பதினொராம் ஒளிக்கீற்று - ஸூன்னாவின் படித்தரமும் பித்அத் நோய் நிவாரணியும்

1. Page


பதினொராம்; ஒளிக்கீற்று


ஸூன்னாவின் படித்தரமும் பித்அத் நோய் நிவாரணியும்


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்


'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார், அவர் உங்கள் மீது ஆர்வம் கொண்டவராகவும் நீங்கள் சிரமப்படுவதை சகிக்கமுடியாதவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கருணையும் கொண்டவராகவும் இருக்கின்றார்' (அத்தௌபா: 128)

இந்த வசனத்திற்கான முதல் விளக்கம் 'ஸூன்னாவின் வழிகாட்டலையும்', இரண்டாம் விளக்கம் 'ஸூன்னாவின் படித்தரத்தையும்' குறித்துக்காட்டுகின்றது.

• 'நபியே! அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் 'அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. அவன் மீதே சார்ந்திருக்கின்றேன். அவன் மகத்துவமிக்க அர்ஷின் இரட்சகனாவான்' எனக் கூறுவீராக!' (அத்தௌபா: 129)

• 'நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கின்றவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே! நீர் கூறுவீராக!' (ஆல இம்ரான்: 31)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்ற நூற்றுக்கணக்கான குறிப்புக்களில் பதினொரு குறிப்புக்களை மாத்திரம் சுருக்கமாக இப்பகுதி விளக்க முயற்சிக்கின்றது.