இரண்டாவது விடயத்தின் சுருக்கம்:

3. Page

இரண்டாவது விடயத்தின் சுருக்கம்: 


'இளைஞர்களுக்கான வழிகாட்டல்' எனும் ரஸாஇல் தெளிவாக விளக்குவதைப் போன்று- நிச்சயமாக மரணம் என்பது நிதர்சனமானது. அது இருப்பது உறுதியானது. பகலை இரவு அடைவதைப் போல், இலையுதிர் பருவத்தை மாரிகாலம் அடைவதைப் போல் மரணம் எம்மைத் தீண்டும் என்பது வெளிப்படையானது.

இந்த சிறைச்சாலை அதிலே எப்போதும் நுழைந்து வெளியேறுவோருக்கு அது ஒரு தற்காலிக விருந்தினர் இல்லம். அவ்வாறே இந்த பூமி விரைவில் புறப்படத் தயாராகும் பிரயாணக் கூட்டத்தின் பாதையில் அமைந்திருக்கும் தங்குவதற்கும் புறப்படுவதற்குமான ஓய்வு மண்டபம்.

எல்லா நகரங்களையும் காலியாக்கி, அவற்றை பல நூறு தடவை மையவாடிக்கு நகர்த்திய மரணம், நிச்சயமாக எமது வாழ்வில் மிக முக்கியமானதொரு விடயத்தை எம்மிடமிடமிருந்து எதிர்பார்க்கின்றது. ரஸாஇலுந் நூர் இந்தப் பாரிய, திகிழ்கொள்ளச்செய்யும் யதார்த்தத்தை சூழவுள்ள முகமூடியை அகற்றி அதற்கு தீர்வு வழங்கியுள்ளது. அது மிகச்சுருக்கமாக வருமாறுளூ

மரணம் கொலைசெய்யப்பட முடியாதது. கப்ரின் வாயில் அடைக்கப்பட முடியாதது. இப்படியிருக்க அஜல் (நிர்ணயம்) எனும் இந்த அலுகோசுவின் கரத்திலிருந்தும், கப்ரின் தனிமையிலிருந்தும் பாதுகாப்புப் பெற ஒரு தீர்வு உண்டு எனின் நிச்சயமாக இந்தப் விடயம்தான் மனிதனின் மிக முக்கியமானதும், அவனில் அதிகம் கலக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும், அவனிடத்தில் அனைத்து விடயங்களையும் மிகைக்கக்கூடியதுமானாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மைதான் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வு உண்டு. இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பதைப் போல் ரஸாஇலுந்நூர் குர்ஆனின் ஒளியில் அந்தத் தீர்வை மிகத் திட்டவட்டமாகவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்வு பற்றிய சுருக்கம் வருமாறுளூ

ஷமரணம்| என்பது ஒன்றில் நிரந்தர இல்லாமை (முடிவு), மனிதனையும் அவனது நேசத்துக்குரிய அனைவரையும் தூக்கிலிடும் தூக்கு மேடையாக இருக்கும், அல்லது வேறொரு நிரந்தர உலகுக்குச் செல்வதற்கான, ஈமான் எனும் ஆவணத்தின் மூலம் சந்தோச மாளிகையில் நுழைவதற்கான கடவுச்சீட்டாக இருக்கும்.

ஷமண்ணறை| என்பது ஒன்றில் ஆழம் காணாத படுகுழியாக, இருள் படர்ந்த தனிமைச் சிறையாக இருக்கும், அல்லது இந்த உலகின் சிறையிலிருந்து விருந்துபசார அறைக்குள், ஒளிமயமான நிரந்தர தோட்டங்களுக்குள் நுழைவதற்கான வாயிற்கதவாக இருக்கும். இந்த யதார்த்தத்தை ஷஇளைஞர்களுக்கான வழிகாட்டல்| எனும் நூல் உதாரணத்துடன் விளக்கியுள்ளது.

உதாரணமாக, இந்த சிறைச்சாலையின் முற்றவெளியில் தூக்குமேடை நடப்பட்டள்ளது. இந்தத் தூக்குமேடை நடப்பட்டுள்ள மதிலுக்குப் பின்னால் மிகப்பெரியதொரு சீட்டிலுப்பு இடம்பெறுகின்றது. அதில் உலகிலுள்ள அனைத்து மக்களும் பங்குகொள்கின்றார்கள். இந்த சிறைச்சாலையிலுள்ள நாங்கள் ஐந்நூறு பேரும் விதிவிலக்கின்றி ஒருவர் பின் ஒருவராக அழைக்கப்படப் போகிறோம். எவ்வித விதிவிலக்குமின்றி அந்தக் களத்துக்கு நாம் செல்லவே வேண்டும், அதை விட்டும் விரண்டோட முடியாது.

