முதியோர்களுக்கான தூதிலிருந்து

12. Page

07. முதியோர்களுக்கான தூதிலிருந்து


      ஒரு நாள் எனது முதுமைப் பருவத்தின் ஆரம்பத்தில், பழைய ஸஈதின் சிரிப்புகள் புதிய ஸஈதின் அழுகையாக மாறிய வேளையில் அன்காராவில் வசிக்கும் சில மனிதர்கள் என்னை பழைய ஸஈத் என நினைத்துக்கொண்டு அன்காராவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் அன்காராவுக்குச் சென்றேன். இளையுதிர் காலத்தின் அந்திம காலத்தில் என்னை விடவும் அதிகமாக கிழட்டுப் பருவத்தை அடைந்து பழமையடைந்து இத்துப்போயுள்ள அன்காராவின் பழைய கோட்டையின் உச்சிக்கு ஏறினேன். இந்தக் கோட்டை கற்கலாலான வராலற்று நிகழ்வுகளின் தோற்றத்தில் எனக்குத் தோன்றியது.

       வருடத்தின் முதுமையும், எனது முதுமையும், கோட்டையின் முதுமையும், மனித சமூகத்தின் முதுமையும், உஸ்மானிய கிலாபத்தின் முதுமையும், கிலாபத்தின் மரணமும், உலகத்தின் முதுமையும் -நான் மிகவும் கவலையடைந்த நிலையில் இலக்கற்று தன்னந்தனியே நின்ற வேளையில்- அந்த உயர்ந்த கோட்டையின் உச்சியிலிருந்து கடந்த கால பள்ளத்தாக்குகளையும் எதிர்கால மலைகளையும் என்னால் பார்க்க முடிந்தன. அங்கே என்னைச் சூழ இருந்த ஒன்றோடொன்று சிக்கலான நான்கு அல்லது ஐந்து முதுமைக் குழிகளில் ஒளியையும் ஆறுதலையும் அமைதியையும் எதிர்பார்ப்பையும் தேடினேன். அப்போது நான் அன்காராவில் காரிருள் சூழ்ந்த ஆன்மீக நிலையை உணர்ந்தேன்.

        எனது வலப்புறத்திலுள்ள கடந்த காலத்தைப் பார்த்து அமைதியையும் ஆறுதலையும் தேடினேன். அப்போது கடந்த காலம் எனது தந்தையையும் மூதாதையினரையும் மனித இனத்தையும் சுமந்துள்ள ஒரு பெரிய அடக்கஸ்தலமாக எனக்குத் தோன்றியது. அது எனக்கு ஆறுதல் அளிப்பதற்குப் பகரமாக என்னில் பயத்தையே உண்டுபண்ணியது. அப்போது நான் இடப்புறத்திலுள்ள எதிர்காலத்தை நோக்கினேன். அதில் தீர்வைத் தேடினேன். அது எனக்கும் என்னைப் போன்றோருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் இருள்மயமானதொரு பெரிய அடக்கஸ்தலமாக எனக்குத் தோன்றியது. அது எனக்கு கைகொடுப்பதற்குப் பகரமாக என்னில் பயத்தையே உண்டுபண்ணியது. வலப்புறத்திலிருந்தும் இடப்புறத்திலிருந்தும் பெரும் அச்சத்தை எதிர்கொண்ட பின்னர் நான் எனது இன்றைய பொழுதை நோக்கினேன். அது எனது பொடுபோக்கான பார்வையாலும் வரலாற்றை ஒத்த பார்வையாலும் அறுக்கப்பட்டவனைப் போன்று அரைவாசி மரணித்து குழம்பிப் போயுள்ள எனது உடலின் ஜனாஸாவை சுமந்துசெல்லும் ஒரு பேழையின் வடிவத்தில் எனக்கு காட்சியளித்தது.

