ஐந்தாம் குறிப்பு

6. Page

ஐந்தாம் குறிப்பு:


'நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கின்றவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே! நீர் கூறுவீராக!' (ஆல இம்ரான்: 31) எனும் வசனம் நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆம், இந்த வசனம் தர்க்கவியல் கலையில் பயன்படுத்தப்படும் 'விதிவிலக்கான ஒப்பீட்டை' விடவும் மிகப் பலமான உறுதிமிக்க ஒப்பீடாகும். உதாரணமாக தர்க்கவியல் கலையில் 'விதிவிலக்கான ஒப்பீட்டுக்கு' பின்வரும் உதாரணம் சொல்லப்படுகின்றது: 'சூரியன் உதிக்கின்றதெனில் பகல் தோன்றியுள்ளது' எனவே நேர் மறை பெறுபேற்றுக்கு உதாரணமாக 'சூரியன் உதிக்கின்றதெனில் விளைவு பகல் உண்டு' எனக் கூறப்படுகின்றது. மேலும் எதிர் மறை பெறுபேற்றுக்கு உதாரணமாக 'பகல் இல்லையெனில் சூரியன் உதிக்கவில்லை' எனக் கூறப்படுகின்றது.

இவ்விரு- நேர், மறை- பெறுபேறுகளும் தர்க்கவியல் கலையில் பயன்படுத்தப்படும் திட்டவட்டமான முடிவுகளாகும். இந்த ஒப்பீட்டை முழுமையாக இவ்வசனம் எடுத்துரைக்கின்றது. 'நீங்கள் அல்லாஹ்வை விரும்புபவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் நேசத்தக்குரியவரைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாகும். அவ்வாறு அவர் பின்பற்றப்படவில்லையாயின் நீங்கள் அல்லாஹ்வை விரும்பவில்லை என்பதே முடிவாகும். உண்மையில் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த நேசம் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவரின் வழிமுறையைப் பின்பற்றுவதை அதன் விளைவாக உருவாக்கியிருக்கும்.'

உண்மைதான், ஈமான் கொண்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவான் என்பதில் சந்தேகமில்லை. கட்டுப்பாட்டு முறைகளில் மிகவும் அங்கீகாரம் பெற்ற, குறுகிய, சீரான பாதை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றியதும் வழிகாட்டியதுமான பாதை என்பதில் சந்தேகமில்லை. ஆம், -இந்தளவு அருள்களால் இப்பிரபஞ்சத்தை அலங்கரித்துள்ள- அழகானவனான தயாளன் -இந்த அருள்கள10க்கு பிரதியீடாக அறிவும், உணர்வும் கொண்டோரிடமிருந்து நன்றியை வேண்டுவது இன்றியமையாததாகும்.

இந்தளவு அற்புத ஆக்கத்தினால் இப்பிரபஞ்சத்தை அலங்கரித்துள்ள- கண்ணியத்திற்குரிய தயாளன் அறிவும், உணர்வும் உடையவர்களிலிருந்து மிகச்சிறந்த ஒருவரைத்தான் தன்னுடைய பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளராக தனது அடியார்களுக்கு எத்திவைப்போராக, தலைவராக தெரிவுசெய்வான் என்பதில் ஐயமில்லை.

நிச்சயமாக - இந்தப் பிரபஞ்சத்தை தனது அழகு மற்றும் பூரணத்துவத்தினது எண்ணற்ற பிரதிபலிப்புக்களின் வெளிப்பாடாக ஆக்கியுள்ள- அந்தப் பூரணமிக்க அழகன் மிகச் சிறந்த, பரிபூரண அளவீடுகொண்டவருக்கு சந்தேகமின்றி அடிமைத்துவத்துக்கான மிகச்சிறந்த நிலையை வழங்குவான்..... மேலும் அவரது நிலைமைகளை பிறருக்கு முன்மாதிரியாக ஆக்குவான். அவரது நல்ல நிலைமகள் ஏனையோரிடமும் பிரதிபலிக்க அவரைப் பின்பற்றுமாறு அனைவரையும் தூண்டுவான்.

முடிவு: இறை நேசம் நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றுவதை வேண்டிநிற்கின்றது. நபிகாளின் ஸூன்னாவை பின்பற்றும் அதிஷ்டம் முழுமையாகக் கிடைத்தவருக்கு நன்மாராயம் உண்டாகட்டும்! மேலும் ஸூன்னாவை மதிக்காது பித்அத்தில் மூழ்கியவருக்கு நாசம் உண்டாகட்டும்!