முதலாம் வார்த்தை
NAVIGATION
4. Page
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றோம். அவனிடம் உதவி தேடுகின்றோம். அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஸலாமும், ஸலவாதும் எங்கள் தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார் மீதும், அவரது தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
அன்புக்குரிய சகோதரனே!
நீங்கள் என்னிடம் சில உபதேசங்களைக் கேட்டிருந்தீர்கள். இதோ எனக்கும் உங்களுக்குமென சில யதார்த்தங்களையும் உங்களை ஓர் படைவீரனாகக் கருதி இராணுவத்துடன் தொடர்பான எட்டுச் சிறிய கதைகளையும் உதாரணங்களாகக் கூறுகின்றேன். செவிசாயுங்கள்! அடுத்தவரைவிட எனக்கு அதிகம் உபதேசம் தேவைப்படுவதாக நான் கருதுகின்றேன். ஒரு தடவை நான் எட்டு வார்த்தைகளை சற்று விரிவாக எனக்கே விளக்கியுள்ளேன். அவற்றை நான் எட்டு குர்ஆன் வசனங்களிலிருந்து பெற்றேன். இப்போது நான் அவற்றை எனக்கே சுருக்கமாக பொதுமக்களின் மொழியில் விளக்குகின்றேன். விரும்பியவர்கள் அதற்கு செவிசாய்க்கட்டும்!
முதலாம் வார்த்தை
' بسم الله – அல்லாஹ்வின் பெயரால் 'பிஸ்மில்லாஹ்' அனைத்து நன்மைகளினதும் ஆரம்பமாகும். நாமும் அதனைக் கொண்டே ஆரம்பிக்கின்றோம். மனித ஆத்மாவே! இந்த அருள்பொருந்திய வார்த்தை இஸ்லாத்தின் இலட்சினை என்பதைப் போலவே இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து வஸ்துக்களும் தன்னிலையில் மொழியும் வார்த்தையும் கூட என்பதனை அறிந்துகொள்! உண்மையில் 'பிஸ்மில்லாஹ்' என்பது ஓர் அழியா சக்திளூ ஓர் முடிவுறா அருள் என்பதை நீர் அறிய விரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதைக்கு செவிசாய்ப்பீராக...!
ஒரு நாடோடி மனிதன் அரேபியப் பாலைவனத்தில் பயணிக்கிறான். அவன் வழிப்பறிக் கொள்ளையர்களின் கெடுபிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் ஓர் கோத்திரத் தலைவனை அவசியம் சார்ந்து நின்று அபயம் பெறுகிறான். இல்லாவிடின் அவன் தனது எதிரிகளுக்கு முன்னால் தன்னந்தனியே மண்டியிட்டு தனது வரையறையற்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்குட்படுவான்.
இவ்வாறு, பாலைவனத்தில் இரு மனிதர்கள் பயணிக்கின்றார்கள். ஒருவர் பணிவானவர், மற்றவர் பெருமையடிப்பவர். பணிவுள்ளவர் ஓர் தலைவரை சார்ந்திருந்தார். பெருமையடிப்பவர் எவரையும் சார்ந்திருக்கவில்லை. தலைவர் ஒருவரை சார்ந்திருந்த மனிதன் எல்லாக் கடவைகளையும் பாதுகாப்பாகக் கடந்து சென்றான். குறுக்கிட்ட வழிப்பறிக் கொள்ளையர்களிடம் 'நான் குறித்த தலைவனிடமிருந்தே வருகின்றேன்' என அவன் கூறிய போது அவர்கள் அவனுக்கு வழிவிட்டனர். அவனை எந்தவொன்றும் தீண்டவில்லை. அவன் எந்தவொரு கூடாரத்தில் நுழைந்த போதும் இந்த நாமத்தின் பெயரால் அவனுக்கு மதிப்பும் மரியாதையுமே கிடைத்தது.
பெருமையடித்து எவரையும் சார்ந்திராத பயணியைப் பொருத்தவரையில் அவன் தனது பயணப் பாதையில் சொல்லொனா அபாயங்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டான். அவன் எதிரிகளுக்கு முன் அஞ்சி, நடுநடுங்கி, கூனிக்குறுகி இழிவடைந்தவனாக மாறினான். பெருமையடிக்கும் ஆத்மாவே! நீ தான் அந்தப் பிரயாணி. இந்த உலகம் தான் பாலைவனம். உனது இயலாமைக்கும் (pழறநசடநளளநௌள), ஏழ்மைக்கும் (pழஎநசவல) எல்லையே இல்லைளூ உனது எதிரிகளுக்கும் தேவைகளுக்கும் முடிவே இல்லை என்பதால் இந்தப் பாலைவனத்தின் நிலையான (நனெடநளளடல நவநசயெட) ஆட்சியாளனை, நிரந்தர (டிநபinniபெடநளளடல நவநசயெட) மன்னனை நீ சார்ந்திரு! அப்போது நீ படைப்பினங்களிடம் மண்டியிடுவதை விட்டும், எந்தவொரு அபாய நிகழ்வுக்கும் அஞ்சுவதை விட்டும் பாதுகாப்புப் பெறுவாய்.
