நான்காவது விடயம்:
NAVIGATION
7. Page
நான்காவது விடயம்:
'இளைஞர்களுக்கான வழிகாட்டல்' எனும் நூலில் விளக்கப்பட்டிருப்பதைப் போல் எனக்கு பணிவிடை செய்கின்ற சகோதரர்களிடமிருந்து ஒரு வினா என்னிடம் கேட்கப்பப்பட்டது: நீங்கள் கடந்த ஐம்பது நாட்களாக முழு உலகையுமே அல்லோல கல்லோலப் படுத்தியிருக்கின்ற படு பயங்கர உலக மகா யுத்ததததைப் பற்றி எதுவும் கேட்கவில்லையே? சில மதவாதிகளும் அறிஞர்களும் அதைப் பற்றி செவிமடுக்க தொழுகையையும் பள்ளிவாயலையும் கூட விட்டுவிட்டு விரைகின்றார்களே. அதற்கும் இஸ்லாததின் பெறுமானங்களுக்கும் தொடர்பிருக்க அது ஏன் உமது கவனத்தை ஈர்க்கவில்லை? அதை விடவும் ஏதும் முக்கிய விடயம் உண்டா? அல்லது அதில் கவனம் செலுத்துவது தீங்கு பயக்குமா?
நான் சொன்னேன்: மனிதன் பெற்றிருக்கின்ற 'ஆயுள்' என்ற மூலதனத்தின் அளவு மிகக் குறைவு. அதில் நிறைவேற்ற வேண்டிய அத்தியவசிய விடயங்கள் மகிவும் அதிகம். மனிதனிடம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த வட்டாரங்கள் அதிகமுள்ளன. உள்ளம், குடல் என்ற வட்டாரம், உடல், வீடு என்ற வட்டாரம், கிராமம், நகரம் என்ற வடடாரம், நாடு, தேசம் என்ற வட்டாரம், பூமி, மனித இனம் என்ற வட்டாரம் என்று தொடங்கி உலகம், உயிரினம் என்ற வட்டாரம் வரை தொடர்ந்து செல்கின்றது.
இந்த ஒவ்வொரு வட்டாரத்திலும் ஓரளவேனும் மனிதன் நிறைவேற்ற வேண்டிய ஒர் பணி இருக்க முடியும். எனினும் இந்தப் பணிகளில் மிகப் பெரியதும் நிiலானதும் மிக முக்கியமானதுமான பணி மிகச் சிறிய வட்டாரத்தில் அவன் நிறைவேற்ற வேண்டிய பணியாகும்.
இவ்வாறு சிறிய பணி பெரிய வட்டாரத்திலும், பெரிய பணி சிறிய வட்டாரத்திலும் என பணிக்கும், வட்டாரத்துக்குமிடையே எதிர்மறை தொடர்பு இருக்கம்.
என்றாலும் பெரிய வட்டாரத்துக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதன் ஈர்ப்பால் மனிதனை தேவையற்ற அற்ப விடயங்களில் அது ஈடுபடுத்தும். அவன் சிறிய வட்டாரத்தில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைப் பணிகளுக்கும் தடைகளை ஏற்படுத்தும். அவனது ஆயுள் என்ற மூலதனத்தை வீணாக்கி அழித்துவிடும். அவனது பெறுமதியான வாழ்வை பெறுமதியற்ற விடயங்களில் தொலைத்துவிடும்.
இந்த உலகமகா யுத்தத்தை பேராவலுடன் அவதானிக்கின்றவன் சிலவேளை உள்ளத்தால் ஏதேனும் ஓர் அணியை ஆதரிப்பவனாக இருக்கலாம். அந்த அணியின் அநியாயத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பான். இதனால் அவனும் குறித்த அநியாயத்தில் பங்காளியாக மாறுகின்றான்.
குறித்த வினாவின் முதற்பகுதிக்கான விடை வருமாறு:
உண்மைதான், இது ஒவ்வொரு மனிதனுக்கு முன்னாலுமுள்ள பிரச்சினையாகும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு முன்னாலுள்ள பிரச்சினையாகும். அது உலக மகா யுத்தத்தை விடவும், முழுப் பூமியை ஆக்கிரமிப்பதை விடவும் மிக முக்கிய பிரச்சினையாகும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் இங்கிலாந்து, ஜேர்மன் போன்ற நாடுகளின் பலமும் செல்வமும் இருந்து அவரகளிடம் பகுத்தறியும் அறிவும் இருந்தால் அவையனைத்தையும் எவ்விதத் தயக்கமுமின்றி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக மாத்திரம் செலவழித்திருப்பார்கள்.
அந்தப் பிரச்சினை: மானிட சமூகத்தில் தோனறிய ஒரு இலட்சம் பிரபல்யமிக்கவர்கள், வகைதொகையற்ற மானிட சமூக நட்சத்திரங்கள், பிரபஞ்ச கர்த்தாவின் வாக்குகளிலிருந்து பல்லாயிரம் சான்றுகளைக் கொண்டு ஏகமனதாக வழிகாட்டியவர்கள் இப்படிக் குறிப்பிடுகின்றார்கள்: இந்தப் பிரச்சினை ஈமானுக்கு நேரெதிராக ஒவ்வொருவருக்கும் முன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரச்சினை. அது நிரந்தர விளைநிலத்தை பெற்றுக்கொள்ளுதல் அல்லது இழந்துவிடுதல் தொடர்பான பிரச்சினையாகும். தோட்டங்களாலும் மாளிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள நிரந்தர சொத்தை பெற்றுக்கொள்ளுதல் அல்லது இழந்துவிடுதல் தொடர்பான பிரச்சினையாகும். அவற்றின் விசாலம் பூமியளவு விசாலமானது. ஈமான் என்ற ஆவணத்தை பூரணமாக பெறறுக்கொள்ளாவிட்டால் அந்தப் பிரச்சினைக்கு முன்னால் அவன் தோற்றுவிடுவான். இக்காலத்தில் சடவாதம் என்ற தொற்று நோயால் அந்தப் பிரச்சினையில் அதிகமானவர்கள் தோல்வியடைந்திருக்கின்றார்கள்.
