ஒன்பதாவது விடயம்:

22. Page

ஒன்பதாவது விடயம்:

بسم الله الرحمن الرحيم

آمَنَ الرَّسُولُ بِما أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْن أَحَدٍ مِنْ رُسُلِهِ

'(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார், (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர், இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: 'நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை, (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம், (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம், எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம், (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்' என்று கூறுகிறார்கள்.

இதுவொரு முக்கிய கருத்தியல் ரீதயான எண்ணக் கரு. இது மகத்துவமிக்க தெய்வீக அருளின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. இவற்றை மேற்படி வசனம் விரிவாகவும், பூரணமாகவும். செறிவாகவும் தெளிவுபடத்துகின்றது. இது ஆன்மாவுக்கு கருத்துரீதியான மிக முக்கியமான விடயமாகும்.

ஈமானின் உண்மை நிலையை மறுப்பவன் ஏன் காபிராக இருக்க வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாதவன் ஏன் முஸ்லிமாக இருக்க முடியாது? எனவே அல்லாஹ், மறுமை மீதான நம்பிக்கை சூரியனைப் போல அவ்விருள்களை அகற்றுகிறது.

ஈமானின் அடிப்படைகளுள் ஒன்றை அதன் யதார்த்தங்களுள் ஒன்றை ஒருவன் மறுக்கின்ற போது ஏன் அவன் மதம் மாறியவனாக மாறுகின்றான்? அவன் என் மொத்தமான நிராரிப்பில் வீழ்கின்றான்? அவற்றை ஏற்றுக்கொள்ளாதவன் என் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகின்றான்? அப்படியாக இருப்பின் ஈமானின் அடிப்படைகளை விசுவாசித்த ஓர் இறை விசுவாசியை ஈமான் மொத்தமான நிராகரிப்பிலிருந்த அவனை விடுவிக்க வேண்டும்?

விடை: நிச்சயமாக ஈமான் என்பது ஆறு அடிப்படைகளிலிருந்து தோன்றும் ஏகத்துவ உண்மையாகும். அது பிரிவினையை ஏற்காது. அது மொத்தமானது. பிரித்துப் பார்க்க முடியாது, பிரியாதது. ஏனெனில் ஈமானின் அடிப்படைகளில் ஒவ்வொன்ரும் தனது ஆதாரத்தின் மூலம் மற்றைய அடிப்படைகளை நிறுவுகிறது. மற்றையதை வழுவூட்டும் மிகப் பெரும் சான்றாக மாறுகின்றது.

எனவே வழிகெட்ட சிந்தனையால் ஈமானின் அனைத்து அடிப்படைகளையோ அல்லது அதன் ஒரு அடிப்படையையோ அல்லது அதன் ஒரு யதார்த்தத்தையோ தகர்த்துவிட முடியாது. சிலபோது 'ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்' என்ற திரையினை போட்டு கண்களை மூடிக்கொள்வதன் மூலம் பிடிவாதமான நிராகரிப்பை செய்ய முடியும். படிப்படியாக மொத்தமான நிராகரிப்பில் அவன் வீழ்ந்துவிடலாம். அவனது மனிதம் அழிக்கப்பட்டு சடரீதியாகவும், கருத்துரீதியாகவும் அவன் வீழ்ந்துவிடுவான்.

இங்கு நாம் இறையுதவியோடு இந்த மிகப்பெரும் விடயத்தை ஆறு சுருக்கமான குறிப்புகளில் தெளிவுபடுத்தப் போகிறோம்: ஏலவே 'விளைவுகள்' எனும் இந்நூலில் மீள எழுப்பாட்டப்படுவதற்கான ஆதாரங்களை சுருக்கமாக தெளிவுபடுத்தியதைப் போன்று இங்கு ஈமானின் ஏனைய அடிப்படைகள் மீள எழுப்பாட்டப்படுவதனை நிறுவுகின்றன என்பதை சுருக்கமாக நோக்குவோம்.

