மூன்றாவது விடயம்:

5. Page

மூன்றாவது விடயம்: 


'இளைஞர்களுக்கான வழிகாட்டல்' எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள படிப்பினைக்குரிய சம்பவத்தை இங்கும் வலியுறுத்துகிறோம். அன்று சுதந்திர தினம். அஸ்கிஷஹ்ர் சிறைச்சாலை யன்னலுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். சிறைச்சாலைக்கு முன்னால் அமைந்திருந்த உயர்தரப் பாடசாலையில் கல்விகற்கும் குமரிப் பெண்கள் அதன் வளாகத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என சிரித்து கும்மாலமிட்டுக்கொண்டிருந்தார்கள். திடீரென சினிமாத் திரையின் மூலம் அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பின்னால் அவர்களது நிலை எனக்கு முன்னால் தோன்றியது. அவர்களில் நாற்பது அல்லது ஐம்பது பெண்கள், ஐம்பது அல்லது அறுபது மாணவிகள்; மண்ணுடன் மண்ணாகி கப்ரில் வேதனையை அனுபவிப்பார்கள். எஞ்சிய பத்துப் பேரும் எழுபது அல்லது எண்பது வயதைத் தாண்டியிருப்பார்கள். அவர்கள் தோல் சுருங்கி அலங்கோலமாக மாறியிருப்பார்கள்.

இளமைப் பருவத்தில் தமது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளாததால் அன்பையும் நேசத்தையும் தேடும்கண்கள் இவர்களைக் கண்டு அறுவருப்பார்கள். நான் இதனை நடைமுறையில் கண்டேன். அன்பும் கருணையும் தேவைப்படுகின்ற இவர்களது நிலையை எண்ணி நான் அழுதேன். எனது அழுகுரலை சிறைச்சாலையிலுள்ள சில நண்பர்கள் செவியேற்றார்கள். அவர்கள் என்னிடம் காரணம் வேண்டினார்கள். 'இப்போது என்னை அழ விட்டுவிடுங்கள். நீங்கள் போய்விடுங்கள்' எனக் கூறினேன்.

உண்மைதான், நான் கண்டது யதார்த்தம், கற்பனையல்ல. இந்தக் கோடை காலமும் இலையுதிர் காலமும் முடிவடைந்தால் மாரி காலம் உதயமாகுவதைப் போன்று இளமை எனும் கோடைக்கும் முதுமை எனும் இலையுதிர் பருவத்துக்கும் பின்னால் கப்ர் எனும் கலலறை வாழ்க்கை எனும் ஓர் மாரி காலம் உண்டு.

எவ்வாறு கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இன்று சினிமாத்திரையின் மூலம் காட்டப்படுகின்றதோ அதனைப் போன்று அடுத்து வரும் ஐம்பது வருடங்களுக்குப் பின்னால் நடப்பனவற்றை இன்று காட்சிப்படுத்துவதற்கு ஒரு சினிமா இருந்திருந்தால் அடுத்த ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்குப் பின்னர் வழிகோடர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை நான் அவர்களுக்கே காட்டியிருப்பேன். தற்போது அவர்கள் சுவைத்த ஆகாத இன்பங்களையும் கூத்து, கும்மாலத்தையும் எண்ணி மனம்நொந்து அருவெறுத்தவர்களாக அழுவார்கள்.

அஸ்கிஷஹ்ர் சிறைச்சாலையில் இந்தக் காட்சியில் நான் முழ்கிக்கொண்டிருந்த போது பாவத்தையும் வழிகேட்டையும் பரப்புகின்ற ஒரு கருத்தியல் மனிதன் எனக்கு முன் தோன்றினார். அவர் மனித உருவில் தோன்றிய ஷைத்தானைப் போல் இருந்தார். அவர் என்னிடம் சொன்னார்:

நாம் வாழ்வின் எல்லா வகையான இன்பங்களையும் சுவைக்க விரும்புகின்றோம். மேலும் அவற்றை பிறருக்கு சுவைக்கக் கொடுக்கவும் விரும்புகின்றோம். எமது விடயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். எமது பாதையில் எம்மை விட்டுவிடுங்கள்!!

