லைலதுல் கத்ர் இரவில் அறிந்துகொண்ட ஒரு விடயம்
NAVIGATION
10. Page
06. லைலதுல் கத்ர் இரவில் அறிந்துகொண்ட ஒரு விடயம்
லைலதுல் கத்ருடைய இரவில் எனது உள்ளத்தில் உதித்த நீண்ட விசாலமானதொரு யதார்த்தத்தை மிகச் சுருக்கமாக உங்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றேன். இறுதியாக நடைபெற்ற உலக மகா யுத்தத்தின் வன்மையான அடக்குமுறையாகவும், கடுமையான அநியாயங்களாலும்; அதன் நாசகார செயல்களாலும் ஒரு எதிரியால் நூற்றுக்கணக்கானவர்கள் இரக்கமின்றி வேதனை செய்யப்பட்டதாலும் தோல்வி கண்டவர்களை பீடித்த நம்பிக்கையீனத்தாலும் வெற்றிகொண்டவர்கள் செய்த பெரும் குழப்பத்தாலும் தமது ஆட்சி அதிகாரத்தை காக்க முடியவில்லை என்ற ஏக்கத்தாலும் தமது சேதங்களை மீள் புனர்நிர்மாணம் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கத்தாலும் தோன்றிய உள வேதனையால், உலக வாழ்வு அழியக்கூடியது, தற்காலிகமானது. தற்போதைய நாகரீகத்தின் கவர்ச்சிகள் பொய்யானவை, அனைவரது கண்களையும் மயக்கக்கூடியவை என்பது தெளிவாகியதால், பொதுவாக மனிதனின் உள தயார் நிலை மற்றும் யதார்த்தம் கடுமையாக காயப்படுத்தப்பட்டதால், குர்ஆனின் பளிங்கு வாளால் செவிடாகிப்போன இயற்கையும் வழிகெடும் பொடுபோக்கும் சுக்குநூறாகியதால், பூமியில் வழிகேட்டுக்கும் பொடுபோக்குக்கும் விசாலமானதும் அதிகமான ஏமாற்றுதலுக்கும் அழிவுக்கும் திரையாக நிற்கும் அரசியல் அநீதிதியின் உண்மை முகம் வெளிப்பட்டதால், மனிதனுக்கு மிக விருப்பத்தக்குரிய இந்த உலக வாழ்வு எவ்வளவு அலங்கோலமானது, அழியக்கூடியது என்ற காரணத்தால், மனிதர்கள் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி தாம் உண்மையாகவே விரும்புகின்ற, தமது இயல்புநிலை வேண்டுகின்ற நிரந்தர வாழ்வைத் தேடுவார்கள் என -மேற்கிலும் கிழக்கிலும் அமெரிக்காவிலும் தோன்றிய அடையாளங்களின் விளைவாக- நான் சந்தேகமின்றி கூறுகின்றேன்.
இந்த அற்புதமிகு குர்ஆன் 1360 வருட வரலாற்றில் ஒவ்வொரு காலத்திலும் தோன்றிய 350 மில்லியன் மாணவர்களைக் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு சட்டங்களும் சரியென துறைசார்ந்தவர்கள் ஆமோதித்திருக்கின்றார்கள். பல மில்லியன் மனிதர்கள் அதனை தொடர்ந்தும் இதயசுத்தியோடு மனனமிட்டும் ஓதியும் வருகின்றார்கள். அந்த அல்குர்ஆன் தனக்கே உரிய பாணியில் மனித சமூகத்துக்கு நிரந்தர சந்தோசத்தையும் நிலையான வாழ்வையும் நன்மாராயம் கூறுகின்றது. அவர்களது எல்லாக் காயங்களுக்கும் ஒத்தடம் போடுகின்றது.
இந்த அற்புத குர்ஆன் பல்லாயிரக்கணக்கான அத்தாட்சிகளை பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் தெளிவாகவும் சூட்சுமமாகவும் மீட்டி மீட்டி கூறுவதாலும், திட்டவட்டமான தெளிவான ஆதாரங்களைக் கொண்டு நிரந்தர சந்தோசத்தையும் நிலையான வாழ்வையும் நன்மாராயம் கூறுவதாலும் நான் உறுதியாக சந்தேகமின்றி கூறுகின்றேன்: பூமியிலுள்ள விசாலமான கண்டங்களும் அவற்றின் பெரிய அரசாங்கங்களும் இந்த அற்புதக் குர்ஆனை தேடிவரும். அவ்வாறே சுவீடன், நோர்வே, பின்லான்ந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள அறிமுகமான பேச்சாளர்கள் இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். சத்திய மார்க்கத்தை தேட முயற்சிக்கின்ற ஐக்கிய அமெரிக்காவைப் போன்று இவர்களும் குர்ஆனின் யதார்த்தங்களைப் புரிந்து உளமாற அதனைப் பற்றிப்பிடிப்பார்கள். ஏனெனில் மேலே குறிப்பிட்ட வகையில் குர்ஆனுக்கு நிகர் எதுவுமில்லை. அதற்கு நிகராக எதுவும் இருக்கவும் முடியாது. இந்த அற்புதத்தின் தராதரத்தை எந்தவொன்றாலும் அடைந்துகொள்ளவும் முடியாது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இரண்டாவது: ரஸாஇலுந்நூர் ஒரு பளிங்கு வால் என்ற வகையில் தனது மாபெரும் அற்புதக் கரங்களால் தனது தஃவாச் செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் எதிரிகளை அதற்கு முன்னால் சரணடையச் செய்கின்றது.
