ஏழாவது விடயம்

13. Page

எட்டாவது விடயத்தின் சுருக்கம்:

ஏழாவது விடயத்தில் மீள எழுப்பாட்டப்படுதல் பற்றி விரிவாகக் கேட்க இருந்தோம். என்றாலும் எமது படைப்பாளன் தனது திருநாமங்கள் மூலம் அளித்த பதிலானது வேறு கேள்விகளுக்கு இடம்கொடுக்கா வண்ணம் எய்களிடத்தில் உறுதியான ஓர் திருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாம் இத்தோடு போதுமாக்கிக்கொள்கின்றோம்.மறுமை, உலக இன்பங்கள் தொடர்பாக மறுமை மீதான நம்பிக்கை ஏற்படுத்தும் நூற்றுக் கணக்கான விளைவுகளுள் ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.

மறுமை இன்பத்தோடு தொடர்பான பிரிவைப் பொறுத்தவரையில் தெளிவுக்காக அதனை நாம் அல்குர்ஆனிடமே விட்டுவிடுகின்றோம். அதைத் தாண்டிய இன்னுமொரு விளக்கம் தேவைப்பட மாட்டாது. இங்கு நாம் -மிகச் சுரு;கமாக மனிதனின் தனிப்பட்ட, சமூக வாழ்வோடு தொடர்புற்ற நூற்றுக் கணக்கான விளைவுகளுள் மூன்று அல்லது நான்கை பார்ப்போம்.

உலக இன்பத்தோடு தொடர்பான பகுதிக்கான விளக்கத்தை 'ரஸாஇலுந் நூருக்கே' விட்டுவிடுவோம்.

முதலாவது:

நிச்சயமாக மனிதன் - ஏனைய விலங்குகளுக்கு மாற்றமாக – வீட்டோடு தொடர்புற்றவனைப் போலவே உலகத்தோடும் தொடர்பு கொண்டுள்ளான். தனது உறவனர்களோடு தொர்புள்ளவன் போலவே ஏனையவர்களோடு இறுக்கமான தொடர்பு கொண்டுள்ளான். உலகில் தற்காலிகமாக வாழ்வதில் விருப்பம் கொண்டவன் போலவே அவன் நிலையான மறுமை வீட்டின் வாழ அதீத விருப்பம் கொண்டவன் ஆவான். தனது வயிற்றை நிரப்பிக்கொள்ள தேவையான உணவை சேகரிக்க முயற்சிப்பது போல இந்த உலகளவு விசாலமான அறிவு, உள்ளம், ஆன்மா, மனிதத்திற்குத் தேவையான உணவினை சேகரிக்க இயல்பிலேயே நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான்.

அதற்காக உண்மையிலேயே அவன் முயற்சிக்கின்றான். நிலையான மகிழ்ச்சியைத் தவிற வேறு எதுவாலும் நிரப்ப முடியாத ஆசைகளும் தேவைகளும் அவனிடமுள்ளது. -பத்தாவது வார்த்தையில் நான் குறிப்பிட்டிருப்பது போல- எனது சிறுபராயத்தில் நான் கற்பனையில் 'உலக ஆட்சியதிகாரங்களோடு நீ ஆயிரம் ஆயிரம் வருடங்கள் வாழ்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட்டு அத்தோடு உனது வாழ்வு முடிவுற்று அழிந்து விடுவதை விரும்புகின்றாயா? அல்லது கஷ்டங்களோடு சேர்ந்த நிரந்தரமான வாழ்வை நீ விரும்புகின்றாயா?' என்று கேட்டுப் பார்த்தேன். அதன்போது என்மனம் 'நரகில் இருந்தாலும் நிரந்தரமான வாழ்வையே நான் விரும்புகின்றேன்' என்று இரண்டாவது தீர்மானத்தை விரும்பி, முதலாவதனை முணுமுணுப்பதைக் கண்டேன்.

அவ்வாறே மனித யதார்த்தத்தின் பணியாளர்களுள் ஒரு பணியாளரைப் போன்றிருக்கும் கற்பனை வளத்தினை இந்த உலக இன்பங்கள் பூரணப்படுத்தி விட முடியாது. எனவே அனைத்தையும் உள்ளடக்கும் மனித யதார்த்தமானது நிலையாக வாழுதல் என்ற அதனது இயல்பான விருப்பத்துடன் தொடர்பானது என்பதில் சந்தேகம் கிடையாது.

மிகவும் தேவையுடைய- குறுகிய தெரிவுச் சுதந்திரமும் எல்லையற்ற அபிலாசைகளோடும் கூடிய- ஓர் மனிதனைப் பொறுத்தவரை மறுமை நம்பிக்கை என்பது அவனுக்கு பிரயோசனமளிக்கக் கூடியது. அது பூரணமான, போதுமான, மகத்துவமிக்க ஓர் பொக்கிஷமாகும். அது போல மகிழ்ச்சியையும் இன்பத்தையும் சுரக்கக்கூடியது. அது அல்லாஹ்விடமிருந்து அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கான மூலாதாரமாகும். வரையறைகளற்ற உலக கவலைகளுக்கு முன்னால் ஆசுவாசத்தைக் தரக்கூடியது. இதனைப் பெற்றுக்கொள்கின்ற பாதையில் மனிதன் அவனது உலக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தாலும் அது போதாது. தனிப்பட்ட வாழ்வுக்கான ஒரு பிரயோசனமும் இரண்டாவது விளைவும்:

('இளைஞர்களுக்கான வழிகாட்டல் எனும் நூலில் இரண்டாவது விடயத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள மிக முக்கிய விளைவு)

ஆம், எப்படி தனது உறவினர்களும் நேசர்களும் இதற்கு முன்னர் மண்ணறைக்குள் நுழைந்தார்களோ அது போல தானும் மரணத்தோடு அடுத்த கட்டத்துக்குள் எப்படி நுழைவது என்பதுவே எப்போதும் மனித சிந்தனையை ஆக்கிரமித்திருக்கின்ற விடயமாகும். தான் நேசித்த ஒருவருக்காக தன் ஆன்மாவைக் கூட அர்ப்பணம் செய்யும் அப்பாவியான இந்த மனிதன் ஆயிரமல்ல, மில்லியனல்ல, பில்லியன் கணக்கான தன் நேசர்கள் மரணத்தோடு அப்படியே நிரந்தரமாக அழிந்துவிடுவார்கள் என்று ஊகித்தால் நிச்சயம் இந்த சிந்தனையின் மூலம் நரக வேதனையை விட கடுமையான வேதனைக்கு உட்படுவான். எனவே இந்நேரத்தில் மறுமை நம்பிக்கை அவனிடத்தில் வருகின்றது, அவனது கண்களைத் திறக்கின்றது, அவனை விட்டும் திரையை அகற்றுகின்றது.

அவனை நோக்கி: 'பார்' என்று கூறுகின்றது. எனவே ஈமானின் ஒளியோடு அவன் பார்க்கின்றான். ஆத்மப் பரவசத்தை அவன் அடைகின்றான். அப்பரவசம் நிரந்த அழிவு, மரணத்தை விட்டும் அவனது நேசர்கள் தப்பிவிட்டார்கள், ஒளிபொருந்திய உலகிலிருந்து மகிழ்ச்சியுற்றவர்களாக அவர்கள் அவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காண்பதன் மூலம் கிடைக்கும் சுவன இன்பத்திலிருந்து தோற்றம் பெறுகின்றது. நாம் இந்தளவோடு போதுமாக்கிக் கொள்கின்றோம். இந்த விளைவு 'ரஸாஇலுந் நூரில்' ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.



14. Page

தனிப்பட்ட வாழ்வுடன் தொடர்புடைய மூன்றாவது பயன்:

ஏனைய படைப்பினங்கள் அனைத்தையும் விட மனிதன் உயர்ந்திருப்பது அவனது தரம் மேலாக இருப்பது உயர்ந்த அவனது பண்புகள், பூரணத்துவம் வாய்ந்த அவனது தயார்நிலைகள், பூரணமான அவனது வணக்கங்கள், விசாலமான அவனது இருப்பு வட்டங்கள் ஆகியவற்றின் மூலமாகும். உண்மையில், இருளான, மரணித்துப் போன, இல்லாத இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான குறுகிய நிகழ்காலத்திற்கேற்ப பற்று, அன்பு, சகோதரத்துவம், மனிதம் ஆகிய பண்புகளை மனிதன் அணிகலன்களாகக் கொண்டிருக்கின்றான். 

உதாரணமாக மனிதன் தனது தந்தையை, உடன் பிறந்தவர்களை, தனது மனைவியை, இதற்கு முன்னர் தனக்கு அறிமுகமற்ற சமூகத்தை, தாய் நாட்டை நேசிக்கின்றான், பணிவிடைசெய்கின்றான். தான் நேசிக்கும் இவர்களை பிரிந்ததன் பின்னர் பார்க்கவே முடியாது, இவர்களோடு அரிதாகவேயன்றி தோழமை கொள்ளவோ, தூய்மையாக நடக்கவோ முடியாது என்றிருந்தால் அத்துடன் அவனது உணர்வுகள், பூரணத்துவங்கள் படிப்படியாக சிறுமையடைந்து கொண்டே செல்லும். எனவே அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகின்றது. அறிவை வைத்து நோக்குகின்ற போது விலங்குகளை விட நல்ல, கண்ணியமான நிலையில் இருக்க வேண்டிய மனிதன்அதனை விட தாழ்ந்த ஓர் நிலையில் வீழ்ந்து விடுகின்றான். இப்படியான சந்தர்ப்பத்தில் மறுமை நம்பிக்கை அவனுக்கு உதவுகின்றது. மண்ணறையைப் போல் ஒடுங்கிய அவனது காலத்தை இறந்த காலத்தயும் எதிர்காலத்தையும் உள்ளடக்கும் மிக விசாலமான காலமாக மாற்றிவிடுகின்றது. உலகளவு விசாலமானதாக அவனது இருப்பை காட்டுகின்றது. அதையும் தாண்டி முடிவின்றி நிரந்தரமாக அது நீண்டு செல்கின்றது.

