ஒரு நாள் எஸ்கிஷஹ்ர் சிறைச்சாலை யன்னலுக்கு முன்னால
NAVIGATION
3. Page
02. ஒரு நாள் அஸ்கிஷஹ்ர் சிறைச்சாலை யன்னலுக்கு முன்னால்
நான் அமர்ந்து கொண்டிருந்தேன்.........
ஒரு நாள் அஸ்கிஷஹ்ர் சிறைச்சாலை யன்னலுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். சிறைச்சாலைக்கு முன்னால் அமைந்திருந்த உயர்தரப் பாடசாலையில் கல்விகற்கும் குமரிப் பெண்கள் அதன் வளாகத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். உலகத்தை சுவனம் எனக் கருதினால் அதிலுள்ள நரகத்துக்குப் பொறுப்பான ஹூருல் ஈன்களை ஒத்த தோற்றத்திலே நான் அவர்களைக் கண்டேன். எனினும் திடீரென அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பின்னால் அவர்களது நிலை எனக்கு முன்னால் தோன்றியது. அவர்களது சிரிப்பு கசப்பான நோவினை தரக்கூடிய அழுகையின் தோற்றத்தைப் பெற்றிருந்தது. அதிலிருந்து பின்வரும் உண்மை புலப்படுகின்றது: கருத்தியல் கற்பனா ரீதியில் சினிமாத்திரையின் மூலம் அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பின்னால் இவர்களது நிலையை நான் கண்டேன். சிரித்து கும்மாலமிட்ட அறுபது பேரில் ஐம்பது பெண்கள் கப்ரில் வேதனைப்படுவார்கள். சிலபோது மண்ணுடன் மண்ணாகியிருப்பார்கள். எஞ்சிய பத்துப் பேரும் எழுபது வயதைத் தாண்டியிருப்பார்கள். அவர்கள் தோல் சுருங்கி அலங்கோலமாக மாறியிருப்பார்கள். அனைவரும் அவர்களைக் கண்டு அறுவறுப்பார்கள். நான் அவர்களை எண்ணி அழுகின்றேன்.
யுகமுடிவின் பித்னாக்களில் ஒன்று எனக்கு தென்பட்டது. அது யுக முடிவுக்கான மிகக் கடுமையான பித்னாவாகும், அது மோசமான பெண்களால் உருவாகின்ற அதிக கவர்ச்சியுடன் கூடிய பித்னாவாகும். அவர்கள் ஆண்களின் நாட்ட சக்தியை பறித்துக்கொள்வார்கள். அவர்கள் பாவம் எனும் நெருப்பில் வண்ணாத்துப் பூச்சைப் போன்று ஆண்களைப் போட்டுவிடுவார்கள். இதனால் ஆண்கள் நிரந்தர வாழ்வின் நிலையான வருடங்களை விட உலகவாழ்வின் ஒரு நிமிடத்தை மேலாகக் கருதுவார்கள். ஒரு தடவை நான் பாதைவழியே பார்த்துக்கொண்டிருந்த போது இந்த பித்னாவுக்கான ஒரு மாதிரியைக கண்டேன். இளைஞர்கள் மீது நான் அதிக கவலைகொண்டேன். நிச்சயமாக காந்தத்தைப் போன்ற ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த பித்னா எனும் நெருப்பிலிருந்து இந்த அப்பாவி இளைஞர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மாட்டார்கள் என நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.
நான் இதனைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்த போது இந்த பித்னாக்களை தூண்டுகின்ற தீ மூட்டுகின்ற ஒரு கற்பனை மனிதனை நான் எனக்கு முன்னே கண்டேன். நான் அவனுக்கும் அவனிடமிருந்து கற்கின்ற நாஸ்திகர்களுக்கும் கூறினேன்: 'நரகலோக ஹூருல் ஈன்களை அனுபவிப்பதற்காக தனது மார்க்கத்தை அர்ப்பணித்துள்ள துரதிஷ்டனே! வழிகேட்டை நேசித்து பாவம்புரிபவனே! தனது மனோ இச்சையின் பாதையில் நாஸ்திகத்தையும் மதச்சார்பின்மையையும் ருசிப்பவனே! உலக வாழ்வை இபாதத்தாக வணங்கி மரணத்தைக் கண்டு அஞ்சி நடுநடுங்குபவனே! கப்ரு வாழ்வை நினைக்கத் தயங்குபவனே! நீ உறுதியாகவே அறிந்துகொள்! உன்னுடைய இந்த முழுமையான வாழ்வு: உனது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்; உனது இனம், வகை; படைப்பினங்கள், சந்ததிகள், கடந்த சமூகங்கள், மனிதர்கள், குலங்கள், கோத்திரங்கள் ஆகிய அனைத்தும் நாஸ்திகத்தின் பார்வையில் முழுமையாகவே அழியக்கூடியவை, இல்லாமல் போகுபவை.