நான் அவருக்குப் பதிலளித்தேன்: நீ உலக இன்பங்களை காட்டி மரணத்தை நினைவுபடுத்தமால் உன்னை நீயே வழிகேட்டிலும் மடமையிலும் மூழகடித்துக்கொள்கின்றாய். உனது வழிகேட்டால் இறந்த காலம் முழுதும் உனக்கு மரணமாகவும் இல்லாமையாகவும் சடலங்கள் அழுக்கடைந்திருக்கும் பயங்கர மையவாடியாகவும் இருக்கும் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

எண்ணற்ற உனது நேசத்துக்குரியோரின் நிரந்தர மரணத்தின் மூலமும் பிரிவின் மூலமும் உருவாகும் நோவினைகள், -உள்ளமும் அறிவும் இருந்தால் உருவாகும்- மன உளைச்சல்கள், சிந்தனா தடுமாற்றங்கள் போன்றன நீ போதையில் குறைந்தளவு நேரம் அனுபவிக்கும் சிறிய இன்பத்தையும் அழித்துவிடும். இவ்வாறுதான் நம்பிக்கைகொள்ளாத காரணத்தால் உனக்கு எதிர்கலம் என்பது இல்லை, அது இருண்டது, மரணித்துள்ளது, தடுமாற்றத்துக்குரிய ஒன்று. இங்கிருந்து வருகின்ற சில அப்பாவிகள், தமது தலையை நீட்டி உலகுக்கு வந்தவர்கள், நிகழ் காலத்தை;தில் வாழ்;ந்துகெர்டிருப்பவர்கள் என அனைவரினதும் தலைகள் 'அஜல்' எனும் சண்டாளனின் வாளுக்கு இறையாகி இல்லாமையை நோக்கி எறியப்படும். அந்த சிந்தனை நம்பிக்கை (ஈமான்) யில்லாத உனது தலையில் பகுத்தறிவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் காரணமாக வரையறையற்ற வேதனைதரும் கலக்கத்தையே எப்போதும் மழையாக பொழிவித்து, உனது அற்பசொற்ப லோகாயுத இன்பத்தையும் அழித்துவிடும்.

நீ வழிகேட்டை விட்டுவிட்டு உண்மையான ஈமானின் மூலம் 'இஸ்திகாமத்' எனும் சீர்நிலையை அடைந்தால் ஈமானின் ஒளி மூலம் நீ பின்வருவனவற்றைக் காண்பாய்! கடந்த காலம் என்பது இல்லாமையகாக் கூடியதல்ல. அது அனைத்தையும் அழித்து துவம்சம் செய்யும் நாற்றமடிக்கும் மையவாடியன்று. மாறாக அது எதிர்காலமாக மாறிய ஒளிபெற்ற ஓர் உலகம் என்று புலப்படும். மேலும் எதிர்காலத்தில் சந்தோச மாளிகைக்கு நிரந்தர ஆத்மாக்கள் நுழையக் காத்திருக்கும் மண்டபமாக அது மாறும். இதனால் அவன் வேதனைகளை அனந்தரமாக விடமாட்டான். மாறாக அவனது ஈமானின் படித்தரத்துக்கு ஏற்ப இவ்வுலகிலும் அவன் ஒரு வகையில் சுவனத்துக்கான கருத்தியல் இன்பங்களை சுவைப்பான்.

இவ்வாறுதான் மனிதன் ஈமான் எனும் சினிமாத் திரையின் மூலம் எதிர்காலம் என்பது பயங்கரமான, இருள் சூழ்ந்த உலகமன்று என்பதைக் காண்கின்றான். மேலும் நிரந்த சந்தோச மாளிகையில் வரையறையற்ற அன்பும், கருணையும் கொண்ட கண்ணியமிக்க அருளாளன் உணவு மேசைகளை விரித்து வைத்துள்ளான். அவன்தான் ஒவ்வொரு வசந்தத்தையும் ஒவ்வொரு கோடையையும் உணவு மேசையாக ஆக்கி அதை தனது அருட்கொடைகளால் நிரப்பியுள்ளான். அதில் தனது உபகாரங்களை காட்சிப்படுத்தியுள்ளான். மனிதர்கள் கூட்டம் கூட்டமாக அதனை நோக்கி கொண்டு செல்லப்படுவார்கள். இதனால் தனது ஈமானின் தரத்தக்கு ஏற்ப நிரந்தர உலகின் இன்பங்களை அவனால் -ஒரு வகையில்- உணர முடியுமாயுள்ளது.