ஆன்மாக்களிளன் உலகிலும் இன்பங்கள் நிறைந்த மறுமையிலும் தந்தை என்ற வகையில் அவரை நேசிக்கின்றான். முடிவின்றி நிரந்தமாக நீண்டு செல்லும் சகோதரத்துவத்துக்காக தனது சகோதரனை அவன் நேசிக்கின்றான். அது போல சுவனத்தில் மகி அழகிய வாழ்க்கைத் துணை என்ற வகையில் தனது மனைவியை நேசிக்கின்றான். எனவே அவர்களை அவன் மதிக்கின்றான்.அவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றான். அவர்களுக்கு உதவியாக இருக்கின்றான்.

அவன் விசாலமான மகத்துவமிக்க வாழ்க்கை, இருப்பு எனும் வட்டத்தில் பேணும் தொடர்புகளுக்கான முக்கிய பணிவிடைகளை உலக அற்ப விவகாரங்களுக்கான, தனது இலககுகள், சுயநலங்களுக்கான கருவியாக ஆக்கிவிட மாட்டான். எனவே வினயமான நட்பு, பூரண தூய்iமான விடயங்களில் வாய்ப்பளிக்கப்படுகின்றான். அவனது பூரணத்துவமும் பண்புகளும் உயர்கின்றன. மனிதமும் -படிப்படியாக அதன் தரத்துக்கேற்ப- உயர்ச்சி பெறுகின்றது.

வாழ்க்கையை அனுபவிப்பதில் ஓர் சிட்டுக்குருவியின் தரத்தினைக் கூட மனிதன் அடைய முடியாது. அனைத்து விலங்குகளுக்கும் மேலாக பிரபஞ்சத்தில்மிகவும் மகிழ்ச்சிகரமான, மிக கண்ணியமான விருந்தாளியாக அவன் இருக்கின்றான். பிரபஞ்சத்தின் உரிமையாளனுக்கு மிகவும் சிறப்பும், அன்பும் நிறைந்த அடியானாக அவன் ஆகின்றான்.

'ரஸஇலுந் நூரில்' விளக்கப்பட்டுள்ள ஆதாரங்களோடு இந்த விளைவினை இங்கு குறிப்பிடுவதோடு சுருக்கிக் கொள்கின்றோம். 


மனிதனின் சமூகவியல் வாழ்வோடு தொடர்பான நான்காவது பயன்:


ரஸாஇலுந் நூரில் ஏழாவது ஒளிக் கீற்றில்' விளக்கப்பட்டுள்ள விளைவின் சுருக்கம் கீழ்வருமாறு:

நிச்சயமாக மனித சமூகத்தின் நான்கில் ஒரு பகுதியினராக இருக்கும் குழந்தைகளுக்கு மனிதனது கண்ணியத்துக்குப் பொருத்தமான வாழ்வை வாழவோ, மறுமை நம்பிக்கையின்றி மனித சமூகத்தின் தயார் நிலைகளை சுமக்கவோ முடியாது. அப்படியிருப்பின் அவன் ஒழுங்கீனமான வாழ்வையே வாழ்வான். தன்னைத் தானே தூங்க வைத்துக்கொள்ள கவலைகளை, வேதனைமிக்க வலிகளை மறக்கச் செய்ய சிறுபிள்ளைத்தனமான தனது விளையாட்டுப் பொருட்களைக் கொண்டுஅவன் விளையாடுவான். ஏனெனில் அவனைப் போன்ற குழந்ததைகள் தொடர்ந்தும் அவனைச் சூழ மரணிக்கின்றனர். இது மென்மையான அவனது மூளையில், நீண்ட எதிர்பார்ப்புக்களை சுமந்திருக்கும் பலவீனமான உள்ளத்தில், எதிர்க்க முடியாத பலவீனப்பட்டுப் போன ஆன்மாவில் தாக்கம் விளைவிக்கின்றது. இந்தத்தாக்கம் அப்பாவியான அம்மனிதனது வாழ்வையும் அறிவையும் வேதனை கொடுக்கக் கூடிய கருவியாக மாற்றிவிடும். எனவே அவன் தனது விளையாட்டுக்களுக்குப்பின்னால் மறைந்திருக்கும் கவலைகளுக்குப் பகரமாக மறுமை நம்பிக்கை எனும் பாடத்தின் மூலம் மகிழ்ச்சியை உணர்கின்றான். அவன் பின்வருமாறு கூறுவான்: 'நிச்சயமாக எனது சகோதரன் அல்லது எனது இந்த நண்பன் மரணித்துவிட்டான்.இப்போது சுவனத்துப் பறவைகளில் ஒன்றாக அவன் மாறிவிட்டான். எங்களை விட அனுபவித்து இன்புற்றிருக்கி;ன்றான். அங்கு சுற்றித் திரிகின்றான். எனது தாயும் மரணித்து விட்டாள. என்றாலும் அவள் இறை கருணையின் பக்கம் சென்றுவிட்டாள். இன்னுமொரு தடவைஅவளது நெஞ்சோடு என்னை அழைத்து என்னோடு கொஞ்சுவாள். எனது அன்புமிக்க தாயை நான்அங்கு காண்பேன்.' இவ்வாறு மனிதனது கண்ணியத்துக்குப் பொருத்தமான வாழ்வை அவனால் வாழ முடியும்.

மனித சமூகத்தின் நான்கில் ஒரு பகுதியினரான வயோதிபர்கள் மிக அண்மையில் முடிய இருக்கும் தமது வாழ்க்கைக்கு முன்னால், மண்ணறையை நோக்கிய தமது பிரவேசத்துக்கும் முன்னால், அழகிய தமது உலகம் மூடப்படுவதற்கு முன்னால் மறுமை நம்பிக்கையைத் தவிர வேறெதிலும் அவர்கள் ஆறுதலை கண்டுகொள்ள மாட்டார்கள். அவ்வாறு இல்லையெனில் இந்த கண்ணியமிக்க அன்பான தந்தையர்கள், தியாக மனப்பான்மையோடு வாழும் அன்புமிகு தாய்மார்கள் ஆன்மாவின் அலறல்களால் உள்ளததின்குழப்பங்களால் வேதனைப்படுவார்கள். அது உலகத்தை நிராசையும் நம்பிக்கையீனமும் நிறைந்த சிறைச்சாலையாக மாற்றிவிடும், வாழ்வை கடுமையான வேதனைமிக்கதாக ஆக்கிவிடும்.


15. Page

என்றாலும் மறுமை நம்பிக்கையானது அவர்களை நோக்கி பின்வருமாறு கூறுகின்றது: 'நீங்கள் கலக்கமடைய வேண்டாம். உங்களுக்காக நிரந்தர இளமை காத்திருக்கின்றது. ஒளிமயமான வாழ்வொன்று உள்ளது. முடிவற்ற ஆயுள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் இழந்த குழந்தைகளையும் உறவினர்களையும் சந்திப்பீர்கள். உங்களது நன்மைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் கூலியை நீங்கள் பெறுவீர்கள்.

இப்படித்தான் மறுமை நம்பிக்கை அவர்களுக்கு ஆறுதலளிக்கின்றது. அவர்கள் ஒவ்வொருவரிலும் நூறு முதுமை ஒன்று சேர்ந்தாலும் அவர்களை நிராசையடையச் செய்ய முடியாது

மனித சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியினரான இளைஞர்களின் உணர்வுகள் வீரியமிக்கவை. உணர்ச்சிகளையும் மிகைக்கக் கூடியவர்கள் அவர்கள். எந்நேரத்திலும் துணிவுள்ள தமது புத்திகளால் அவர்கள் சிந்திக்க மாட்டார்கள். மறுமை நம்பிக்கைளை அவர்கள் இழந்துவிட்டால், நரக வேதனையை மறந்துவிட்டால் பேணுதலுடையவர்களது செல்வங்கள், மானங்கள், வயோதிபர்கள், பலவீனர்களது நிம்மதி, சமூகத்திலுள்ள அவர்களது கண்ணியம் என அனைத்துமே அபாயத்துக்குள் மாட்டிவிடும். எனவே இப்படியிருப்பின் அவர்களுள் சிலர் ஒரு நிமிட இன்பத்துக்காக மகிழ்ச்சிகரமான குடும்பத்தின் இன்பங்களை அழித்துவிடுவார்கள். இப்படி நான்கு ஐந்து வருடங்கள் இச்சிறைக்குள் இருந்து வேதனைப்படுவார்கள் வேட்டை மிருகத்தைப் போன்று மாறிவிடுவார்கள்.