எல்லா இடங்களிலும் இவ்வாறு அழைப்புவிடுக்கப்படுகின்றது: 

ஷவாருங்கள் உங்களது நிரந்தர முடிவைப் பெற்றுக்கொள்ளுங்கள், தூக்கு மேடையில் ஏறுங்கள்!!| அல்லது ஷநிரந்தர தனிமைச் சிறைக்கான ஆவணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த வாயிலால் நுழையுங்கள்!!|

அல்லது உங்களுக்கு நன்மாராயம் உண்டாகட்டும்.. நீங்கள் பல மில்லியன் பெறுமதியான தங்க நாணயங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கடவுச்சீட்டை வெற்றிப் பரிசாகப் பெற்றுள்ளீர்கள்| எனக் கூறப்படும்.

அவர்கள் ஒருவர் ஒருவராக தூக்குமேடையில் ஏறுவதைக் காண்கின்றோம், அவர்கள் தூக்கிலிடப்படுவதை நாங்கள் நேரடியாகவே பார்க்கின்றோம். ஆனால் அவர்களில் சிலர் வெற்றிப் பரிசைப் பெற தூக்கு மேடையின் படிக்கட்டில் ஏறுகின்றார்கள் என்பதை அங்குள்ள சங்கைக்குரிய மூத்த கடமையாட்களின் அறிவிப்பின் மூலம் அறிகின்றோம்.

அப்போது இரு குழுக்கள் எமது இந்த சிறைச்சாலையில் நுழைகின்றார்கள். ஒரு கூட்டத்தார் தமது கரங்களில் இசைக் கருவிகளையும், மது பானங்களையும், புறத்தோற்றத்தில் அறுசுவையான இனிப்புப் பண்டங்களையும் வைத்திருக்கின்றார்கள். அவற்றை எமக்கும் ஊட்டிவிட முயற்சிக்கின்றார்கள். எனினும் அந்த இனிப்புப் பண்டம் நஞ்சூட்டப்பட்டுள்ளது. அதில் நஞ்சை மனித ஷைத்தான்கள் தடவியுள்ளனர்.

அடுத்த கூட்டத்தார் புத்தகங்களையும் ஒழுக்கத் தூதுகளையும் ஹலாலான உணவுகளையும் அருள்பெற்ற பானங்களையும் சுமந்து நிற்கின்றனர். அவற்றை எமக்குப் பரிசளிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஏகமனதாக மிக வினையமாகவும் உறுதியாகவும் கூறுகின்றனர்: முதலாம் கூட்டத்தினர் உங்களுக்கு வழங்கும் பரிசுகளை -அவை யதார்த்தத்தில் உங்களுக்கான சோதனையாகுhம்- நீங்கள் பெற்று அவற்றை சாப்பிட்டால் இதோ உங்களுக்கு முன்னாலுள்ள இவர்கள் தூக்கிலிடப்படுவதைப் போல் நீங்களும் தூக்கிலிடப்படுவீர்கள்.


4. Page

முதலாம் கூட்டத்தார் கொண்டுவந்துள்ள பரிசுப்பொருட்களுக்குப் பகரமாக நாட்டின் ஆட்சியாளனின் ஆணைப் படி நாம் கொண்டுவந்தள்ள பரிசுப் பொருட்களை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மேலும் திக்ர், அவ்ராத்களைக் கொண்ட அந்தப் புத்தகங்களையும் ஒழுக்கத் தூதுகளையும் வாசித்தால் நீங்கள் அந்தத் தூக்கிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மேலும் உங்களில் ஒவ்வொருவரும் பல மில்லியன் பெறுமதியான தங்க நாணயங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கடவுச்சீட்டையும் வெற்றிப் பரிசாகப் பெறுவீர்கள் என்பதை தெளிவான பகலைப் போன்று உறுதியாக நம்புங்கள். இது அந்த ஆட்சியாளனிடமிருந்து கிடைக்கப்பெறும் விஷேட பரிசு. ஆனால் நஞ்சு தடவப்பட்ட, மயக்கமான, தடுக்கப்பட்ட அந்த இனிப்புப் பண்டத்தை நீங்கள் சாப்பிட்டால் தூக்குமேடைக்கு ஏறும் போது அந்த நஞ்சின் தாக்கத்தால் உங்களுக்கு வயிற்றுவலி பிடிக்கும்.

