கறுப்பு நிற தூத் மரக்கனி

25. Page

11. கறுப்பு நிற தூத் மரக்கனி


  பழைய ஸஈத் அருள்பெற்ற தூத் மரத்தின் மீதிருந்து கொண்டு புதிய ஸஈதின் மொழியில் பின்வருமாறு சொன்னார்:

'நான் பாஷாவின் ஒளியோடு பேசவில்லை. மாறாக ஐரோப்பாவின் கவர்ச்சிக்குட்பட்டவர்களோடே பேசுகின்றேன். நானல்ல குர்ஆனின் மாணவன் என்றவகையில் எனது உள்ளம் பேசுகின்றது.

முன்னே கூறிய வார்த்தைகள் யதார்த்தமானவை. குழம்பிவிட வேண்டாம்! அவற்றின் எல்லைகளை மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஐரோப்பிய சிந்தனையை நோக்கி வழிபிறழ வேண்டாம். அது வழிகேடு, அது எப்பொழுதும் உங்களை கைசேதத்துக்குட்படுத்தும். அதில் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் அறிவு பெற்ற ஒளிமயமான ஒருவரை காண்பீர்கள். அவர் அந்தக் குழப்பத்தால் எப்பொழுதும் 'ஆஹ்! நான் என்ன செய்வேன். யாரிடம் முறைப்படுவேன்? நான் குழம்பிப் போயுள்ளேன்' என்று கூறுவார்.

அல்குர்ஆன் என்னைப் பேச வைக்கின்றது. நான் பேசுகின்றேன். நான் மனனமிடவில்லை. நான் உன்னைப் போன்று குழம்ப மாட்டேன். நான் அதனிடமே உதவிதேடுகின்றேன். அதனிடமே முறைப்படுகின்றேன்.

சத்தியத்தைக் கொண்டு சத்தியத்திடமே உதவிதேடுகின்றேன். உன்னைப் போன்று வரம்புமீற மாட்டேன். நான் பூமியிலிருந்து வானத்திடம் முறைப்படுகின்றேன். உன்னைப் போன்று விரண்டோட மாட்டேன். அல்குர்ஆன் எப்பொழுதும் ஒளியிலிருந்து ஒளியின் பால் அழைக்கின்றது. உன்னைப் போன்று நான் பின்வாங்க மாட்டேன்.

அல்குர்ஆனில் சத்தியமும் அறிவுஞானமும் இருக்கின்றன. அவற்றை நான் உறுதிப்படுத்துகின்றேன். என்னிடத்தில் தத்துவம் ஒரு ரூபாவுக்கும் பெறுமதியற்றது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டுகின்ற குர்ஆனில் பளிங்கு போன்ற யதார்த்தங்கள் உள்ளன. அவற்றை எனது உயிரையும் உள்ளத்தையும் கொடுத்து சமர்பணம் செய்கின்றேன். உன்னைப் போன்று அவற்றை நான் விற்றுவிட மாட்டேன். நான் படைப்பினத்திடமிருந்து சத்தியவானிடம் செல்கின்றேன். உன்னைப் போன்று வழிபிறழ மாட்டேன். 


26. Page


  முற்கள் நிறைந்த பாதையில் நான் பயணிக்கின்றேன். உன்னைப் போன்று நான் அவற்றை மிதிக்க மாட்டேன்.


  பூமியிலிருந்து வானத்திலுள்ள அர்ஷை நோக்கி நன்றி செலுத்துகின்றேன். உன்னைப் போன்று நன்றி கெட்டவனாக இருக்க மாட்டேன்.


  நான் மரணத்தையும் அஜலையும் நண்பர்களைப் போன்று நோக்குகின்றேன். உன்னைப் போன்று அவற்றைக் கண்டு பயப்பட மாட்டேன். 


  நான் கப்ரில் சிரித்தவனாக நுழைகின்றேன். உன்னைப் போன்று திகில்கொள்ள மாட்டேன்.


  உன்னைப் போன்று நான் கப்ரை கொடிய பாம்பின் வாயாகவோ, தனிமையின் விரிப்பாகவோ, இல்லாமையை நோக்கிய பாதையாகவோ நோக்க மாட்டேன்.


  அது என்னை விருப்பத்துக்குரியவர்களை நோக்கி அழைத்துச் செல்கின்றது. உன்னைப் போன்று கப்ரைக் கண்டு கோபப்படவோ அச்சப்படவோ மாட்டேன்.


  அது அருளின் வாயில், ஒளியின் வாயில், சத்தியத்தின் வாயில். அதனைக் கண்டு நான் நெருடல் கொள்ளவோ பின்வாங்கவோ மாட்டேன்.


  அல்லாஹ்வின் பெயர் கூறி அதன் வாயிற் கதவை நான் தட்டுகின்றேன். எனக்குப் பின்னால் நான் திரும்பிப் பார்க்க மாட்டேன். நான் திடுக்கிட மாட்டேன்.


  அல்லாஹ்வைப் புகழ்ந்து அதில் சாய்கின்றேன். அதில் ஓய்வெடுக்கின்றேன். எவ்விதக் கஷ்டத்தையோ தனிமையையோ நான் உணரமாட்டேன்.


  மஹ்ஷருக்குரிய அழைப்பு (அதான்- பாங்கு) வந்தால் 'அல்லாஹ் மிகப் பெரியவன்' எனக் கூறி எழும்புவேன். மிகப் பெரிய ஒன்றுகூடலைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். மிக மகத்துவமிக்க பள்ளிவாயலை விட்டும் நான் பின்வாங்க மாட்டேன்.


  அல்லாஹ்வின் அன்பின் காரணமாகவும், அல்குர்ஆனின் ஒளியின் காரணமாகவும், ஈமானின் பிரவாகத்தாலும் நான் ஒருபோதும் அழமாட்டேன்.


  நிற்காமல் நான் ஓடுவேன். உன்னைப் போன்று குழம்பிப் போகாமல் அருளாளனின் அர்ஷின் நிழலை நோக்கி நான் பரந்து செல்வேன். இன்ஷா அல்லாஹ்.



ஸஈத் நூர்ஸி