முதலவாது குறிப்பு: அல்லாஹ் மீதான நம்பிக்கை அதன் ஆதாரங்களின் மூலம் ஏனைய அடிப்படைகளை, குறிப்பாக மறுமை நம்பிக்கையை நிறுவுகின்றது. இது 'விளைச்சல்கள்' எனும் இந்நூலில் ஏழாவது விவகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

உண்மைதான், நிலையான நிரந்தரமான இறைத்துவத்தின் (ருபூபிய்யா) ஆட்சியும், தெய்வீகத்தன்மையின் (உலூஹீய்யா) அதிகாரமும் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கின்றது. அப்பிரபஞ்சமோ பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்ற கோட்டை, நகரம், கிராமம் என்ற வரையறைகளையும் தாண்டியது. மிக சீரான முறையில் அது நடாத்தப்படகின்றது. பல தாத்பரியங்கள் உட்பொதிந்த வகையில் நிர்வகிக்கப்படுகின்றது. ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் படையைப் போல அணுக்கள், கோல்கள், நட்சத்திரங்கள், உடுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாட்சியதிகாரத்தின் கட்டளைகளுக்கும் நாட்டங்களுக்கும் ஏற்ப எதிரும் புதிரான பல செயற்பாடுகளுக்குள் உற்சாகத்துடன் இயக்கப்டுகின்றது. அடிமைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவையனைத்தும் நடாத்தப்படுகின்றது.... இப்படியிருக்க நிரந்தரமான, நிலையான, நித்திய ஆட்சி அதிகாரத்துக்குரிய மறுமை இல்லாமல் ஏற்கனவே கூறப்பட்ட அனைத்தும் இருக்க முடியும் என்பது அறிவுபூர்வமானதா? அல்லது சாத்தியமானதா? அசாத்தியம்! ஆயிரம் தடவைகள் அசாத்தியம்!

அப்படியெனின், ஏலவாது விவகாரத்தில் தெளிவுபடுத்தப்பட்டதைப் போல அல்லாஹ்வின் அதிகாரம், அவனது இறைத்துவம், அவனது அதிகமான திருநாமங்கள் அவனது இருப்பின் அவசியத்துக்கான ஆதாரங்கள் என அனைத்தும் மறுமைக்கு சான்றுபகர்வதோடு அதனை வேண்டியும் நிற்கின்றது. இந்த ஈமானுக்குரிய பலத்தையும் மீட்சியையும் பார்! ஆழ்ந்து பரிந்துகொள்! நீ கண்களால் காண்பது போல நம்பிக்கை கொள்!

பின்னர், மறுமை நம்பிக்கை இல்லாமல் அல்லாஹ் மீதான நம்பிக்கை இருக்காது என்பது எப்படியிருப்பினும் - பத்தாவது வார்த்தையில்' சுருக்கமாக கூறப்பட்டிரப்பதைப் பொன்று- எவ்வகையிலும் அது சாத்தியமா? அல்லாஹ்வின் விடயத்தில் அறிவு அதனை ஏற்றுக்கொள்ளுமா? அல்லாஹ் இப்பிரபஞ்சத்தை தனது தெய்வீக நிலையின் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் ஓர் புத்தககமாக ஆக்கியுள்ளான். அதில் ஒவ்வொரு பக்கமும் அப்பத்தகத்திலுள்ள கருத்துக்களை தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள கருத்துக்களை சொல்கின்றன. அக மொத்தத்தில் அதனை தூய்மையான கண்களுக்கப் புலப்படக்கூடிய குர்ஆனாக ஆக்கியிருக்கின்றாபன். அதிலுள்ள் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு எழுத்தும் அற்புதமே. தனக்குள் எண்ணற்ற அத்தாட்சிகளை கொண்டிருக்கும் மகத்துவமிக்க அருள்பெற்ற பள்ளிவாயலாக அதனை ஆக்கியிருக்கின்றான். அந்தப் பள்ளி பல கருத்துக்களை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. அதன் ஒவ்வொரு தூண்களையும் அண்டி ஒவ்வொரு குழுக்கள் தமக்கே உரிய வணக்க வழிபாடுகளை செய்துகொண்டிருக்கின்றன. 


23. Page

இந்த இடத்தில் நான் இப்படிக் கேட்கிறேன்: இந்தப் பெரிய புத்தகத்தின் கருத்துக்களை கற்பிக்கும், நிலையான குர்ஆன் வசனங்களை விளக்கும் தூதர்களை அல்லாஹ் ஆசிரியர்களாக அனுப்பாமல் இருப்பின் அதனை அறிவு ஏற்றுக்கொள்ளுமா?