எனவே மறுமை நம்பிக்கை இளைஞர்களுக்கு உதவுகின்றது. நிதானத்தை நோக்கி அவர்களை மீள அழைக்கின்றது. தமக்கெதிராக அநியாயமாக அத்துமீறும் மனிதர்களை நோக்கி இவர்களிடத்தில் கருணையும், அன்பும் மேலெழுகின்றது. அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள்: 'அரசாங்கத்தின் கண்கள் எம்மைக் காணவில்லை. அவர்களை விட்டும் எம்மால் மறைந்துகொள்ள முடியும். என்றாலும் நரகம் போன்றதொரு கடூழிய சிறைச்சாலையை தன்வசம் வைத்திருக்கும் மாட்சிமை பொருந்திய அரசனது மலக்குகள் எம்மைக் காண்கின்றார்கள். எமது பாவங்களை பதிவுசெய்துகொள்கின்றார்கள். நாம் பூரணமான சுதந்திரவான்கள் கிடையாது. பல பணிகள் கொண்ட பயணிகள் நாம். அவ்வாறே நாமும் இவர்களைப் போல வயோதிபர்களாக பலவீனர்களாக ஆகுவோம். 'ரஸாஇலுந் நூரில்' குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதாரங்களோடு இக்கருத்தை இங்கு சுருக்கிக்கொள்கின்றோம்.

அதுபோல மனித சமூகத்தில் முக்கியமான இன்னொரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் நோயாளிகளும் அநியாயம் இழைக்கப்பட்டோரும் ஆவர். மேலும் எம்மைப் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள், ஏழைகள், பல சோதனைகளை அனுபவிப்போரும் இதற்குள் உள்ளடங்குவோர். மறுமை நம்பிக்கை இவர்களுக்கு உதவவில்லையாயின் சதாவும் ஒருவரது கண்களுக்கு முன்னால் நோய்களை நினைவுபடுத்திக்கொண்டு தோற்றமளிக்கும் மரணம், தன்னை யாரும் பழிவாங்கவே முடியாது என்ற எண்ணத்திலிருக்கும் அநியாயக்காரனது துரோகம், மிகப்பெரும் அனர்த்தங்களில் தனது குழந்தைகளது இழப்பினால் தோன்றும் நிராசை, ஒரு சில நிமிடங்கள், ஒரு மணித்தியாலம் அல்லது இரு மணித்தியால இன்பத்துக்காக ஐந்து அல்லது பத்து வருட காலம் அனுபவிக்கின்ற எமது சிறையைப் போன்ற சிறையின் வேதனையிலிருந்து தோன்றும் மன உலைச்சல் இவையனைத்தும் உலகினை கடூழிய சிறைச்சாலையாக, இந்த அப்பாவிகளுக்கு மிக வேதனையானதாக வாழ்வை, உலகை மாற்றிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

எனவே மறுமை நம்பிக்கை அவர்களுக்கு உதவுகின்றது. அவர்கள் பெருமூச்சுவிடுகின்றார்கள். அவர்களைவ pட்டும் அவர்களது மன உலைச்சல், நிராசை, நம்பிக்கை, பழிவாங்கல் உணர்வு ஓரளவு நீங்குகின்றது. அவர்கள் ஒவ்வொருவரினதும் ஈமானின் தரத்திற்கேற்ப பூரணமாகவும் சிலபோது அது நீங்க முடியும்.

எனக்கு பின்வருமாறு சொல்ல முடியுமாக இருக்கின்றது: 

'காரணமின்றி நாம் நுழைந்துள்ள இந்த சிறைச்சாலையில், இந்த பயங்கரமான சோதனையில் மறுமை நம்பிக்கை எங்களுக்கு -எனக்கும் எனது சில சகோதரர்களுக்கும்- உதவவில்லையாயின் மரணத்தின் கணதியைப் போல ஒருநாளேனும் அதனைச் சுமப்பது கடினமாகிவிடும். வாழ்வை விட்டும் வெளியேறிச் செல்லும் முடிவுக்கு எம்மை கொண்டு சென்றுவிடும்.

என்றாலும் நான் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். அவனது புகழ்ச்சிக்கு எல்லை கிடையாது. என்னைவிட எனக்கு மிக விருப்பத்துக்குரிய அதிகமான எனது சகோதரர்களுக்கு ஏற்பட்ட அந்த சோதனைகள் மூலம் தோன்றும் வலிகளால் நான் அவதியுற்றாலும், எனது கண்களை விடவும் எனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய ரஸாஇலுந் நூரின் ஆயிரக் கணக்கான ஆக்கங்கள், மிகவும் பெருமதிமிக்க எனது புத்தகங்கள் அழிந்து போனமைக்கு நான் கவலைப்பட்ட போதிலும், சிறிய அளவிலேனும் என்னில் மற்றவர்களது அதிகாரத்தினை, இழிவினை சகித்துக்கொள்ள ஆரம்பம் முதல் என்னால் முடியாது என்றிருந்த போதிலும் நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு பின்வருமாறு சொல்கின்றேன்: 'மறுமை நம்பிக்கை எனும் ஒளி, அதனது பலம் எனக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் ஆறுதலையும் உறுதியையும் வழங்கியிருக்கின்றது. சிலபோது அவை மிகப் பெரும் கூலியை நான் பெற்றுக்கொள்வதற்கான உற்சாகத்தையும் ஆசையையும் அளிக்கின்றன. அவை இலபகரமாபன ஓர் சோதனையில் என்னை ஓர் முயற்சியாளனாக மாற்றிவிடுகின்றன. எனவே இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போன்று நான் என்னையே 'யூஸூபின் பாசறை' என்று சொல்வதற்குப் பொருத்தமான அருள்பாலிக்கப்பட்ட ஒரு சிறந்த பாசறையில் இருப்பதாக கருதுகின்றேன்.  


16. Page

எது எப்படி இருந்தாலும், சிலபோது என்னை பீடித்துக்கொள்ளும் நோய்கள், வயோதிபப் பருவத்தில் தோன்றும் உணர்வலைகள் இல்லையென்றிந்தால் எனது பாடங்களை நான் அழகிய முறையில், உள சஞ்சலமின்றி அதிகம் அதிகம் நினைவிட்கொள்வேன். இந்த இடத்தில் நான் தலைப்பை விட்டும் வெளியே சென்றுவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். குற்றம் பிடிக்காதீர்கள்'

அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் வீட்டுக்குள்ளும் ஒரு சிறிய உலகம், சிறியதொரு சுவனம் இருக்கின்றது. இந்த வீட்டின் மகிழ்ச்சியை மறுமை நம்பிக்கை மிகைக்காவிட்டால் இந்த வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களுடனான தொடர்பு, அன்பு, இரக்கம் ஆகியவற்றின் தரத்திட்கேற்ப அதிகம் கவலைப்படுவார்கள். 

அவனது சுவனம் நரகமாக மாறிவிடும். அல்லது தற்காலிக இன்பம், கேலிக் கூத்துகளினால் அவனது அறிவு மழுங்கடிக்கப்பட்டுவிடும். இவனுக்கான உதாரணம் வேட்டைக்காரனைக் கண்ட தீக்கோழியைப் போன்றதாகும். ஓடவோ, பறக்கவோ முடியாது என காண்கின்ற போது வேட்டைக்காரன் காணாமல் இருக்க அது தனது தலையை மணலுக்குள் புதைத்துக்கொள்ளும். இவ்வாறு தான் இமானற்ற இவ்வீட்டின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மரதணம், பிரிவு தன்னைக் காணாமல் இருப்பதற்காக பொடூபோக்குக்குள் தனது தலையை நுழைவித்துக் கொள்கின்றான். அதாவது தற்காலிகமாக உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்தல், கண்டும் காணாதிருப்பதைப் போன்ற தற்காலிக வெகுளித்தனமான ஓர் தீர்வை எடுத்துக்கொள்கின்றான். 

உதாரணமாக, அபாயத்துக்குள் மாட்டியுள்ள தனது பிள்ளைகளை காணும் போது நடுநடுங்கிப் போகும் தாய், அதுபோல முடிவில்லாத சோதனைகளிலிருந்து தனது பெற்றோர்களையும் சகோதரர்களையும் காப்பாற்ற முடியாத குழந்தைகள் தொடர்ச்சியான கவலையையும் பயத்தையும் உணர்கிறார்கள்.

இதனடிப்படையில் பார்த்தால் இந்த நிலையற்ற குழப்பகரமான உலக வாழ்வில் தாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அக்குடும்பத்தின் வாழ்க்ககை பல புறங்களில் அதன் மகிழ்ச்சியை இழந்துவிடும். குறுகிய வாழ்க்கையில் உருவாகும் தொடர்பும் உறவும் சுயநலமற்ற உண்மையான நட்பையோ பூரணமான விசுவாசத்தையோ வழங்கிவிடாது. எனவே படிப்படியாக பண்பாடுகள் பலவீனமற்று வீழ்ச்சியடையத் தொடங்கும். 

இந்த வீட்டுக்குள் மறுமை நம்பிக்கை நுழைந்துவிடுமானால் உடனடியாக அதனை ஒளியூட்டும். மேலும் அந்த வீட்டு அங்கத்தவர்களிடையே காணப்படும் உறவு, தொடர்பு, அன்பு, பாசம் ஆகியவை அவர்கள் ஒன்றாகக் கழிக்கும் மிகக் குறுகிய காலப்பகுதியைக் கொண்ட தற்காலிகமானதாக இருக்காது. மாற்றமாக அவர்களில் ஒவ்வொருவரும் மற்றவர்களை உண்மையாக கண்ணியப்படுத்துவர், அன்புகாட்டுவர், இரக்கப்படுவர். அந்தத் தொடர்புகள் நிலையான மகிழ்ச்சி, மறுமை வரை நீடிக்கப் போகின்றது என்ற அடிப்படையில் மற்றவர்கள் மீது நட்பை வெளிப்படுத்துவர். அவர்களது தவறுகளை மன்னித்து பிழைகளை துருவித்துருவி தேடமாட்டார்..... அந்நேரம் பண்பாடுகள் உயர்வடையம், அந்த வீட்டில் மனிதனது உண்மையான மகிழ்ச்சி அபிவிருத்தி காணும். ரஸாஇலுந்நூரில் இதனை தெளிவுபடுத்துவதற்கான ஆதாரங்கள் வருவதனால் இத்துடன் விளக்கம் போதுமாக்கிக்கொள்ளப்படகின்றது.