     பின்னர் எனது தலையை உயர்த்தினேன். பெரும் நம்பிக்கையீனம் கொண்டுள்ள எனது வாழ்நாள் மரத்தை நோக்கினேன். இந்த மரத்துக்கு ஒரு கனி இருப்பதைக் கண்டேன். அதுவே எனது ஜனாஸா. அதுவே அந்த மரத்தின் மீதிருந்து கொண்டு என்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அத்திசையிலும் நான் தனிமையையும் பயத்தையும் உணர்ந்தேன். எனது தலையைப் பணித்து எனது வாழ்நாள் மரத்தின் அடிப்பகுதியை –அதன் வேர்களை- அவதானித்தேன். அங்கே கீழ்ப்பகுதியிலுள்ள மண்ணில் எனது ஆரம்பப் படைப்பின் மண்ணும் எனது எலும்பு மண்ணும் கலந்திருந்ததைப் போன்று கண்டேன். அவை கால்களால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.... இதுவும் எனது கவலைகளுக்கு நிவாரணத்தை முன்வைக்கவில்லை. மாறாக எனது கவலையை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

       பின்னர் எனது பின்னால் பார்க்க நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். அங்கே அடிப்படையற்ற அழியும் உலகம் அழிவெனும் இருள்களிலும் இல்லாமையெனும் பள்ளத்தாக்குகளிலும் உருண்டுகொண்டிருக்கின்றதைக் கண்டேன். நானோ நிவாரணத்தை தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அத்திசை எனது கவலைகளில் நஞ்சை தடவியது. இத்திசையிலும் நான் எவ்வித நலவையும் கண்டுகொள்ளவில்லை. உடனே எனது முன்னாலுள்ள திசையை அவதானித்தேன். எனது பார்வைகளை முன்னாலுள்ளவர்களின் மீது சுழற்றினேன். எனக்கு முன்னால் நேரெதிராக கப்ரின் வாயில் திறக்கப்படிருப்பதைக் கண்டேன். அது தனது வாயை திறந்துகொண்டு எனக்காகக் காத்திருக்கின்றது. அதில் பயணிக்கின்ற பிரயாணக் கூட்டத்தையும், நிரந்தரத்தை நோக்கியுள்ள சீரிய பாதையையும் கூர்ந்த பார்வையின் மூலம் அவதானித்தேன். இந்த ஆறு திசைகளிலிருந்தும் தென்பட்ட அனைத்து பயங்கரங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான ஒரே வழி 'சார்ந்திருத்தல் மற்றும் தற்காப்பு ஆயுதம்' எனும் தெரிவேயாகும்.


13. Page

மனிதன் இந்த எண்ணற்ற எதிரிகளுக்கும் வரையறையற்ற தீங்குகளுக்கும் முன்னால் அந்த ஏக ஆயுதத் தெரிவை ஏற்று (படைப்பாளனிடம் கேட்டு அபயம் பெறுவதேயன்றி) வேறு வழியில்லை. ஏனெனில் அவனுடைய தெரிவு கூட பலவீனமானது, குறையுடையது, குறுகியது. அதனால் கூட கனகச்சிதமாக தொழிற்பட முடியாதுள்ளது. அதனால் இறந்த காலத்தில் ஊடுருவி எனது கவலைகளை துடைக்க முடியாது. எதிர்காலத்தில் ஊடுருவி என்னை அடைய இருக்கின்ற அச்சங்களை தடுக்க முடியாது. அப்போது நான் கடந்த கால வேதனைகளுக்கும் எதிர்கால எதிர்பார்க்கைகளுக்கும் தீர்வை அந்தத் தெரிவிடம் எதிர்பார்ப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதை கண்டுகொண்டேன்.

      இவ்வாறு இந்த ஆறு திசைகளும் ஏற்படுத்திய திடுக்கம், தனிமை, இருள், நம்பிக்கையீனம் ஆகியவற்றால் நான் குழப்பிப்போயிருந்த நிலையில் அற்புத குர்ஆன் வானிலிருந்து பிரகாசித்த ஈமானின் ஒளி எனக்கு உதவியது. அந்தத் திசைகளுக்கு ஒளியூட்டிது. அந்த இருளும் தனிமையும் நூறு மடங்காக மாறினாலும் போதுமானளவு பிரகாசத்தை அந்த ஒளி வழங்கியது. அது அனைத்துத் திடுக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆறுதலாக மாற்றியது. அந்தத் தனிமைகளை போக்கி அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கூட்டு சகவாசமாக மாற்றியது. ஏனெனில் ஒரு பெரிய கப்ரின் தோற்றத்தில் விளங்கிய அந்த தனிமையான கடந்த காலத்தின் உருவத்தை ஈமான் கிழித்தெறிந்தது. அதனை உறுதியாகவே ஒளிபொருந்திய மஜ்லிஸாகவும் நேசர்களின் சபையாகவும் வெளிக்காட்டியது.