இந்த மிகப் பெரும் பள்ளிவாயலில் எண்ணற்ற வணக்க வழிபாடுகளை செய்துகொண்டிருப்போரை வழிநடாத்தும் தலைவர்களாக அவர்களை நியமிக்காமல் இருப்பது சரியா?

இந்த ஆசிரியர்களுக்கும், விளக்கவுரையாளர்களுக்கும், தலைவர்களுக்கும் இறை கட்டளைகளை ஒப்படைக்காமல் இருப்பது அறிவுபூர்வமானதா? அசாத்தியம்!.. இலட்சம் தடவைகள் அசாத்தியம்!

பின்னர், நிச்சயமாக அருளும் கண்ணியமும் மிக்க படைப்பாளன் இந்தப் பிரபஞ்சத்தை விருந்தாளிகள் தங்குமிடமாகவும், கண்காட்சியாகவும், உல்லாசத்தக்குரிய இடமாகவும் ஆக்கியுள்ளான். அதிலே வரையரையற்ற பலதலப்பட்ட இன்பங்களை பதித்து வைத்துள்ளான். அதனை அவன் அருளின், அன்பின் அழகு, இறைத்துவத்தின் பூரணத்துவம் ஆகியவற்றை உணர்வள்ளவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதற்காகப் படைத்துள்ளான். அதன் மூலம் அவர்களை அவன் நன்றி செலுத்துதல், புகழ்தலை நோக்கி கொண்டுசெல்கின்றான்.

அந்த விருந்தாளிகள் தங்குமிடத்தில் உணர்வுள்ள படைப்பினங்களோட அவன் பேசாமல் இருப்பான் என்பதனை அறிவு ஏற்றுக்கொள்கின்றதா? அந்த இன்பங்களுக்குப் பகரமாக நன்றி செலுத்துதலை தூதர்களினூடாக அவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பதனை அறிவு ஏற்றுக்கொள்ளுமா?

அவனது அன்பு, அருள்களின் வெளிப்பாடுகளுக்கு முன்னால் அடிமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதை தூதர்களினூடாக அவர்களுக்கு அறிவிக்கமல் இருப்பதனை அறிவு ஏற்றுக்கொள்ளுமா? அசாத்தியம்!.. பல்லாயிரம் தடவைகள் அசாத்தியம்!

ஒன்றைச் செய்தவன் தான் செய்த பொருளை நிச்சயம் நேசிப்பான். அதனை மற்றவர்களுக்கும் நேசத்துக்குரிய ஒன்றாக ஆக்க விரும்புவான். அவனே இந்தப் பிரபஞ்சத்தினை தனது மிகக் கவர்ச்சிகரமான ஆக்கத்திறன் மூலம் அழகுபடுத்தியிருக்கின்றான். அதில் கட்சிதமான அலங்காரங்களும் உண்ட. இதன் மூலம் அவன் விரும்புவது இவையனைத்துக்கும் நன்றி செலுத்தப்படுதல் வேண்டும், மதிக்கப்படுதல் வேண்டும் என்பதாகும் இப்பிரபஞ்சத்தை பல்லாயிரக்கணக்கானோரின் இரசனையை கருத்திற்கொண்டே ஆக்கியுள்ளான். தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் அவன் தன்னை அறிமுகப்படுத்த விரும்புவது போல தன்னை நேசத்துக்குரியவனாகவும் ஆக்க விரும்புகிறான். இதன் மூலம் ஏதோ ஒரு வகையிலான கருத்தியல் ரீதியான தனது அழகை வெளிப்படுத்துகின்றான்.

இவ்வாறிருக்க மனிதர்களில் சிரேஷ்டமானவர்கள் சிலரோடு அவன் பேசாமல் இருப்பதனை ஏற்றுக்கொள்ள மடிகிறதா? அவர்கள் பிரபஞ்சத்தில் உள்ளவர்களுக்கான தலைவர்கள். இவர்களை தூதர்களாக அவன் எப்படி அனுப்பதிருக்கலாம்? அப்படியிருப்பின் அவனது படைப்பு அர்த்தமற்றதாக மாறிவிடும். அவனது உயர்ந்த திருநாமங்கள் சோபை இழந்துவிடும். அவனை அறிமுகப்படுத்துவதும் அவனை நேசிக்கச் செய்வதும் பிரதியீடற்றதாக மாறிவிடும். இவற்றை அறிவு ஏற்றுக்கொள்கின்றதா? அசாத்தியம்!.. பல்லாயிரம் தடவைகள் அசாத்தியம்!