அதுபோல ஒவ்வொரு நகரமும் அதில் வசிப்போருக்கு ஓர் விசாலமான வீட்டைப் போன்றது. அந்த பெரிய குடும்ப அங்கத்தவர்களிடையே மறுமை நம்பிக்கை இடம்பிடிக்கவில்லையாயின் விசுவாசம், உண்மை, அர்ப்பணம், மறுமை கூலியை எதிர்பார்த்தல், நல்ல பண்பாடுகளது அடிப்படையான அல்லாஹ்வின் திருப்தி போன்றவற்றுக்குப் பதிலாக மோசமான எண்ணங்கள், சுயநலம், மோசடி, பொய், முகஸ்துதி, இலஞ்சம் போன்றவை பரவத் தொடங்கும். அப்போது பாதுகாப்பு மற்றும் மனிதம் எனும் பெயரில் பயங்கரவாதமும் மிருகத்தனமும் ஆட்சி செய்யத் தொடங்கும். அந்நகரத்தின் வாழ்க்கை விஷமாகிக் கொண்டிருக்கும். குழந்தைகள் சண்டை பிடித்துக் கொள்வார்கள்.

இளைஞர்கள் போதைக்குள்ளாகுவார்கள். பலசாலிகள், அதிகாரமுள்ளவர்கள் அநியாயம் செய்வார்கள், வயோதிபர்கள் அழுவார்கள்.

இதனை வைத்து நோக்கும் போது நாடும் ஓர் வீட்டைப் போன்றது. அதுபோல சமூகம் எனும் குடும்பத்துக்கு தேசமும் வீடாகவே உள்ளது. வெறுமனே இந்த விசாலித்த வீடுகளை மறுமை நம்பிக்கை ஆள்வதனால் அவ்வாழ்க்கையில் தூய்மையான மரியாதை வினயமான அன்பு இலஞ்சமற்ற பரஸ்பர ஒத்துழைப்ப தந்திரமற்ற நெருக்கம் முகஸ்துதியற்ற லநவ செய்யும் பண்பு. சுயநலமற்ற பிறர் நலம் பேணும் தன்மை ஆகியவை அவ்வாழ்வில் தோன்றும். இவ்வகையில் மறுமை நம்பிக்கை குழந்தைகளை நோக்கி பின்வருமாறு கூறுகின்றது: 'அங்கு ஓர் சுவனம் உண்டு. உங்கள் சச்சரவுகளை விட்டுவிடுங்கள்' அல்குர்ஆனின் பாடங்களின் மூலம் அவர்களை முதிர்ச்சியடையச் செய்து, நெறிப்படுத்தும். இளைஞர்களிடம்: ' அங்கு நரகமொன்று உள்ளது. எனவே மதுவை விட்டுவிடுங்கள்' என்று கூறும். அவர்களை அவர்களது இயல்பு நிலைக்கு மீட்டிக்கொண்டு வரும். அநியாயக் காரனைப் பார்த்து: 'நிச்சயமாக வேதனை என்பது உண்மை. அது கடுமையானது. அதன் பிடிகளை நீ அனுபவிப்பாய்' என்று கூறும். இப்படியாக அவனை நீதிக்கு கட்டுப்படச் செய்யும்.

ஒரு வயோதிபனை நோக்கி: 'உங்களிடமிருந்து சென்றுவிட்ட மகிழ்ச்சியின் அனைத்து வகைகளை விடவும் நிலையான மகிழ்ச்சி மிகவும் உயர்ந்தது. இளமையும் நிரந்தரப் பொழிவும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. அவற்றைப் பெற்றுக்கொள்ள விரையுங்கள்' என்று கூறும். இதன் மூலம் அவரது அழுகை புன்னகையாக மாறும். இதன்படி நிச்சயமாக மறுமை நம்பிக்கையின் சிறந்த தாக்கம் அனைத்துப் பிரிவினரிடமும் வெளிப்படும். அவர்களை அது ஒளியூட்டும். மனித சமூகத்தின் சமூக வாழ்வில் கூடிய கவனமுள்ள சமூகவியலாளர்கள், பண்பாட்டியலாளர்களது செவிகளை கூர்மையடையச் செய்யும்.


17. Page

நாம் சுட்டிக் காட்டிய ஐந்து அல்லது ஆறு மறுமை நம்பிக்கைக்கான மாதிரிகளை அடிப்படையாகக் nhகண்டு வேறு ஆயிரக்கணக்கான பயன்களைப் பார்க்க முடியுமானால் இம்மை, மறுமை என்ற இரு வீட்டினதும் மகிழ்ச்சியின் அடிப்படை மறுமை நம்பிக்கையைத் தவிற வேறில்லை என்பதைப்' பரிந்துகொள்ளலாம்;.

மறுமை நிகழும் என்ற கோட்பாட்டு பற்றிய பலவீனமான சந்தேகங்களுக்கு முன்னால் ரஸாஇலுந் நூரில் இருபத்து எட்டாம் வார்த்தையிலும் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பலமான விடைகளை இங்கும் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் அனைத்தும் ஸ்தூல வடிவில் பிரதிபளிக்கின்றன. பிரபஞ்சத்தபை; படைத்தலில் இறைநோக்கங்களில் மிக உயர்ந்த நோக்கம் அவனது அழகிய படைப்பாற்றலுக்கு ஸ்தூல வடிவம் கொடுப்பதாகும். அலங்கரிக்கப்பட்ட இறை வல்லமைகள் அனைத்தும் ஸ்தூல வடிவில் பிரதிபலிக்கின்றன. மனிதர்கள் படைப்பாளனிடம் தமது தேவைகள், நன்றிகள் மூலம் பிரார்த்திக்க வேண்டும் என்ற எண்ணங்கள் கூட இறை வல்லமையை பறைசாட்டும் வடிவமாகும். கற்புலனாகும், ஆன்மிக உலகங்களின் அடிப்படைகளையும் அல்லாஹ் ஸ்தூல வடிவில் அமைத்து வைத்திருக்கின்றான்.

இதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான யதார்த்தங்கள் ஸ்தூல வடிவில் பிரதிபளிக்கின்றன. நிச்சயமாக ஞானமுள்ள படைப்பாளன் பூமிப்பந்தில் இயங்குநிலையை அதிகரிக்க ஒன்றன் பின் ஒன்றாக படைப்பினங்களை உருவாக்குகின்றான். ஏலவே கூறப்பட்ட உண்மைகளுக்கான அடையாளமாக அவற்றை ஆக்குகிறான். இந்த உலகுக்கு அவர்களை அனுப்புகிறான். பின்னர் அவர்களை மரணிக்கச் செய்து அவர்களது இடத்துக்கு வேறு பலரை அனுப்புகிறான். இதன் மூலம் பிரபஞ்சம் எனும் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்கி வைத்திருக்கின்றான். விளைவுகளையும் கட்புலனாகும் வகையில் உருவாக்கி வைத்துள்ளான். பூமியை மறுமை மற்றும் சுவனத்துக்கான பாசறையாக ஆக்கியிருக்கின்றான்.

மனிதனிடத்தில் பசியை ஏற்படுத்தியிருக்கின்றான். மனிதன் உயிர்வாழ்வதற்காக அப்பசியின் அழைப்பை அவன் செவிமடுக்கின்றான். இதன் மூலம் அவன் அவ்வழைப்புக்கு பதிலளிப்பதற்காக பூமியிலுள்ள எண்ணிலடங்காக உணவுகள், அருள்களிடத்தில் மனிதன் செல்கின்றான். இவற்றின் வடிவங்கள் பல்லாயிரக்கணக்கானவை. சுவைகளும் அப்படித்தான். இவையனைத்தும் அடிப்படையில் சந்தேகமின்றி மறுமையிலுள்ள சுவனத்தின் இன்பங்களுக்கு வடிவமுண்டு என்பதை சொல்கின்றன. அதுபோலவே மறுமையில் அனைவரும் விரும்பும், ஆசுவாசப்படும் நிலையான மகிழ்ச்சியின் மிக முக்கியமானது அனைத்துக்கும் ஸ்தூல வடிவம் கொடுக்கப்பட்டிருப்பதாகும்.

இந்தப் பசியின் அழைப்பினைச் செவிமடுக்க சக்தியுடைய அருளாளனான யாவற்றையும் அறிந்த கொடையாளன் வரையறையில்லாமல் மனிதன் கேட்கும் பிரார்த்தனைகளைச் செவிமடுக்க மாட்டானா?! மனிதன்தான் இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விளைவு, பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதி, அந்தப் படைப்பாளனின் மிகச் சிறந்த படைப்பு. அப்படிப்பட்ட மனிதன் எப்போதுமே கேட்டுப் பிரார்த்திக்கும், இயல்பு ரீதியாக வேண்டும,; ஆசுவாசம் கொள்ளும் கற்புலனாகும் வடிவில் இன்பங்களைக கொடுக்க மாட்டானா? உண்மையில் கற்புலனாகும் வடிவில் மீள எழுப்பாட்டப்படுவதன் மூலம் அவனுக்கு விடையளிக்க மாட்டானா? எப்போதுமே அருளை அனுபவிப்பவனாக அவனை ஆக்க மாட்டானா? அப்படியிருப்பின் அவன் யாரைப் போன்றெனில் ஈயின் சத்தத்தைச் செவிமடுக்கக் கூடியவனாகவும் இடியின் சத்தத்தைச் செவிமடுக்க முடியாதவனாகவும் போன்றாகி விடுவான். சாதாரண படைச் சிப்பாயின் தேவைகளைக் கவனத்திற் கொள்பவனாகவும், படை விவகாரத்தில் கவனம் கொள்ளாதவனையும் போன்றாகி விடுவான். இது எப்படியும் அசாத்தியமான ஒன்றாகும்.

