இரண்டாம் குறிப்பு

3. Page

இரண்டாம் குறிப்பு:


இமாம் ரப்பானி அஹ்மத் அல் பாரூகி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: 'இறைநேசர்களில் மிக உயர்ந்த, பாதுகாப்பான, சிறப்புக்குரியவர்கள் என்போர் நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுவதை தனது தரீக்காவுக்கான அடித்தளமாகக் கொண்டவர்களாவர். இந்தத் தரத்திலுள்ள சாதாரணப் பொதுமகன் கூட வேறு படித்தரங்களிலுள்ள விஷேடர்களை விடவும் சிறப்புக்குரியவரும், பேணுதல்மிக்கவருமாவர் என்பதை நான் எனது ஆன்மீகப் பயணத்தில் உயர்ந்த படித்தரமாகக் கண்டுகொண்டேன்.' ஆம், இமாம் ரப்பானி (ரஹ்) அவர்கள் உண்மையுரைத்துவிட்டார். யார் நபிகளாரின் ஸூன்னாவை தனக்குரிய அடித்தளமாக ஆக்கிக்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவரின் நிழலில் இறைநேசத்தின் தரத்தைப் பெற்றுக்கொள்வார்.