6. Page

அப்படியெனில் நோவினை கலக்காத உண்iமான இன்பம் ஈமானில் மாத்திரமே உண்டு. ஈமானின்றி அந்த இன்பததை ஒருபோதும் சாத்தியப்படுத்த முடியாது. உலகில் ஈமான் வழங்கும் பல்லாயிரம் பயன்களில் ஒரேயொரு பயனை, சுவையை மாத்திரம் -இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்களுக்கான வழிகாட்டல் எனும் நூலின் அடிக்குறிப்பொன்றில் குறிப்பிட்டுள்ள- ஓர் உதாரணத்தின் மூலம் நாம் விளக்க முனைகின்றோம்:

நீ மிகவும் நேசிக்கின்ற உனது ஒரே பிள்ளை மரணத்தருவாயில் இறுதி வேதனையை எதிர்கொண்டிருக்கின்றான். நீ அவனது நிரந்தரப் பிரிவையிட்டு அஞ்சி நம்பிக்கையிழந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாய். அப்போது ஹிழ்ர் (அலை) அல்லது லுக்மான் (அலை) போன்ற ஒரு வைத்தியர் அவருக்கு சிகிச்சையளிக்கின்றார். உனது நேசத்தக்குரிய பிள்ளை தனது கண்களைத் திறந்து பார்க்கின்றான். மரணத்திலிருந்து அவன் தப்பிவிட்டான். அப்போது உனது சந்தோசம், மகிழ்ச்சி எவ்வளவு உச்சத்திலிருக்கும் என்பதை நீ உணர்வாய்!

இவ்வாறுதான், அந்தப் பிள்ளையைப் போல் உனது நேசத்துக்குரியவர்கள், நீ விரும்புகின்றவர்கள், நீ நாள்தோரும் தொடர்புகொள்கின்றவர்கள் அனைவரும் உனது பார்வையில் கடந்தகால கப்றில் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். இப்பொhழுது ஈமான் எனும் யதார்த்தம் -லுக்மான் (அலை) அவர்களைப் போன்று- உள்ளம் எனும் யன்னலிலிருந்து ஒர் ஒளியை –நீ நிரந்தர அழிவு என ஊகித்துக்கொண்டிருக்கின்ற- கப்றுக்கு அனுப்புகின்றது. ஆரம்ப முதல் இறுதி வரையான அனைத்து சடலங்களும்; அந்த ஒளியால் மீள எழுப்பப்படுகின்றன. அவர்களது நிலை இவ்வாறு கூறியது: நிச்சயமாக நாம் மரணிக்கவில்லை. மரணிக்கவே மாட்டோம். நாம் மீண்டும் உங்களை சந்திப்போம். ஈமான் எனும் யதார்த்தம் -இந்த உலகிலும் வரையரையற்ற இன்பங்களை, சந்தோசங்களை உனக்கு தரவல்லது- விதைகளைப் போன்றது. அது வளர்ந்தால் ஒரு விஷேட தோட்டமாக உருவாகின்றது. அந்த விதை 'தூபா' எனும் மரமாக மாறுகின்றது என்பதை ஈமான் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு நான் விளக்கிய பின்னரும் அந்தப் பிடிவாதகாரன் மீண்டும் என்னிடம் வினவினான்: நாம் இந்த நுணுக்கமான விடயங்களைப் பற்றி யோசிக்காமல் கேளிக்கையிலும் கழியாட்டங்களிலும் கழிக்க விரும்புகிறோம். குறைந்தது மிருகத்தைப் போன்றாவது எமது வாழ்வை ஓய்விலும் இன்பத்திலும் கழிக்கவே நாம் விரும்புகின்றோம். நான் அவனுக்கப் பதிலளித்தேன்: உன்னால் மிருகத்தைப் போன்றும் வாழ முடியாது. ஏனெனில் அதற்கு இறந்த காலமும் இல்லை. எதிர்காலமும் இல்லை. அது கடந்தகாலத்தை எண்ணி கவலைப்படவும் மாட்டாது, எதிர்காலம் பற்றிய அச்சமோ கலக்கமோ அதனைத் திண்டவும் மாட்டாது. அது பூரண இன்பத்தை சுவைக்கின்றது. நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்கின்றது, உறங்குகின்றது. தன்னைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்றது. எந்தளவுக்கெனில் அறுக்கப்படுவதற்கென கொண்டுசெல்லப்படுகின்ற மிருகம் கூட எந்தவொரு கவலையையோ வேதனையையோ உணர்வதில்லை. கத்தியை அதன் கழுத்தில் வைக்கும் தருணத்தில் மாத்திரமே அதனை உணர்ந்துகொள்ள முயற்சிக்கின்றது. எனினும் அந்த உணர்வும் உடனே அதனை விட்டும் நீங்கி அந்த வேதனையிலிருந்து அது விடுதலை பெற்றுவிடுகின்றது. 

