பதினொராம் குறிப்பு

12. Page

பதினொராம் குறிப்பு:

இது மூன்று பகுதிகளைக்கொண்டது.

முதலாம் பகுதி: 

நபி (ஸல்) அவர்களின் ஸூன்னாவுக்கு சொல், aறுவது கடமையாகும். அதனை விடுவதால் தண்டனை கிட்டும். அனைவரும் இத்தகு ஸூன்னாக்களை கடைபிடித்து நடப்பதில் பொறுப்பாளிகளாவர். 'ஸூன்னத்' எனும் உபரியான கடமைகளைப் பொறுத்தவரையில் முஃமின்கள் அதனையும் கடைபிடித்தொழுகுமாறு ஏவப்பட்டவர்களாவர். எனினும் இது விருப்பத்தக்குரிய கட்டளையாகும். இதனை விடுவதால் தண்டனை கிடைக்கப்பெற மாட்டாது. ஆனால் அதனைப் பின்பற்றி ஒழுகினால் மகத்தான கூலி கிடைக்கும். மாறாக அதனை மாற்றுவது பித்அத் ஆகவும், வழிகேடாகவும், பெரும் தவறாகவும் கருதப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் நல்ல வழக்காறுகளையும் நல்ல செயற்பாடுகளையும் பொறுத்தவரையில் அவற்றை –நலன் பயக்கும் என்றவகையில்- தனிநபர், சமூகம் மற்றும் மனித இனம் முழுவதும் பின்பற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் நாளாந்த செயற்பாடுகளில் அதிகமான வாழ்வியல் பயன்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் அந்த வழக்காறுகள் இபாதத்தாக மாறுகின்றன.

உண்மைதான், எதிரிகள் மற்றும் நண்பர்களின் சான்றுகளின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உயர்ந்த நற்பண்பாடுகளைக் கொண்டவர், மனித சமூகத்தில் உருவான ஓர் மகத்துவமிக்க பிரபல்ய ஆளுமையாக இருப்பதால்...| அவர் ஓர் பரிபூரண மனிதன், அவரது ஆயிரமாயிரம் அற்புதங்கள், அவர் உருவாக்கிய பூரணத்துவமிக்க இஸ்லாமிய உலகம் என்பவற்றால் அவர் ஓர் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருப்பதால்...| ஞானமிகு குர்ஆன் அவரை எத்திவைப்பாளராகவும் தனது நடைமுறை விளக்கமாகவும் உண்மைப்படுத்தியிருப்பதால்...| பூரணம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் அவரைப் பின்பற்றுவதன் மூலம் உயர்தரத்தையும் ஈருலக ஈடேற்றத்தையும் அடைந்திருப்பதால்....| இத்தகு ஒருவரின் ஸூன்னாவும் செயற்பாடுகளும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்க மிகச்சிறந்த மாதிரியாகவும், பின்பற்றத் தகுதிவாய்ந்த மிகப் பலமானதும் பாதுகாப்பானதுமான வழிகாட்டியாகவும், வாழ்வியல் யாப்பாகக் கொள்ளத்தக்க பலமான சட்டங்களாவும் திகழ்கின்றன.

அதிர்ஷ்டசாலி யாரெனில் ஸூன்னாவைப் பெருமளவு பின்பற்றும் பாக்கியத்தைப் பெற்றவராவார். சோம்பலின் காரணமாக ஸூன்னாவைப் பின்பற்றாதிருப்பது பெரும் நஷ்டமாகும். மேலும் ஸூன்னா பற்றி எவ்விதப் கருசனையுமின்றி அதன் தரத்தைக் குறைத்து மதிப்பிடுவது பெரும் குற்றமாகும். வேண்டுமென்றே ஸூன்னாவைப் பொய்ப்பிப்பது, விமர்சிப்பது மாபெரும் வழிகேடாகும்.

இரண்டாம் பகுதி: 

  அல் குர்ஆனிலே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: 'நபியே! நீர் மகத்தான நற்பண்புடையவராக இருக்கின்றீர்'. ஸஹீஹான அறிவிப்பில் உண்மையாளர் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றார்கள்- இதுவே அனைத்து ஸஹாபாக்களின் நிலைப்பாடும் கூட- : ''அவருடைய பண்பாடு அல்குர்ஆனாகவே இருந்தது.'' அதாவது அல்குர்ஆன் வர்ணிக்கும் நற்பண்பாடுகளுக்கான முன்மாதிரியாகவும் உதாரணப்புருசராகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அந்தப் பண்பாடுகளை முதன்முதலில் அணிகளனாகக் கொண்டவராவார். இயல்பிலே அவர் அத்தகைய நற்பண்பாடுகளிலேயே படைக்கப்பட்டிருந்தார்.

எனவே இத்தகு ஆளுமையின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு அசைவும் மனித இனத்துக்கு முன்மாதிரிக்குரியதாக இருக்குமெனில் ஸூன்னாவில் கவனம் செலுத்தாதோருக்கு| அதனை மாற்ற நினைக்கும் பொடூபோக்கான முஃமின்களுக்கு எவ்வளவு துரதிஷ்டம், கேடு உருவாகும் என்பதை மதிப்பிட்டுக்கொள்ளட்டும். இதனை அறிவிலிகளும் இலகுவாக விளங்கிக்கொள்வார்கள்.

மூன்றாம் பகுதி: 

நபி (ஸல்) அவர்கள் நடுநிலையான, சீரான அமைப்பில் பரிபூரண தோற்றத்தில் படைக்கப்பட்டுள்ளார்கள். அவரது அனைத்து செயற்பாடுகளும் சீரான ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது ஒவ்வொரு அசைவும் கூடுதல், குறைவின்றி சீராக நடுநிலையாக (இஃதிதால், இஸ்திகாமா) அமைந்திருப்பதை அன்னாரின் வாழ்க்கை வரலாறு தெளிவாகப் படம்பிடித்தக் காட்டுகின்றது. உண்மைதான், நபி (ஸல்) அவர்கள் ''உங்களுக்கு ஏவப்பட்டதைப் போல் நிலைத்து நிற்பீராக!'' எனும் கட்டளைக்கு பரிபூரணமாக கட்டுப்பட்டார். இதனால் அவரது அனைத்து சொல், செயல் மற்றும் நிலைப்பாடுகளில் இந்த நடுநிலைமை தெளிவாகவே வெளிப்பட்டுள்ளது.

உதாரணமாக, அன்னாரின் 'சிந்தனா சக்தி' என்பது எப்பொழுதும் நடுநிலைபேணும் ஹிக்மத்தின் அடிப்படையில் செயற்பட்டிருக்கின்றது. 'ஹிக்மத்' என்பது அதிமீதறிவு, தந்திரம் (ஜர்பதா) எனும் மிதமிஞ்சிய நிலையிலிருந்தும் மிகத்தாழ்ந்த நிலையான மடமையிலிருந்தும் (கபாவா) உருவாகும் தீங்கைவிட்டு விலகிய தூய நடுநிலையாகும். அவ்வாறே அன்னாரின் 'கோப சக்தி' என்பது எப்பொழுதும் தூய்மையான வீரத்தின் (சுஜாஅ) அடிப்படையிலே எழுந்திருக்கின்றது. அது மிதமிஞ்சிய கோபத்தாலும் (தஹவ்வுர்) கோழைத்தனத்தாலும் (ஜூப்ன்) உருவாகும் தீங்கிலிருந்து விடுபட்ட தூய நடுநிலையாகும். அன்னாரின் 'ஆசை உணர்வு' என்பது எப்பொழுதும் பேணுதல் எனும் உயர்தரத்தில் பாதுகாக்கப்பட்ட வழிகாட்டியாக அமையப்பெற்றிருக்கின்றது. அது மிதமிஞ்சிய ஆசையாலும் (புஜூர்) ஆசையற்ற நிலையாலும் (ஹூமூத்) உருவாகும் தீங்கிலிருந்து தூய்மை பெற்ற நடுநிலையாகும்.

இவ்வாறுதான் அன்னார் தனது அனைத்து வாழ்க்கை வழிமுறைகளிலும், நிலைப்பாடுகளிலும், சட்டங்களிலும் நடுநிலையைத் தேர்ந்தெடுத்தள்ளார்கள். கூடுதல், குறைவு, வீண்விரயம் எனும் அநீதியும் இருளுமுடைய நிலையை தவிர்ந்துகொண்டுள்ளார்கள். எந்தளவுக்கெனில் அன்னார் தனது பேச்சு, உணவு, குடிபானம் என்பவற்றில் கூட முழுமையாக வீண்விரயத்தைத் தவிர்த்து நடுநிலையை தனக்குரிய வழிகாட்டியாக எடுத்துள்ளார்கள். அறிஞர்கள் இந்த யதார்த்தம் பற்றி பல நூல்களில் விரிவாகவே விளக்கியுள்ளார்கள். இந்தக் கடலிலிருந்து ஒரு துளி எமக்குப் போதுமானதாகும். சுருக்கமாகச் சொன்னால் வல்லவனுக்கு ஒரு சமிக்ஞை போதுமாகும்.

chat lllllllllllllllllllllllllllllllllllllllllllllllll


அனைத்தப் பண்பாடுகளினதும் உறைவிடமான எம்தூதர் (ஸல்) அவர்கள் மீது இறைவா நீ ஸலவாத்துச் சொல்வாயாக! 'நபியே! நிச்சயமக நீர் மகத்தான நற்பண்பாடுகளைக் கொண்டவராவீர்'

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 'எனது சமூகத்தில் சீர்கேடு தலைதூக்கும் போது எனது ஸூன்னாவைப் பற்றிப்பிடிப்போருக்கு நூறு ஷஹீத்களின் கூலி கிடைக்கும்'

'எமக்கு நேர்வழியைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் எமக்கு நேர்வழி காட்டாவிட்டால் நாம் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எமது இறைத் தூதர்கள் சத்தியத்தையே கொண்டுவந்தார்கள் '

வஸ்ஸலாம்