அவ்வாறே, பொடுபோக்கான பார்வையின் காரணமாக ஒரு பெரும் மையவாடியாகத் தோன்றிய எதிர்காலத்தை ஈமான் அன்புக்குரிய சந்தோச மாளிகையின் அருளுக்குரிய விருந்துபசார அமர்வாக வெளிக்காட்டியது. அவ்வாறே, பொடுபோக்கான பார்வையின் காரணமாக ஒரு பேழையின் வடிவில் தோன்றிய நிகழ்காலத்தை ஈமான் சுக்குநுறாக்கியது. அந்த நாளை மறுமைக்கான வியாபாரஸ்தலம், கவர்ச்சிகரமான வளமான அருள் நிறைந்த விருந்துபசார வீடு என வெளிக்காட்டியது. அவ்வாறே, பொடுபோக்கான பார்வையின் காரணமாக வாழ்நாள் மரத்தின் மேற்பகுதியிலுள்ள ஜனாஸாவைப் போன்று காட்சியளித்த ஏக பழம் என்பது ஒரு ஜனாஸா அல்ல. மாறாக அது நிரந்தர வாழ்வுக்குத் தகுதியானதும் நிரந்தர சந்தோசத்துக்காக நியமிக்கப்பட்டதுமான எனது ஆன்மா தனது இத்துப்போன கூட்டிலிருந்து நட்சத்திரங்களுக்கு மத்தியில் உலாவி வருவதற்காக வெளியேறுவதாக ஈமான் அதனை வெளிக்காட்டியது.

       அவ்வாறே, எனது எலும்பும் எனது படைப்பின் ஆரம்பமான மண்ணும் எவ்விதப் பெறுமானமுமற்ற கால்களால் மிதிக்கப்படக் கூடிய இத்துப் போன எழும்பு அல்ல, மாறாக அந்த மண் சுவனத்து மண்டபத்திலுள்ள திரைச் சீலையும் அருட்கடாட்சத்தின் வாயிலும் என்ற இரகசியத்தை ஈமான் வெளிப்படுத்தியது. அவ்வாறே, ஈமான் இல்லாமையிலும் இல்லாமை என்ற இருளிலும் எனக்குப் பின்னால் புரண்டுகொண்டிருக்கின்ற இந்த உலகின் உண்மை நிலையையும் அம்பலப்படுத்தியது. வெளித்தோற்றத்தில் அந்த இருள்களில் உருண்டுகொண்டிருக்கின்ற உலகம் ஏக வல்லோனின் ஏற்பாட்டின் ஒரு பகுதி, தனது பணியை நிறைவு செய்த தெய்வீக ஏடுகள். அவை தமக்குப் பகரமாக பிரபஞ்சத்தில் அவற்றின் விளைவுகளை விட்டுள்ளன. இவ்வாறு உலகின் யதார்த்தத்தை ஈமான் மிகத் தெளிவாகவே அறிவித்தது.

  முன்னால் என்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற கல்லறையும் அதன் பின்னால் நீண்டு செல்லும் நிரந்தர பாதையும் கிணற்றின் வாயில் அல்ல. மாறாக அது ஒளிபெற்ற உலகுக்கான வாயில். மேலும் அந்தப் பாதை இல்லாமை நோக்கிய உலகுக்கான பாதையல்ல. மாறாக அது உள்ளமை நோக்கிய பாதை, நிரந்தர சந்தோசத்துக்கான பாதை, ஒளிமயமான உலகுக்கான பாதை என்பதை ஈமான் குர்ஆனிய ஒளியின் மூலம் வெளிக்காட்டியது. ஈமான் எனது கவலைகளுக்கு ஆறுதலாகவும் நிவாரணியாகவும் மாறியது என நான் கூறுகின்றேன். ஏனெனில் அது முழுத் திருப்தியை தருகின்ற வகையில் இந்த யதார்த்தங்களை வெளிக்காட்டியுள்ளது.