உண்மைதான் இந்த வார்த்தை ஓர் அருள் பெற்ற பொக்கிஷம். உனது எல்லையற்ற இயலாமையும், வரையறையற்ற ஏழ்மையும் முடிவற்ற அருளுடனும் மாபெரும் சக்தியுடனும் உன்னை இணைக்கும். இந்த வார்த்தை அருளும், சக்தியும் பெற்றவன் முன்னிலையில் உனது இயலாமையையும், ஏழ்மையையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மன்றாட்டத்துக்காக (iவெநசஉநளளழச) பரிந்துரைக்கும். உண்மைதான்! இந்த வார்த்தையைக் கொண்டு செயற்படுபவனுக்கு உதாரணம் இராணுவத்தில் நாட்டிற்காகப் பணியாற்றும் படைவீரனை ஒத்தது. அவன் எவருக்கும் அஞ்சமாட்டான். அவன் சட்டரீதியில் நாட்டின் சார்பில் பேசுகின்றான். அவன் தனது பணிகள் அனைத்தையும் நிறைவாக மேற்கொள்வதோடு அனைத்துச் சவால்களுக்கு முன்னிலையிலும் வீரநடை போடுவான்.
5. Page
நாம் ஆரம்பத்தில் கூறியதைப் போல் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து வஸ்துக்களும் தன்னிலையில் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றன....அப்படித்தானே? ஆம் !! ஒருவர் நகருக்கு வருகிறார். நகர மக்களை பலாத்காரமாக ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் வேலை வாங்குகிறார்.... இந்த மனிதன் ஒருபோதும் தனது தனிப்பட்ட சுயபலத்தால் இந்தப் பணியை மேற்கொள்ள முடியாதுளூ அவன் படைவீரனாக இருக்க வேண்டும்ளூ நாட்டின் பெயரில் செயற்படுபவனாகவும் மன்னனை சார்ந்திருக்கவும் வேண்டும் என நீங்கள் உறுதியாகவே நம்புவீர்கள். இவ்வாறுதான் அனைத்து விடயங்களும் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றன. எந்தளவுக்கெனில் அணுவைப் போன்ற சின்னஞ்சிறு விதைகள் தமது தலைகளுக்கு மேலே பிரமாண்டமான மரங்களையும் மலைபோன்ற பெரும் சுமைகளையும் சுமந்து நிற்கின்றன! அப்படியாயின் ஒவ்வொரு மரமும் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றதுளூ அல்லாஹ்வின் அருட்கடாட்சத்திலிருந்து பழங்களை நிரப்புகின்றது. அது சந்தையில் வியாபாரியின் காட்சியறையைப் போன்று தொழிற்பட்டு எமக்குப் பழங்களைத் தருகின்றது.
ஒவ்வொரு தோட்டமும் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றது. அது வல்லமைமிக்கவனின் சமையலறையிலுள்ள அண்டாவாக மாறி பல்வகைப்பட்ட அருசுவையான உணவுகளை அபரிவிதமாக உற்பத்தி செய்து தருகின்றது. மாடு, ஒட்டகம், ஆடு போன்ற அருள்மிக்க மிருகங்களும் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றன. இதனால் அவை அருளாளனின் (அநசஉகைரட) பால் ஊற்றாக மாறி தூய நீரைப் போன்று இதமான பானத்தை வாரிவழங்குபவனின் (pசழஎனைநச) பெயரால் எமக்குத் தருகின்றன. மரங்களும், தாவரங்களின் வேர்களும், இழைகளும் 'பிஸ்மில்லாஹ்' மொழிகின்றன. அவை கரடுமுரடான கற்களையும் காய்ந்த மணலையும் மிக இலகுவாக ஊடறுக்கின்றன. அவை அல்லாஹ்வின் பெயரை, அருளாளனின் பெயரை மொழிவதால் அனைத்தும் அவற்றுக்கு வசப்படுத்தப்பட்டு விடுகின்றன. அவை அண்டவெளியில் கிளைகளைப் பரப்பி எவ்வாறு பழங்களை வெளிக் கொணர்கின்றதோ அவ்வாறே கரடுமுரடான பாறைகளிலும் வரண்ட மணலிலும் வேர்களை இலகுவாகப் பரப்பி நிலத்தின் கீழ் பழங்களை உருவாக்குகின்றன. அவ்வாறே, பல மாதகால கடும் உஷ்ணத்திலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் மென்மையான பச்சப்பசேலென்ற இலைகள் குளிர்மையாகக் காட்சியளிக்கின்றன.