ஆம், 

وَفِيهَا مَا تَشْتَهِيهِ الأْنْفُسُ وَتَلَذُّ الْأعْيُن

'அதிலே ஆன்மாக்கள் விரும்பக் கூடியவையும், கண்கள் இன்பமடையக் கூடியவையும் இருக்கும்' என்ற வசனத்தில் குறிப்பிடப்படுவதைப் போல மனிதன் ளூ ஏனைய அனைத்தையும் விட கற்புலனாகும் இன்பங்களை காண்பான், அவற்றைச் சுவைப்பான். சுவனத்துக்குப் பொருத்தமான வடிவில் உலகில் அவற்றின் இன்பங்களைச் சுவைப்பான்.அவனது உடல் உறுப்புக்களான நாவு, கண்கள், காதுகள் மேற்கொண்ட தூய்மையான நன்றி அலாதியான இபாதத்துகளின் கூலி மனிதனுக்குக் கொடுக்கப்படும். அதுவும் அவ்வுறுப்புகளுக்கே உhயி கற்புலனாகும் இன்பங்கள் மூலம். கற்புலனாகும் இந்த இன்பங்களை அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறுகிறது. அதாவது அவற்றின் வெளிப்படையான விளக்கம் ஏற்றுக்கொள்ளத் தடையாக அமையாத வகையில் இருக்க வேண்டும். மறுமை நம்பிக்கையின் விளைவுகள் பின்வருவனவற்றை சுட்டிக்காட்டுகின்றன:

மனிதனின் உறுப்பகளுள் ஒன்றான குடல், அதன் தேவைகள் உணவின் இருப்புக்கான திட்டவட்டமான ஆதாரமாகும். அதுபோல மனிதனின் யதார்த்தம் அவனது பூரண நிலைகள், இயல்பான தேவைகள், ஆசைகள், நிரந்தர எதிர்பார்ப்புகள், விளைவுகளையும் பயன்களையும் வேண்டிநிற்கும் மறுமை நம்பிக்கையின் யதார்த்த நிலைகள், மனிதனின் தயார்நிலைகள் ஆகியன மறுமையை, சுவனத்தை, அதன் ஸ்தூல வடிவிலான இன்பங்களை திட்டவட்டமாக சுட்டிக்காட்டுவதோடு அவை இடம்பெறுவதற்கு, சாத்தியப்படுவதற்கு சாட்சியாக அமைகின்றன. அதுபோல ரஸாஇலுந் நூலின் பகுதிகள் - குறிப்பாக 'பத்தாவது வார்த்தை', 'இருபத்து எட்டாவது வார்த்தையிலுள்ள இரு பிரிவுகள்', 'இருபத்து ஒன்பதாவது வார்த்தை', 'ஒன்பதாவது ஒளிக்கீற்று', 'பிரார்த்தனை' என்ற ஆக்கம்- ஆதாரங்களொடும் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்த பிரபஞ்சத்தின் பூரண நிலைகள், கருத்துக்கள் கொண்ட பிரபஞ்ச அத்தாட்சிகள், ஏலவே கூறப்பட்ட உண்மைகளோடு தொடர்புடைய மனித யதார்த்தங்கள் என அனைத்தும் மறுமையை, அது இடம்பெறுவதற்கான சாத்தியப்பாட்டை, மீள எழுப்பாட்டப்படுதலை, சுவனம், நரகத்தின் இருப்பினை சுட்டிக்காட்டுகின்றன. இந்த நீண்ட விடயத்தை நாம் இங்கு சுருக்கமாக சுட்டிக்காட்டுகின்றோம்:


18. Page

நிச்சயமாக நரகம் குறித்த அல்குர்ஆனின் விளக்கங்கள் மிகத் தெளிவானவை. வேறு விளக்கங்கள் தேவைப்படாதளவு அவை வெளிப்படையானவை. என்றாலும் கூட சில பலவீனமான சந்தேகங்களை நீக்குவதற்காக சில குறிப்புகளை மிகச் சுறுக்கமாக இங்கு விளக்குகிறோம். அதன் விரிவுகளை ரஸாஇலுந் நூரில் கண்டுகொள்ளலாம்.

முதலாவது குறிப்பு: 

மனிதனிடம் நரகம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதானது ஈமானின் விளைவுகளை நீக்கிவிடாது. அதாவது நரகத்தின் இருப்பு ஒருவனை பயமுறுத்தாமல் இருக்க வரையறையற்ற இறை யருள் பயந்துபோன ஒரு அவனிடம்: 'என்னிடத்தில் வா! தவ்பா எனும் வாயில் மூலம் நுழைந்துகொள்!' என்று கூறும். நிச்சயமாக அவனுக்கு சுவனத்து இன்பங்களை பூரணமாக அறிமுகப்படுத்தும். அவனுக்காகவும் தமது உரிமைகள் மீறப்பட்ட அனைத்து என்னிலடங்கா படைப்பினங்களுக்காகவும் பழிவாங்கும். அதன் மூலம் உள்ளங்கள் ஆறுதல் அடைந்து மகிழ்ச்சியுறும்.

நீ வழிகேட்டில் மூழ்கயிருந்தாலும் அதிலிருந்து விடுபட முடியாது. அதுபோல நரகத்தின் இருப்பானது நிரந்தரமான அழிவு நிலையை விடவும் ஆயிரம் மடங்கு சிறப்புமிக்கது. அதே நேரம் அது ஏதோ ஒரு வகையில் இறை மறுப்பாளர்களுக்கான அருளே. ஏனெனில், மனிதன் - மிக அற்ப பிராணிகள் கூட – தனது உறவினர்களது, குழந்தைகளது, நேசர்களது மகிழ்ச்சியின் மூலம் இன்புறுகிறான். ஏதோ ஒரு வகையில் பரவசமடைகின்றான். 

நாஸ்திகக் கருத்துக்களைக்கொண்டவரே இபபோது! உனது வழிகேட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றில் நீ நிரந்தர அழிவை நோக்கி செல்லலாம். அல்லது நரகில் நுழையலாம். முழுக்க முழுக்க தீங்காக அமையும் நிரந்தர அழிவைப் பொருத்தவரையில் அது உனது ஆன்மாவை, உள்ளத்தை, உன்னையே சுட்டெரித்துவிடும். இந்நிலையானது நரக நெருப்பை விடவும் ஆயிரம் மடங்கு மிகவும் கடுமையானது. -நீ ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சியடையும்- உனது அனைத்து நேசர்கள், உறவினர்கள், உன் வழித் தோன்றல்கள் உன்னுடன் அப்படியே இல்லாமலாகி விடுவார்கள், நிரந்தர அழிவை நோக்கிச் சென்று விடுவார்கள்.

ஏனெனில் நரகம் ஒன்று இல்லையெனில் சவனமும் இருக்காது. உனது இறை மறுப்பின் காரணமாக அனைத்தும் நிரந்தர அழிவை நோக்கி சென்றுவிடும். நீ நரகில் நுழைந்து அங்கு தங்கிவிடும் போது உனது நேசர்களும் உறவினர்களும் ஒன்றில் சுவனத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அல்லது இருப்பு என்ற அருளை ஏதோ ஒரு வடிவில் பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே – எந்நிலையிலும்- நீ நரகத்தின் இருப்பை நோக்கி செல்வது அவசியமாகின்றது. நரகம் இல்லையென்ற நிலைப்பாட்டை எடுப்பதானது நிரந்தர அழிவை ஏற்றுக்கொள்வதாக அமையும். இதன் மூலம் எண்ணிலடங்கா நேசர்களது மகிழ்ச்சியும் நிரந்தர அழிவை நோக்கி செல்லும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதாக அமையும்.

ஆம், நரகத்தைப் பொருத்தவரை அது மிக முக்கியமான, திகிழ்கொள்ளச் செய்கின்ற ஒரு இடம். மனிதனுக்கு நரகில் கூட ஓர் ஸ்தூல இருப்பை கொடுத்திருக்கும்மாட்சிமை பொருந்திய ஆட்சியாளனது நீதியும், ஞானமும் மிக்க வடிவில் சிறைச் சாலையின் பணியை அது மேற்கொள்கின்றது.

அந்த நரகிம் சிறையின் பணியை மேற்கொள்கின்ற அதே நேரம் வேறு பல பணிகளும் அதற்குண்டு. நிரந்தர உலகோடு தொடர்புடைய அதிக பணிகளும், தாற்பரியங்களும் உண்டு. அது ஸபானியாக்களைப் போன்று உயிருள்ள அதிகமானோருக்கான கண்ணியமிக்க ஓர் இடமாகும்.

