இரண்டாம் வார்த்தை

6. Page

இரண்டாம் வார்த்தை


بسم الله الرحمن الرحيم – الذين يؤمنون بالغيب


'அவர்கள் மறைவானவற்றை ஈமான் கொண்டவர்கள்'  


             ஈமானிலுள்ள மகத்துவமிகு சந்தோசமும் அருளும் எத்தகையது! அதிலுள்ள மாபெரும் இன்பமும் மன நிம்மதியும் எத்தகையது!! என்பதை நீர் அறியவிரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதைக்கு செவிசாயுங்கள்...!!!

ஒரு நாள் இரு மனிதர்கள் வியாபார (வசயனந) நிமித்தமாகவும் சுகபோகம் அனுபவிப்பதற்காகவும் (டநளைரசந) பயணம் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் சுயநலவாதியாகவும் அபசகுணம் கொண்டவராகவும் இருந்தார். மற்றவர் இறைவனை சார்ந்தவராகவும் அதிர்ஷ்டசாலியாகவும் இருந்தார். இருவரும் இருவேறு பாதையில் இருவேறு திசையை நோக்கி தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

             தன்னில் பெருமை கொண்டு, தன்னையே நேசிக்கும், அபசகுணம் கொண்ட சுயநலவாதி தனது அபசகுணத்தின் விளைவாகத் தோன்றிய தனது மனப்பதிவால் மோசமான கிராமம் ஒன்றைச் சென்றடைந்தான். அங்கே அநியாயக்கார கொடுங்கோலனின் கெடுபிடிகள், நாசகார செயற்பாடுகளைக் கண்டு ஓலமிட்டுத் திரிகின்ற, எதற்கும் வழியில்லாத அப்பாவி முதியோர்களையே அவன் எல்லா இடங்களிலும் கண்டான். அவன் வலம் வருகின்ற எந்தவொரு இடத்திலும் இத்தகைய கவலை நிறைந்த சோக நிலையையே அவன் அவதானித்தான். அவனுக்கு அந்த முழு கிராமமும் பொது மரணவீட்டைப் போன்று காட்சியளித்தது. இதனால் இந்த இருண்ட சோகத்திலிருந்து விடுதலை பெற மதுவைத் தவிற வேறெதனையும் அவனால் கண்டுகொள்ள முடியவில்லை. அவனுக்கு அனைவரும் எதிரியாகவும் அந்நியர்களாகவுமே தென்பட்டனர். அவ்வாறே அவன் எல்லா மூலை முடுக்குகளிலும் திகில்கொள்ளச் செய்யும் சடலங்களையும், நம்பிக்கையீனத்துடன் அழுது புலம்பும் அநாதைகளையும் கண்டு உள்ளம் நொந்து மிகுந்த வேதனைப்பட்டான்.

             இறைவனை சார்ந்து நின்று சத்தியத்தைத் தேடும் அடுத்த மனிதனைப் பொறுத்தவரையில் அவன் நற்பண்பாடுடையவனாக இருந்தான். அவனது மனப்பதிவின் விளைவாக மிகச் சிறந்ததொரு கிராமத்தை அவன் சென்றடைந்தான். இந்த நல்ல மனிதன் தான் நுழைந்த கிராமம் எங்கும் மகிழ்ச்சிகர கொண்டாட்டங்களையே கண்டுகழித்தான். எல்லா இடங்களிலும் சந்தோசக் களிப்புடன் கூடிய வைபவங்கள் மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் நடைபெரும் திக்ர் மஜ்லிஸ்கள் என்பனவே அவனுக்குத் தென்பட்டன. மக்கள் அனைவரும் அவனுக்கு நண்பர்களாகவும் உறவினர்களாகவுமே தோன்றினர். அவ்வாறே அவன் எல்லா மூலை முடுக்குகளிலும் மகிழ்ச்சி ஆராவாரங்களும் புகழாரக் கோசங்களும் நிறைந்த இராணுவப் பிரியாவிடை வைபவங்களையே கண்டான். மேலும் இராணுவச் சிப்பாய்களைத் தயார்படுத்தும் சந்தோசம் நிறைந்த அந்த வைபவத்தில் தக்பீர் , தஹ்லீல் களைக் கொண்ட கீதங்களையும் மேள தாளங்களையுமே செவியேற்றான்.

