நூர்ஸிய மாணவர்களால் கேட்கப்பட்ட வினாவுக்கான விடை

8. Page

05. நூர்ஸிய மாணவர்களால் கேட்கப்பட்ட வினாவுக்கான விடை


  நாங்கள் எமது ஆசிரியரிடம் இவ்வாறு வினவினோம்: நீங்கள் கடந்த இரு வருடங்களாக எம்மிடமோ அல்லது உங்களுக்கு தினம்தோறும் பணிவிடை செய்வோரிடமோ இந்த உலக மகா யுத்தத்தைப் பற்றி ஒரு முறையேனும் வினவவில்லை. அது இஸ்லாமிய உலகின் முக்கிய பேசுபொருளாக இன்று மாறியுள்ளது. அதன் பயங்கர நிலையில் கூட நீங்கள் அதனைப்பற்றி வினவவில்லை. அதில் கவனமே செலுத்தவில்லை. அப்படியெனில், இந்தப் பிரச்சினையை புறக்கணிக்குமளவுக்கு அதை விட இன்னொரு மிக முக்கிய பிரச்சினை இங்கு உண்டா? அல்லது அதில் கவனம் செலுத்துவது தீமையானதா?

  அவர் பதிலளித்தார்: ஆம், இந்த உலக மகாயுத்தத்தை விட எனது உள்ளத்தை உறுத்துகின்ற மிகப்பெரிய, மிக முக்கியமானதொரு பிரச்சினை இருக்கின்றது. அதோடு ஒப்பிடுகின்ற போது உலக மகா யுத்தம் மிகவும் அற்பமானதே.ஏனெனில் இந்த உலக மகா யுத்தத்தில் புவிப்பந்தை ஆக்கிரமிப்பதற்காக வேண்டி இரு அரசுகளுக்கிடையிலான போட்டியில் இரு மதங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான பிரச்சினை நீதிமன்றத்தில் எழுந்தது. வானலோக மதங்களுடன் படுபயங்கர நாஸ்திக அலையின் மோதுகை ஆரம்பித்த வேளையில் புருஜ்வாதியா இனக் குழுமத்துக்கும் சோஷலிச இனக் குழுமத்துக்கும் மத்தியில் உயர் நீதிமன்றத்தில் பிரச்சினை தாக்கல் செய்யப்பட்டது. இந்த இனக் குழுமங்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பிரச்சினையை விட மிக அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய பிரச்சினையே இது. இதில் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினையின் அளவு இந்த உலக மகா யுத்தத்தை விட மிகப் பெரியது.

நாம் கூற வரும் இந்தப் பிரச்சினை ஒவ்வொரு முஃமினின் முன்னிலையிலும் இந்தக் காலத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனின் முன்னிலையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரச்சினையாகும். அது நிரந்தர விளைநிலத்தை பெற்றுக்கொள்ளுதல் அல்லது இழந்துவிடுதல் தொடர்பான பிரச்சினையாகும். அதன் விசாலம் வானம் பூமியளவு விசாலமானது. அதாவது தோட்டங்களாலும் மாளிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள நிரந்தர சொத்தை பெற்றுக்கொள்ளுதல் அல்லது இழந்துவிடுதல் தொடர்பான பிரச்சினையாகும். இது ஒவ்வொரு மனிதனின் முன்னாலுமுள்ள பிரச்சினையாகும். அவனிடம் இங்கிலாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளின் பலமும் செல்வமும் இருந்து அவனிடம் பகுத்தறியும் அறிவும் இருந்தால் இவை அனைத்தையும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் செலவழித்திருப்பான்.

இந்தப் பிரச்சினையை தீர்;க்காது வேறு விடயங்களில் கவனம் செலுத்துபவன் பைத்தியகாரனவான். அதுமாத்திரமன்றி இந்தப் பிரச்சினை ஒரு சங்கடத்துக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதனை நாற்பது பேரில் ஒருவரே தவணை எனும் சண்டாளனின் கையிலிருந்து பிரியாவிடை பயணச்சீட்டாக இலாபமாக தீர்த்திருப்பார். ஏனைய முப்பத்தொன்பது பேரும் நஷ்டமடைந்திருப்பார்கள். இங்கே ஒரு வழக்கறிஞர் இந்தப் பாரிய அபாயகரமான பிரச்சினையை தீர்த்து வைக்கின்றார். கடந்த இருபது வருடங்களாக அதனை எண்பது வீதம் நடைமுறையில் தீர்த்து வருகின்றார். அப்படியெனில் சீரிய சிந்தனை உள்ளவர்கள் ஏனைய எல்லா விடயங்களை விடவும் இந்தப் பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதனை தீர்க்க குறித்த வழக்கறிஞரைப் போன்றவரிடம் சார்ந்திருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


