'அவன்' அவன் தூய்மையானவன். அவனது பெயரைக் கொண்டே ஆரம்பிக்கின்றேன். அனைத்தும் அவனது புகழைத் துதி செய்கின்றன.

23. Page

10. 'அவன்' அவன் தூய்மையானவன். அவனது பெயரைக் கொண்டே ஆரம்பிக்கின்றேன். அனைத்தும் அவனது புகழைத் துதி செய்கின்றன.


என்றும் எப்பொழுதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உங்களுக்கு உண்டாவதாக!


எனது விசுவாசமகிக்க, கண்ணியத்தக்குரிய சகோதரர்களே!


  சகோதரர்களே! சடவுலகில் காற்று எனும் பக்கத்தை வாசித்த போது எனக்குத் தென்பட்ட ஏகத்துவம் பற்றிய ஒரு விடயத்தை அவதானித்தேன். 'அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் இல்லை' 'அவன் அல்லாஹ் ஒருவன்' என்ற வசனங்களில் உள்ள 'அவன்' பற்றி கற்பனையில் சிந்தனாரீதியான ஒரு பயணத்தை மேற்கொண்டேன். உண்மையில் ஈமான் என்பது எவ்வளவு இலகுவானது, அவசியமானது. ஷிர்க்கும், வழிகேடும் தவிர்ந்துகொள்ள வேண்டிய பல பிரச்சினைகளையுடைய பல்லாயிரக்கணக்கான அசாத்தியங்கள். இந்தப் பரந்த விடயத்தை சுருக்கமாக நான் உங்களுக்கு விளக்க முனைகின்றேன்.


  உண்மைதான், ஒரு பாத்திரத்திலுள்ள ஒரு பிடி மண் பல வகை பூக்களின் உருவாக்கத்துக்கான சேர்க்கைகளைக் கொண்டுள்ளது. இதனை நாங்கள் இயற்கையிடமும் பௌதீக காரணங்களிடமும் விட்டுவிட்டால் ஒன்றில் அந்தப் பாத்திரத்தில் நூற்றுக்கணக்கான இயந்திரங்கள், சிறிய மானசீக தொழிற்சாலைகள் பூக்களின் எண்ணிக்கைக்கேற்ப இருக்க வேண்டும். அல்லது அந்தச் சிறிய கைப்பிடியளவு மண்ணிலுள்ள அணுக்கள் ஒவ்வொன்ரும் இந்தப் பல்வகைப்பட்ட வித்தியாசமான தனித்தவங்களையும் உயிர்த்துடிப்புள்ள உபகரணங்களையும் கொண்டுள்ள பூக்களை உருவாக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு அணுவும் தன்னிகரற்ற அறிவையும் முடிவற்ற வல்லமையையும் கொண்டிருக்க வேண்டும்.


  இவ்வாறுதான் அர்ஷின் ரஹ்மானின் கட்டளைப்படி இயங்கும் -விரல் நுனியளவும் மூச்சுக்களின் அளவும் உடைய 'அவன்' என்ற வார்த்தையில் உள்ள- காற்றிலுள்ள ஒவ்வொரு அலகிலும் மைநிலையங்கள் (ஊநவெசந) இருக்க வேண்டும். அவை உலகிலுள்ள வரையற்ற பேச்சுக்களையும் அலைபேசிகலையும் அறிவிப்புக்களையும் தந்திகளையும் நகர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இவை அனைத்தையும் ஒரு நொடியில் உரிய இடத்துக்கு வேகமாக நகர்த்த முடியுமாக இருக்கும்.


  அல்லது 'அவனது' காற்றின் ஒவ்வொரு பகுதியிலிலுள்ள அணுவுக்கு மாத்திரமன்றி அதன் மூலக் கூறுகளிலுள்ள ஒவ்வொரு அணுவுக்கும் கருத்தியல் ஆளுமைகள் இருக்க வேண்டும். அவை தொலைபேசியின், தந்தியின், வானொலியின் அனைத்து பணியாட்களின் எண்ணிக்கைக்கும் ஏற்ப இருக்க வேண்டும். அவை அவர்கள் அனைவரது மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும். ஏக நேரத்தில் ஏனைய அணுக்களுக்கு அவற்றை அறிவிக்க வேண்டும். உண்மையில் இந்நிலை காற்றில் காணப்படுகின்றது. காற்றின் ஒவ்வொரு பகுதியும் அந்த இயல்பைக் கொண்டிருக்கின்றது.


  நிராகரிப்பாளர்கள், இயற்கைவாதிகள், சடவாதிகள் போன்றோரின் கணிப்பில் ஒன்று மாத்திரமல்ல அணுக்களின் எண்ணிக்கையளவு அசாத்தியங்களையும் பிரச்சினைகளையும் அவர்கள் காண்கின்றார்கள்.