இவ்வாறு ஆட்சியாளனின் கட்டளைகளை உங்களுக்கு திட்டவட்டமாகவும் ஏகமனதாகவும் நாம் அறிவிக்கின்றோம்.|| இந்த உதாரணத்தில் உள்ளதைப் போல் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களும் (இவர்கள் தான் தமது தூதை உறுதிப்படுத்த எண்ணற்ற அற்புதங்களை சுமந்து வந்தவர்கள்) நூற்றி இருபத்து நான்கு மில்லியனை விட அதிகமான எண்ணிக்கையுடைய நல்லடியார்களும் -இவர்கள் நபிமார்கள் கொண்டு வந்த அற்புதங்களின் சுவடுகளை தமது 'கஷ்ப்' மூலம் உறுதிப்படுத்தியவர்கள்- மேலும் சினிமாத் திரையில் ஓடும் காட்சிகளை உறுதிப்படுத்தி கைச்சாத்திடுவதைப் போன்று பல மில்லியன் முஜ்தஹித்கள், உண்மையாளர்கள், அறிஞர்கள் என அனைவரும் ஏகமனதாக தெளிவான அறிவியல் ஆதாரத்துடன் (முன்னைய நபிமார்களும், நல்லடியார்களும் உறுதிப்படுத்தியவற்றை) உறுதியாகவே எமக்கு அறிவிக்கின்றார்கள்: நாம் ஒவ்வொரு நாளும் காண்கின்ற தவணை - அஜல் - எனும் தூக்கு மேடைக்குப் பின்னாலுள்ள முடிவுறா, நிரந்தர அருட்கடாட்சத்தை நூற்றுக்கு நூறு வீதம் வெற்றி வாய்ப்புள்ள அந்த கடவுச்சீட்டு அல்லாஹ்வின் நாட்டப்படி முஃமின்களுக்கு –அவர்களது இறுதி முடிவு நல்ல முடிவாக அமைய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்- பெற்றுத்தரும்.

எவன் ஒருவன் ஹராத்திலும், மடமையிலும், பாவத்திலும், நம்பிக்கையீனத்திலும் மூழ்கிப்போகின்றானோ ஒன்றில் அவன் தௌபாச் செய்து மீளாத போது மறுமையை நம்பிக்கை கொள்ளாதவன் நிரந்தர அழிவையும், அல்லது எவன் ஆன்மாவின் நிலைத்த தன்மையை நம்பிக்கை கொண்டு பாவத்தில் மூழ்கிப்போகின்றானோ அவன் இருள்படர்ந்த நிரந்தர தனிமைச் சிறைச்சாலையையும் நிரந்தர துரதிர்ஷ்டத்தையும் நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது வீதம் உறுதியாகவே பெற்றுக்கொள்வான்.

மனித சமூகத்துக்கு வழிகாட்டியாகவும், கண்ணியமிக்க உயர் குழுவாகவும் மனித சமூகத்தில் தோன்றிய சூரியன்கள், சந்திரன்கள், நட்சத்திரங்கள் என கூறத்தக்க இந்த மூன்று சாராரும் அறிவித்த விடயங்களை செவியேற்காதவன், நிரந்தர சந்தோசத்திற்காக அவர்கள் காட்டிய நேரிய பாதையை பின்பற்றாதவன், இப்பாதையில் தொன்னூற்றி ஒன்பது வீதம் மிகப்பெரும் அபாயமுள்ளதை கவனம் செலுத்தாமல் ஒரு நிபுனரின் வார்த்தையான 'இப்பாதையில் அபாயமுண்டு' என்பதற்காக இப்பாதையை விட்டுவிட்டு நீண்ட மற்றைய பாதையை பின்பற்றுவோன் - இத்தகையோரின் நிலை கீழ்வருமாறு இருக்கும்: அவன் மிக உறுதியாகவே நிரந்தர துரதிஷ்டத்தையும் நரகம் எனும் சிறைச்சாலையையும் நோக்கிய மிகக் கஷ்டமான, குழப்பமான, நீண்ட பாதையை தெரிவுசெய்துவிட்டான்.