இரண்டாவது குறிப்பு:

நரகத்தின் இருப்பும் அதன் கடுமையான வேதனையும் வரையறையற்ற அருளை, உண்மையான நீதியை கூட்டல் குறைத்தல் இன்றிய நடநிலையான ஞானத்தை மறுத்துவிட முடியாது. மாற்றமாக அருளும் நீதியும் ஞானமுமே அதன் இருப்பை வேண்டி நிற்கின்றன. 

ஆயிரமாயிரம் நிரபராதிகளது உரிமைகளை மீறிய ஓர் அநியாயக் காரனை தண்டிப்பதானது, அநீதியிழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விலங்குகளை கடித்துக் குதறிய ஒரு காட்டு விலங்கை கொலை செய்வதானது; நீதியின் அடிப்படையில் அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கான ஆயிரம் அருளுக்குக் சமமானது.

அதுபோல அநியாயக் காரனை மன்னிப்பது, காட்டு விலங்கை விடுதலை செய்வது -அநியாயமாக இருப்பினும்- அவர்களுக்கு அருளாக இருக்கலாம். ஆனாலும் அது நூறு அப்பாவிகளை பல மடங்கு கொடூரமாக நடாத்துவதற்கச் சமமானது.

அது போல நரகவாசிகளுடன் நரகம் எனும் சிறைக்கள் நுழைந்த ஓர் இறை மறுப்பாளன் பின்வருகின்ற அல்குர்ஆன் வசனத்தின் எச்சரிக்கைக்குட்படுகின்றான்.

إِنَّ اللهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ

 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான்' (நிஸா: 4-48) ஏனெனில் அவனது இறை மறுப்பின் மூலம் இறை நாமங்கள் மீதான உரிமைகளை அவன் மீறுகின்றான், அந்த இறை நாமங்களுக்கு சாட்சியாக அமையும் படைப்பினங்களது உரிமைகளையும் மீறுகின்றான், அந்த இறை நாமங்களுக்கு முன்னால் துதிபாடுதல் போன்ற அவற்றின் உயர்ந்த பணிகளை மறுப்பதன் மூலம் அவற்றின் உரிமைகளை அத்துமீறுகின்றான். அவை படைக்கப்பட்டதன் இலக்கை, இருப்பை பொய்பிப்பதன் மூலம் அப்படைப்பினங்களது உரிமைகளை மீறுகின்றான். அவற்றின் இருப்பின் இலக்கு படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கு அடிபணிவதாகும். இது மன்னிக்கவே முடியாத அநியாயம், மிகப் பெரிய குற்றம்.


19. Page

ஏற்கனவே விளக்கியதைப் போல அவனுக்கு இரக்கம் காட்டி – அது அநியாயமாக இருப்பினும் - அவனை நரகில் நுழைவிக்காமல் இருப்பது தமது உரிமைகள் மீறப்பட்ட எண்ணிலடங்காதவர்களுக்கு செய்கின்ற மிகப் பெரும் பாதகச் செயலாக அமையும். அவ்வாறே இப்படியானவர்கள் கூட நரகமொன்று இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இதனையே மாட்சிமை, கண்ணியமிக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். 

ஆம், ஒரு மோசமான மனிதன் ஓர் நகர மக்களின் உரிமைகளை அத்ததுமீறுகின்றான் என்போம். அவன் அந்நாட்டின் அதிபதிக்கு 'உன்னால் என்னை சிறைக்குள் தள்ள முடியாது, ஒருபோம் என்னை சிறைப்படுத்தவே முடியாது' என்று சொன்னால் நிச்சயமாக அந்நாட்டின் அதிபதி அப்படிக் கூறிய இங்கிதமற்ற மனிதனை சிறைப்படுத்துவான். அந்நாட்டில் சிறையொன்று இல்லாவிட்டாலும் கூட. இவ்வாறுதான் இறை மறுப்பாளன் தனது இறை மறுப்பின் மூலம் மாட்iசிமை மிக்க இறைவனின் கண்ணியத்துக்கு இழுக்கை ஏற்படுத்துகிறான். அவனது மறுப்பின் மூலம் இறைவனின் படைப்பாற்றலுக்கு பங்கம் விளைவிக்கின்றான். அவனது அத்துமீறலின் மூலம் படைப்பாளனின் இறைத்துவத்தின் பூரணத்துக்கு கலங்கம் விளைவிக்கின்றான். எனவே இவ்வாறான இறை மறுப்பாளர்களுக்காக நரகத்தை படைத்து அவர்களை அதற்குள் நுழையச் செய்வதென்பது சந்தேகமில்லாத விடயமாகும். இது படைப்பாளனின் மாட்சிமைக்குரிய அம்சமாகும். நரகம் வேறு அதிகமான பணிகளுக்காக படைக்கப்பட்டமைக்கு காரணங்களும் பின்னணிகளும் இல்லாவிட்டாலும் கூட.

அது போல இறை மறுப்பின் யதார்த்தமும் நரகத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. ஈமானின் யதார்த்தம் கற்புலனாகும் வகையில் இருப்பின் அதனுடைய இன்பஙகள் சுவனத்தின் வடிவில் இருக்கலாம். அதே நேரம் ஈமானின் யதார்த்தமும் சுவனத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இவ்விடயம் பல ஆதாரங்கள் மூலம் ரஸாஇலுந் நூரில் நிறுவப்பட்டுள்ளது. முன்னை பக்கங்களில் இறை நிராகரிப்பில் இருக்கும் இருளடைந்த, புத்தியை பேதலிக்கச் செய்யும் வலிகள், கருத்தியல் வேதனைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்குள் குறிப்பாக இறைநிராகரிப்பு, நயவஞ்சகம், மதம்மாறுதல் போன்றுன உள்ளடங்குகின்றன. இவையனைத்தும் கறு;புலனாகும் வகையில் இருப்பின் நரகம் மதம் மாறிய மனிதனுக்குப் பிரத்தியேகமானதாக மாறிவிடும். இது தன்னகத்தே கொண்டிருக்கும் பெரும் நரகை உணர்த்தும்.இவ்வுலகிலிருந்து மறுமை வரை கிளை விட்டுப் வளரும் நரகவாதிகளுக்குக் கொடுக்கப்பட்டும் தக்கூம் மரத்தை இந்நச்சு விதைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவை ஒவ்வொன்ரும் 'இந்தப் பெரிய நரகிக்கான காரணிகள் நாங்கள். எம்மை உள்ளத்தில் சுமந்துகொண்டிருந்த துரதிஷ்டம் பிடித்தவனுக்கு கொடுக்கப்படும் கனிகளின் மாதிரிகளே நாங்கள்'

இறைநிராகரிப்பு எல்லைகளற்ற உரிமைகளுக்கெதிரான அத்துமீறலாகும். அது எல்லையற்ற குற்ம் என்பதில் சந்தேகம் கிடையாது. எனவே அந்தக் குற்றத்தை இழைத்தவன் எல்லையற்ற வேதனைக்கு தகுதியுள்ளவனாக மாறுகின்றான். ஒரு நிமிடத்தில் செய்த கொலைக் குற்றத்துக்கு பதினைத்து வருடத்தில் எட்டு மில்லியன் அளவுக்கு சிறைத் தண்டனை கிடைக்க வேண்டும என்பதை மானுட நீதித்தத்துவம் ஏற்றுக்கொள்கின்றது. அது பொது நலன், உரிமைகளுக்கு ஏற்புடடையது என்று கருதுகின்றது.ஒரு நிமிட் இறை மறுப்பு அதனைச் செய்தவனை ஏறக்குறைய எட்டு பில்லியன் நிமிடங்கள் நரகில் வேதனையை அனுபவிக்கச் செய்யுமு; என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இறைநிராகரிப்புக்குள் ஆயிரம் கொலைகள் உண்டு. ஆக, இந்த வேதனையானது மானுட நீதத் தத்துவத்துக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றது. தனது ஆயுளில் ஒரு வருடத்தை இறை நிராகரிப்பில் கழிக்கின்ற ஒருவன் ஏறக்குறைய இரண்டு த்ரில்லியன்களும் எண்ணூற்று எண்பது பில்லியன் நிமிடங்களும் நரகில் வேதனையை அனுபவிக்க தகுதியுடையவனாகின்றான்.

خَالِدِينَ فِيهَا أَبَداً

 'அவர்கள் அங்கு நிரந்தரமாக இருப்பார்கள்.......' என்ற வசனமும் இதனையே விளக்குகின்றது.

சுவனம், நரகம் பற்றி அல்குர்ஆன் சொல்லுகின்ற தெளிவுரைகள், அவை பற்றி ரஸாஇலுந் நூரில் வருகின்ற ஆதாரங்கள் அனைத்தும் வேறு விளக்கம் தேவையில்லாதளவுக்கு போதுமானதாகவுள்ளது.