அப்படியெனில் அல்லாஹ் மறைவானவற்றை எமக்கு அறியத்தராதிருப்பதும் சிலவற்றை மறைத்து வைத்திருப்பதும் அவனின் மிகப் பெரிய அன்பும் கருணையுமாகும். இது பரிபூரணமான முறையில் அப்பாவி மிருகங்களிடத்தில் தெளிவாகவே வெளிப்படுகின்றது.

ஆனால் மனிதா! மிருகங்களுக்கு மறைவான அறிவு கிடைக்கப்பெறாததால் அவை அனுபவிக்கும் ஓய்வை உன்னால் ஒருபோதும் அனுபவிக்க முடியாது. ஏனெனில் பகுத்தறிவு வழங்கப்பட்டவன் என்றவகையில் நீ ஓரளவேனும் உனது இறந்த காலம், எதிர்காலம் பற்றி சிந்திக்கக் கூடியவனாக இருக்கின்றாய்.

கடந்தகால சிந்தனையால் உருவாகக்கூடிய எல்லா வகையான பிரிவுகளும் கவலைகளும், எதிர்காலம் பற்றிய சிந்தனையால் உருவாகக்கூடிய எல்லா வகையான கலக்கங்களும் பயங்களும் உனது அற்ப இன்பத்தை அழித்துவிடக்கூடியது. மேலும் அவை இன்பம் என்றவகையில் மிருகத்தை விடவும் உன்னை நூறு மடங்கு கீழே வீழ்ச்சியுறச் செய்யும்.

யதார்த்தம் இவ்வாறிருக்க ஒன்றில் நீ உனது பகுத்தறிவை தூக்கி எறிய வேண்டும், பொறுப்பற்ற மிருகமாக மாற வேண்டும். அல்லது ஈமானைக் கொண்டு நேர்வழிக்குத் திரும்ப வேண்டும். அல்குர்ஆனுக்கு செவி தாழ்த்த வேண்டும். அப்போதுதான் நீ இந்த அழியும் உலகிலும் கூட மிருகத்தை விடவும் நூறு மடங்கு அதிகமாக தூய்மையான இன்பங்களை அனுபவிப்பாய். இவ்வாறுதான் நான் ஆதாரங்களை அவனுக்கு முன்வைத்தேன்.

அந்தப் பிடிவாதக்காரன் தனது பிடிவாதத்தை விட்டுவிடவில்லை. மீண்டும் சொன்னான்: அப்படியாயின் குறைந்தது நாம் ஐரோப்பிய நாஸ்திகர்களைப் போன்று வாழ்கின்றோம்!!

நான் அவனுக்குப் பதிலளித்தேன்: உன்னால் அந்த ஐரோப்பிய நாஸ்திகர்களைப் போன்றும் வாழ முடியாது. ஏனெனில் அவர்கள் நபிமார்களில் ஒருவரை மறுத்தாலும் சிலவேளை ஏனைய நபிமார்களை ஏற்றிருப்பார்கள். அவர்கள் ஏனைய நபிமார்களையும் ஏற்கவில்லை என்றாலும் அவர்கள் சிலவேளை அல்லாஹ்வை ஏற்றிருப்பார்கள். அவ்வாறு அவர்கள் அல்லாஹ்வை ஏற்றிருக்கவில்லையாயினும் அவர்கள் பூரணத்துவமிக்க சில நல்ல இயல்புகளை, குணங்களை பெற்றிருப்பார்கள்.

