இரு அடிக்குறிப்புக்கள்:
NAVIGATION
33. Page
இரு அடிக்குறிப்புக்கள்:
முதுலாவது அடிக்குறிப்பு:
பண்ணிரண்டு வருடங்களுக்கு முன்னால் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வுகொண்ட நயவஞ்சகர்கள் குர்ஆன் பற்றிய அவர்களது மோசமான எண்ணத்தை பின்வருமாறு வெளிப்படுத்தினார்கள்: 'அல்குர்ஆன் மொழிபெயர்ப்பின் பெறுமதி பிரபல்யமாகுவதற்காக அது மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் அதில் மீள மீள கூறப்பட்டவற்றை அனைவரும் கண்டுகொள்ள வேண்டும். குர்ஆனுக்குப் பகரமாக அதன் மொழிபெயர்ப்பு வாசிக்கப்பட வேண்டும்.'
ரஸாஇலுந் நூரில் உள்ள மிகப் பலமான ஆதாரங்கள் அல்குர்ஆனை மிகச் சரிவர மொழிபெயர்க்க முடியாது, அரபு மொழியைத் தவிர வேறு எந்த மொழியினாலும்
அல்குர்ஆனின் அலாதியான பண்புகள், அதன் நுணுக்கங்களை பேணிப்பாதுகாத்திட முடியாது என்பதை திட்டவட்டமாக நிறுவுகின்றது. அதுபோல அல்குர்ஆனின் சொற்சுருக்கம், பொருட்செறிவுமுடைய சொற்களுகளின் அற்புதமான கருத்துக்களை மனித மொழிபெயர்ப்புகளினால் உணர்த்திட முடியாது. அதன் சொற்களோ பத்து முதல் ஆயிரம் மடங்கு நன்மைகளை பெற்றுத்தர வல்லது. பள்ளிவாயல்களில் அல்குர்ஆனுக்குப் பதிலாக அதன் மொழிபெயர்ப்புகள் ஓதப்பட முடியாது. இவற்றை ரஸாஇலுந்நூர் தெட்டத்தெளிவாக நிறுவுகின்றது. இவ்வாறு ரஸாஇலுந் நூர் ஏலவே கூறப்பட்ட மோசமான எண்ணங்கொண்ட பயங்கரமான திட்டத்தின் பரவலை இல்லாமலாக்கியது. இந்த நயவஞ்சகர்களது செயற்பாட்டினால் கலக்கமும் நிராசையும் உற்றிருந்த நிலையிலேயே -இந்தப் பத்தாவது விவகாரம்- எனக்குள் உள்ளுணர்வாகத் தோன்றியது. இந்நயவஞ்சகர்கள் மடையர்களைப் போல தமது வாய்களினால் ஊதி அல்குர்ஆனின் ஒளியினை அணைத்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். எனக்கு இந்நிலையின் யதார்த்தம் தெரியாது. நான் ஒருவரையும் சந்திக்கவில்லலை.
இரண்டாவது அடிக்குறிப்பு:
தெனிஸ்லி சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் பிரபல்யமான 'ஷஹ்ர்' எனும் ஹோட்டலின் மேல் மாடியில் நான் அமர்ந்நதிருந்தேன் . அப்போது எனக்கு முன்னால் அழகிய தோட்டங்களில் அதிகமான 'ஹூர்' மரங்களைக் கண்டேன். அவை திக்ர் மஸ்லிஜ்களில் வட்டமாக உட்கார்ந்திருப்பது போன்று எனக்குத் தோன்றியது. -எனது சகோதரர்களைப் பிரிந்து தனித்து இருப்பதன் காரணமாக- அம்மரங்களின், கிளைகளின், இலைகளின் அசைவுகள் எனது உள்ளத்திலிருந்த கவலைகளை கிளரச்செய்தன. அப்போது இலையுதிர், கோடை பருவகாலங்கள் பற்றிய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் என்னையே மறந்து போனேன். அம்மரங்கள் மீது எனக்கு இரக்கம் தோன்றியது. அது போல அக்காற்றின் மூலம் இன்பத்தைக் காண்போர் மீதும் பரிவு எனக்குள் தோன்றியது. என் கண்கள் குளமாகின. பிரபஞ்சத்தின் அலங்கரிக்கப்பட்ட திரைக்குக் கீழ் 'பிரிவு' பற்றிய உணர்வு, எண்ணங்களால் உதித்த பிரபஞ்சத்தின் அளவு கவலைகள் என் தலைக்குள் முட்டி மோதின. அப்போது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த பேரொளி எனக்கு நினைவுக்கு வந்தது. அது என் எல்லையற்ற கவலைகளை சந்தோசமாக மாற்றியது.