பகுத்தறிவு வழங்க்கப்பட்ட மனிதன் என்றவகையில் நீ தொடர்புகொண்டிருக்கும்- இந்த அனைத்து உலகங்களும் உன்னுடைய நிலையான வழிகேட்டின் காரணமாக இந்த வரையறையற்ற மரணங்களால் உருவாகும் கடுமையான வலிகளை தொடர்ந்தும் உன் தலையில் மழையாகப் பொழிவிக்கின்றன. நீ உணர்வுள்ளவனாக இருந்தால் அவை உனது உள்ளத்தை எரிக்கின்றன. நீ ஆன்மாவைக் கொண்டிருந்தால் அவை உனது ஆன்மாவையும் எரித்துவிடுகின்றன. நீ அறிவுடையவனாக இருந்தால் அவை உனது அறிவை பெரும் கவலையில் மூழ்கடித்துவிடுகின்றன.
போதையில் உனது மடமையையும், உனது தீய அற்ப இன்பத்தையும் இந்த வரையறையற்ற கவலைகளுக்கும் வலிகளுக்கும் மாற்றீடாக சிறிது நேரம் உன்னால் நீடிக்க முடியுமாக இருந்தால் நீ அந்த மடமையில் தொடர்ந்தும் இரு!..... இல்லாவிடின் சுயநினைவுக்குத் திரும்பிவிடு! குர்ஆனுடைய போதனைகளுக்கு செவிதாழ்த்து! அப்போதுதான் உன்னால் கருத்தியல் நரகிலிருந்து விடுதலைபெற முடியுமாக இருக்கும். ஈமான் சாதிக்க விரும்புகின்ற கருத்தியல் சுவனத்தில் உன்னால் நுழைய முடியுமாக இருக்கும்! அப்போதுதான் உன்னால் இந்த உலக வாழ்வின் சந்தோசத்தைக் கூட சுவைக்க முடியுமாக இருக்கும். எனவே ஒரு நிமிடத்தில் காலாவதியாகும் அற்ப இன்பத்துக்குப் பதிலாக நிரந்தர நிலையான பூரண ஈமானிய இன்பத்தை பெற முயற்சியுங்கள்!
இல்லை, நான் மிருகத்தைப் போன்று எனது வாழ்வை கழிக்கப் போகின்றேன் என்றும் கூற வேண்டாம். ஏனெனில் மிருகத்துக்கு இறந்தகாலம், எதிர்காலம் பற்றிய அறிவு சுத்த சூனியமே. அன்புடையவனும் ஞானமிக்கவனுமான அல்லாஹ் இந்த அறிவை அவற்றுக்கு வழங்காததால் எண்ணற்ற வலிகளை, கவலைகளை அவற்றை விட்டும் நீக்கிவிட்டான். எந்தளவுக்கெனில் அறுக்கப்படுவதற்கென நீட்டப்படுகின்ற கோழி கூட எந்தவொரு கவலையையோ வேதனையையோ உணர்வதில்லை. கத்தியை அதன் கழுத்தில் வைக்கும் தருணத்தில் மாத்திரமே அதனை உணர்ந்துகொள்கின்றது. எனினும் அந்த உணர்வும் உடனே அதனை விட்டும் நீங்கி அந்த வேதனையிலிருந்து அது விடுதலை பெற்றுவிடுகின்றது.