             இவ்வாறு, அபசகுணம் கொண்ட முதல் மனிதன் தனதும் பொது மக்களினதும் கவலைகளால் கடும் கவலை கொண்டிருந்தான். அதிர்ஷ்டசாலியான இரண்டாம் மனிதன் தனதும் பொது மக்களினதும் நிலைகண்டு களிப்புற்றதோடு வியாபாரத்தையும் வெற்றிகரமாக மேற்கொண்டு அல்லாஹ்வுக்கும் நன்றி செலுத்தினான். பின்னர், அவன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு மீளும் போது எதேர்ச்சையாக முதலாம் மனிதனைச் சந்திக்கின்றான். அவனது நிலை குறித்து விசாரித்து அறிந்து கொள்கின்றான். அப்போது அதிஷ்டசாலி மனிதன் கூறுகின்றான்:


7. Page

 'மனிதா! நீ புத்திபேதலித்துப் போய்விட்டாய். உனது உள்ளத்திலுள்ன மோசமான மனப்பதிவே உனது புறத்தோற்றத்திலும் பிரதிபலித்துள்ளது. நீ சிரிப்பை அழுகையாகவும் இராணுவத்தினரின் பிரியாவிடை வைபவத்தை கொலை, கொள்ளையாகவும் கற்பனை செய்துள்ளாய். நீ உனது இயல்பு நிலைக்கு மீள்..!! இந்த அழுக்குபடிந்த முகத்திரை உனது பார்வையை விட்டும் விலகினாலே உனது உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்த முடிவதோடு உன்னால் யதார்த்தத்தையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமாக அமையும். உண்மையில்; ஓர் சாம்ராஜ்ஜியம் - அதன் மன்னன் நீதி, அருள், பாதுகாப்பு, சக்தி, வல்லமை, அன்பு, நியதிகளைப் பேணல் என்பவற்றைப் பூரணமாகக் கடைபிடித்திருக்க மனித கண்களுக்கு முன்னால் அந்த சாம்ராஜ்ஜியம் பூரணத்துவத்தினதும் மேன்மையினதும் சுவடுகளை வெளிக்காட்டியிருக்கும் நிலையில் - உனது ஊகம் உனக்கு வெளிக்காட்டிய அமைப்பில் அது இருப்பது அசாத்தியமாகும்'

அதன் பின்னர் அந்த அபசகுணம் கொண்ட மனிதன் சுயநினைவுக்குத் திரும்பினான். 'ஆம், நான் மதியிழந்து போனேன். அல்லாஹ் உன்னைப் பொருந்திக் கொள்ளட்டும்!! நீ என்னை நரகப் படுகுழியிலியிலிருந்து காப்பாற்றினாய்!!' எனக் கைசேதத்துடன் கூறினான்.

மனித ஆத்மாவே! 

• இங்கு அபசகுணம் கொண்ட மனிதன் என்பவன் ஓர் காபிர் அல்லது பொடுபோக்கான ஓர் பாவி. அவனது பார்வையில் இந்த உலகம் ஓர் பொது மரணவீடு (pடயஉந ழக ரniஎநசளயட அழரசniபெ). அதில் வசிக்கும் எல்லா உயிரிகளும் பிரிவையும், அழிவையும் எண்ணி அழுது புலம்பும் அநாதைகள்.

மிருகம், மனிதன் அனைத்தும் 'மரணம்' எனும் கழுகுப்பிடிக்குள் வீழும் காலம் வரை சுதந்திரமாக விடப்பட்ட படைப்புக்கள். மலை, கடல் போன்ற பிரமாண்டமான படைப்புக்கள் உயிரில்லாத ஜடங்களை ஒத்தவை. அதுஅல்லாத அழியக் கூடிய, கவலைதரக் கூடிய, திகில் கொள்ளச் செய்யக்கூடிய அனைத்து ஊகங்களும் நிராகரிப்பாலும் வழிகேட்டாலும் ஏற்படக்கூடியவை. அவை அவனை மானசீக ரீதியில் வேதனை செய்கின்றன.

