மூன்றாம் வார்த்தை

8. Page

 

மூன்றாம் வார்த்தை

 

بسم الله الرحمن الرحيم – يا أيها الناس اعبدوا


'மனிதர்களே! உங்கள் இரட்சகனை வணங்குங்கள்' 


'இபாதத்'  என்பது ஓர் மகத்தான வியாபாரமாகவும், சந்தோசமாகவும் எவ்வாறு அமைகின்றது என்பதனையும் 'பாவமும் மடத்தனமும்' எவ்வாறு மாபெரும் தோல்வியாகவும், அழிவாகவும் மாறுகின்றது என்பதனையும் நீர் அறிய விரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதையை செவிமடுங்கள்..!!

ஒரு நாள் தூர நகரொன்றுக்குப் பயணிப்பதற்கான கட்டளையுடன் இரு படைவீரர்கள் தமது பயணத்தைத் தொடர்கின்றார்கள். இருவரும் தமது பயணப் பாதையில் ஓர் முக்கிய சந்தியை அடைகின்றார்கள். அவ்விடத்தில் பாதை இரண்டாகப் பிரிகின்றது. அங்கே ஓர் மனிதன் நின்றுகொண்டு அவ்விருவருக்கும் பாதை வழிகாட்டல்களை இவ்வாறு வழங்கிக் கொண்டிருந்தார்: 'வலப்புறத்தால் செல்கின்ற இந்தப் பாதை எவ்விதத் தீங்குமற்றது. அதில் பயணிக்கின்ற தொன்னூறு வீதமானோர் இலாபத்தையும் பெரும் மன நிம்மதியையும் பெற்றுக் கொள்வது உறுதி. அதோ இடப்புறத்தால் செல்கின்ற பாதையில் பயணிக்கின்ற தொன்னூறு வீதமானோர் எவ்விதப் பயனையும் பெறாததோடு அவர்கள் தீங்கிழைக்கப்படுவதும் உறுதி.

இவ்விரு பாதைகளும் தூரத்தில் சரிசமனானவை. எனினும் இரண்டுக்கு மத்தியிலும் ஒரு வேறுபாடு மாத்திரம் உண்டு. அது, இடப்புறப் பாதையில் பயணிப்பவருக்கு எவ்விதக் கட்டுப்பாடோ, ஒழுங்கோ கிடையாது. அவர் ஆயுதமோ, பயணப் பொதியோ சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அவர் புற சௌகரியத்தையும் போலி ஓய்வையும் உணர்வார். ஆனால், இராணுவ ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ள வலப்புறப் பாதையில் பயணிப்பவரைப் பொருத்தவரையில் அவர்; நான்கு கிலோ எடையுள்ள அத்தியவசிய உணவுப் பொதியையும் எதிரியை மிகைக்கும் சக்தியைக் கொண்டுள்ள இரண்டு கிலோ நிறையுள்ள அரச ஆயுதத்தையும் சுமந்து செல்வது கடமை.'

இந்த இரு படைவீரர்களும் இந்த மனிதனின் உபதேசத்தை செவியேற்றனர். பின்னர் அவர்களில் அதிஷ்டமிக்கவர் வலப்புறமாக தனது பயணத்தைத் தொடர்ந்தார். தன்னோடு சுமக்கவேண்டிய சில கிலோ நிறையுள்ள பயணப் பொதியையும் தனது முதுகில் சுமந்து கொண்டார். எனினும் அவரது உள்ளமும் ஆன்மாவும் பல கிலோ நிறையுள்ள பயங்கரங்களிலிருந்தும் குத்துப் பேச்சுக்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றிருந்தன. மறுபுறத்தில், துரதிஷ்டம் கொண்ட அடுத்த படைவீரன் தனது இராணுவப் பணியைத் துறந்து சட்டம், ஒழுங்குக்குக் கட்டுப்பட மறுத்து இடப்புறத் திசையில் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அவனது உடல் சில கிலோ நிறையுள்ள சுமையை சுமக்காவிடினும் அவனது உள்ளம் பல்லாயிரம் கிலோ குத்துப் பேச்சுக்களால் பலவீனமுற்றிருந்தது. அவனது ஆன்மா வரையறையற்ற அச்சங்களால் திகில்கொள்ளப்பட்டும் இருந்தது. அவன் தனது பாதையில் ஒவ்வொருவரிடமும் கையேந்திக் கொண்டும், தான் காணும் எந்தவொரு நிகழ்வுக்கும் முன்னால் அஞ்சி நடுநடுங்கிக் கொண்டும், தான் செல்லவேண்டிய இடம் வரை தனது பயணத்தைத் தொடர்ந்தான். இறுதியில் அவன் பாவிகளினதும் துரோகிகளினதும் தண்டனையையே அங்கே கண்டுகொண்டான்.

இராணுவ ஒழுங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டு தனது பயணப் பொதியையும் ஆயுதத்தையும் சுமந்து கொண்டு வலப்புறமாகப் பயணித்த படைவீரனைப் பொருத்தவரையில் அவர் உள்ளம், உணர்வு திருப்தியுற்ற நிலையில் எவருடைய குத்துப் பேச்சுக்கு உட்படாமலும் எவருக்கும் அஞ்சாமலும் தான் செல்ல வேண்டிய நகரைச் சென்றடைந்தார். அங்கே அவர் தனது பணியை மிகச்சிறப்பாகச் செய்து முடித்த கண்ணியமிக்க படைவீரனுக்குரிய வெகுமதியைப் பெற்றுக் கொண்டார்.

ஓ கட்டுக்கடங்காத மனித ஆத்மாவே!

• அந்த இரு பயணிகளில் ஒருவர் தெய்வீக சட்டத்துக்குக் கட்டுப்பட்டவரையும் அடுத்தவர் மனோ இச்சையைப் பின்பற்றும் பாவியையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.

• அந்தப் பயணம்தான் 'ஆலமுல் அர்வாஹ்' (வாந றழசடன ழக ளிசைவைள) இல் தொடங்கி கப்ரைக் கடந்து மறுமைவரை தொடரும் வாழ்க்கைப் பயணம்.

• அந்தப் பயணப் பொதியும் ஆயுதமும் முறையே இபாதத்தும் தக்வாவுமாகும். இபாதத் என்பது புறத்தோற்றத்தில் சுமையாக இருந்தாலும் யதார்த்தத்தில் வர்ணிக்க முடியாத மென்மையையும் மன நிம்மதியையும் கொண்டுள்ளது. இதனால்தான் அடியான் தொழுகையில் 'அஷ்ஹது அல்லாயிலாக இல்லல்லாஹ்' - படைப்பாளன், ரிஸ்க் (வாழ்வாதாரம்) அளிப்பவன் அவனையன்றி வேறு யாருமில்லை; நன்மையும் தீமையும் அவனது கையிலேயே உள்ளது; அவன் ஞானமிக்கவன்ளூ அவன் வீனாக எதனையும் செய்யமாட்டான்; அவன் அருளாளன், அதிகமாக நன்மை செய்பவன், இரக்ககுணமுடையவன் என இறைஞ்சுகின்றான்.

இந்த அடியானது நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா விடயங்களிலும் அவன் அருட்கடாட்சத்தின் வாயிலைக் காண்கின்றான். 'துஆ' மூலம் அதனைத் தட்டுகின்றான். தனது இரட்சகனின் கட்டளைக்கு அனைத்தும் வசப்படுத்தப்பட்டுள்ளதை நினைத்து அவனில் தஞ்சம் புகுகின்றான். அவனிடமே 'தவக்குல்' வைத்து அனைத்துப் பிரச்சினைகளிலும் அவனிடமே சார்ந்து நின்று பாதுகாப்புப் பெறுகின்றான். அவனது ஈமான் அவனுக்குப் பூரணப் பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகின்றது. உண்மைதான், எல்லா யதார்த்தபூர்வ நன்மைகளிலும் காணப்படுவதைப் போன்று 'ஈமானும், அடிமைத்துவமும்' வீரத்தின் ஊற்றாகும். எல்லாப் பாவங்களிலும் காணப்படுவதைப் போன்று 'வழிகேடு' கோழைத்தனத்தின் ஊற்றாகும்.


9. Page

அல்லாஹ்வை வணங்குபவர் பூரண ஒளி பெற்ற உள்ளத்தைக் கொண்டவர். இப்பூமிப் பந்து வெடிகுண்டாக மாறி வெடித்துச் சிதறினாலும் அவரை அது பயமுறுத்தாது. மாறாக, அவர் பிரமிக்கத்தக்க ஆச்சரியத்துடன் எவ்விதத் தேவையுமற்றவனின் அற்புத வல்லமையைக் கண்டுகொள்வார். ஆனால், பெரும் பகுத்தறிவு வாதி எனச் சொல்லப்படுகின்ற பிரபல்யமான தத்துவஞானி ஒருவர் –ஆனாலும் அவர் உள்ளம் இறந்த ஓர் பாவி- பூமியிலிருந்து கொண்டு வானத்தில் வலம் வரும் உடுவொன்றை கண்டு நடுநடுங்குகின்றார் : 'ஐயோ! இந்த சுற்றித்திரியும் உடு எமது புவிப் பந்தில் மோதிவிடக்கூடாது!!' என அங்கலாய்த்து கற்பனையில் மூழ்குகின்றார். (உண்மையில் ஒரு காலத்தில் அமெரிக்கா இத்தகு உடுக்கலைக் கண்டு நடுநடுங்கியது. அவர்களில் அதிகமானோர் இரவு வேளையில் தமது வீடுகளை விட்டுவிட்டு வெளிக் கிளம்புபவர்களாக இருந்தார்கள்)

ஆம், மனிதனின் தேவைகள் எண்ணற்றவையாக இருக்க அவற்றோடு ஒப்பிடும் போது அவனிடமுள்ள மூலதனம் பூச்சியத்தைப் போன்றது. அவன் எதிர்கொள்கின்ற வரையறையற்ற சோதனைகளுடன் ஒப்பிடும் போது அவற்றை எதிர்கொள்வதற்காக அவன் கொண்டுள்ள பலமும் சக்தியும் பெறுமானமற்றது. அப்படியாயின், அவனது சக்தியும் மூலதனமும் கைக்கெட்டிய தூரத்திலிருக்க அவனது ஆசைகளும், விருப்பங்களும்ளூ சோதனைகளும், கவலைகளும் பார்வையும் கற்பனையும் எட்டுமளவு பரந்துபட்டவை, விசாலமானவை.

இவ்வாறுதான், பார்வையையும் அறிவையும் மொத்தமாகவே இழக்காத மனிதன் நிச்சயமாக இபாதத் தவக்குல் தவ்ஹீத் தஸ்லீம் அனைத்துமே பலவீனமானதும் மிகவும் தேவையுடையதுமான மனித ஆத்மாவுக்குரிய மிகப் பெரிய இலாபம், மிகப் பெரிய சந்தோசம், மிகப் பெரிய அருள் என்பதை உணர்ந்து கொள்வான். அபாயகரமான பாதையில் பத்தில் ஒரு வீதம் தான் தீங்கிருப்பதாக வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பான பாதையை முற்படுத்த வேண்டும் என்பதே சாதாரண அறிவு. –நாம் இங்கு பேசுகின்ற- அடிமைத்துவத்தின் பாதை தீங்கேயில்லாத நிரந்தர சந்தோசப் புதையலை தொன்னூற்றொன்பது வீதம் கொண்ட பாதை. பாவமும் மடத்தனமும் கொண்ட பாதையில் எவ்வித நன்மையும் இல்லை என்பதை பாவியே ஏற்றுக்கொள்கின்றான். அதிலே தொன்னூற்றொன்பது வீதம் நிரந்தர, துரதிஷ்டமிக்க அழிவு இருப்பதாக ஏகோபித்த அடிப்படையில் எண்ணற்ற துறைசார் நிபுணர்களும் அதனை உணர்ந்தவர்களும் தீர்க்கமாகக் குறிப்பிடுகின்றனர்.

முடிவு: அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலும், இபாதத் செய்வதிலுமே மறுமை ஈடேற்றமும் உலக ஈடேற்றமும் தங்கியுள்ளது. அப்படியெனில், நாம் எப்பொழுதும் 'கட்டுப்பட்டு வாழ உதவிய அல்லாஹ்வுக்கு எல்லாப் புகழும்' எனக் கூறுவதும் நாம் முஸ்லிமாக இருப்பதற்குக் காரணமான அல்லாஹ்வுக்கு எப்பொழுதும் நன்றி பாராட்டுவதும் எமது கடமையாகும்.