4. Page
அப்படியெனில் அல்லாஹ்வுடைய மகத்தான பூரணமிக்க அருளும், அன்பும் அதன் மீது கொண்டுள்ள அவனது நோக்கத்துடன் கூடிய இரக்கமும் அந்த அறிவை வெளிக்காட்டாதிருப்பதில் மறைந்துள்ளது. அது குறிப்பாக அப்பாவி மிருகங்களின் விடயத்தில் பரிபூரணமானதே. அப்பெடியெனில், நீ மடத்தனமாக இன்பங்களை அனுபவிப்பதில் மிருகங்களுடனும் இணைந்துகொள்ள முடியாது. அப்படி அனுபவித்தால் நீ அவற்றை விடவும் பல்லாயிரம் மடங்கு வீழ்ச்சியடைகின்றாய். ஏனெனில் மிருகங்களுக்கு மறைவான விடயமாகக் காணப்படுகின்ற பல விடயங்களை உனது அறிவு காண்கின்றது. அவற்றின் வலிகளையும் உணர்கின்றது. மறைவிடயங்களில் இளைப்பாறுவதை விட்டும் நீ முழுமையாகவே தடுக்கப்பட்டவன்.
மேலும் சகோதரத்துவம், கண்ணியம், மதிப்பு, வீரம் போன்ற நீ பெருமை கொள்ளத்தக்க போற்றத்தக்க பண்புகள் மிகக் குறுகிய கால எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டவை. அவை பெரும் பாலைவனத்தில் ஒரு விரலளவு இடப்பரிமாணத்தைக் கொண்டதைப் போன்றன, அவை வரையறையற்ற காலத்தில் தற்போதைய நேரத்தை மாத்திரம் குறிக்கத்தக்கன. இதனால் அவை செயற்கையானவை, தற்காலிகமானவை, போலியானவை, அடிப்படையற்றவை, மிகவும் குறுகியவை. அவற்றின் அளவுக்கேற்ப உனது பூரணத்துவமும் மனிதமும் சிறியவை. அவை எதற்கும் சமனாகமாட்டாது. நீ அவற்றின் பெறுமதியை முழுமையாகவே இழந்துவிடுவாய்.
என்றாலும் ஈமான்கொண்டோரின் சகோதரத்துவம், கண்ணியம், மதிப்பு, வீரம் என்பன ஈமானின் அடிப்படையில் இறந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை சூழ்ந்துள்ளது. இதனால் அவர்களின் மனிதமும் பூரணத்துவமும் அவற்றின் அளவுக்கேற்ப உயர்ந்தவை. நீ உலக விவகாரங்களில் அருள்பாளிக்கப்படுவாய். ஏனெனில் குறுகிய, ஒடுங்கிய வாழ்க்கைக்கும் காலத்துக்கும் நீ, நீண்ட நிரந்தர விசாலமான வாழ்வுக்குப் பொருத்தமான பெறுமதியை வழங்குகின்றாய். அது எதனைப் போன்றதென்றால் ஒரு பைத்தியகார யூத டயமன் வியாபாரி டயமன் பெறுமதியைக் கொடுத்து கண்ணாடித் துகள்களை வாங்குவதைப் போன்றதாகும். நிச்சயமாக இதில் நீ வெற்றியடைந்துள்ளாய் என்பதில் ஐயமில்லை. பேராசை, அன்பு, பழிவாங்குதல் போன்றவற்றால் ஒரு நிமிடத்தில் மெற்கொள்ளும் செயலால் முழு வருடமும் விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதனால் நீ தற்காலிகமாகவே மதவாதிகளை வெற்றி கொள்ள முடியுமாக இருப்பாய்.
உனது அறிவு, ஆன்மா, உள்ளம், உணர்வுகள் அனைத்தும் அழுக்கடைந்த மனோ இச்சைக்கும் கீழ்த்தரமான ஆத்மாவுக்குமுரிய மோசமான விடயங்களில் கூட்டுச்சேருகின்றன. மேலும் தமது உயர்ந்த பணிகளை விட்டுவிட்டு அவற்றுக்கு உதவுகின்றன. இதனாலே நீ உலகில் முஃமின்களை மிகைக்கின்றாய். புறத்தோற்றத்தில் அவர்களை விட மிகவும் நேசத்துக்குரியவனாக வெளிப்படுகிறாய். ஏனெனில் உனது அறிவும், உள்ளமும், ஆன்மாவும் மிகவும் அழுக்கடைந்து இழிநிலையடைந்து விட்டன. தீய கெட்ட ஆசைகளாகவும் பாவமான மோசமான ஆன்மாவாகவும் அவை உருக்குலைந்து விட்டன. -இந்தக் கோணத்தில்- அநீதியிழைக்கப்பட்ட முஃமின்களுக்கு சுவனத்தையும் உனக்கு நரகையும் சம்பாதித்துத் தரக்கூடிய ஒரு தற்காலிக வெற்றி இருக்கும் என்பதில் ஐயமில்லை.