இவ்வொளியை எனக்கு வழங்கி, ஆறுதல் அளித்தமைக்காக நபியவர்களுக்கு முன்னால் நான் நன்றிக்கடன் உடையவானாக மாறிவிட்டேன். அந்நேரம் எனக்கு பின்வரும் நிலை ஏற்பட்டது. அது விசுவாசம் கொண்டோருக்கு ஏற்படக் கூடிய பல்லாயிரக் கணக்கான உள உதிப்புகளில் ஒன்றாகும்:
முதல் பகுதி: இது மாட்சிமை பொருந்திய காரண கர்த்தாவின் பெயர்களோடு தொடர்பானது. உதாரணமாக ஒருவர் அற்புதமான ஒரு கருவியை செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அனைவரும் அவருக்காக கரகோரசம் எழுப்பி 'மாஷா அல்லாஹ', 'பாரகல்லாஹ' என்று வாழ்த்துவார்கள். அதேநேரம் அக்கருவியும் அதனைக் கண்டுபிடித்தவனை வாழ்த்துகின்றது. அவனுக்காக கரகோசம் எழுப்புகின்றது. எப்படியெனில் அக்கருவி மூலம் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் கிடைக்கப்பெறுவதனால் ஆகும். உயிர் வாழும் அனைத்தும் ஒவ்வொரு கவருவியைப் போன்றது. அவை ஒவ்வொன்ரும் அவற்றைக் கண்டுடித்தவனை வாழ்த்தி, அவனுக்காக கரகோசம் எழுப்புகிறது.
இரண்டாம் பகுதி: இது அறிவுடைய உணர்வுள்ளவர்களோடு தொடர்புடையது. இது (பிரியும் அல்லது அழியும் அனைத்தும்) அவர்களது அறிவுப் புத்தகமாக மாறி அறிவுடையோரது உள்ளத்தில் பதிவாகவும், நினைவில் நிற்கும் காட்சியாகவும் மாறுகின்றது. அது கற்பனை உலக ஏடுகளிலும் மறையுலக புத்தகங்களிலும் பதிவாகின்றது. இதன் மூலம் இவ்வுலகை விட்டும் மறையுலகை நோக்கிப் புறப்படுகின்ற போது அது ஒரு தோற்றத்தை விட்டுச்சென்று அறிவூர்வமான மறையுலக கருத்தியல் இருப்பின் பல் வகைகளை பெற்றுக்கொள்கின்றது.
ஆம், அல்லாஹ் இருக்கின்றான். அவற்றை யாவற்றையும் அறிந்தவன். நிச்சயமாக ஈமான் கொண்டவர்களிடம் அழிவு, இல்லாமை, முடிவு போன்றவற்றுக்கு இடமே இல்லை. ஆனால் நிராரிப்பாளர்களது உலகில் அழிவு, பிரிவு, இல்லாமல் போதல் என்பனவற்றால் நிரம்பிப் போயிருக்கும். இந்த உண்மையை பின்வரும் வார்த்தை தெளிவுற விளக்குகின்றது;
'யார் அல்லாஹ்வை கண்டுகொள்கின்றாரோ அவரிடம் அனைத்தும் இருக்கும். யார் அல்லாஹ்வை கண்டுகொள்ளவில்லையோ அவரிடத்தில் ஒன்றுமிருக்காது'
முடிவு: எப்படி ஈமான் மனிதனை மரணத்தின் போது நிரந்தர அழிவை விட்டும் காப்பாற்றுகின்றதோ அவ்வாறே ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக உலகையும் அழிவு மற்றும் அதன் இருள்கனிலிருந்து காப்பாற்றுகின்றது. நிராகரிப்பைப் பெறுத்தவரை அது மனிதனை அழித்துவிடுகி;னறது. அதுபோல மரணத்தின் மூலம் அவனது பிரத்தியேக உலகையும் அழித்துவிடுகின்றது. அவனை கருத்தியல்ரீதியான நரகின் இருள்களுக்குள் தள்ளி அவனது வாழ்வின் இன்பங்களை கசப்பான நஞ்சாக மாற்றிவிடுகின்றது.