  நிச்சயமாக ஈமான் தன்னிகரற்ற சக்தியின் பால் சார்ந்திருப்பதற்கான் வரையறையற்ற இருள்களுக்கும் எதிரிகளுக்கும் முன்னால் வரையறையற்ற அருளை சார்ந்திருப்பதற்கான ஒரு ஆவணத்தை அந்தப் பகுதியளவு சுதந்திரத்தின் மூலம் - மனிதனின் கையிலுள்ள பலவீனமான பகுதியளவு சுதந்திரத்துக்கு எதிராக – முன்வைக்கின்றது. அதனையும் தாண்டி ஈமான் அந்தப் பகுதியளவு சுதந்திரத்தின் மூலம் ஆவணமாகவே மாறிவிடுகின்றது. எனவே அந்தப் பகுதியளவு சுதந்திரமான (அது உண்மையில் பலவீனமானது, குறைபாடுடையது, குறுகியது) மனித ஆயுதத்துக்கு உதாரணம் ஒரு படைவீரனைப் போன்றது. அவன் நாட்டின் பெயரைக் கொண்டு தனது பகுதியளவு பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனது சக்திக்கு மேலால் ஆயிரம் மடங்கு செயற்படுகின்றான். அவ்வாறுதான் அந்தப் பலவீனமான பகுதியளவு சுதந்திரம் ஈமானின் இரகசியத்தால் சத்தியவானான அல்லாஹ்வின் பெயரால் அவனது பாதையில் பயன்படுத்தப்பட்டால் ஐநூறு வருட அளவு பயண தூரத்தைக் கொண்ட சுவனத்தை அவனால் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்.

  நிச்சயமாக ஈமான் அந்தப் பகுதியளவு சுதந்திரத்தின் (அதனால் இறந்தகாலத்துக்கோ எதிர்காலத்துக்கோ எவ்வித செல்வாக்கும் செலுத்த முடியாது) கடிவாளத்தை எனது உடலின் கையிலிருந்தே பெற்று அதை உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் வழங்கியுள்ளது. அந்த பகுதியளவு சுதந்திரம் ஒரு பகுதியிலிருந்து வெளியேறி முழுமையான நலவை சம்பாதித்துக்கொள்கின்றது. ஆன்மாவினதும் உள்ளத்தினதும் வாழ்க்கை வட்டம் கடந்த கால வருடங்கள் பலவற்றையும் எதிர்கால வருடங்கள் பலவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதனால் அது உடலைப் போன்று நிகழ்காலத்தில் மாத்திரம் சுருங்கியிருக்க மாட்டாது.

  அந்த பகுதியளவு சுதந்திரம் ஈமானின் ஒளி மூலம் எதிர்காலம் எனும் உயர் மலைகளின் உச்சிகளை நோக்கி உயர்வடைகின்றது. மேலும் அச்சங்களை அழிக்கின்றது. அவ்வாறே அதனால் ஈமானின் சக்தியின் மூலம் கடந்த காலம் எனும் அதிதாழ்ந்த பள்ளத்தாக்குகளை ஊடுறுவி கவலைகள் எனும் இருள்களை அழிக்க முடியுமாக இருக்கின்றது. 

  என்னைப் போன்று முதுமையின் கஷ்டங்களால் அல்லல்படும் முதியவர்களே!

  நாம் ஈமான் கொண்டவர்கள் என்ற வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். -அல்ஹம்துலில்லாஹ்- ஈமானில் முன்னே கூறியளவு ஒளிமயமான, சுவையான, விரும்பத்தக்க, அன்பான பொக்கிஷங்கள் இருக்கின்றன. எமது முதுமை எம்மை அந்த பொக்கிஷத்தின் உள்ளே ஆழமாக அழைத்துச் செல்கின்றது. நாம் ஈமானுடைய முதுமையைக் கண்டு புலம்பி முறைப்படக் கூடாது. மாறாக அதற்காக ஆயிரம் ஆயிரம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.