முதலாவது விடயம்:
NAVIGATION
2. Page
முதலாவது விடயம்:
நான்காம் வார்த்தையில் விளக்கப்பட்டிருப்பதைப் போல் ஷவாழ்நாள்| எனும் மூலதனத்திலிருந்து ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணித்தியாலத்தை எமது இரட்சகன் எமக்குத் தருகின்றான். நாம் இந்த முழு மூலதனத்திலிருந்து எமது ஈருலக வாழ்வுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே அவனது எதிர்பார்ப்பாகும். நாம் இருபத்து மூன்று மணித்தியாலங்களை மிகக் குறுகிய இவ்வுலக வாழ்வுக்காக செலவழித்துவிட்டு மிக நீண்ட வாழ்வுக்காக கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுகைக்குப் போதுமான ஒரு மணித்தியாலத்தையேனும் செலவழிக்காவிடடால் நாம் எவ்வளவு பெரும் தவறைச் செய்கின்றோம்!! நிச்சயம் நாம் இந்தத் தவறின் விளைவை உளரீதியான, ஆன்மீகரீதியான கஷ்டத்தைக் கொண்டு அனுபவிப்போம். இந்தக் கஷ்டத்தின் விளைவாக எமது பண்பாடுகள் கெட்டுப்போகின்றன. நாம் நம்பிக்கையீனர்களாக எமது வாழ்வைக் கழிப்போம். நாம் இந்தத் தர்பிய்யா பயிற்சிக்கு மாற்றமாக நடந்தால் பெரும் நஷ்டமடைவோம். அப்படியிருக்க நாம் இந்தத் தர்பிய்யா பயிற்சியை சிறிதும் பெறவில்லையாயின் எமது நிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஒப்பிட்டுக்கொள்ளட்டும்.
கடமையாக்கப்பட்டுள்ள ஐவேளைத் தொழுகைக்காக நாம் ஒரு மணித்தியாலத்தை செலவழித்தால் சிறைச்சாலையில் நாம் கழிக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் சிலவேளை ஒரு நாள் இபாதத் செய்த தரத்தைப் பெருகின்றது. அந்நிலையில் அழியும் ஒரு மணித்தியாலம் நிரந்தர மணித்தியாலங்களில் தரத்தைப் பெறுகின்றது. நம்பிக்கையீனமும், உள கஷ்டமும் ஓரளவு நீங்குகின்றது. மேலும் அது நாம் சிறையில் அடைக்கப்பட பின்னணியாக இருந்த பாவங்களை மன்னிக்கக் காரணமாகவும் குற்றப்பரிகாரமாகவும் அமைகின்றது. எனவே, சிறைச்சாலை தரும் தர்பிய்யத்தை நாம் பெறுவோம். இந்தக் கஷ்டத்தில் சிக்குண்டுள்ள நண்பர்கள் இலாபமாக பெற்றுக்கொள்ளும் ஆறுதலும் அன்பும் கொண்ட அழகான தோழமை, பாடம், சோதனை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்கட்டும்.
நான்காம் வார்த்தையில் கூறப்பட்டிருப்பதைப் போல் ஆயிரம் தங்க நாணயங்களை சன்மாணமாகப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் தன்னிடமுள்ள இருபத்து நான்கு தங்க நாணயங்களில் ஐந்து அல்லது பத்து தங்க நாணயங்களை செலவழிப்போரும் இங்கே உள்ளனர்.
ஆனால் அவர்கள் இந்த இருபத்து நான்கில் ஒன்றையேனும் நிரந்த அருட்கடாட்சத்தின் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள செலவழிப்பதில்லை. ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் லொத்தர் சீட்டிலுப்பில் ஒருவருக்கான வெற்றி வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் இங்கே ஆயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். ஆனால் மறுமை வெற்றிக்கான சீட்டிலுப்பில் நல்ல முடிவைப் பெற்ற முஃமின்களுக்கான வெற்றி வாய்ப்பு இறை நிர்ணயப்படி ஆயிரத்தில் தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது என ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களும் உறுதிப்படுத்தியுள்ளதோடு அதனை 'கஷ்ப்' மூலம் உண்மைப்படுத்திய எண்ணிலடங்கா இறை நேசர்கள் மற்றும் நல்லடியார்களும் குறிப்பிடுகின்றனர். அப்படியெனில் முதலாவது சீட்டிலுப்புக்குப் பின்னால் அலைவதும் இரண்டாம் சீட்டிலுப்பை விட்டும் விரண்டோடுவதும் மனித நலனுக்கு எவ்வளவு முரண்படுகின்றது என்பதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்!!
இந்த வகையில் சிறைச்சாலை நிர்வாகிகள், அதன் காவலாளிகள், கைதிகள் மாத்திரமன்றி நாட்டின் நிர்வாகிகள், பாதுகாவலர்கள் போன்றோர் ரஸாஇலுன் நூரின் இந்தப் பாடத்தின் மூலம் சந்தோசமடைவார்கள். ஏனெனில் நரக சிறைச்சாலையை தினமும் நினைவுபடுத்துகின்ற, மார்க்கப்பற்றுமிக்க ஆயிரம் பேரை நிர்வகிப்பது ஹலால், ஹராம் பற்றி அறியாத, ஓரளவு தட்டுத்தடுமாறுகின்ற, உலக சிறைச்சாலையைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்ற, நம்பிக்கையும் தொழுகையும் இல்லாத பத்துப்பேரை நிர்வகிப்பதை விட மிகவும் இலகுவானது.