மேலே கூறப்பட் விடயங்கள் மறுமையை விட உலக வாழ்வை மேலாக எடுத்துக்கொண்டோரின் செவிகளில் ஒலிக்கட்டும். அவர்கள் இந்த நிலமைக்காக தீர்வைப் பெற்றுக்கொள்ளட்டும். அல்லது ஈமானுக்குள் நுழைந்து மிகப் பயங்கரமான இந்த இரு நஷ்டங்களிலிருந்தும் தப்பிக்கொள்ளட்டும்.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
பத்தாவது விடயம் தொடர்பாக தனது ஆசிரியருக்க ஹூஸ்ரவி எழுதிய கடிதம்
என் தலைவரே! அன்பார்ந்த ஆசிரியரே!
அல்லாஹ்வை எல்லையற்று புகழ்கின்றோம். தெளிஸ்லி சிறையின் விளைவுகளில் ஒன்றான பத்தாவது விவாகாரம் என்று பெயரிடப்பட்டிருக்கின்ற 'அமிர்தா மலர்' ஐ பெற்றுக்கொண்டோம். இரு மாதங்கள் நீடித்த பிரிவின் கவலைகளை அது கொஞ்சம் தணித்தது. எங்களை விட்டும் உங்களது செய்திகள் துண்டிக்கப்பட்டதன் வலிகளுக்கு அது ஒத்தடமாக இருந்தது. எங்களது உள்ளங்களுக்கு புதியதொரு வாழ்வை அது அளித்தது. எங்கள் ஆன்மாவுக்கு புதியதும் தூய்மையானதுமான ஓர் தென்றலை அது வழங்கியது. அது அல்குர்ஆனின் கண்ணியமிக்க, அன்பு நிறைந்த வசனங்களை மீள மீள ஓதுவதன் அழகினை கூறியது. அவற்றை மீள மீள ஓதுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தியது. ரஸாஇலுந் நூருக்கான மிக அழகிய பாதுகாப்பாக அது இருந்தது. கண்ணியத்துக்குப் பொருத்தமான அம்மலரை நாம் நுகரும் போதெல்லாம் எம் ஆன்மாக்களில் மறைந்துள்ள ஆசைகள் உண்மையிலேயே அதிகரித்தது.
34. Page
அடுத்த ஒன்பது விவகாரங்களும் நாம் ஒன்பது மாதம் சிறையில் அனுபவித்த இன்னல்களுக்கு முன்னால் எமது குற்றமற்ற நிலையை வெளிபப்படுத்துவதற்கான சாதனமாக அமைந்திருந்ததன. அதன் விளைவுதான் பத்தாவது விவகாரம். அது அல்குர்ஆனின் அற்புதத்திலுள்ள நுணுக்கங்களை வெளிக்கொணர்ந்ததன் மூலம் அதன் அழகை தெளிவுபடுத்தியது.
ஆம், என் அன்புக்குரிய ஆசானே! ரோஜா மலரிலுள்ள நிறைந்த அன்பும், மென்மையும் அதன் மரத்திலுள்ள முற்களை விட்டும் பார்வையைத் திருப்பிடுகின்றது. அதேபோல் ஒன்பது மாத காலம் நீடித்த சிறைக் கஷ்டங்களை இந்த பத்தவாது மலர் மறக்கடிக்கச் செய்து, மொத்தமாக நீக்கிவிட்டது.