وَيَتَفَكَّرُونَ فِ خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

'அவர்கள் வானங்கள், பூமி படைக்கபப்பட்டதைப் பற்றி சிந்தித்து 'இறiவா! இதனை நீ வீணுக்காகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். எம்மை நரகிலிருந்து காப்பாற்றுவார்கள்' என்று பிரார்த்திப்பார்கள்'


ورَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَاماً إِنَّهَا سَاءتْ مُسْتَقَرّاً وَمُقَاماً


20. Page

'எமது இறைவனே! நரகின் வேதனையை எம்மை விட்டும் திருப்பிவிடுவாயாக! நிச்சயமாக அதன் வேதனையானது கடுமையானது. அது படுமோசமான தங்குதளமாகும்'

அனைத்து நபிமார்களும் சத்தியத்தில் இருந்தவர்களும் எப்போதும் நிச்சயமாக இருக்க வேண்டும் என்று நம்பிய நரகை விட்டும் பாதுகாப்பு தேடியமையானது வஹி மற்றும் கற்புலனாகும் விடயத்தை அடிப்படையாகக் கொண்டே. அவர்கள் தமது பிரார்த்தனைகளில் அதிகமாக இப்படிச் சொன்னார்கள். : 'நரகை விட்டும் காப்பாற்றுவாயாக', 'நரகை விட்டும் பாதுகாப்பாயாக' 'நரகை விட்டும் விமோசனம் அளிப்பாயாக' இவையனைத்தும் மனித சமூகத்தின் மிக முக்கியமான விடயம் நரகத்திலிருந்து விமோசனம் பெறுதலே என்று தெளிவுபடுத்தும். அதுபோல மிக முக்கியமான யதார்த்தம், பிரபஞ்சத்தின் உச்ச நிலை ஆச்சயரியமும் இந்நரகமாகும். சில ஆத்ம ஞானிகள் அதனை தமது ஆத்மீக பார்வையால் பார்த்திருக்கின்றனர். இன்னும் சிலர் அதன் விளைவுகளையும், அடையாளங்களையும் கண்டு 'இறiவா! எம்மை நரகிலிருந்து காப்பாற்றுவாயாக ' என்று உரக்கச் சப்தமிட்டுள்ளனர். 

உண்மைதான், நலவு, கெடுதி, இன்பம், துன்பம், ஒளி, இருள், வெப்பம், குளிர், அழகு, அலங்கோலம், நேர்வழி, வழிகேடு ஆகிவை ஒன்றோடொன்று இப்பிரபஞ்சத்தில் இணைந்து காணப்படுவதில் மிகப் பெரும் தாத்பரிம் இருக்கின்றது. தீங்கு இல்லைனெ;றிருந்தால் லநவ அறிப்பட்டிருக்காது. வலி இல்லைனெ;றிருந்தால் இன்பம் அறிப்பட்டிருக்காது. இருள் இல்லாமல் ஒளிக்கு முக்கித்துவம் இருக்காது. குளிர் இருப்பதால் வெப்பம் அளவிடப்படுகின்றது. அழகுக்கான ஓர் உண்மை அலங்கோலத்தின் இருப்புக்கான ஆயிரம் உண்மைகளாக மாறுகிறது. அதனுடைய ஆயிரம் படித்தரங்கள் மூலம் அது உருப்பெருகின்றது. நரகம் இல்லைனெ;றிருந்தால் சுவனத்தின் அதிகமான இன்பங்கள் மறைந்ததாகவே இருந்திருக்கும். இதனடிப்பiடில் ஒவ்வொன்ரும் அதனது எதிர் நிiலின் மூலம் தான் அறிப்படுகின்றது. ஒரு உண்மைபல உண்மைகள் பிறக்க காரணமாக அமைகின்றது.

இப்படியான எதிரும் புதிருமானவை அழியும் உலகிலிருந்து நிலையான மறுமை வரை நீட்சிபெறுகின்றது. லநவ, இன்பம், ஒளி, அழகு, ஈமான் ஆகியவை சுவனத்தை நோக்கி சென்றடைகின்றது. அது போல தீங்கு, வேதனை, இருள், அலங்கோலம், நிரகரிப்பு ஆகிய எதிரான பண்புகள் நரகை சென்றடைகின்றன. இப்பிரபஞ:சத்தில் எப்போதும் கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற பிரளயம் அவ்விரு (சுவனம், நரகம்) எல்லையில் போய் அப்படியே நின்றுவிடுகின்றது. 'இருபத்து ஒன்பதாவது' வார்த்தையில் சொன்ன சில குறிப்புகளை இங்க சுருக்கமாக நாம் தருகிறோம்: 

இந்த யூஸூபின் பாசறையில் கற்றுக்கொண்டிருக்கின்ற என் தோழர்களே! இந்த நிரந்தர திகிழுட்டும் சிறையிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே தீர்வு, இலகு வழி ; - அதிகமான பாவங்களை விட்டும் எம்மை நிர்ப்பந்தமாக தடுக்கக்கூடிய இந்த எமது உலக சிறைச்சாலையிலிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்வதோடு- முன்னைய பாவங்களிலிருந்து இஸ்திஃபார் செய்து பர்ளான கடமைகளை நிறைவேற்றுவதுமாகும். இதன் மூலம் எங்கள் ஆயுளின் ஒவ்வொரு பொழுதும் வணக்கமாக மாறுகின்றது.

இந்த நிரந்தர சிறையிலிருந்து எமது மீட்சிக்கான, ஒளிமயமிக்க சுவனத்திற்குள் நுழைவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். இச்சந்தர்ப்பத்தை நாம் தொலைத்துவிட்டால் எமது உலகம் அழுததைப் போல மறுமையும் அழும். நாம் கடுமையான வேதனையை அனுபவிப்போம்

خَسِر الدُّنْيَا وَالْآخِرَةَ

 'அவனது உலகமும் மறுமையும் நஷ்டமடைந்துவிட்டது' (ஹஜ்: 22-11)

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கின்ற போது அது ஹஜ்ஜூப் பெருநாள் பருவ காலமாகும். அல்லாஹ் மனித சமூகத்தில் ஐந்தில் ஒரு பகுதியினரை – அதாவது முந்நூறு மில்லியன் - 'அல்லாஹ் அக்பர்' 'அல்லாஹ் அக்பர்' 'அல்லாஹ் அக்பர்' என்று முழங்கச் செய்திருப்பது, அரபாவில் பெருநாளின் போது கிட்டத்தட்ட இருபதாயிரத்தை விட அதிகரித்த எண்ணிக்கையுடைய ஹாஜிகளது முழக்கமாக 'அல்லாஹ் அக்பர்' என்ற வார்த்தையை ஆக்கியிருப்பது –பூமி, ஏனைய கோள்களை விட மிகப் பெரும் அந்த முழக்கத்தை அவர்கள் மற்றவர்களுக்குக் கேட்கச் செய்கி;னறார்கள்-

رَبِّ الْأرْضِ رَبِّ الْعَالَمِينَ

'அவன் பூமியின், அகிலத்தாரின் இரட்சகன்' என்ற மாட்சிமை பொருந்திய இறைமையின் முழுமையான வெளிப்பாடாகும். மேலும் அது நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன்னரே சொன்ன, ஏற்றுக்கொள்ளுமாறு பணித்த 'அல்லாஹ் அக்பர்' என்ற முழுக்கத்தின் எதிரொலியில் மறைந்துள்ள பூரண அடிமைத்துவத்தின் வெளிப்பாடாகும். இதனையே நான் கற்பனை செய்கின்றேன், உணர்கிறேன், கிருப்தியொடு ஏற்றுக்கொள்கின்றேன்

பின்னர் நான் எனக்குள்ளே பின்வருமாறு சொல்லிக்கொண்டேன்: 'எங்களது இவ்விவகாரத்துக்கும் பரிசுத்த இவ்வார்த்தைக்கும்' இடையில் ஏதும் தொடர்புகள் இருக்கின்றனவா' உடனடியாக என் மனதில் வணக்கவழிபாடோடு தொடர்பாட அதிகமான நன்மைகளை சுமந்திருக்கும், எமது விவகாரத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவே நினைவுபடுத்தும் வார்த்தைகள் தோன்றின. 'ஸூபஹானல்லாஹ' 'அல்ஹம்துலில்லாஹ' 'லாஇலாஹ இல்லல்லாஹ்' போன்றன இவற்றுள் முதன்மையானவை- 


21. Page

உதாரணமாக, 'அல்லாஹ் அக்பர்' என்ற வார்த்தை சொல்லும் கருத்துக்களுள் ஒன்று அல்லாஹ்வின் சக்தி, அறிவு அனைத்தையும் விடப் பிரமான்டமானது. அவனது அறிவை விட்டும் எதுவும் வெளியேறிவிட முடியாது. அவனது சக்தியின் அதிகாரத்தை விட்டும் எந்தவொன்ரும் விரண்டோடவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது. 

நாம் பயப்படுகி;னற அனைத்தை விடவும் அவன் பெரியவன். அப்படியாக இருப்பின் மீள எழுப்பாட்டப்படுவதை விட அவன் மிகப் பெரியவன். அழிவிலிருந்து எம்மை காப்பாற்றுவதை விட நிரந்தர மகிழ்ச்சியை எமக்கு அழிப்பதை விட அவன் மிகப் பெரியவன். எமது அறிவக்கு அப்பால்பட்ட ஆச்சரியமான அனைத்தை விடவும் அவன் மிகப் பெரியவன். எப்படியெனில் மனி சமூகத்தை மீள எழுப்பாட்டுதல் அவர்களை ஒன்றுசேர்த்தல் என்பது ஒரு அன்மாவை புதிதாக படைப்பது எப்படி இலகுவோ அது போன்று அவனுக்கு இலகுவானது.

இதனை பின்வரும் வசனம் கூறுகின்றது: 'உங்களை படைப்பதும், மீள எழுப்பாட்டுவதும் ஒரு ஆன்மைப் படைத்து மீள எழுப்பாட்டுவதைப் போன்றதாகும்' (லுக்மான: 31-38)

இதனடிப்படையில் ஒவ்வொன்ரும் பெரிய சோதனைகள், மகத்துவமிக்க இலக்குகளுக்கு மன்னால் 'அல்லாஹ் அக்பர்' 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்கின்றன. எனவே இது உள்ளத்துக்கு ஆறுதலாகவும் பலவீனத்தின் போது பலமாகவும் மாறுகின்றது.