வாழுகின்ற அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றக் கோரி புரியும் பிரார்த்தனைகளுக்கு, அவர்களது அனைத்து மன்றாட்டங்கள், அந்தந்நத நேரங்களில் அவர்களுக்கேற்படும் ஆசைகளுக்கு எல்லையற்ற தனது உபகாரங்களின் மூலமும் அருள்களின் மூலமும் விடையளிக்கும் மிக ஞானமுள்ள அல்லாஹ் பொருத்தமான நேரத்தில, தனது தெரிவு, விருப்பத்தின் முறையில் அவர்களுக்கு பதிலளிக்கிறான்.

இதன் மூலம் அவன் அவர்களோடு பேசுகிறான். சிறிய படைப்போட அவன் பேசுவதாக இருப்பின், தனது உபகாரத்தின் மூலம் அப்படைப்பின் கோரிக்கைகளை செவிமடுத்து அதன் தேவைகளை பூரணமாக நிறைவேற்றுவதாயின் மனித சமூகத்துக்கு தலைவர்களாக, பூமியின் பிரதிநிதிகளாக, பூமியின் அனைத்துப் படைப்புக்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களோடு பெசாதிருப்பான் என்பதை அறிவு ஏற்றுக்கொள்கிறதா?... அது சாத்தியமா? 

அவன் தனது அருள்கள், உபகாரங்கள் மூலம் எல்லாப் படைப்பினங்களோடும் பேசுவதைப் போன்று அவர்களோடும் பேசமாட்டானா? அவர்களுக்கு வேதங்களை அனுப்பமாட்டானா? அசாத்தியம்.... நிச்சயம் பேசுவான்.

எனவே அல்லாஹ்வை விசுவாசித்தல் என்பது 'வேதங்களையும் தூதுவர்களையும் விசுவசித்தல்' என்பதன் யதார்த்தத்தை நிறுவுகின்றது. அதாவது நபிமார்களை விசுவாசித்தல், புனித வேதங்களை விசுவாசித்தல் ஆகியவற்றை திட்டவட்டமாக பல ஆதாரங்களின் மூலம் அது நிறுவகின்றது. 


24. Page

பின்னர் நபியவர்கள் அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களை விடவும் சிறந்தவாராக, மேன்மையானவராக இல்லாமல் இருப்பது எந்த வகையிலும் சாத்தியமா? அல்லது அறிவு ஏற்றுக்கொள்ளுமா? அவர்தான் மாட்சிமை மிக்க அல்லாஹ்வை பிரபஞ்சத்தைNயு நிரப்பியிருக்கும் குர்ஆனினி; யதார்த்தத்தின் மூலம் பூரணமாக அறிந்துகொண்டவர். -அல்லாஹ் தனது அனைத்து படைப்புகளின் மூலமாகவே தன்னை அறிமுகப்படுத்த விரும்புகிறான். இதற்குப் பகரமாக அவை நன்றியோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றான்- அவனை அறிமுகப்படுத்தி அவனுக்கு நன்றி செலுத்தி மற்றவர்களையும் அவனுக்கு நன்றி செலுத்தும்படியாக ஆக்கினார். அவனை தானும் நேசித்து மற்றவர்களையும் நேசிக்கச் செய்தார். 'ஸூப்ஹானல்லாஹ்', 'அல்ஹம்துலில்லாஹ்', 'அல்லாஹ் அக்பர்' ஆகிய வார்த்தைகளைக் கொண்டு பூமியை பேசவைத்தார். அவ்வார்த்தைகள் வானங்களையும் நிரப்பின.