ஒரு பிரதேசததில் வசிக்கும் நாற்பது பேரில் ஒரு சிலரே தமது மரணத் தருவாயில் இந்த யதார்த்தத்தைப் புரிந்து வெற்றி பெறுவார்கள். எஞ்சியோர் தோல்வியுறுவார்கள் என ஆத்மீக ஞானிகளில் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
ஐயஹோ... இந்த மனிதனுக்கு முழு உலகின் ஆட்சியதிகாரமும் வழங்கப்பட்டாலும் அதனால் தான் இழந்த அந்தப் பிரச்சினையை ஒருபோதும் அவனால் ஈடுசெய்ய முடியுமா?
நாம் -நூர்ஸிய மாணவர்கள் என்றவகையில்- இந்தப் பிரச்சினையில் வெற்றியீட்டித் தரும் பணிகளை விட்டுவிட்டவர்களாக, நூற்றுக்கு தொன்னூறு வீதம் இந்தப் பிரச்சினைக்கு தோல்வியை ஈட்டித்தராத ஒரு வழக்கறிஞரை வேண்டி நிற்கும் பணிகளை விட்டுவிட்டவர்களாக -உலகில் நிரந்தரமாக வாழ வந்தவர்களைப் போன்று- எமக்குத் தேவையற்ற அற்ப விடயங்களில் கவனம் செலுத்துவது அதி முட்டாள்தனமாகும். இதனால் எங்களில் ஒவ்வொருவரினதும் அறிவு நூறு மடங்கு அதிகாரித்தாலும் அவர் அதனை இப்பிரச்சினையை தீர்ப்பதில் மாத்திரமே செலுத்த வேண்டும் என்பதில் எமக்கு திருப்தியிருக்கின்றது.
8. Page
சிறைச்சாலை சோதனையில் பங்குகொண்டிருக்கும் என்னுடைய புதிய சகோதரர்களே...! என்னோடு சிறையில் நுழைந்த எனது பழைய சகோதரர்கள் ரஸாஇலுந் நூரை கற்றதைப் போன்று நீங்கள் கற்கவில்லை. எனது இந்த வார்த்தையை இவர்களையும், உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான நூர்ஸிய மாணவர்களையும் சன்றாக வைத்து உறுதியாகக் கூறுகின்றேன். உண்மையில் நான் ஏலவே உறுதிப்படுத்தியுள்ளதைப் போன்று 'அல்குர்ஆனின் கருத்தியில் அற்புதத்திலிருந்து உருவான ரஸாஇலுந்நூர், அப்பாரிய பிரச்சினைக்கு நூறு பேரில் தொன்னூறு பேருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்ற ரஸாஇலுந்நூர் கடந்த இருபது வருடங்களில் இருபதாயிரம் பேருக்கு உண்மையான ஈமானைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது. 'உண்மையான ஈமானே' அந்தப் பிரச்சினையிலிருந்து வெற்றி பெறுவதற்கான ஆவணமாகவும், கோப்பாகவும், நிரபராதிப் பத்திரமாகவும் திகழ்கின்றது. இந்த 'ரஸாஇலுந் நூரே' இந்தக் காலத்தில் முதன்மையான வழக்கறிஞர் ஆகும்.
என்னுடைய எதிரிகள், நிராகரிப்பாளர்கள் மற்றும் சடவாதிகள் கடந்த பதினெட்டு வருடங்களாக சில அரச தரப்புக்கெதிராக படுமோசமன சூழ்ச்சிகளைச் செய்து மோசடி செய்தார்கள். இந்தத் தடவையைப் போன்றே அவர்கள் இதற்கு முன்னும் எம்மை அழிக்க நாடி சிறைச்சாலைகளில் நுழைவித்தார்கள். ரஸாஇலுந் நூரின் இரும்புக் கோட்டையில் இரண்டு அல்லது மூன்றைத் தவிர ஏனைய நூற்று முப்பது பாகங்களையும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியெனில் யார் ஒரு வழக்கறிஞரை நியமிக்க நாடுகின்றாரோ அவர் ரஸாஇலுந் நூரை பெற்றுக்கொள்வதே போதுமானதாகும்.
நீங்கள் கவலைப்பட வேண்டாம்: நிசச்சயமாக ரஸாஇலுந் நூர் ஒருபோதும் தடைப்பட மாட்டாது.
ரஸாஇலுந் நூரின் - இரண்டு அல்லது மூன்று பகுதிகளைத் தவிர ஏனைய- முக்கிய பகுதிகள் அரச தரப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கரங்களில் பூரண சுதந்திரத்துடன் பரிமாறப்படுகின்றன. அல்லாஹ் நாடினால் ஒரு நாள் வரும், அந்த நாளில் நிர்வாகிகளும் பணியாட்களும் கைதிகளுக்கு பாணும் மருந்தும் பகிர்வதைப் போன்று சிறைச்சாலைகளை சீர்திருத்தசாலைகளாக மாற்ற அவர்களுக்கு அந்த ஒளிகளையும் (ரஸாஇலுந் நூர்) சந்தோசமாக விநியோகிப்பார்கள்.