என்றாலும் ஒரு முஸ்லிம் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மறுத்தால் தன்னை முழுமையாக இந்த வழியிலிருந்து விலக்கிக்கொள்கின்றார். இதனால் அவன் எந்தவொரு நபியையும் ஏற்றவனாக கருதப்பட மாட்டான். மேலும் அல்லாஹ்வையே ஏற்றவனாக மாட்டான். ஏனெனில் அவன் அந்தத் தூதர் மூலம் தான் அல்லாஹ்வையும் அனைத்து நபிமார்களையும் நல்ல குணங்களையும் அறிந்துகொண்டான். அத்தூதர் (ஸல்) இன்றி அவனது உள்ளத்தில் இவர்கள் எவருக்கும் இடமில்லை. இதனாலே அன்றிலிருந்து எல்லா மதங்களிலிருந்தும் மக்கள் இஸ்லாத்தில் நுழைகின்றார்கள். ஏனென்றால் எந்தவொரு முஸ்லிமும் உண்மையான யூதனாகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ அல்லது கிறிஸ்தவனாகவே இருக்க முடியாது. மாறாக அவன் அடிப்படை இயல்புகளை பாழ்படுத்திய நாஸ்திகனாக, நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கிழைப்பவனாகவே இருப்பான்.

நான் அவனுக்கு இவையனைத்தையும் உறுதிப்படுத்தினேன். அந்தப் பிடிவாதக்காரனிடம் எந்தவொரு தர்க்கரீதியான நியாயமும் இருக்கவில்லை. அவன் மறைந்து நரகுக்குச் சென்றுவிட்டான்.

இந்த யூஸூபின் பள்ளிக்கூடத்தில் (சிறைச்சாலையில்) கற்கின்ற எனது நண்பர்களே! இதுவே யதார்த்தம். ரஸாஇலுந்நூர் இந்த உண்மையை தெளிவாகவே உறுதிப்படுத்துகின்றது. அது பிடிவாதக்காரனின் முதுகெழும்பை நறுக்கி அவனை ஈமானியப் பாசறைக்குள் கொண்டு வர முயற்சிகின்றது. நாமும் ஈமானியப் பாதையில் பயணிக்க வேண்டும். அதுவே எமது உலகுக்கும் எதிர்காலத்துக்கும் எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் பயன்மிக்கது, இலகுவானது, பாதுகாப்பானது. கனவுலகிலும் தகாத சிந்தனைகளிலும் மூழ்குவதைத் தவிர்த்து எமது ஓய்வு நேரங்களில் குர்ஆனிய வசனங்களை ஓத வேண்டும், அதனைக் கற்க வேண்டும். அதனைக் கற்றவர்களிடம் கேட்டு அதன் கருத்துக்களை அறிந்துகொள்ள வேண்டும். நாம் நேரத்துக்கு நிறைவேற்றாத ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு மத்தியிலுள்ள நல்ல பழக்கவழக்கங்களை, குணநலன்களை அணிகலனாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த சிறைச்சாலையை எமக்கு நற்பண்பாடுகள் விதைக்கப்பட்ட மரக்கன்றுகளை கொண்ட அருள்பெற்ற தோட்டமாக மாற்ற முடியும். 

இத்தகு நற்செயல்களை நாம் செய்வதன் மூலம் இந்த சிறைச்சாலை பொறுப்பதிகாரிகள், ஊழியர்கள் ஒவ்வொருவரும் அன்புகொண்டு வழிகாட்டக்கூடிய ஆசான்களாக மாறுவார்கள். அவர்கள் மனிதர்களை சுவனத்துக்கு தயாராக்கும் பணியை நிறைவேற்றுவேராகவும் யூஸூபுடைய பள்ளிக்கூடத்தில் வழங்கும் பயிற்சிக்கு மேற்பார்வை செய்வோராகவும் மாறுகின்றார்கள். மாறாக அவர்கள் கொலையாளிகளுடனும் பாவிகளுடனும் கடினமாக நடந்துகொள்ளும் கல்நெஞ்ச ஸபானியாக்களாக (நரகக் காவலாளிகளாக) இருக்க மாட்டார்கள்.