நபியவர்கள் மனித சமூகத்தில் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதியினரை தனக்குப் பின்னால் ஒன்றுசேர்த்தார். அவர்களில் தரத்தில், மனிதப் பண்பில் அரைவாசியினரை நீரிலிலும் நிலத்திலும் கவனத்தை ஈர்க்குமளவுக்கு கடந்த 1300 வருடகாலத்துக்குள் ஒன்றுகூட்டினார். மேலும் அவர் பூரணமான இபாதத்களின் மூலம் அல்லாஹ்வின் இறைத்துவ வெளிப்பாடுகளுக்கு முன்னால் சரணடைந்தார். உயர்ந்த தொணியில் முழுப் பிரபஞ்சத்தையும் சர்வ காலத்தையும் அவர் அழைத்து அவற்றுக்கு குர்அன் அத்தியாயங்களின் மூலம் கற்பித்து, அல்லாஹ்வின் அனைத்து நோக்கங்களின் பால் வழிகாட்டினார். அவர் மனித கொளரவம், அந்தஸ்த்து, பணி போன்றவற்றை சொல்லிக்கொடுத்தார். அவற்றை அற்புதங்கள் மூலம் நிறுவினார். இத்தகு நபி அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களை விடவும் சிறந்தவாராக, மேன்மையானவராக இல்லாமல் இருப்பது எந்த வகையிலும் சாத்தியமா? அல்லது அறிவு ஏற்றுக்கொள்ளுமா? 

எனவே, நிச்சயமாக 'அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் இல்லை என்று நான் சான்றுபகர்கிறேன்' என்ற வார்த்தையின் யதார்த்தமானது அதன் அனைத்து ஆதாரங்கள் மூலமும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சான்றுபகர்கிறேன்' என்ற வார்த்தையை உறுதிப்படுத்துகின்றது.

இப்பிரபஞ்சத்தின் காரணகர்த்தா தனது படைப்பினங்கள் அவற்றுக்கு மத்தியில் பல்லாயிரக் கணக்கான மொழிகளில் பேசும்படியாக ஆக்கி, அவற்றை அவன் செவிமடுக்கின்ற நிலையில் அவன் பேசாதிருப்பான் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ... இல்லை..

இறைக் கட்டளைகள் மூலம் பிரபஞ்சத்தில் அல்லாஹ்வின் இலக்குகளை அறிவிக்காமல் இருப்பதனை அறிவு ஏற்றுக்கொள்கின்றதா? பிரபஞ்சத்தின் இரகசியத்தை புலப்படுத்தும், படைப்பினங்கள் எங்கிருந்து வந்தன?, எங்கு செல்லப்போகின்றன?, அவை கூட்டம் கூட்டமாக வந்து சிறிது காலம் தங்கிவிட்டு மீண்டும் ஏன் உலகை விட்டும் பயணிக்கப் போகின்றன ஆகிய முக்கியமான மூன்று கேள்விகளுக்கான உண்மையான விடைகளை அளிக்கும் குர்ஆனைப் போன்றதொரு வேதத்தை அவன் அனுப்பாதிருப்பது சாத்தியமா? 

பதின்மூன்று நூற்றாண்டுகள் ஒளியூட்டிக்கொண்டிருந்த அற்புதம் நிறைந்த, மிக்க மரியாதையோடு மில்லியன் கணக்கான நாவுகளால் ஓதப்படுகின்ற, புனிதத்துவத்தோடு மில்லியன் கணக்கான உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டிருக்கும் மனி சமூகம் எப்படி வாழ வேண்டும் என்று தனது சட்டங்களால் நிர்வகிக்கும், அவர்களது உள்ளங்களை, ஆன்மாக்களை, அறிவுகளை பரிசுத்தப்படுத்தி பயிற்றுவிக்கும் அற்புதமான அல்குர்ஆன்... மேற்படி அல்குர்ஆனின் அற்புதத்தில் 40 வகைகள் ரஸாஇலுந்நூரில் விளக்கப்பட்டள்ளன. அபூர்வமிக்க 19 ஆவது ஏட்டில் அவற்றுள் ஒரு வகை நாற்பது குழுக்களுக்கும், மானிட சமூகத்தின் ஒவ்வொரு சாராருக்கும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் வார்த்தை என்று உறுதியாக நிறுப்பட்டுள்ளது. மேலும் நபியவர்களுக்கு வழங்க்கபட்ட அற்புதங்களில் அதுவும் ஓர் அற்புதம் என்று உறுதிப்படுத்தப்படுகின்றது.