ஆம், உண்மைதான் இந்த வார்த்தை ஸூப்ஹானல்லா, அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைகளோடு சேர்த்து அனைத்து இபாதத்களுக்கும் பொருளடக்கமாக விளங்கும் தொழுகைக்கான சுருக்கமாகும்.தொழுகையில் அவற்றை மீட்டி மீட்டிக் கூறுவதன் மூலம் தொழுகையின் கருத்து வலுப்பெறுகின்றது. அவை மகத்துவமிக்க மூன்று உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்றது. அவை மனிதனின் குழப்பம், இன்பம், மதிப்பச்சம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் கேள்விகளுக்கு பலமான விடையை அளிக்கின்றன. இம்மூன்று நிலைகளையும் மனிதன் பிரபஞ்சத்தில் காணும் வழமைக்கு மாற்றமான அழகிய ஆச்சரியமான விடயங்களுக்கு முன்னிலையில் உணர்வதுண்டு. ஒன்பதாவது வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று இந்த விடயங்கள் குழப்பம், நன்றி செலுத்துதல், கண்ணியப்படுத்துதல், பெருமை ஆகியவற்றுக்குக் காரணமாக அமைகின்றன.

பதினாறாவது வார்த்தையின் இறுதிப் பகுதியில் விளக்கப்பட்டிருப்பதைப் போன்று ஒரு படைவீரன் பெருநாள் தினத்தில் படைத் தளபதியோடு சுல்தானுக்கு முன்னால் நுழைகின்றான். வேறு நாட்களில் அந்த மேலதிகாரியுடனான தொடர்பின் மூலம் சுல்தானிடம் தன்னை அறிமுகப்படுத்துகின்றான். இவ்வாறுதான் ஹஜ்ஜில் ஒவ்வொருவரும் படைப்பாளனான அல்லாஹ்வை 'பூமி மற்றும் அகிலத்தாரின் இரட்சகன்' அவனது பிரதான பண்பு, பணியின் மூலம் அறிந்துகொள்கின்றான். இதன் மூலம் அவனது உள்ளத்திலிருந்த பெருமை, ஆணவம் நிங்கத் தொடங்கும். அவனது ஆன்மாவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த, அவனை குழப்பிக்கொண்டிருந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ;அல்லாஹூ அக்பர்' என்ற வார்த்தை விடையளிக்கும்.

பதின்மூன்றாவது ஒளிக்கீற்றின் இறுதிப் பகுதியில் பின்வருமாறு தெளிவுப்படத்தப்பட்டுள்ளது: 

நிச்சயமாக 'அல்லாஹ் அக்பர்' என்ற வார்த்தையானது ஷைத'தானின் சூழ்ச்சிகளின் வேர்களை அறுத்துவிடுகின்றது. அது போல அவற்றுக்கு திட்டவட்டமான, உறுதியான பதிலையும் வழங்குகிறது. அது வழங்கும் விடை சுருக்கமாக இருந்தாலும் மறுமை தொடர்பான எமது வினாவுக்கு பலமானதாக அமைகிறது. அது போல 'அல்ஹம்துலில்லாஹ்' என்ற வார்த்தை மீள எழுப்பாட்டப்படுவதை நினைவுபடுத்தவதோடு அதனை வேண்டியும் நிற்கின்றது. அவ்வார்த்தை எமக்க பின்வருமாறு சொல்கின்றது: மறுமை இல்லாமல் எனக்கான கருத்த பு}ரணமாகாது. மறுமையை விட்டும் நீங்கியதாகவும் அது இருக்க முடியாது. ஏனெனில் புகழ்ச்சியும், நன்றியும் ஆரம்பம் முதல் இறுதி வரை அவனுக்கானது. அவனுக்கெ பிரத்தியேகமானது. இக்கருத்தைத்தான் நான் எனக்குள் கொண்டிருக்கின்றேன். ஏனெனில் அனைத்து அருள்களுக்கும் முதன்மையானது, எல்லா அருள்களையும் உண்மையான அருள்களாக மாற்றக் கூடியது, உணர்வுகள் கொண்ட எல்லையற்ற ஜீவன்களை இல்லாமை என்ற நிலையிலிரந்த காப்பாற்றக் கூடியது நிலையான மறுமை மகிழ்ச்சியாகும். இம்மகிழ்ச்சி எனது மொத்தமான கருத்துக்கு ஈடானதாகும். 

ஆம், கடமையான தொழுகைகளுக்கப் பின்னர் குறைந்தளவு ஒவ்வொரு முஃமினும் 150 தடவைகளுக்கு மேல் அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை ஷரீஆ ஏற்றுக்கொண்டதற்கிணங்க கூறுகிறான். இது புகழ், நன்றி ஆகிய கருத்துக்களை விசாலமான அளவு உட்பொதிந்துள்ளது. இது சுவனம் மற்றும் நிலையான மறுமை மகிழ்ச்சிக்கான கூலியாகும். அது போல அவையிரண்டுக்குமான உலகத்தில் முன்கூட்டியே கிடைக்கப்பெரும் கூலியாகும். 'அல்ஹம்துலில்hஹ்' என்ற வார்த்தை வலிகளால் நிரம்பிய அழிந்து போகக் கூடிய மிகக் குறுகிய உலக இன்பங்களொட மாத்திரம் சுருங்கிவிடாது அவ்வார்த்தை அவற்றுக்கே உரியதல்ல. நிச்சயமாக ஓர் இறை விசுவாசி இவ்வருள்களின் பக்கம் திரும்புவது அவை நிலையான மகிழ்ச்சிக்கு காரணமாக அமைவதாலேயாகும். எனவே அவன் அவற்றுக்காக நன்றி செலுத்தகிறான்.

'சுப்ஹானல்லாஹ்' என்பது அல்லாஹ் தூய்மையானவன், நிகர், குறைபாடு, அநியாயம், கடினம், தேவை, ஏமாற்றுதல் ஆகியவற்றை விட்டும் பரிசுத்தமானவன். அது போல அவன் அவனது பூரணத்துவம், அழகு, மகிமை ஆகியவற்றுக்க முரணாக அமையும் அனைத்துக்கு குறைபாடுகளை விட்டும் நீங்கியவன் என்ற கருத்தை தருகின்றது. - புனிதமிகு இந்த வார்த்தையைப் பொருத்தவரை நிலையான மிகழ்ச்சியையும் மறுமை வீட்டையும் நினைவுபடுத்துகின்றது. இந்த மறுமை வீடு படைப்பாளனின் கண்ணியம், அழகு, பூரணத்துவம், தூய்மை, ஆட்சியதிகாரம் ஆகியவற்றின் பிரதான புள்ளியாகும். அதில்தான் சுவனம் உண்டு. அதனையே இது சுட்டிக்காட்டுகின்றது.

-ஏற்கனவோ நிறுவப்பட்டதைப் போன்று- நிலையான மகிழ்ச்சி என்பது இல்லையென்றிருந்தால் அவனது அதிகாரமும் பூரணத்துவம், கண்ணியம், அழகு, அருள் ஆகியவற்றோடு குறை என்ற பண்பும் கலந்துவிடும்.

'பிஸ்மில்லா', லாஇலாஹ இல்லல்லாஹ்' மற்றும் ஏலவே கூறப்பட்ட மூன்று வார்த்தைகளும் (ஸூபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்) ஈமானின் அடிப்படைகளுக்கான விதைகள், அவற்றின் சருக்கமாகும். அல்குர்ஆனின் உண்மைகளுக்கான சுருக்கமும் கூட. இம்மூன்றும் தொழுகை, அல்குர்ஆனின் விதைகள் ஆகும். 

மின்னும் மாணிக்கத்தைப் போல சில ஸூராக்களின் ஆரம்பத்தில் இவை தோன்றுகின்றன. அது போலவே அவை ரஸாஇலுந்நூருக்கான உண்மையான அடிப்படையும் கூட.

அவ்வாறே அவை ரஸூல் (ஸல்) அவர்களின் தொழுகைக்குப் பின்னரான திக்ர் முறைமையாகவும் இருந்தன. அதனை தொழுகை நேரங்களுக்ககுப் பின்னர் நூறு மில்லியனுக்கும் அதிகமான விசுவாசிகள் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் விரல்களினால் 'ஸூபஹானல்லாஹ்' 33 தடவையும், 'அல்ஹம்துலில்லாஹ' 33 தடவையும் 'அல்லாஹூ அக்பர்' 33 தடவையும் எண்ணிக் கணக்கி;ட்டு சொல்லுகின்றார்கள்.

நாம் ஏலவே விளக்கியதைப் போன்று குர்ஆனினதும் ஈமானினதும் தொழுகையினதும் அடிப்படைகளாகவும் சுருக்கமாகவும் இருக்கின்ற இந்த மூன்று வார்த்தைகளை ஒவ்வொரு தொழுகையின் பின்னரும் ஓதுவதன் முக்கியத்துவத்தையும் அதற்கு வழங்கப்படும் உயர்ந்த கூலியையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. -இவ்வாறு அதிகமன திக்ர்கள் இருக்கின்றன- 

இந்த ஆக்கத்தின் முதலாவது தலைப்பில் தொழுகை பற்றி அழகானதொரு விளக்கம் முன்வைகப்பட்டதைப் போன்று இறுதியில் தொழுகையில் ஓதப்படுகின்ற திகர் தொடர்பான ஒரு முக்கிய பாடமும் விளக்கப்பட்டுள்ளது. இது நோக்கத்தோடு திட்டமிட்டு இணைக்கப்பட்டதன்று. 

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم