ஐந்தாவது விடயம்:
NAVIGATION
9. Page
ஐந்தாவது விடயம்:
'இளைஞ்களுக்கான வழிகாட்டல்' எனும் நூலில் விளக்கப்பட்டிருப்பதைப் போல் இளமை என்பது நிச்சயமாக கழியக்கூடியது. எவ்வாறு கோடை காலம் இலையுதர் காலத்தும் மாரி காலத்துக்கும் ஒரு வாயிலை திறந்து விடுமோ, எவ்வாறு பகல் மாலையாகவும் இரவாகவும் புரளுமோ அவ்வாறே நிச்சயமாக இளமை முதுமையாகவும் மரணமாகவும மாறும் என்பதில் சந்தேகமில்லை.
நிச்சயமாக ஒரு இளைஞன் தனது அழியும் இளமையை 'இஸ்காமத்' எனும் வட்டாரத்திலுள்ள நன்மையான விடயங்களில் கற்பபொழுக்கத்தோடு பயன்படுத்தினால் அவன் நிரந்தர நிலையான இளமையைப் பெற்றுக்கொள்வான் என்று வானலோக கட்டளைகள் அனைத்தும் நன்மாராயம் சொல்லுகின்றன.
ஒரு நிமிட கோபத்தால் நிகழ்ந்த கொலை பல மில்லியன் நிமிடங்கள் சிறை வேதனையை அனுபவிக்கச் செய்வதைப்போல் அனுமதிக்காத வட்டாரத்திலுள்ள இளமையின் கேளிக்கைகளும் இன்பங்களும், அந்த இன்பங்களை விட அந்த இன்பங்களிலுள்ள வேதனைகளை மிக அதிகக் கொண்டிருப்பதை - அதற்கான மறுமை விசாரணை மற்றும் கப்று வேதனை ஒருபுறமிருக்க - ஒவ்வொரு பகுத்தறிவுள்ள இளைஞனும் அனுபவம் மூலம் உண்மைப்படுத்துவான். அந்த இன்பம் நீங்குவதால் உருவாகும் கஷ்டங்களை அவன் அனுபவிப்பான். அவன் வேறு பாவங்களுக்கும் உலக தண்டனைக்கும் ஆளாகுவான். இதுவே தன்னை கேளிக்கையிலும் வழிகேட்டிலும் ஈடுபடுத்திக் கொண்டவனின் நிலையாகும்.
உதாரணமாக தடுக்கப்பட்ட அன்பில் காணப்படும் ரோசத்தின் வேதனை, பிரிவுத் துயர், அன்புக்கு அதே போன்ற அன்பை வழங்க முடியாத வேதனை போன்ற அதிகமான இடைஞல்கள் இருப்பதால் அவை அன்பில்; மறைந்திருக்கும் பகுதியளவு இன்பத்தை நஞ்சூட்டப்பட்ட தேனைப் போன்றதாக்குகின்றன.
இந்த இளைஞர்கள் தமது இளமையை மோசமாகப் பயன்படுத்தினால் தொற்றிக் கொள்ளும் நோய்கள் மூலம் அவர்கள் எப்படி வைத்தியசலைகளில் நுழைவார்கள்? தமது வழிபிறழ்வால் எப்படி சிறைச்சாலைகளில் நுழைவார்கள்? உள்ளத்துக்கும் ஆன்மாவுக்கும் போதுமான போசாக்கு கிடைக்காமையாலும் அவற்றை உரிய பணிகளில் ஈடுபடுத்தாததாலும் உருவாகும் சோர்வு, கஷ்டம் போன்றவற்றால் அவர்கள் எப்படி மதுபானசாலைகளிலும், கேளிக்கை அரங்குகளிலும், ....., மண்ணறைகளிலும் நுழைவார்கள் என்பதை நீ அறிந்துகொள்ள நாடினால் வைத்தியசலைகளுக்கும் மதுபானசாலைகளுக்கும், கேளிக்கை அரங்குகளுக்கும், ....., மண்ணறைகளுக்கும் சென்று கேட்டுப்பாருங்கள். தமது இளமையை மோசமாகப் பயன்படுத்தியதற்கும் வழிபிறழ்விலும், தடுக்கப்பட்ட இன்பங்களிலும் அதனை கழித்ததற்கும் தண்டனையாக -பெரும்பாலும்- அவர்களில் விழும் அடிகளால் உருவாகும் முனுமுனுப்புக்கள், அழுகுரல்கள், வேதனைகள் போன்றவ்றை நீ சந்தேகமின்றி செவிமடுப்பாய்.
வானலோக வேதங்கள், இறை கட்டளைகள் அனைத்தும் அவற்றுக்கு தலையாக அமைகின்ற அல்குர்ஆனும் அதிகமான திட்டவட்டமான வசனங்கள் மூலம் உறுதியாக பின்வருமாறு நன்மாராயம் குறிப்பிடுகின்றன: ஒரு இளைஞன் 'இஸ்திகாமத்' எனும் வட்டாரத்தில் தனது வாழ்வை கழித்தால் அவனது இளமை அன்பும் நலவும் நிறைந்த தெய்வீக அருளாகவும், இனிமையும் பலமும் கொண்ட நன்மைகளின் ஊடகமாகவும் மறும். அது மறுமையில் நிரந்தர செழுமைமிகு இளமையை அனந்தரமாக வழங்கும்.
யதார்த்தம் இப்படியிருக்க, ஹலாலுடைய வட்டம் சந்தோசத்தையும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தரப் போதுமானதாக இருக்க, தடுக்கப்பட்ட விடயங்களில் கிடைக்கும் ஒரு மணித்தியால இன்பம் சிறைச்சாலையில் ஒரு வருடம் அல்லது சிலபோது பத்து வருடங்கள் தண்டனை அனுபவிக்கக் காணமாக இருப்பதால் இனிய, அன்பு நிறைந்த அருளான இந்த இளமை கற்பைப் பேணி, இஸ்திகாமதுடைய பணிகளில் செலவழிக்கப்படுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. அதுவே அந்த இளமைக்குச் செய்யும் நன்றியுபகாரம் ஆகும்.