இத்தகு அற்புதம் நிறைந்த அல்குர்ஆன் நிரந்தரமானவனின், அழகிய படைப்பாளனின் வார்த்தையன்று என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? .. இல்லை

எனவே அல்லாஹ்வை விசுவசித்தல் என்ற பகுதி அதன் அனைத்து ஆதாரங்களின் மூலமும் 'அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தை' என்பதை நிறுவுகின்றது.

அல்லாஹ் இப்பூமியை படைப்பினங்கள் மூலம் நிரப்பி, தன்னை அறிமுகப்படுத்தவும் அவை தன்னை வணங்கவும், புகழவும் அவற்றின் மூலம் பூமியை வளப்படுத்தியிருக்க வானங்களையும் நட்சத்திரங்களையும் மாட்சிமை பொருந்திய அவன் அப்படியே விட்டுவிடுவது சாத்தியமா? அதற்குப் பொருத்தமான மனிதர்களை படைத்து, அந்த வானலோகக் கோட்டைகளில் அவர்களை குடியமர்த்தாதிருப்பது நியாயமா? தனது இறைத்துவ அதிகாரத்தை பணியாளர்கள் இன்றி, தூதுவர்களும் மேற்பார்வையாளர்களுமின்றி வணங்குவேர் இன்றி கண்காணிப்பினறி விட்டு விடுதல் சாத்தியமா? நிச்சயமாக இல்லை. 

பிரபஞ்சத்தை ஓர் புத்தகத்தைப் போன்று எழுதியிருக்கும் அருள்மிக்க, அறிவுடைய ஆட்சியாளன், அனைத்து மரங்களினதும் வாழ்க்கை வரலாற்றை அதன் விதைகளுக்குள் பதிந்து வைத்திருப்பவன், அனைத்துத் தாவரங்களினதும் தொழிற்பாடுகளை அதன் விதைகளிலேயே எழுதி வைத்திருப்பவன், உணர்வுள்ள அனைத்தினதும் வாழ்ககை நிகழ்வுகளை கடகு போன்று மிகச் சிறிய அவற்றின் ஞாபக சக்தியில் மிக நுணுக்கமான வடிவில் பதிந்திருப்பவன், தனது ஆட்சிப் பரப்பில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் செயற்பாடகளையும் பல்வேறுபட்ட கெமராக்களின் மூலம் படம் பிடித்துப் பதிவு செய்பவன், இறைத்துவத்தின் மிக முக்கிய அடிப்படைகளான நீதி, ஞானம், அருள் ஆகியவை சாத்தியப்படுவதற்காக சுவனம், நரகம், ஸிராத், மீஸான் ஆகியவற்றை படைத்திருக்கின்றவன்..... இப்படியிருக்க பிரபஞ்சத்தோடு தொடர்புடைய மனித செயற்பாடுகளை அருள்மிக்க, அறிவுடைய ஆட்சியாளன் பதியாமல் விட்டுவிடுவது சாத்தியமா? தண்டனை, கூலி கொடுப்பதற்காக அவர்களது செயற்பாடகளை பதியாமலிலருப்பது நியாயமா? கத்ரில் அவர்களது நற்காரியங்களையும் மோசமானவற்றையும் அவன் பதியாமலிருப்பது நியாயமா? நிச்சயமாக இல்லவே இல்லை.


25. Page

எனவே அல்லாஹ்வை ஈமான் கொள்ளல் என்பது அதன் ஆதாரங்களின் மூலம் மலக்குகளை ஈமான் கொள்ளல், கத்ரை ஈமான் கொள்ளல் ஆகியவற்றை திட்டவட்டமாக நிறுவுகின்றது. சூரியன் பகற்பொழுதை சுட்டிக்காட்டுவதையும் பகற்பொழுது சூரியன் இருப்பதை சுட்டிக்காட்டுவதையும் போல் ஈமானின் அடிப்படைகள் ஒவ்வொன்ரும் மற்றையதை உறுதிப்படுத்துகின்றது. 