• அடுத்த மனிதனைப் பொருத்தவரையில் அவன் தனது படைப்பாளனை அறிந்து அவனை உண்மைப்படுத்துகின்ற ஓர் முஃமின் . அவனது பார்வையில் இந்த உலகம் அருளாளனை நினைவுபடுத்தும் ஓர் இல்லம்ளூ மனிதன், மிருகங்களுக்கான பயிற்சிக் களம்ளூ கற்பித்தல் கூடம்ளூ மனித ஜின் வர்க்கங்களுக்கான பரீட்சைக்களம் ஆகும்.

• மனிதனதும் மிருகங்கள் அனைத்தினதும் 'மரணம்' என்பது ஓர் இராணுவத்தினரின் பிரியாவிடை வைபவத்தைப் (னளைஉhயசபநள கசழஅ அடைவையசல னரவல) போன்றதாகும். தமது பணியை முடித்துக் கொண்டவர்கள்; இந்த அழியும் உலகத்திலிருந்து அமைதியான உலகுக்கு மானசீகரீதியில் சந்தோசத்துடன் நகர்கின்றார்கள். இதனால் புதிய பணியாட்கள் வருவதற்கும் செயற்படுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

• மனிதனதும் மிருகங்களதும் 'பிறப்பு' என்பது இராணுவப்படைப் பிரிவுக்கு சமூகமளித்து ஆயுதங்களைப் பெற்று தமது பணியை பொறுப்பேற்பதைப் போன்றதாகும். உயிரிகள் எல்லாம் சந்தோசமாகக் கடமையாற்றுகின்ற படைவீரர்களுக்கு ஒப்பானவர்கள். அவர்கள் திருப்தியோடு நேரான பாதையில் பயணிக்குமாறு பணிக்கப்பட்டவர்கள்.

• அங்கே மேலெழுகின்ற 'எதிரொலிகள்' அனைத்தும் ஒன்றில் தமது பணியை ஆரம்பிக்கும் போது மொழியும் தஸ்பீஹ் , திக்ர் -இறைநினைவு- ஆகவும் அதனை நிறைவு செய்யும் போது ஏற்படும் சந்தோசமாகவும் நன்றியுணர்வாகவும் அல்லது தமது பணியை பரவசத்துடன் மேற்கொள்ளும் போது உருவாகும் இசையாகவும் இருக்கும்.

இந்த முஃமினின் கண்ணோட்டத்தில் எல்லாப் படைப்பினங்களும் தனது அருளாளனான (ஊழஅpயளளழையெவந) மன்னனினதும், கொடைவள்ளலான (புநநெசழரள) எஜமானினதும் நேசம் கொண்டுள்ள பணியாட்கள்ளூ விருப்பத்துக்குரிய தொழிலாளிகள்ளூ நுண்ணிய ஏடுகள். அதுவல்லாத ஏனைய உயர்ந்த உண்மைகள், இன்பங்கள் அனைத்தும் அவனது ஈமானில் பிரதிபலிக்கும். அப்படியாயின் ஈமான் என்பது கருத்தில் சுவனத்து 'தூபா' மரத்தின் விதையை சுமந்துள்ளது. நிராகரிப்பு என்பது கருத்தில் நரகத்திலுள்ள 'கள்ளி' மரத்தின் விதையை மறைத்து வைத்துள்ளது. அப்படியாயின் பாதுகாப்பும் சாந்தி, சமாதானமும் இஸ்லாத்திலும் ஈமானிலுமன்றி வேறொன்றிலுமில்லை. ஆகவே நாம் என்றும் 'இஸ்லாம் மார்க்கத்தையும் பூரண ஈமானையும் எமக்களித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்' எனக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.