  காற்றின் விடயதானத்தை சங்கைமிகு உற்பத்தியாளிடம் ஒப்படைத்தால் அணுக்களுடன் கூடிய காற்று தனது எஜமானின் கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கும் படைவீரனாகவே இருக்கும். அப்போது அதனால் தனது வரையறையற்ற பாரிய பணிகளையும் இலகுவாக நிறைவேற்ற முடியுமாக இருக்கும். இது படைப்பாளின் சக்தியால், அவனை சார்ந்திருப்பதன் மூலம் ஒரு நிமிடத்தில் மின்னல் வேகத்தில் 'அவனது' வார்த்தையின் மூலம் நிறைவேற்றுகின்றது. காற்று வல்லமை மிக்கவனின் பேனையால் ஒழுங்குபடுத்தப்பட்ட அற்புதமான வரையரையற்ற புத்தகங்களுக்கான பக்கமாக அலை மோதுகின்றது. அதன் அணுக்கள் அந்தப் பேனையின் பற்களாகத் தொழிற்படுகின்றன. அதிலுள்ள அணுக்களின் பணிகள் வல்லமையுடையோனின் பேனாவின் புள்ளிகளாக செயலாற்றுகின்றன. அப்போது காற்று ஒரே அணுவின் செயற்பாட்டைப் போன்று இலகுவாகப் பணியாற்றுகின்றது.


  இவ்வாறு நான் காற்றுலகத்தை சிந்தனாரீதியில் சஞ்சரித்து 'அவனையன்றி வேறு கடவுள் இல்லை', 'கூறுவீராக! அவன் ஒருவனே!' என்பதிலுள்ள அந்த மூலக்கூறின் பக்கத்தைப் புரட்டி வாசித்த போது இந்த உண்மையை மிக இலகுவாகவும் விரிவாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் கண்டு கொண்டேன்.


  'அவன்' என்ற வார்த்தையிலும் அவனது காற்றிலும் அத்தகைய தெளிவான ஆதாரம் இருப்பதைப் போன்று அதன் கருத்தில் ஒளிபெற்ற ஏகத்துவமும் அதற்கான பலமான சான்றும் தென்படுகின்றது. குர்ஆனும் அறிவுடையோரும் ஏகத்துவத்தை பறைசாற்றும் இந்தத் தூய்மையான வார்த்தையை அதிகமதிகம் மொழிவது அந்த ஆதாரத்தில் பின்வரும் வினாவுக்கான தெளிவான துணைக்காரணி இருப்பதனாலேயாகும் என்பதை நான் உறுதியாகவே அறிகின்றேன். 'இந்த வார்த்தையில் உள்ள 'அவன்' எனும் பிரதிப் பெயர் யாரை குறிக்கின்றது?'


  உண்மைதான், ஒரு துளி எனும் சமுத்திரத்திலுள்ள ஒரு வெள்ளைத் தாளில் இரண்டு அல்லது மூன்று துளிகளை வைத்தால் அவை கலந்துவிடும். ஒரு மனிதன் அதிகமான பல்வகைப்பட்ட வேலைகளைச் செய்தால் அவனிடத்தில் அவை குழம்பிவிடும். சிறிய உயிரினம் ஒன்றிடத்தில் அதிகமான சுமைகளை சுமத்தினால் அது பலவீனமடையும், பயணத்தைத் தொடர சக்தியிழந்துவிடும். ஒரு நாவிலிருந்து அதிகமான பல்வகைப்பட்ட வார்த்தைகள் வெளியாகி ஏக நேரத்தில் ஒரேயொரு காதில் நுழைந்தால் அது ஒழுங்கை சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இது இவ்வாறெல்லாம் இருக்க சிந்தனாரீதியில் நான் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற காற்றின் மூலக்கூறுகளின் ஒவ்வொரு பகுதிகளிலும் மாத்திரமன்றி அதன் ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்hன புள்ளிகளும் எழுத்துக்களும் வார்த்தைகளும் 'அவன்' என்ற திறப்பின் மூலமும் வழிகாட்டல் மூலடுமும் எவ்வித குழறுபடியுமின்றி வைக்கப்பட முடியும் என்பதை நான் உறுதியாகவே அறிகின்றேன்.


24. Page

காற்றின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு அணுவும் அதிகமான பணிகளை மேற்கொள்கின்ற போதிலும் அவற்றை எவ்வித தவறோ மறதியோ இன்றி சீராக அவை மேற்கொள்கின்றன. அந்தப் பகுதியின் மீதும் அந்த அணுவின் மீதும் பல்வகையான சுமைகள் சுமத்தப்பட்ட போதிலும் அவற்றை எவ்வித பலவீனமோ சோர்வோ இன்றி அவை சீராக நிறைவேற்றுகின்றன.