இரண்டாவாது குறிப்பு:

வேதங்கள், புனித இறைக் கட்டளைகள், அவற்றுள் பிரதான இடத்தைப் பெறும் அல்குர்ஆன் ஆகிய அனைத்தும் கூறியவை, நபிமார்கள் அனைவரும், அவர்களுள் பிரதானமாக விளங்கும் நபி (ஸல்) அவர்கள் கூறியவை யாவும் ஐந்து அல்லது ஆறு அடிப்படைகளைச் சூழவே சுழல்கின்றன. அந்த அடிப்படைகளை கற்பிக்கவும் அவற்றை நிறுவவும் தொடர்ந்தும் அவர்கள் கருசனை செலுத்தி வந்துள்ளார்கள். அவர்களது நபித்துவம், உண்மைத்தன்மையை குறித்துக்காட்டும் அனைத்து ஆதாரங்களும் அவ்வடிப்படைகளை நோக்கியே இருக்கின்றன. இதன் மூலம் அவர்கள் தமது உண்மைத் தன்மையையும் தகைமையையும் பலப்படுத்தினார்கள்.

அவ்வடிப்படைகளைப் பொருத்தவரை அவை அல்லாஹ்வை விசவாசித்தல், மறுமையை விசவாசித்தல், ஏனைய அடிப்படைகளை விசவாசித்தல் ஆகும். எனவே இவ் ஆறு விடயங்களையும் விசவாசிப்பதானது ஒன்றை விட்டும் இன்னுமொன்று பிரிந்திருக்க முடியாது. ஒவ்வொன்ரும் அனைத்தையும் நிறுவுகிறது, அவற்றை வேண்டி நிற்கின்றது. இவ் ஆறும் மழுமைத் தன்மை வாய்ந்தது, பிரித்துப் பார்க்க முடியாதது. அவ்வாறு பிரித்து நோக்குவது அசாத்தியமாகும்.

உதாரணமாக தூபா மரம். அதன் வேர்கள் வானத்திலே இருக்கும். அதனுடைய ஒவ்வொரு கிளையும், ஒவ்வொரு பழமும், ஒவ்வொரு இலையும் முடிவுறாத மொத்தமான அம்மரத்தின் வாழ்வில் தங்கியிருக்கும். சூரியனைப் போல அப்பலமான வாழ்வை மறுக்க முடியாதவன் அதனோடு தொடர்புடைய ஒரு இலையின் வாழ்வையும் மறுக்க முடியாதவனாக ஆகின்றான். அப்படியும் அம்மரத்தினை மறுப்பதாக இருப்பின் அம்மரம் அவனை பொய்ப்பிப்பதோடு அதன் கிளைகள், பழங்கள், இலைகள் அளவு அவனை மௌனிக்கச் செய்துவிடும். அதுபோலதான் விசுவசம் கொள்ள வேண்டிய ஆறு ஆடிப்படைகளும் ஆகும்.

இந்தப் பிரிவின் ஆரம்பத்திலேயே ஈமானின் ஆறு அடிப்படைகளையும் 36 குறிப்புக்களில் தெளிவுபடுத்த நான் எண்ணியிருந்தேன். ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து உப தலைப்புக்களை விளக்க முயற்சித்தேன்.  

ஆரம்பத்தில் விரிவாக குறிப்பிடப்பட்ட, முக்கியமாகக் கருதப்படும் கேள்விக்கு விடையளிக்க நாடியிருந்தேன். என்றாலும் சில காரணங்கள் அதற்குத் தடையாக அமைந்து விட்டன. 

விவேகமானவர்களுக்கு இதை விட அதிகமான விளக்கங்கள் தேவையில்லை என நான் நினைக்கிறேன். ஏனெனில் முதலாவது விடயம் போதுமானளவு விளக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் ஈமானிய யதார்த்தங்களில் ஒன்றை மறுப்பானாயின் மிகத் தெளிவான நிராகரிப்பில் அவன் வீழ்ந்துவிடுவான். ஏனெனில் இஸ்லாத்திலுள்ள அவ் யதார்த்தங்களுக்கான பூரண விளக்கங்கள் ஏனைய மதங்களிலும் சுருக்கமாக வந்துள்ளன. அம்மதங்கள் ஒன்றோடொன்று சங்கிலிக் கோர்வைகள் போல இணைந்திருக்கி;னறன. நபி முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளாத, அவர்களை உண்மைப்படுத்தாத ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை அவனது பண்புகளோடு அறிந்தவனாகவோ மறுமையை அறிந்தவனாகவோ கருதப்பட மாட்டான்.