இந்த பத்தவாது மலர் மீள மீள வாசிக்கத் தூண்டும் வகையில், சிந்தனைகளை குழம்பிப் போகும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அதன் மூபாதையில் முழ உலகையும் அர்ப்பணம் செய்வது அவசியம் என்ற அளவுக்கு குர்ஆனின் உணர்வை அது வெளிப்படுத்துகின்றது. அல்குர்ஆனை மொழிபெயர்ப்பதன் ஊடாக மனித சமூகத்தில் அதனை எதிரியான ஒன்றாகக் காட்ட வேண்டும் என்ற சிலரது இழிவான முயற்சிக்கு முன்னால் மீள மீள ஓதப்படுகின்ற அவ்வசனங்களது பெறுமானத்தை அது வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
35. Page
அல்குர்ஆனில் ஒவ்வொரு காலத்திலும் இருந்த அநியாயக் காரர்களுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரமான, கடுமையான எச்சரிக்கையானது உங்களது பணிவான மாணவனை மிகுந்த சந்தோசத்தோடு ஆழ்ந்த நன்றியை முன்வைப்பதற்குத் தூண்டியது. -அந்தக் குர்ஆனானது ஒவ்வொரு காலத்திலும் அதனை பலமாக பற்றிப்பிடித்து, அதன் ஏவல் விலக்கல்களை முழுமையாகக் கடைபிடிப்பதன் மூலம் அவர்களுக்கே அது இறங்கியதைப் போன்று அதன் உடன் நிலை குசநளாநௌள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.- அவ்வாறே அநீதியிழைக்கப்பட்டடோர் மீதான அளவு கடந்த அன்பு அவரை நன்றி செலுத்தத் தூண்டியது. அந்தக் கடுமையான எச்சரிக்கை அநியாயக் காரர்களை தொடர்ந்தும் ஆறு ஏழு வருடங்களாக நரகத்திற்குள் இருப்பதைப் போன்று. ஓலமிடுபவர்களாக அவர்களை ஆக்கியது. இக்காலத்தில் அநீதியிழைக்கப்பட்டவர்களில் முன்வரிசையில் ரஸாஇலுந் நூரின் மாணவர்களே உள்ளனர். இம்மாணவர்களை அக்கடுமையான எச்சரிக்கையானது குறிப்பானதும் பொதுமவானதுமான ஈடேற்றத்தை பெறும்படியாக ஆக்கியது. அது முன்னை சமூகங்களின் இறைத் தூதர்களுக்கு வழங்கப்பட்ட ஈடேற்றத்தைப் போன்றது. இந்தப் பயங்கரமான எச்சரிக்கையானது நாஸ்திகவாதிகளுக்கு கடும் நரக அடியை வழங்குகின்றது. அதுபோல மிக அழகிய இரு அடிக்குறிப்புகளோடு 'ஸஹ்ரா' எனும் தூது நிறைவடைகின்றது.
பலதடவைகள் நான் எனது சகோதரர்களிடம் பின்வருமாறு கூறியிருக்கின்றேன்: 'நான் எனது அன்புக்குரிய ஆசானிடம் கூறியதைப் போல பத்தாவது விவகாரம் எனக்களித்த சந்தோசத்தைப் போன்று என்வாழ்வில் என்றும் நான் உணர்ந்ததில்லை' என் அன்புக்குரிய ஆசானே! அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்ளட்டும். உங்களது பலவீனமான தோல்களில் மிகக் கணதியான சுமையை சுமந்தீர்கள் உங்களது சுமைகளை குறைப்பதன் மூலம் என்றென்ரும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும். ஆமீன் .. ஆமீன்.. ஆமீன்..
ஆம் எனது அன்புக்குரிய ஆசானெ நாம் அல்லாஹ்வை, அவனது குர்ஆனை, அவனது தூதரை, ரஸாஇலுந் நூரை திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறோம். அல்குர்ஆனின் பக்கம் அழைப்பு விடுத்த நேசத்துக்கரிய எம் ஆசானான உங்களையும் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறோம். எந்நிலையிலும் அதனை நாம் சார்ந்திருப்பதற்காக கைசேதப்பட்டது கிடையாது. கடுகளவேனும் எங்களது உள்ளங்களில் தீய எண்ணம் கிடையாது. அல்லாஹ்வையும் அவனது திருப்தியையும் தவிர வேறு எதனையும் நாம் எதிர்பார்க்கவில்லை. காலம் செல்லச் செல்ல அல்லாஹ்வின் திருப்தியுடன் அவனை சென்றடைய வேண்டும் என்ற ஆசை எமது உள்ளங்களில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
நாம் கீழ்வருவமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்து, அல்லாஹ்வுக்கே எமது நன்றிகள் அனைத்தும் உரித்தாகுக!
'எமக்கு தீங்கிழைப்போரை மன்னித்து, விதிவிலக்கின்றி அவர்களது விவகாரத்தை அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுவதோடு அவர்கள் அநியாயக் காரர்களாக இருந்தாலும் அத்தகையோருக்கு நன்மை செய்வதும் நூர்ஸிய மாணவர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப்பதிந்துள்ள இஸ்லாத்தின் அடையாளம் ஆகும்:'
பணிவுள்ள உங்கள் மாணவன் - ஹூஸ்ரவீ


