ஏழாம் குறிப்பு
NAVIGATION
8. Page
ஏழாம் குறிப்பு:
நிச்சயமாக நபிகளாரின் ஸூன்னா முழுமொத்த ஒழக்கங்களமாகும். அதில் எந்தவொரு விடயத்துக்கும் ஓர் ஒழுங்கு, பிரகாசம் இருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது இரட்சகன் மிக அழகிய முறையில் எனக்கு ஒழுக்கங்களைக் கற்றுத்தந்து பயிற்றுவித்தான்' உண்மைதான், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாக நோக்குபவர், நபிகளாரின் ஸூன்னாக்களை அறிந்துகொள்பவர் 'அல்லாஹ் தனது நேசத்துக்குரிய (ஸல்) அவர்களிடத்தில் அனைத்துவித பண்பாடுகளையும் ஒருசேர அமைத்துள்ளான்' என்பதை தெளிவாக விளங்கிக்கொள்வார்.
யார் நபிகளாரின் ஸூன்னாவை விட்டுவிடுகின்றாரோ அவர் பண்பாடுகளையே விட்டுவிடுகின்றார். 'பண்பாடு குறைந்தவன் அல்லாஹ்வின் கண்ணியத்தையும் அருள்களையும் இழக்கின்றான்' எனும் விதிக்கேற்ப அவன் தனது நிலையை அமைத்துக்கொள்கின்றான். இதனால் அவன் கெட்ட பண்பாடுடையவனாகவும் நஷ்டவாளியாகவும் மாறுகின்றான்.
வினா: அறுவருக்கத்தக்க சில நிலைகளில் மறைத்துக்கொள்வது பண்பாடுகளில் ஒன்றாகும். எனினும் மறைவானவற்றை அறிந்தவனை விட்டும் எதனையும் மறைக்க முடியாது. அனைத்தும் அவனை விட்டும் மறையாது. அனைத்தையும் பார்ப்பவனும், அறிந்தவனும், மறை உலகை அறிந்தவனுமான அல்லாஹ்வுடன் - வெட்கத்துக்குரிய சில நிலைகளில் மறைத்துக்கொள்ள முடியாவிடினும்- எவ்வாறு பண்பாடுடன் நடந்துகொள்வது?
விடை:
1. சங்கைமிகு படைப்பாளன் தனது உருவாக்கத்திலும் புத்தாக்கத்திலும் மிகக் கூடுதல் கவனம் செலுத்தி அதன் அழகை வெளிப்படுத்த விரும்புகின்றான். வெறுக்கத்தக்க விடயங்களை திரையிட்டு மறைக்க விரும்புகின்றான். மேலும் மனிதனின் பார்வைகளை கவர்வதற்கு அவன் தனது அருட்கொடைகளை அழகுபடுத்திக் காட்டுகின்றான். அவ்வாறே அறிவும் உணர்வுமுடையோர் முன்னிலையில் தனது அடியார்களையும் படைப்பபுக்களையும் அழகிய தோற்றத்தில் வெளிக்காட்டவே அவன் விரும்புகின்றான். எனவே அலங்கோலமான இழி நிலையில் தங்களை வெளிக்காட்டுவது பாவமாகவும் ஒருவகையில் அல்லாஹ்வின் –அழகன், அலங்கரிப்பவன், மென்மையானவன், ஞானமிக்கவன் போன்ற - சில திருநாமங்களுக்கு முன்னால் ஒழுக்கம் கெட்ட செயலாகவே அமைகின்றது. இவ்வாறுதான் நபிகளாரின் ஸூன்னா போதிக்கும் ஒழுக்கங்கள் என்பது சங்கைமிகு உருவாக்குபவனின் திருநாமங்களின் கீழுள்ள தூய பண்பாடுகளை அணிகளனாகப்; பெறுவதேயாகும்.
2. வைத்தியர் தேவையின் போது நிர்ப்பந்தத்தில் அஜ்னபிய்யான (இஸ்லாத்தில் திருமணமுடிக்க ஆகுமாக்கப்பட்டுள்ள அந்நிய) பெண்களின் பிறப்புறுப்பைக் கூட நோக்குவது மருத்துவத்தில் பண்பாடுகெட்ட செயலாக கருதப்படுவதில்லை. மாறாக மருத்துவம் வேண்டிநிற்கும் பண்பாடாகவே அது கருதப்படுகின்றது. எனினும் அந்த வைத்தியர் தான் ஓர் மனிதனாக, உபதேசகராக, அழைப்பாளராக, ஆசிரியராக, ஷெய்காக, அறிஞராக இருந்துகொண்டு குறித்த அஜ்னபிய்யான பெண்களை நோக்குவது ஆகுமானதன்று. இக்கோணத்தில் அந்தப் பெண்களும் தங்களை வெளிக்காட்ட முனைவது ஒருபோதும் பண்பாடகாது. மாறாக அது வெட்கமின்மையையும் துர்குணத்தையுமே சுட்டுகின்றது.
இவ்வாறுதான் சங்கைமிகு படைப்பாளனுக்கு நிறைய திருநாமங்கள் உள்ளன. ஒவ்வொரு பெயருக்கும் தனித்துவமான விஷேட வெளிப்பாடு உண்டு. உதாரணமாக 'மன்னிப்பவன்' எனும் திருப்பெயர் பாவங்கள் இருப்பதை வேண்டிநிற்கின்றது. 'மறைப்பவன்' எனும் திருப்பெயர் குறைபாடுகள் இருப்பதை வேண்டிநிற்கின்றது. அவ்வாறே 'அழகன்' எனும் திருப்பெயர் அலங்கோலத்தைக் காண விரும்புவதில்லை. 'மென்மையாளன்', 'சங்கைக்குரியவன்', 'ஞானமிக்கவன்', 'அருளாளன்' போன்ற அழகிய பூரணத்துவமிக்கத் திருநாமங்கள் பிரபஞ்ச வஸ்துக்கள், படைப்பினங்கள் அனைத்தும் அழகிய தோற்றத்திலும் முடிந்தளவு சிறந்த நிலையிலும் இருப்பதை வேண்டிநிற்கின்றது.
அந்த அழகிய பூரணத்துவமிக்கத் திருநாமங்கள் தனது அழகையும் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் போன்றோரின் பார்வையில் பிரபஞ்ச வஸ்துக்கள், படைப்புக்களின் அழகையும் காண விரும்புகின்றன.
இவ்வாறுதான் நபிகளாரின் ஸூன்னாவிலுள்ள பண்பாடுகள் என்பது இந்த உயர்ந்த பண்பாடுகளை, சட்டங்களை, மாதிரிகளையே சுட்டிக்காட்டுகின்றன.