11. Page
ரஸாஇலுந்நூர் உள்ளம், ஆன்மா, உணர்வு ஆகியவற்றுக்கு ஒளியூட்டி அவற்றுக்குத் தேவையான பொருத்தமான மருந்துகளை வழங்கி, குர்ஆனின் புதையல்களின் பால் அழைக்கின்ற பணியை மேற்கொள்கின்றது. அது குர்ஆனை சட்டமூலாதாரமாகக் கொண்டுள்ளது. அது குர்ஆனுக்கான கருத்தியல் விளக்கமாகக் கருதப்படுகின்றது. அப்பணியை அது திறம்பட செய்துவருகின்றது. தனக்கெதிரான பல அச்சுறுத்தல்களையும் பிடிவாத நாஸ்திகர்களையும் அது மிகைத்துள்ளது. வழிகேட்டின் பலம்மிக்க கோட்டையான இயற்கை வாதத்தை 'இயற்கை' எனும் நூலின் மூலம் துகல்களாக்கியது. 'மூஸாவின் தடி' எனும் புத்தகத்தில் ஆறாம் தலைப்பான 'விளைச்சல்' எனும் கட்டுரையின் மூலம் நவீன விஞ்ஞானத்தின் திரையையும் பிரபஞ்சத்திலுள்ள பொடுபோக்குத் தனத்தையும் அகற்றியது. முதலாம், இரண்டாம், மூன்றாம், எட்டாம் ஆதாரங்களின் மூலம் தௌஹீதின் ஒளியை தெளிவாகவே விளக்கியுள்ளது. மார்க்கக் கல்வியை கற்பதற்கு தனியார் பாடசாலைகளை திறக்க அரசு வழங்கியுள்ள உத்தியோகபூர்வ அனுமதிக்கேற்ப ரஸாஇலுந் நூரின் மாணவர்கள் எல்லா இடங்களிலும் சிறிய நூரிய மத்ரஸாக்களை உருவாக்குவது எங்களது கடமை மாத்திரமன்றி முழு சமூகத்தினதும் கடமை என்பதில் ஐயமில்லை.
உண்மையில் ஒவ்வொருவரும் ரஸாஇலுந் நூரிலிருந்து தனித்தும் பயன் பெற முடியும். என்றாலும் அதில் எல்லோருக்கும் எல்லாவற்றையும் பூரணமாக விளங்க முடியாது. ஏனெனில் அது ஈமானின் யதார்த்தங்களை விளக்குகின்றது. அது அல்லாஹ் பற்றிய அறிவும் ஏகநேரத்தில் இபாதத்தும் உள பரிபக்குவமும் ஆகும்.முன்னைய கால தனியார் பாடசாலைகள் இந்த அறிவு ஞானங்களை ஐந்து அல்லது பத்து வருடங்களில் நிரப்பமாக வழங்கிவந்தன. உண்மையில் இதனை கடந்த இருபது வருடங்களாக அவை செய்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் நூரிய பாடசாலைகள் -அல்லாஹ் நாடினால்- இந்த அறிவை ஐந்து அல்லது பத்து வாரங்களில் மாணவர்களுக்கு வழங்க முடியுமாக இருக்கும்.
எனவே குர்ஆனின் ஒளிக்கீற்றாகத் திகழும் ரஸாஇலுந்நூரை –தடை செய்வதை விட்டு விட்டு அதனை- பரப்புவதும் ஜனரஞ்சகப்படுத்துவதும் அரசின் தார்மீகக் கடமையாகும். அதுவே அரசு ஏலவே செய்த பாவங்களுக்கான குற்றப்பரிகாரமாக இருக்கும். அப்போதுதான் ரஸாஇலுந் நூர் பயங்கரவாதத்துக்கும் திடீர் சோதனைகளுக்கும் முன்னால் காக்கும் பெரும் அரணாக இருக்கும்.
ஸஈத் நூர்ஸி


