ஆறாவது விடயம்:

10. Page

ஆறாவது விடயம்:


ரஸாஇலுந் நூரில் பல்வேறு இடங்களில் எண்ணிலடங்கா திட்டவட்டமான ஆதாரங்களையும் விளக்கங்களையும் குறிப்பிட்டுள்ள 'அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல்' என்ற அடிப்படைக்கு பல்லாயிரம் பலமிக்க ஆதாரங்களிருக்க, அவற்றில் ஒன்றை சுருக்கமாக இங்கே சுட்டிக்காடுகின்றோம். உயர்தரத்தில் கற்கின்ற சில மாணவர்கள் 'கஸ்தமுனி' என்ற நகரில் என்னை சந்தித்தார்கள். அவரகள் என்னிடம் 'எமது படைப்பாளனைப் பற்றி எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். எமது ஆசான்கள் அல்லாஹ்வைப் பற்றி சொல்லித் தருவதில்லை' என்று வினவினார்கள்.

நான் எனது பாணியில் அவர்களுக்கு இவ்வாறு விளக்கினேன்: நீங்கள் கற்கின்ற எல்லாக் கலைகளும் எப்போதும் அல்லாஹ்வைப் பற்றி பேசுகின்றன. அவை தமது விசேட இயல்பு நிலையிலேயே அவனை அறிமுகப்படுத்துகின்றன. நீங்கள் உமது ஆசான்களுக்கன்ற அவற்றுக்கு செவிதாழ்த்துங்கள்.

உதாரணமாக ஓர் அற்புதமான மருந்தகத்திலுள்ள மருந்துக் குப்பிகள் ஒவ்வொன்றிலும் முக்கிய மருந்துகளும், இரசாயனக் கலவைகளும் இருக்கின்றன. அவை நுண்ணிய அற்புத வீதாசாரங்களில் கலந்துள்ள மருந்துக் கலவைகள். அவை திறமையான, ஞானமிக்க இரசாயனவியல் நிபுணர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. அதே போன்றுதான் இந்த பூமிப்பந்து எனும் மருந்தகமும் -குருட்டுக் கண்களுக்குக் கூட- இரசாயனவியல் நிபுணரான சங்கைமிகு ஞானியை காட்டிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் கற்கின்ற மருத்துவக் கலையின் அடிப்படையில் தாவர, மிருக உலகிலுள்ள ஆயிரத்து நானூறு வகையான மருந்துகளும் மருந்துக் கலவைகளும் உள்ள, சந்தையில் இருக்கும் மருந்தகத்தை விட பருமனிலும் அதிசயத்திலும் மிகப் பாரிய அளவில் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

உதாரணமாக, சாதாரண பதார்த்தத்தால் பல்லாயிரம் வiகான ஆடைகள் தைக்கப்படுகின்ற அற்புதமானதொரு தொழிற்சாலை சந்தேகமின்றி அதன் சொந்தக் காரனையும் அவனது வல்லமையையும் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கின்றன. அதே போன்றுதான் புவியெனும் நடமாடும் தெய்வீக இயந்திரம், அதிலே இருக்கின்ற பல்லாயிரக் கணக்கான உயிரிகள், அவை ஒவ்வொன்றிலுமுள்ள பல்லாயிரக் கணக்கான அற்புதமான தொழிற்சாலைகள் இவையனைத்தும் அவற்றின் படைப்பாளனை, சொந்தக் காரனை மனித தொழிற்சாலையை விட பருமனிலும் அதிசயத்திலும் பூரணத்துவத்திலும் மிகப் பெரிய அளவில் நீங்கள் கற்கின்ற இயந்திரவியல் கலையின் அடிப்படையில் அறிமுகப்படுத்துகின்றன.