இவையனைத்தும் இயற்கைவாதிகளுக்கு -அனைத்தும் இயற்கை எனக் கூறுவோருக்கு- (யெவரசயடளைவள) பெரும் சாட்டையடியாகவும் அவர்களது கண்களில் விரலை குத்துவதாகவும் அமைந்துள்ளனளூ - அவர்களது கண்கள் குருடாகட்டும்! – மேலும் இயற்கைவாதிகளே! நீங்கள் நம்பியிருக்கின்ற இந்தக் கரடுமுரடும், உஷ்ணமும் கூட அல்லாஹ்வின் கட்டளையின்றி தமது தொழிற்பாட்டை மேற்கொள்ள முடியாது என்பதையே உணர்த்துகின்றது. 'உனது தடியால் கல்லை அடிப்பீராக!' எனும் அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸாவின் தடி எவ்வாறு கற்களைப் பிளந்ததோ அவ்வாறே பட்டை போன்ற மென்மையான நார்கள் கற்களைப் பிளக்கின்றன. எவ்வாறு 'நெருப்பே! நீ அவருக்கு குளிராகவும் பாதுகாப்பாகவும் இரு!' எனும் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப இப்றாஹீம் (அலை) அவர்களின் உடலுறுப்புக்களை நெருப்பு தீண்டாததைப் போல் இலகுவாகத் தீப்பற்றக்கூடிய சிகரட் கடதாசியைப் போல் மென்மையான இலைகள் கடும் உஷ்ணத்துக்கு முன்னால் குளிர்மையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அனைத்துமே மானசீகரீதியில் அல்லாஹ்வின் பெயரை மொழிந்து, அவனது அருட்கொடைகளைப் பெற்று, அவனது பெயரைக் கொண்டே எமக்கு வழங்கும் போது நாமும் அல்லாஹ்வின் பெயரை -பிஸ்மில்லாஹ்- மொழிவதும், அவனது பெயரைக் கொண்டே கொடுப்பதும், எடுப்பதும் எமது கடமையாகும். அதேவேளை, அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு வழங்காத பொடுபோக்காளர்களிடமிருந்து எடுக்காதிருப்பதும் எமது கடமையாகும்.
வினா:- பொருட்களை இடைநடுவிலிருந்து விற்போருக்கே நாம் அதன் விலைப் பெறுமதியை வழங்க அதன் உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்க்கும் விலைப் பெறுமதி யாது?
விடை:- அந்த உண்மையான அருளாளன் (வசரந டிநநெகயஉவழச) இந்த செல்வங்கள், அருட்கொடைகளுக்குப் பகரமாக எம்மிடம் மூன்று விடயங்களை எதிர்பார்க்கின்றான்.
• இறை நினைவு - (الذكر)
• நன்றி - (الشكر)
• சிந்தித்தல் - (الفكر)
ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹ்' கூறுதல் 'இறை நினைவு' (சநஅநஅடிநசயnஉந ழக யடடயா) ஆகும். இறுதியில் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறி அல்லாஹ்வைப் புகழ்தல் 'நன்றி' (பசயவவைரனந வழ யடடயா) ஆகும். இடையில் அபூர்வமான பெறுமதிமிக்க இந்த அருட்கொடைகள் எவ்விதத் தேவையுமற்ற ஏகனின் அற்புத சக்தியும் (அசையஉடந), அவனது அருட்கடாற்சத்தின் பரிசும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதனை உணர்ந்து கொள்ளுதலே 'சிந்தித்தல்' (உழவெநஅpடயவழைn) ஆகும். ஓர் மன்னனிடமிருந்து உங்களுக்கு பெறுமதிமிக்கதொரு பரிசு கிடைக்கப் பெறுகின்றது. அதனை அனுப்பியவர் யாரென்பதை அறியாமல் கொண்டுவந்த பணியாளனின் பாதங்களை முத்தமிடுவது எவ்வளவு மடமை..!! உண்மையான அருளாளனை மறந்து விட்டு இடைநடுவே அருளை சுமந்து வருபவனை புகழ்வது, விரும்புவது மடமையிலும் பெரும் மடமை..!! ஓ மனித ஆத்மாவே! நீ இப்படிப்பட்ட மடையனாக இருக்காதிருக்க விரும்பினால்
அல்லாஹ்வின் பெயரால் (பிஸ்மில்லாஹ்) கொடு...!
அல்லாஹ்வின் பெயரால் (பிஸ்மில்லாஹ்) எடு...!
அல்லாஹ்வின் பெயரால் (பிஸ்மில்லாஹ்) ஆரம்பி...!
அல்லாஹ்வின் பெயரால் (பிஸ்மில்லாஹ்) செயற்படு...!
-வஸ்ஸலாம்-


