திடீரென எனக்கு உதித்த ஒரு முக்கிய பிரச்சினை

5. Page

03. திடீரென எனக்கு உதித்த ஒரு முக்கிய பிரச்சினை


  யுக முடிவின் போது தோன்றும் பித்னாக்களில் அதிகம் அபாயகரமான பித்னாவை ஏற்படுத்தும் பித்னாதான் பெண்களின் மூலம் உருவாகும் பித்னா என்பதை ஹதீஸ்களிலிருந்து அறியலாம். ஆம், முன்னைய காலத்தில் யுத்தத்தின் போது ஆயுதங்களை கனகச்சிதமாகப் பயன்படுத்தும் பெண்கள் படைப்பிரிவொன்று இருந்துள்ளது. அவர்கள் யுத்தகளத்தில் மும்முரமாக போராடக்கூடிய 'அமேதோன் பெண்கள்' என வரலாற்றில் அறியப்படுகின்றார்கள். அவ்வாறுதான் இன்று இஸ்லாத்துக்கு எதிராக வழிகேடு எனும் நிராகரிப்பின் போராட்டத்தில் உடுத்தும் உடுக்காத நிர்வாணமான பெண்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இவர்கள் பாவத்தைத் தூண்டும் நப்ஸூல் அம்மாராவின் திட்டத்தால் ஷைத்தானுக்கு தலைமைப் பதவியை ஒப்படைக்கும் மிகவும் அபாயகரமான குழுவாகும். இவர்கள் தமது நிர்வாண கால்களால் முஃமின்களை தாக்குகின்றார்கள். அவை கூர்மையான கத்திகளைப் போன்றவை. அவர்கள் ஒரு நொடிப்பொழுதில் அதிகமானோரின் உள்ளங்களை கைதுசெய்கின்றார்கள். அவர்களது உள்ளங்களையும் ஆன்மாக்களையும் பெரும் பாவங்களால் குத்துகின்றார்கள். மேலும் திருமணத்தின் வாயிலை மூடவும் விபச்சார விடுதிகளை திறக்கவும் விரைகின்றார்கள். இதனால் சில உள்ளங்களை கொலைசெய்துவிடுகின்றார்கள்.

இதனால் கத்திகளையுடையை அந்தக் கால்கள் நரக விறகாக மாறிவிடுகின்றன. அவை முதலில் எரிகின்றன. அனைத்துக்கும் முன்னால் பல வருடங்களாக அந்நியவர்களுக்கு தமது கால்களை வெளிக்காட்டியதற்குப் பொருத்தமான தண்டனையாக அது அமைகின்றது. அவர்கள் தமது இயல்புநிலையில் மிகவும் தேவையோடு இருக்கின்றதும் மிகப் பலமாக பற்றிப்பிடிக்கவேண்டிய பொருத்தமான திருமணத்தையும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உலகில் நம்பிக்கையையும், உண்மையையும், விசுவாசத்தையும் தொலைத்துவிட்டார்கள். அவ்வாறு அவர்கள் தமக்குப் பொருத்தமான திருமணத்தைக் கண்டுகொண்டாலும் அதனை தமக்கான சோதனைiயாகவே (முஸீபத்) கருதுகின்றார்கள்.

ஹதீஸ் அறிவிப்புகளிலிருந்து விளங்கும் இன்னொரு விடயம்தான் இந்நிலையின் விளைவாக அந்தப் பெண்கள் எவ்வித முக்கியத்துவமும் அற்றவர்களாக, பாதுகாவலரோ, பொறுப்பாளரோ இன்றி எவ்விதப் பெறுமானமும் அற்றவர்களாக மாறிவிடுகின்றனர். எந்தளவுக்கெனில் மறுமை நாள் நெருங்கும் போது திருமணத்தில் நாட்டம்கொள்ளாது அதனை விரும்பாத காரணத்தால் சில இடங்களில் ஒரு மனிதனின் பராமரிப்பில் நாற்பது பெண்கள் இருப்பார்கள்.யதார்த்தம் இவ்வாறு இருக்க ஒவ்வொரு அழகனும் தனது அழகை விரும்புகின்றான். முடியுமான அளவு அது அதனைப் பாதுகாக்க விரைகின்றான். அந்த அழகு கரைந்து செல்ல விரும்பமாட்டான். அழகு என்பது ஒரு அருள் என்பதால் அதற்காக நன்றி செலுத்தும்; காலமெல்லாம் அழகு அதிகரிக்கின்றது. அதற்காக நன்றி செலுத்தாத போது அது அலங்கோலமாக மாறுகின்றது.

  ஓர் அழகி தான் புத்திசாலிhக இருந்தால் அந்த அழகை பாவங்களை சம்பாதிப்பதற்கு, பிறஆடவர்களை தன் பால் வசப்படுத்திக்கொள்வதற்கு பயன்படுத்தமாட்டாள் என்பதில் சந்தேகமில்லை. இந்த அழகை நஞ்சு கலந்த அலங்கோலமாக மாற்றி அருளை நிராகரித்த குற்றவாளியாக ஆளாகுவதை விட்டும் அவள் தனது முழு பலத்தைக் கொண்டும் விரண்டோடுவாள். மேலும் வெறும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் மாத்திரம் நீடித்திருக்கக்கூடிய அழியும் அந்த அழகை ஆகுமான வழியில் பயன்படுத்துவதன் மூலம் அவள் இந்த அருளுக்கு நன்றி செலுத்துகின்றாள். இதனால் அந்த அழகு நிலையானதாக மாறுகின்றது. இல்லாத போது அது முதுமைப் பருவத்தில் நீண்ட காலம் மனிதர்களுக்கு பெரும் சுமையாக மாறுகின்றது. அப்போது அவள் நம்பிக்கையீனமுற்றவர்களைப் போல் அழுது புலம்புவாள்.

  அந்த அழகு இஸ்லாமிய தர்பிய்யத்தின் கீழ் குர்ஆனியப் பண்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டால் அந்த அழியும் அழகு -கருத்தியல் ரீதியில்- நிலையானதாக மாறும். அதன் சொந்தக்காரிக்கு சுவனத்தில் ஹூருல் ஈன்களின் அழகை விட உயர்ந்த அழகு கிடைக்கும். இது ஹதீஸில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயமாகும். அந்த அழகிக்கு அணுவளவு பகுத்தறிவு இருப்பின் நிச்சயமாக அவள் தனது கையிலுள்ள இந்த அழகிய, நிரந்தர, ஒளிமயமான விளைச்சலை வீணடிக்க மாட்டாள்.