உதாரணமாக, மிகக் கட்சிதமான அமைப்பில் உருவாக்ககப்பட்டுள்ள உணவுக் களஞ்சியசாலை, அதன் சேமிப்பகம், அதன் கடையில் ஆயிரம் வகையான உணவுகள் ஒழுங்குமுறையில் அடுக்கப்பட்டிருப்பது இவையனைத்தும் சந்தேகமின்றி அந்த உணவுகளின் சொந்தக்காரனை, எஜமானை அறிமுகப்படுத்துகின்றன. அவ்வாறுதான் இந்த அருள்பெற்ற உணவுக் களஞ்சியசாலைளூ ஒரு வருடத்தில் இருபத்தி நான்காயிரம் வருடங்களை கடந்து சீரான ஒழுங்கில் பயணித்துக் கொண்டிருக்கும் தூய பிரபஞசக் கப்பல்ளூ அதிலே பல இலட்சம் வகையான உயிரனங்களையும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவையான விஷேட உணவுகளையும் சுமந்துகொண்டு பருவ காலங்களை கடந்துசெல்கின்றது. ஒரு பெரிய புகையிரத வண்டியைப் போனறு அது வசந்த காலத்தை பல்வகைப்பட்ட பல்லாயிரக்கணக்கான உணவுகளால் நிரப்புகின்றது. அவற்றை மாரி காலததில் உணவின்றி தத்தளிக்கும் அப்பாவி உயிரினங்களிடம் கொண்டு வருகின்றது. பல்லாயிரம் வகை கருவிகள், பொருட்கள், செல்வங்கள், பெட்டிகள், உணவுப் பருக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள இந்த தெய்வீக களஞ்சியசாலை, கடை நீங்கள் கற்கின்ற அல்லது கற்கப் போகின்ற உணவியல் கலையின் அளவுகோல்களின் அடிப்படையில் மேலே உதாரணத்தில் குறிப்பிட்ட கடையை விட பருமனிலும் அதிசயத்திலும் மிகப் பாரிய அளவில் அவனை திட்டவட்டமாக அறிமுகப்படுத்துகின்றது, அன்புகொள்ளச் செய்கின்றது.

அவ்வாறே பதினான்காயிரம் சமூகங்களை இணைத்துள்ள ஒரு படை, அதிலுள்ள ஒவ்வொரு சமூகத்துக்கும் விஷேட உணவுகள், விஷேட ஆயுதங்கள், விஷேட ஆடைகள், விஷேட பயிற்சிகள், விஷேட பிரியாவிடை எனவும், அதன் தளபதி அபூர்வ அதிசய ஆற்றல் பெற்றவனாகவும் இவர்களில் எவரையும் மறக்காதும் தனது பணியை குழப்பிக்கொள்ளாதும் ஒவ்வொரு சமூகத்துக்கும் தேவையான பல்வகைப்பட்ட விஷேட உணவுகள், ஆயுதங்கள், ஆடைகள், கருவிகள் என அனைத்தையும் தன்னந்தனியே வழங்குபவனாகவும் இருந்தால் சந்தேகமின்றி இந்த இராணுவப் படை அந்தப்பிரமாண்டமான தளபதியை தெளிவாக சுட்டிகாட்டுவதோடு ஆச்சரியத்தோடும் மதிப்போடும் ஏனையவர்களால் அவனை அன்புகொள்ளவும் செய்கின்றது.

இந்த உதாரணத்தில் குறிப்பிடப்பட்டதைப் போல் பூமி எனும் இராணுவத் தளத்தில் மீண்டும் அழைக்கப்படக் கூடிய தெய்வீகப் படையில் இருக்கும் தாவரம், மிருகம் போன்ற நானூறு வகையான சமூகங்களில் வசந்த காலத்தில் ஒவ்வொன்றுக்கும் தேவையான பல்வகைப்பட்ட விஷேட ஆடைகள், உணவுகள், ஆயுதங்கள், பயிற்சிகள், பிரியாவிடைகள் மிகக் கட்சிதமான, பூரணமான முறையில் ஒரு பிரமாண்டமிக்க தளபதியால் இவர்களில் எவரையும் மறக்காதும் தனது பணியை குழப்பிக்கொள்ளாதும் வழங்கப்படுகின்றன.

மனித இராணுவத் தளத்தை விட அல்லது இராணுவப் படையை விட பிரமாண்டமான, பூரணத்துவமிக்க பூமி எனும் இந்த இராணுவத் தளம் அறிவுள்ளவர்களுக்கு நீங்கள் கற்கப் போகின்ற இராணுவவியல் கலையின் அடிப்படையில் புவிப் பந்தின் தூய ஆட்சியாளனை, அதனை நிர்கிப்பவனை, அதன் இரட்சகனை, அதன் தளபதியை ஆச்சரியத்தோடும் மதிப்போடும் உணர்த்துகின்றது. அவனைப் புகழ்வதன் மூலமும் துதிபாடுவதன் மூலமும் பிறருக்கு அவனை அன்புகொள்ளச் செய்கின்றது.


