் வசப்பட்ட குதிரையைப் போன்றது. இதனாலே மரணத்தின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட பூரணம் பெற்ற மனிதர்கள் மரணத்தை விரும்பினார்கள். இல்லை!! மரணம் அவர்களிடம் வர முன் அவர்கள் மரணிக்க விரும்பினார்கள்.


• தூக்குக் கயிறின் தோற்றத்திலிருந்த அழிவு, பிரிவு, மரணம், காலச் சுழற்சி என்பன 'அந்த ஈமானிய மந்திரத்தின்' மூலம் சங்கைமிகு படைப்பாளனின் அற்புத சிற்பங்களையும்ளூ அபூர்வ வல்லமைகளையும்ளூ பசுமையான, குளிர்மையான, நிறந்தீட்டப்பட்ட அழகிய அவனது அருள்களின் பல்வகைப்பட்ட பிரதிபலிப்புக்களையும் பூரண இன்பத்துடன் உற்று நோக்குவதற்கான ஊடகமாக மாறுகின்றது. உண்மைதான், சூரிய ஒளியில் காணப்படும் நிறங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் புதுப்புது வடிவங்களில் மாறுவதும் சினிமாத் திரையில் படங்கள் மாறிமாறி வருவதும் அழகிய இதமான காட்சிகளை வழங்குகின்றன.

• அந்த இரு மாத்திரைகளும் அல்லது மருந்துகளும் யாதெனில் ஒன்றுளூ பொறுமையுடன் 'தவக்குல்'; வைப்பதும் படைப்பாளனின் வல்லமையில் சார்ந்து நி;ன்று அவனது அறிவு ஞானத்தில் தங்கியிருப்பதுமாகும். அப்படித்தானா? ஆம்... 'ஆகுக! என்றால் ஆகிவிடும்' எனும் வல்லமை கொண்ட பிரபஞ்ச மன்னனிடம் தனது 'இயலாமை' என்ற ஆவணத்தின் மூலம் சார்ந்திருக்கும் மனிதனுக்கு எந்தவொரு பயமும் எஞ்சியிருக்காது. அந்த மனிதன்தான் மிகப் பயங்கர சோதனைக்கு முன்னாலும் அருளாளனான தனது இரட்சகனிடம் திருப்தியுற்ற உள்ளத்துடன் 'நிச்சமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள், நிச்சயமாக அவனிடமே மீளுவோம்' எனக் கூறி அவனையே சார்ந்திருப்பான்.

உண்மைதான், அல்லாஹ்வை அறிந்தவன் தனது இயலாமையாலும் இறையச்சத்தாலும் இன்பத்தைச் சுவைக்கின்றான். ஆம், நிச்சயமாக அச்சத்திலும் ஓர் சுவையுண்டு. ஒரு வயதுக் குழந்தைக்கு அனைத்தையும் பிரித்தறியும் ஆற்றல் இருந்து அதனிடம் 'உனக்கு மிக இன்பகரமான, இனிமையான சந்தர்ப்பம் எது?' எனக் கேட்டால் 'நான் எனது பலவீனத்தையும் இயலாமையையும் உணர்ந்து எனது அன்புக்குரிய தாயின் மென்மையான அடிக்குப் பயந்த நிலையிலும் மீண்டும் அவளிடமே தஞ்சமடையும் நிலை' என்றே அது கூறும். எல்லாத் தாய்மார்களின் அன்பை ஒன்று சேர்த்தாலும் அது அல்லாஹ்வின் அன்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரேயொரு ஒளிக் கீற்றன்றி வேறில்லை. இதனால்தான் பூரணம் பெற்ற மனிதர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் தமது இயலாமையிலும் அவனுக்கு அஞ்சுவதிலும் மிகப் பெரும் இன்பத்தைக் கண்டுகொண்டார்கள். தமது இயலாமையைக் கொண்டு அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து, தமது பலத்தை விட்டும் முழுமையாக விலகி நின்று, அவனிடம் பாதுகாப்புத் தேடினார்கள். மேலும் தமது இயலாமையையும் பயத்தையும் தமது மன்றாட்டத்தின் போது முன்வைத்தார்கள்.

 அடுத்த மருந்து: நன்றியுணர்வுடனும் போதுமென்ற மனதுடனும் பிரார்த்திப்பதும் அருளாளனினதும், வாழ்வாதாரம் வழங்குபவனினதும் அருளில் சார்ந்திருப்பதுமாகும். அப்படித்தானா?

ஆம், முழுப்பிரபஞ்சத்தை அருள்களின் மேசையாகவும், வசந்தகாலத்தை பூகொத்தாகவும் ஆக்கி அப்பூகொத்தை அந்த மேசையின் அருகே வைத்து தூவியுள்ள மாபெரும் கொடைவள்ளலின் (அல்லாஹ்வின்) விருந்தாளிக்கு (மனிதனுக்கு) ஏழ்மையும் தேவையை வேண்டுவதும் எவ்வாறு சுமையானதாகவும் வேதனைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்..??? அதற்கு மாற்றமாக அவனுக்கு ஏழ்மையும் தேவையை வேண்டுவதும் எப்பொழுதும் இதமான இன்பமாகவே இருக்கும். அவன் இன்பம் என்றவகையில் ஏழ்மையை அதிகரிக்கவே எப்பொழுதும் செயற்படுவான். இதனாலேயே பூரணம் பெற்ற மனிதர்கள் ஏழ்மையைக் கொண்டு பெருமைப்பட்டார்கள். நீங்கள் இதனைப் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். இங்கு சொல்லவருவது ஏழ்மையை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்றாடுவதையாகும். மாறாக படைப்பினங்களின் முன்னால் பிச்சை கேட்பதையன்று.

• அந்தப் பயணச் சீட்டும், விஷேட அட்டையும் முறையே பர்ளான கடமைகள்ளூ குறிப்பாக தொழுகையும், பெரும் பாவங்களை தவிர்ந்திருப்பதுமாகும். அப்படித்தானா?

ஆம், இருள் சூழ்ந்த நீண்ட நெடு நிரந்தரப் பயணத்தில் கட்டுச்சாதம், ஒளி, புராக் என அனைத்தையும் பெற்றுக்கொள்வது -சான்றோரினதும் (வாந pநழிடந ழக ளிநஉயைட ளிசைவைரயட யடிடைவைநைள யனெ புழெளவiஉ றவைநௌள) அதனை உணர்ந்தவர்களதும் ஏகோபித்த முடிவின் படி- குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதிலும் அதன் விலக்கல்களை விட்டும் தவிர்ந்திருப்பதிலும் மாத்திரமே தங்கியுள்ளது. அதுவல்லாத விஞ்ஞானம், தத்துவம், கலை, அறிவுஞானம் போன்றன இப்பாதையில் ஒரு ரூபாய்க்கும் ஈடாக மாட்டா. அவற்றின் ஒளி கப்ரின் வாயிலுடன் முற்றுப்பெற்றுவிடுகின்றது. 

சோம்பேறி ஆத்மாவே! நீ இன்னும் புத்திபேதலிக்காதிருந்தால் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதும் ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பதும் எவ்வளவு இலகுவானது!! எவ்வளவு ஆறுதல் அளிக்கக்கூடியது!! அவற்றின் விளைவுகள் எவ்வளவு மகத்துவமானது!! பயனளிக்கக்கூடியது!! என்பதை அறிந்துகொள்வாய். அப்போது உன்னை பாவத்தின்பாலும் மடத்தனத்தின்பாலும் தூண்டிய அந்த மனிதனுக்கும் ஷைத்தானுக்கும் நீ கூறுவாய், 'மரணத்தை கொலை செய்வதற்கும்ளூ உலகிலிருந்து பிரிந்து செல்வதை தடுப்பதற்கும்ளூ மனிதனை விட்டும் ஏழ்மையையும் இயலாமையையும் நீக்குவதற்கும்ளூ கப்ருடைய வாயிலை மூடுவதற்கும் ஏதேனும் உபாயம் இருந்தால் கூறு!! நாம் உனக்குக் கட்டுப்படுவோம், இல்லாவிடின் உனது வாயை மூடிக்கொண்டிரு!! பிரபஞ்சம் எனும் இப்பாரிய பள்ளிவாயலில் அல்குர்ஆன் ஓதப்படுகின்றது. நாம் அதற்கு செவிசாய்ப்போம். அதன் ஒளியில் நாமும் ஒளி பெறுவோம். அதன் வழிகாட்டலைப் பின்பற்றி செயற்படுவோம். அதனை எமது நாவு நனைய ஓதுவோம்.

  உண்மைதான், நிச்சயமாக அதுதான் வார்த்தை. சத்தியவானிடமிருந்து வந்த சத்திய வார்த்தை. அது உண்மையையே உரைக்கின்றது, உண்மையையே வெளிப்படுத்துகின்றது, ஒளியுடைய அறிவு ஞானத்தையே பரப்புகின்றது.

யாஅல்லாஹ்! ஈமானின், குர்ஆனின் ஒளி மூலம் எமது உள்ளங்களை பிரகாசிக்கச் செய்வாயாக! யாஅல்லாஹ்! உன்பால் தேவையுடையவனாக ஆக்குவதன் மூலம் எம்மை செல்வந்தனாக்குவாயாக! உன்னை விட்டும் தேவையற்றவனாக ஆக்குவதன் மூலம் எம்மை ஏழையாக்கிவிடாதே! '