அவன் எண்ணற்ற நிபுனர்களின் திடமான அறிவிப்புக்கேற்ப உறுதியாகவே நிரந்தர இன்பத்தையும் சுவனத்தையும் நோக்கிய மிக இலகுவான, குறுகிய பாதையை விட்டுவிட்டான். அவன் ஒருத்தனின் அறிவிப்புக்கேற்ப இரு பாதைகளில் குறுகியதை விட்டுவிட்டான் -சிலவேளை அந்த அறிவிப்பாளர் ஒரு பொய்யனாகவும் இருக்கலாம்- அதில் அபாயம் நூற்றுக்கு ஒருவீதமே உள்ளது. சிறைச்சாலையின் அவகாசம் ஒரு மாதமே. ஆனால் அவன் தனக்கு தீங்கில்லை என்ற ஒரேயொரு காரணத்துக்காக மாத்திரம் எவ்விதப் பயனுமில்லாத நீண்ட நெடிய பாதையை தெரிவுசெய்துகொண்டான். 

இவனுக்கு உதாரணம் தூரத்தில் தென்படும் படுபயங்கர மலைப் பாம்பில் கவனம் செலுத்தாமல் மதுப் போதையில் மதியிழந்த துரதிஷ்ட மனிதனை ஒத்தவன். அவன் தனக்கு அருகாமையிலுள்ள கொசுவுடன் மாத்திரம் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தனது மதியையும், உள்ளத்தையும், ஆன்மாவையும், மனிதத்தையும் இழந்தவனைப் ன்றவனாவான்.

உண்மையான நிலை இவ்வாறிருக்க – சிறைக் கைதிகளாகிய நாம்- அந்த அருள்பெற்ற இரண்டாம் தூதுக்குழுவின் அன்பளிப்புக்களை ஏற்று சிறைச்சாலையின் இந்த சோதனையை முழுமையாகப் பழிவாங்க வேண்டும். ஒரு நிமிடம் பழிவாங்கும் குணத்தால் அல்லது சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்களின் மடத்தன செயற்பாட்டால் இந்த சோதனை எம்மை இந்த சிறைச்சாலையில் பதினைந்து வருடங்கள், அல்லது ஐந்து அல்லது பத்து வருடங்கள், அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நுழைவித்தது. அது எமது உலகை சிறைச்சாலையாக மாற்றியது. எனவே வெறுத்த போதிலும் அந்த சோதனையை நாம் முழுமையாகப் பழிவாங்க வேண்டும். பிடிவாதத்தோடு சிறைச்சாலையிலுள்ள அந்த மணித்தியாலங்களை நாட்கணக்கு செய்யும் இபாதத்தாக மாற்ற வேண்டும். தண்டனையாக நாம் கழிக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களை அக்குழுவின் அன்பளிப்புக்களோடு நிரந்தர வாழ்வுக்கான இருபது அல்லது முப்பது வருடங்களாக மாற்றவேண்டும். நாம் சிறையில் கழிக்கும் பத்து அல்லது இருபது வருட எமது தண்டனையை பல்லாயிரம் வருடங்கள் தொடர்ந்திருக்கும் நரக சிறைச்சாலையிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வழியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் அழிந்துபோகும் எமது உலகுக்கு முன்னால் அழுவதைவிட்டுவிட்டு எமது நிரந்தர வாழ்வை எண்ணி சிரிப்போம்.

எனவே சிறைச்சாலை என்பது பயிற்சிப்பாசறை. எம்மை நாம் நெறிப்படுத்தியவர்களாக, பண்பாட்டுச்சீலர்களாக, விசுவாசம் கொண்டவர்களாக, நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிப்பவர்களாக வாழ முயற்சிக்க வேண்டும். எந்தளவுக்கெனில் சிறைச்சாலை ஊழியர்கள், நிர்வாகிகள், பொறுப்புதாரிகள் போன்றோர் எவர்களை குற்றவாளிகளாக, திருடர்களாக, துரோகிகளாக, கொலையாளிகளாக, மடயர்களாக, பாவிகளாக, தேசத் துரோகிகளாக கருதினார்களோ அத்தகையோர் உண்மையிலே அருள்பெற்ற பள்ளிக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதனால் அவர்கள் பெருமைப்படட்டும், அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தட்டும்.