9. Page

இந்த ரஸாஇலுந் நூர் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றோர் பல்லாயிரம் பேர். அற்புதமிகு அல்குர்ஆனின் கருத்தியல் அற்புதத்திலிருந்து உருவான ரஸாஇலுந் நூல் ஒரு வழக்கறிஞர் மாத்திரமன்றி, வழக்கறிஞர்களுள் முதன்மையானவரும் ஆவார். உண்மைதான் கட்டளையிடப்பட்ட பணியாளனாக ஒவ்வொரு மனிதனும் இந்த உலகுக்கு அனுப்பப்பட்டுள்ளான். அவன் விருந்தாளியாகவும் பயணியாகவும் இருக்கிறான். அவனது உண்மைநிலை நிலையான வாழ்வை நோக்கியிருக்கின்றது என்பது மிகவும் உறுதியாகவே கூறப்பட்டுள்ளது. இக்காலத்தில் மனிதனின் நிரந்தர வாழ்வைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கோட்டைகளும் பலவீனமுற்று ஆட்டம் காண்பதால் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகையும் தனது நேசத்துக்குரியவர்களையும் நிரந்தரமாகவே விட்டுச்செல்கின்றான். அத்தோடு இந்த உலகத்தை விட பல்லாயிரம் மடங்கு அழகிய, அபூர்வ நிரந்தரச் சொத்தை பெற்றுக்கொள்ளுதல் அல்லது இழந்துவிடுதல் என்ற பிரச்சினை ஒவ்வொரு மனிதனுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ளது.

அவன் ஈமான் எனும் ஆவணத்தையுமும், தனது நிரபராதி நிலையை சுட்டிக்காட்டும் நம்பிக்கையையும் பலமாகப் பெற்றிருக்காவிட்டால் அவன் நஷ்டவாளியாக மாறிவிடுவான். ஐயோ! இவனது நஷ்டத்தை ஈடுசெய்ய ஏதேனும் வழிகள் உண்டோ!!! இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் எனது அறிவும் எனது சகோதரர்களது அறிவும் நூறு மடங்கு அதிகரித்தாலும் இந்த கண்ணியமிக்க உயர்ந்த இந்தப் பணிக்கேயன்றி போதுமானதாக இருக்கமாட்டாது. வேறு விடயங்களில் கவனம் செலுத்துவது மேலதிக எச்சமாகவே இருக்கும். இந்த விடயங்களில் நூர்ஸிய மாணவர்களில் சிலர் தேவையான அளவே கவனம் செலுத்துகின்றனர். எம்மீது மடையர்கள் காரண காரியமின்றி தாக்குவதாலும் வேறு விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவதாலும் இவற்றை கூடுதலாக விரும்பாது தேவையான அளவே அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். 

மறுபுறத்தில் இந்தப் பாரிய உண்மையான பிரச்சினையை விட்டுவிட்டு வேறு விவகாரங்களில், போராட்டங்களில் -சிந்தனாரீதியில்- ஈடுபட்டுவதும் தீங்குபயக்கத்தக்கது. ஏனெனில் இத்தகு கவர்ச்சிமிகு விசாலமான அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்துபவர் தான் எதற்காக அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அந்தச் சிறிய எல்லையில் தனது பணியை நிறைவேற்றுவதை விட்டும் பின்னடைவார் அல்லது அதற்கான அவரது உற்சாகம் குறைவடைந்து ஆர்வம் குன்றிவிடும். மேலும் விசாலமான அரசியல் வட்டாரங்களில் கவர்ச்சிமிகு விவகாரங்களில் கவனம் செலுத்தபவர் அதற்குப் பின்னாலே சிலபோது அடிபட்டுச் சென்றுவிடுவார். அவரால் தனது அடிப்படைப் பணியை நிறைவேற்ற முடியாது போய்விடுகின்றது. அவர் சிலபோது தனது தூய உள்ளத்தையும் தூய எண்ணத்தையும் சீரிய சிந்தனையையும் தனது தஃவா பணியில் இஹ்லாஸையும் இழந்த குற்ற உணர்வுடன் இருப்பார். அவற்றை அவர் முழுமையாக இழக்காவிடினும் சரியே.

அவர்கள் நீதிமன்றத்தில் எனக்கெதிராக குற்றம் சுமத்திய போது நான் இந்தக் குறிப்பை முன்வைத்து கூறினேன்: 'ஈமான் மற்றும் குர்ஆனிய யதார்த்தம் சூரியனைப் போன்றது. அது பூமியிலுள்ள தற்காலிக ஒளிகளை உறிஞ்செடுக்கும் கருவியன்று. இவ்வாறுதான் இந்த யதார்த்தத்தை மிகச் சரியாகப் புரிந்தவர் புவியில் மாத்திரமன்றி அகிலங்கள் அனைத்திலும் நடக்கும் நிகழ்வுகளுக்கு கருவியாக அதனை ஆக்கமாட்டான்.' இவ்வாறுதான் அவர்களது வாயை அடைத்தேன்.

எமது ஆசானின் விடை முற்றுப்பெற்றுவிட்டது. அதனை நாம் முழுமையாக உண்மைப்படுத்துகின்றோம்.

நூர்ஸிய மாணவர்கள்