11. Page

அது போல மில்லியன் கணக்கான மின்சார குமிழ்கள் ஒளிர்கின்ற ஓர் அற்புதமான நகரமொன்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அங்கு அனைத்து இடங்களுக்கும் ஓர் மின் பிறப்பாக்கி சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றது. அதன் எரிபொருளும் முடிவடைவதாக இல்லை: இப்படியான மின்குமிழ்கள் அதை ஆக்கியவன் முதற்கணத்திலேயே புரியப்படுவான். அவனது ஆக்கம் வியப்புக்குரியதாக நிச்சயம் இருக்கும். இந்த இடத்தில் -ஆம், நிச்சயம் அவ்வற்புதங்களை நிகழ்த்தும் ஒருவன் வாழ்கிறான், வாழ்கிறான் என்று உரக்க சத்தமிடத் தோன்றும். வித்தியாசமான சக்திகொண்ட மின்னியல் நிபுணன் அவன். அவன் மின்சாரத்தை நிர்வகித்து மிகப் பிரகாசமான மின் குமிழ்களை உற்பத்தி செய்கின்றான். அதற்கென ஒரு தொழிற்சாலையை நிறுவி எரிபொருளையும் கொண்டு வருகின்றான். 

இதே போல் ஓர் உதாரணம் தான் இவ்வுலகம் எனும் நகரின், அதன் கோட்டையின் கூரையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் எனும் மின்குமிழ்கள். அவற்றுள் ஒரு பகுதி பூமிப் பந்தினை விட ஆயிரம் மடங்கு பெரியது. வானவியலின் கூற்றுப் படி ஒரு பீரேங்கியின் குண்டினை விட அது எழுபது மடங்கு வேகமாக அசைந்து செல்லக் கூடியது. அது அவற்றின் ஒழுங்கிலிருந்து விடுபடுவது கிடையாது. ஒனறோடு ஒன்று முட்டி மோதி அணைவதுமில்லை, அதன் எரிபொருள் முடிவுறுவதுமில்லை.

நீங்கள் கற்கின்ற வானவியலின் கூற்றுக்கேற்ப ஒவ்வொரு நாளும் எங்களது சூரியன் -சூரியனானது பூமியைவிட மில்லியனை விட அதிகளவு பருமன் கொண்டது. ஒரு மில்லியனுக்கும் அதிக வருடகாலமாக அது வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அருளாளனின் கடாட்சங்கள் நிறைந்த உலகில் அதுதான் மின்குமிழும் சுட்டைத் தணிப்பதுமாகும்- அணையாமல் எரிவதற்கு பூமிப் பந்தின் கடலளவு எரிபொருள், அதன் மலைகளளவு நிலக்கரி, பூமி போன்று ஆயிரம் பருமனளவு விறகுக் குவியல்கள் இன்றியமையாததாகும்.

இந்த பிரபஞ்சம் எனும் பிரமான்ட நகரத்தில் உலக கோட்டையின் மின்குமிழ்களும் - அவை ஒளியினாலான விரல்கள் மூலம் சூரியனையும் அது போன்ற உயர்ந்த நட்சத்திரங்களையும் எரிபொருள், விறகு, நிலக்கரி இன்றி ஒளிரச் செய்யும் முடிவுறாத சக்தியையும் வல்லமைiயையும் காட்டிநிற்கின்றன. அச்சக்தி அவற்றை அணைந்துவிட விடுவதுமில்லை.. வேகத்தோடு அவற்றை அது இயங்கச் செய்கின்றது.. ஒன்றோடு ஒன்று அவை முட்டி மோத அனுமதிப்பதுமில்லை- அம்மின்குமிழ்களை நிர்வகித்தலும் : அதன் பிரமான்டத்தின் அளவினை, வசீகரத்தை -ஒளிபொருந்திய நட்சத்திரங்களை சாட்சியாக எடுத்து- இப்பிரமான்டமான பிரபஞ்சத்தின் கர்த்தாவை, அதனை ஒளியூட்டியவனை, அதை நிர்வகிப்பவனை: நீஙகள் கற்கினற அல்லது கற்க இருக்கின்ற மின்னியல் கலையின் விதிகளுக்கேற்ப அறிமுகப்படுததுவதோடு அக்கர்த்தாவை பிறருக்கு துதிகள் மற்றும் புகழ்கள் மூலம் அடிமைத்துவத்தின் அளவுக்கு ஆசையூட்டுகின்றது.

உதாரணமாக ஒரு புத்தகம் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அதில் ஒவ்வொரு வரியின் மூலம் மிக நுணுக்கமான எழுத்துக்களைப் பயன்படுத்தி ஒரு முழுமையான புத்தகம் எழுதப்பட்டுள்ளது, அதிலுள்ள ஒவ்வொரு சொல்லாலும் மிகத் தெளிவான எழுதுகோலைப் பயன்படுத்தி ஓர் அத்தியாயம் ஆக்கப்பட்டுள்ளது. – அதிகமான கருத்துக்களைப் புலப்படுத்தும், அதன் உள்ளடக்கங்களை ஒன்றோடு ஒன்று இணைத்துவிடும் இப்புத்தகம் சந்தேகமின்றி அவ்வெழுத்தாளனின், அவ்வாக்கத்தினைப் படைத்தவனை மிகைக்க முடியாத திறமையை உச்சகட்ட சக்தியைக் கொண்டவன் என்பதை தெளிவுபடுத்தும்- பகற்பொழுதின் சூரியன் போல எவ்வித சந்தேகமுமின்றி அது அதன் எழுத்தாளனை, அதனை ஆக்கியவனை, அவனது பூரணத்துவத்தோடும் முழுமையான திறமைகளோடும் சுட்டிக்காடடுகின்றது. அது போல அவ்வெழுத்தாளனை நோக்கி 'மாஷா அல்லாஹ், பாரகல்லாஹ்' போன்ற புகழ் வார்த்தைகளை திருப்பிவிடும்.

அது போல உதாரணத்தில் எழுதுகோலானது இப்பாரிய பிரபஞ்சத்தின் புத்தகத்தை, அதன் ஒரு பக்கமாகிய பூமியின் முகத்தில் எழுதுவதை எம்கண்களால் நாம் காண்கின்றோம். அது மட்டுமல்லாது அது: அதன் ஒரு சிறு பகுதியாகிய வசந்தம் எனும் பருவ காலத்திலும் எழுதுகிறது. அப்பருவம் மூன்று இலட்சம் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டது. அது எதைப் போல் என்றால் தமக்குள் ஒத்திசைவான மற்றும் வேறுபாட்டு பண்பினைக் கொண்ட மூனறு இலட்சம் புத்தகங்களைக் கொண்டது. அதில் மறதி, பிழை, குழப்பம் கிடையாது. அனைத்துமே நேர்த்திமிக்கது, ஒழுங்கானது. அது போல சிலவேளைகளில் அவ்வெழுதுகோல் 'மரம்' எனும் ஒரு சொல்லில்ஒரு கவிதையையே உருவாக்கிவிடுகின்றது. அப்புத்தகத்தின் உள்ளடக்கம் ஓர் விதையைப் போல ஓர் புள்ளியில் பூரணம் பெறுகின்றது.

நான் சொல்கின்றேன்: இப்பிரபஞ்சம் எனும் புத்தகம், பிரமான்டமான உலகம், நடைமுறைவடிவிலான அல்குர்ஆன் எல்லையற்ற கருத்துக்களையும், தனக்குள் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரவாகித்த ஞானங்களையும் உள்ளடக்கியுள்ளது. அது அதனது பிரமாண்டத்தின், வசீகரத்தின், ஏலவே கூறப்பட்ட உதாரணததிலுள்ள புத்தகம் தொடர்பில் அது கொண்டிருக்கும் ஏறாழமான கருத்துக்களின் அளவுக்கு இப்பிரபஞ்சம் எனும் புத்தகத்தை ஆக்கியவனை, விசாலித்த அளவீடுகளுக்கேற்ப எல்லையற்ற பூரணத்துவமிக்க எழுத்தாளனை அறிமுகப்படுத்துகின்றது.

இக்கலைகளுக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான கலைகளுள் ஒவவொரு கலையும் இப்பிரபஞ்சத்தின் மாட்சிமை கொண்ட கர்தாவை அவனது பெயர்கள் மூலம் அறிமுகப்படுத்துகின்றன. அக்கர்தாவின் பண்புகளை அவனது பூரணத்துவங்களை விசாலமான அவனது அளவீடுகள் மூலம் மற்றும் அவனுக்கே உரிய அவனது பிரதிபலிப்புகள், மிக நுணுக்கமான அவனது பார்வைகள் மூலம் சொல்லித் தருகின்றது. இந்த இளம் மாணவர்களுக்கு நான் பின்வருமாறு சொல்கின்றேன்: நிச்சயமாக மிகத தெளிவான அற்புதமிக்க அல்குர்ஆன் எங்களுக்கு எமது படைப்பாளனை பல தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துகின்றது.