அந்தச் சிறிய காதுகளில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நுழைந்த போதிலும், அந்தச் சிறிய நுண்ணிய நாவுகளிலிருந்து மிகச் சீரான முறையில் எவ்வித குழறுபடியுமின்றி பல்வேறுபட்ட தோற்றங்களிலும் கருத்துக்களிலும் அவை வெளியாகிய போதிலும்; அந்தச் சிறிய பகுதிகளும் அணுக்களும் இத்தகைய ஆச்சரியமான பணிகளை மேற்கொண்டு பூரண சுதந்திரத்துடன் உற்சாகமாக வலம்வந்து 'அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் இல்லை', 'கூறுவீராக! அவன் அல்லாஹ் ஒருவனே' என்று மொழியக் கூடியதாக இருந்த போதிலும் அவற்றின் ஒழுங்கு சீர்குழையவில்லை. காற்றை நிலைகுழையச் செய்யும் அலைகளுக்கும் சூறாவளிக்கும் இடி, மின்னலுக்கும் மத்தியில் அவற்றின் பணிகள் செயலிலக்கவில்லை. அவற்றின் எந்தவொரு செயலும் இன்னொரு செயலால் அதனைத் தடுக்கவில்லை. இவ்வாறு இந்த விடயங்களை நான் தெளிவாகவே கண்டேன்.

இதன் கருத்து காற்றிலுள்ள ஒவ்வொரு அணுவிலும், அதன் ஒவ்வொரு பகுதியிலும் முடிவற்ற ஓர் அறிவு ஞானம், நாட்டம், சக்தி மாத்திரமன்றி அனைத்து அணுக்களையும் நிர்வகிக்கும் சிறப்பியல்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த விடயங்கள் சீராக இயங்கும். இது அணுக்கள் சேர்ந்தாலும் தானாக மேற்கொள்வது அசாத்தியமானது. இவ்வாறு ஒரு ஷைத்தானால் கூட சிந்திக்க முடியாது.

அப்படியெனில் காற்று எனும் இந்த ஏடு மிகத் தெளிவாகவே அதனை உருவாக்கியவன் எல்லையற்ற அறிவு ஞானத்தால் பயன்படுத்துகின்ற சக்திமிக்க பேனாவின் மாறும் ஏடன்றி வேறில்லை. அது மாறும் உலகில் மாறும் விவகாரங்களில் 'லவ்ஹூல் மஹ்பூல்' இன் 'ஆக்கம், அழிவு- எனும் ஏட்டின்' தரத்தில் உள்ளது.

காற்றின் மூலக்கூறு ஓசைகளை நகர்த்தும் பணியில் மாத்திரம் ஏலவே கூறிய ஏகத்துவம், ஆச்சரியங்களை வெளிக்காட்டுவதைப் போன்று வழிகேட்டின் அசாத்தியத் தன்மையையும் வெளிக்காட்டியது. அவ்வாறே காற்றின் மூலக்கூறின் வேறு முக்கிய பணிகளில் ஒன்றுதான் மின்சாரம், ஈர்ப்பு சக்தி, ஒளி போன்றவற்றை நுணுக்கமாகவும் ஒழுங்கானவும் குpறுபடியின்றியும் நகர்த்துவதாகும். இவ்வாறு காற்று இந்தப் பணிகளோடு ஓசைகளை நகர்த்தும் தனது பணியை நிறைவேற்றும் அதேவேளை சுவாசித்தல், கருக்கட்டல் போன்ற மிருக, தாவர உலகின் வாழ்வுக்கு அத்தியவசியமானவற்றை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுகின்றது. காற்று தெய்வீக கட்டளைக்கும் நாட்டத்துக்கும் அடிபணிகின்றது என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.

காற்று எனும் ஏட்டிலுள்ள புத்தகங்களில் அவற்றின் பணிகள் உருவாக எவ்வகையிலும் திடீர் நிகழ்வோ, குருட்டு சக்தியோ, செவிட்டு இயற்கையோ, இலக்கற்ற, குழம்பிப் போயுள்ள பௌதீக காரணிகளோ, பலவீனமான அறிவற்ற கட்டியான பதார்த்தங்களோ பின்னணியாக இருக்க முடியாது என்பதை இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்துகின்றது என்பதை நான் உறுதியாகவே ஏற்றுக்கொண்டேன்.

ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு பகுதியும் தன்னிலையில் 'அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் இல்லை', 'கூறுவீராக! அவன் அல்லாஹ் ஒருவன்' என்று கூறுவதை நான் அறிந்துகொண்டேன். அவ்வாறே காற்றிலுள்ள இத்தகைய பௌதீக அதிசயங்களை நான் 'அவன்' என்ற திறப்பின் மூலம் அறிந்துகொண்டேன். அதன் மூலம் காற்றின் மூலக்கூறு கூட 'அவன்' என்ற முன்னுதாரணமிக்க உலகுக்கான திறப்பாக மாறியது.


அனைவர் மீதும் ஸலாம் உண்டாவதாக!


உங்களது சகோதரன்

ஸஈத் நூர்ஸி