ஒரு முஸ்லிமின் ஈமான்; ஆட்டம் காணாத உறுதியான, வரையறைகளற்ற ஆதாரங்களை சார்ந்தே இருக்கின்றது. எனவே மறுப்பதற்கு எந்தவொரு நியாயமும் இருக்க முடியாது. அறிவு இதனை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படதைப் போன்று.

மூன்றாவது குறிப்பு:

ஒரு தடைவ நான் 'அல்ஹம்து லில்லாஹ்' என்று கூறினேன். பிறகு அதன் விசாலமான கருத்துக்கு ஒத்த ஓர் அருளைத் தேடினேன். என்ன ஆச்சிரியம்! திடீரென எனது சிந்தைக்கு பின்வரும் வசனம் தோன்றியது: 'அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல், அவனது ஏகத்துவம், அவனது இருப்பு, அவனது பண்புகள், பெயர்கள் ஆகிய அனைத்துக்கும் ஆதி அந்தமில்லாத அவனது பெயர்களின் வெளிப்பாடுகளின் எண்ணிக்கையளவு அவனைப் புகழ்கிறேன்' எனவே மேற்படி வசனமும் அல்ஹம்துலில்லாஹ் என்பதும் கீழே விளக்கப்பட்டிருப்பதைப் போல் ஒன்றையொன்று ஒத்திருப்பதை அவதானித்தேன்.




26. Page

விளைச்சல் எனும் ஆக்கத்தின் பத்தாவது விடயம்:

அமிர்தாக் (துருக்கியின் ஒரு நகரின் பெயர்) மலர்

குர்அனில் மீட்டி மீட்டி சொல்லப்பட்ட விடயங்கள் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களுக்கான மிகப் பலமான பதில்

உண்மைக்குரிய கண்ணியத்துக்குரிய எனது சகோதரர்களே! 

எனது மோசமான நிலையின் காரணமாக இவ்விடயம் குழம்பியதாகவும், தெளிவற்றதாகவும் ஆகியிருந்த போதிலும் குறித்த தெளிவற்ற வசனத்துக்குள்ளே ஒரு வகையான அற்புதம் இருப்பதை நான் காண்கிறேன். அதனை எப்படித் தெரியப்படுத்துவது என்பது எனக்கப் புரியவில்லை. அவ்வசனங்கள் குரலடங்கியதாக இருந்த போதிலும் அவை சிந்தனாரீதியான வணக்கமாகவும், உயர்ந்த, மிண்ணுகின்ற, தூய்மையான மாணிக்கத்தை வைத்துள்ள சிப்பியைப் போன்றதாகும். அது குர்ஆனுக்கே உரிய பண்பாகும். அதன் கைகளிலே உள்ள முத்துக்களைப் பாருங்கள். அது பொர்த்தப்பட்டுள்ள இத்துப் போன ஆடைகளைப் பார்க்காதீர்கள். அது பொருத்தமாக இருப்பின் அதனை பத்தாவது விடயமாக ஆக்கிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு வாழ்த்துரைக்கும் வாழ்த்து மடலைப் போல் அதனைப் பாருங்கள்.

நான் ரமழான் பருவ காலத்தில் ஓரிரு நாட்களில் இதனை மிகச் சுருக்கமாக எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன். அப்போது நோயுற்றிருந்தேன். எனது உடல் நிலை மிக மோசமடைந்திருந்தது. என்னால் சரிவர உட்கொள்ளவும் முடியவில்லை. பல மிகப் பெரும் யதார்த்தங்கள், உண்மைகள், அதாரங்களையும் ஒரு வசனத்தில் மிகச் சுருக்கமாகவே என்னால் சொல்ல முடிந்தது. எனவே எனது நியாயமான காரணங்களை ஏற்று என்னை மன்னிக்கக் கோருகிறேன். இது 'அமிர்தாக்' க்கான பிரகாசமிக்க சிறிய மலர் மாத்திரமன்றி புனித ரமழான் மாதத்தில் தெனிஸ்லி சிறையின் விளைவுகளில் பத்தாவது விளைச்சலும் கூட. இது குர்அனில் மீட்டி மீட்டி சொல்லப்படுபவற்றின் தாத்பரியங்களில் ஒன்றை விளக்குவதன் மூலமாக இது வழிகேடர்களின் நச்சுத் தன்மை வாய்ந்த, துர்வாடை வீசும் ஊகங்களை கலைகிறது.