12. Page

رَّبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ

 'வானங்கள், பூமியின் இரட்சகன்', 

خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ

'வானங்கள், பூமியைப் படைத்தவன்' நிச்சயமாக அது திகைக்கச் செய்யும் மாட்சிமை மிக்க ஏகத்துவத்தின் ஆதாரமாகிய மேற்குறித்த சான்றை எமக்கு கற்றுத்தருகின்றது. இவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். முற்றுமுழுதாக உண்மைப்படுத்தி: நாம் வரையறையற்ற எமது இரட்சகனுக்கு மகத்துவமிக்க பாடத்தினை, மிகத் தூய்மையான யதார்த்தத்தை பெற்றுக்கொண்டதற்காக நன்றி செலுத்துகின்றோம். அல்லாஹ் உம்மை பொருந்திக் கொள்வானாக என்று கூறினார்கள்.  நான் அவர்களுக்கு பின்வருமாறு கூறினேன்: 

நிச்சயமாக மனிதன் ஆயிரக்கணக்கான வலிகளை, ஆயிரக் கணக்கான இன்பங்களை ஏற்கும் வாழ்வையுடைய இயந்திரமாக, அப்பாவியான படைபபாக இருப்பினும் வரையறையற்ற சட, கருத்தியல் ரீதியான எதிரிகள் அவனுக்கு உண்டு. அவ்வாறே அவன் வரையறையற்ற பலவீனனும் கூட. அவனுக்கு வரையறையற்ற வெளிப்படையானதும் அந்தரங்கமானதுமான தேவைகளும் உண்டு... அவ்வாறே அவன் வரையறையற்ற ஏழையும் கூட. அழிவு, பிரிவின் அரைகளை தன் பிடரியில் வாங்கிக்கொள்ளும் அப்பாவியான படைப்பு அவன். அவன் ஈமானின் மூலம் மாட்சிமை கொண்ட அரசனை சார்ந்திருக்கின்றான். எனவே அதன் மூலம் தனது அனைத்து எதிரிகளுக்கு முன்னாலும் தான் சார்ந்திருக்கும், தனது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான நீட்சிமிக்க ஒரு புள்ளியை கண்டுகொள்கின்றான்.

அவன் எவ்வளவு மகிழ்ச்சியுடையவனாக நன்றியுடையவனாக இருப்பான். -தான் சார்ந்திருக்கும் தலைவரின் தரம், கண்ணியத்தின் மூலம் ஒவவொருவரும் பெருமைப் படுவதைப் போல- ஈமானின் மூலம் சர்வ வல்லமை, அருள்கொண்ட அரசனை சார்ந்திருப்பதில் அவன் எவ்வளவு பெருமைப்படுவான். அவனுக்காகவே தனது அடிமைத்துவத்தின் மூலம் பணியாற்றுவான். தனது ஆயுளை முடிததுவிடும் தூக்குத்தண்டனை அறிவிப்பை அவனுக்கான இராணுவப் பயிற்சியின் பிரியாவிடைவிழாவுக்கு கிடைக்கும் அனுமதிப்பத்திரமாக மாற்றிக் கொள்வான். இதை வைத்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.

இம்மாணவர்களுக்கு நான் கூறியது போலவே அல்லலுறும் சிறைக் கைதிகளுக்கும் நான் புதிதாகச் சொல்கிறேன்:  தூய்மையான அல்லாஹ்வை அறிந்து அவனுக்கு கட்டுப்பட்டவன் சிறைக்குள் இருந்தாலும் மகிழ்ச்சியானவனே. அவனை மறந்தவன் கோட்டைகளில் இருந்தாலும் உண்மையில் சிறையில், துரதிஷ்டத்தில் இருப்பவனே. தனது மரண தண்டனையின் போது மகிழ்ச்சியான, அநீதியிழைக்கப்பட்டவன் துரதிஷ்டம் பிடித்த அநியாயக் காரனுக்கு பின்வருமாறு சொல்லவும் செய்வான்: 'நிச்சயமாக நான் மரண தண்டனை கொடுக்கப்படவில்லை. மாற்றமாக நான் மகிழ்ச்சியை நோக்கி இராணுவ அணிவகுப்பிலே செல்கிறேன். என்றாலும் நான் நிரந்தரமான முடிவற்ற மரணதண்டனை உங்களுக்கு விதிக்கப்படுவதை நான் காண்கின்ற போது உங்களை பழிக்குப் பழி வாங்குவேன்' அதன் பின்னர் வணக்கத்துக்குரியவன் அல்லர்வைத் தவிற வேறு யாரும் இல்லை என்று கூறி தனது ஆன்மாவை மகிழ்ச்சியுடன் ஒப்படைத்துவிடுவான்.

'யா அல்லாஹ் நீ மிகத் தூய்மையானவன். நீ எமக்குக் கற்றுத் தந்ததைத் தவிற வேறு எந்த அறிவும் எமக்குகக் கிடையாது. நிச்சயமாக நீ அறிவுடையவன், ஞானமிக்கவன்.'

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم