பதினொராவது விவகாரம்
NAVIGATION
36. Page
பதினொராவது விவகாரம்
ஈமானிய புனிதமிகு மரத்தின் வரையரையற்ற மொத்தமானதும், பகுதியானதுமான விளைவுகளின் நூற்றுக் கணக்கான மாதிரிகள் ரஸாஇலுந் நூரில் பல ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. உதாரணமாக சுவனம், நிரந்தர மகிழ்ச்சி, அல்லாஹ்வைக் காணல் போன்ற விளைவுகளைச் வொல்லலாம். இதன் தெளிவினை 'ஸிராஜூன் நூரில்' (ரஸாஇலுந் நூரின் மற்றொhரு பெயர்) காணலாம்.
இங்கு - 'விளைச்சல்' என்ற இந்த ஆக்கத்தில் 11வது விவகாரத்தின் ஆரம்பத்தில்- நாம் ஈமானின் அடிப்படைகளின் மொத்தமான விளைவுகளுள் ஒன்றை நாம் தெளிவுபடுத்தவில்லை. மாற்றமாக அதன் ஏறாழமான கிளை விளைவுகளுள் சிலதை மாத்தரமே விளக்க முனைகிறோம்.
ஒன்று: ஒரு நாள் நான் ஓர் பிரார்த்தனையை கேட்டேன். அதன் உள்ளடக்கம் யாதெனில் 'இறiவா! ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராபீல் (அலை) ஆகியோரின் ஷபாஅத், புனிதத்துவத்தைக் கொண்டு என்னை ஜின் மற்றும் மனிதர்களின் தீங்குகளை விட்டும் காப்பாயாக!' அனைத்தையும் பயத்ததாலும், அச்சாத்தாலும் நிரப்புகின்ற இஸ்ராஈல் (அலை) அவர்களின் நாமத்தை உச்சரித்த போது நிம்மதியைத் தரும் இனிய நிலையை நான் உணர்ந்தேன். 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறிக்கொண்டேன். இஸ்ராஇல் (அலை) அவர்களை நான் உண்மையிலேயே நேசிக்கத் தொடங்கினேன்.
மலக்குமார்களை ஈமான் கொள்வதன் அடிப்படையிலிருந்து உருவாகின்ற அதிகமான விளைவுகளில் கிளை விவகாரமொன்றையே இங்கு சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
(அ) மனிதனிடத்தில் மிமப் பெறுமதியானதும் அவன் கடுமையாக பேணிப் பாதுகாப்பதும் எதுவெனில் அவனது ஆன்மாவாகும். நிச்சயமாக அந்த ஆன்மாவை அழிவிலிருந்தும் தொலைந்தவிடுவதிலிருந்தும் பாதுகாப்பதற்காக நம்பகரமான ஓர் பலமான கரங்களிடத்தில் ஒப்படைத்தவிடவது அதிகமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்பதை நான் உணர்ந்தகொண்டேன். பின்னர் மனிதர்களது செயல்களை எழதிக்கொண்டிருக்கின்ற மலக்குகள் பற்றிய எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அதனையும் நான் ஆழ்ந்த பார்த்தேன். இந்த விளைவினைப் போல சுவைமிக்க விளைவுகள் அவர்களுக்குண்டு என்பதை கண்டுகொண்டேன்.
தனது வார்த்தைகள், பெறுமதியான வேலைகள் நிலையாக இருப்பதற்காக எழுத்தின் மூலம் அல்லது கவிதை அல்லது சினிமாவின் மூலமேனும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் ஆசையோடு முயற்சிக்கின்றான். குறிப்பாக அந்தச் செயல்களுக்கு சுவனத்தில் நிரந்தர விளைவுகள் கிடைக்கும் என்றிருந்தால் அவனது இந்த ஆசை இன்னும் அதிகமாக இருக்கும். மனிதனின் இரு புயங்களிலும் இருக்கும் சங்கைமிகு மலக்குகள் மனிதனின் செயல்களை பதிகின்றார்கள். எதற்கெனில் நிரந்தர வடிவில் அதனை அம்மனிதனுக்கு எடுத்துக்காட்டவும் அச்செயல்களைச் செய்த மனிதன் நிரந்தர வெகுமதியை பெற்றுக்கொள்வதற்காகவுமே. இப்படி எழுதிப் பாதுகாப்பதானது என் வார்த்தைகளினால் வடிக்க முடியாதளவு எனக்கு மகிழச்சியளிக்கின்றது.
தனிமை என்னை வாட்டிக்கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில்: சமூக வாழ்வில் அனைத்தையும் விட்டும் என்னை உலக மக்கள் ஒரங்கட்டியதன் மூலம் உலகமே எனக்கு வெறிச்சொடிப்போன அச்சந்தர்ப்பத்தில்: எனது அனைத்த புத்தகங்கள், நண்பர்கள். பணியாளர்களை விட்டும் என்னை அவர்கள் தூரப்படுத்திய அச்சந்தர்ப்பத்தில் எனக்குள் அமைதி நிலையொன்று உருவானது. அந்நேரம் மலக்குகளை ஈமான்கொள்வதன் விளைவுகள் எனக்கு உதவின. அவை எனது உலகை மகிழ்ச்சியாக மாற்றின. அதை மலக்குகள், அன்மீக உணர்வுகளால் நிரப்பின. எனது உலகை புன்னகையால் நிரப்பின. இந்த நம்பிக்கையில்லாத வழிகேடர்களின் உலகமானது தனிமை, வெறுமை, இருள்களின் மூலம் அழுதுகொண்டிருப்பதாக எனக்கு உணர்த்தின.
இந்த விளைவின் இன்பங்களால் என் கற்பனை மகிழ்வற்று சஞ்சரித்துக்கொண்டிருந்த போது -இந்த விளைவைப் போன்று- அனைத்து நபிமார்களையும் ஈமான்கொள்வதன் பல விளைவுகளுள் ஒன்றைப் பறித்து சுவைத்துக்கொண்டிருந்தது. அவர்களை ஈமான்கொண்டு உண்மைப்படுத்துவதானது அக்காலங்களை பிரகாசிக்கச் செய்கின்றது. கடந்த காலங்களில் அனைத்த நபிமார்களோடும் நான் வாழ்ந்ததைப் போன்றதொரு உணர்வைப் பெற்றேன். எனது ஈமான் பூரணத்துவமும் விசாலித்ததாகவும் மாறியது. அது முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதற்கான சான்றுகளை உறுதிப்படுத்தியதோடு ஷைத்தான்களையும் வாயடைக்கச் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. – அதற்கான விடை திட்டவட்டமான முறையில் மிகத் தெளிவாக 'ஹிக்மதுல் இஸ்திஆதா' எனும் ஆக்கத்தில் விளக்கியுள்ளேன்.
ஈமானின் வரையறையற்ற இனிமையான விளைவுகள், பயன்கள்;, நன்மைகளுக்கான மிச் சிறந்த பலாபலன்கள், அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனின் உச்சகட்ட அருளும் கண்காணிப்பும் நேர்வழிபெற்றவர்களுக்கு துணைநின்று அவர்களுக்குப் பலத்தை அளிக்கும் அதேநேரம் நேர்வழியிலுள்ளவர்களை ஏன் வழிகேடர்கள் பெரும்பாலும் மிகைக்கின்றனர். சிலபோது வழிகேடர்களில் 20 பேர்க் கூட நேர்வழிபெற்றவர்களில் 100 பேரை நோவினைப்படுத்திவிடுகின்றனர்.
இப்படியான சிந்தனையில் நான் இருக்கும் போது ஷைத்தானின் மிகப் பலவீனமான சூழ்ச்சிகளுக்கு எதிரான குர்ஆனின் பல அத்தாட்சிகள், பல ஆதாரங்கள், மலக்குமார்கள் பற்றிய சிந்தனை, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி போன்றன என் சிந்தனையில் தோன்றின.
இதன் தாத்பரியத்தை ரஸாஇலுந்நூர் திட்டவட்டமான ஆதாரத்தின் மூலம் தெளிவுபடுத்துகின்றது. இதனால் இங்கு நாம் கேள்விக்கான விடையை மிகச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றோம்.
37. Page
ஆம், ஒரு மோசமான, யாராலும் அறியப்படாத, மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய ஒரு மனிதன் ஒரு கோட்டையை எரிக்கும் நோக்கோடு அதற்குள் நுழைய முயற்சிக்கின்றான். அவன் அதற்குள் 100 மனிதர்களது கண்கானிப்புடனேயே செல்வான் அல்லது அதற்குள் நுழைவதற்கு அவனிடம் ஏதோவோர் அதிகாரம் இருந்தாக வேண்டும். இப்படி அம்மனிதன் அதற்குள் நுழைவது 100 பேர் அதற்குள் நுழைந்து அதனை எரிப்பதைப் போன்றதாகும். ஏனெனில் கோட்டையின் இருப்பு என்பது அதன் நிபந்தனைகள், தூண்கள், காரணங்கள் அனைத்திலும் தங்கியிருக்கின்றது. என்றாலும் அதன் ஒரு நிபந்தனை இல்லாமலாகுவதும் அக்கோட்டை இல்லாமலாகுவதும் அழிவுதும் ஒன்றே. ஒரு மோசமான மனிதன் அக்கோட்டையை எரிக்க ஒரு தீக்குச்சிப் போதுமானதாகும். அதன் மூலம் அக்கோட்டை அழிந்து இல்லாமலாகிவிடும். இப்படித்தான் மனிதர்கள், ஜின்களிலுள்ள ஷைத்தான்கள் ஒரு எளிமையான செயலை மேற்கொள்வதன் மூலம் மிகப் பெரும் அழிவையும் பிரமாண்டமான கருத்தியல் ரீதியான எரிப்பையும் செய்துவிடுகின்றனர்.
உண்மைதான் அனைத்துத் தவறுகள், மோசமான விடயங்களினதும் அடிப்படை என்னவெனில் அழிவு, நாசமாக்குதல், இல்லாமலாக்குதல் ஆகும். அப்பாவச் செயல்களின் புறத்தோற்றத்துக்குள் இல்லாமலாக்குதல், துவம்சம் செய்தல் ஆகியவை மறைந்திருக்கின்றன. எனவே மோசமானவர்களும் மனிதர்கள், ஜின்களிலுள்ள ஷைதான்களும் இந்த மையப் புள்ளியைத் தான் நாடுகிறார்கள். மிகப் பலவீனமான சக்தியைப் பிரயோகித்து வரையறையற்ற சக்தியை எதிர்கொள்ள முயற்சிக்கின்றார்கள். எனவே அவர்கள் சத்தியத்திலுள்ளவர்களை எப்பொழுதும் அல்லாஹ்வை சார்த்திருக்கவும் அவனிடம் தஞ்சமடையவும் நிர்ப்பந்திக்கின்றார்கள். இதன் காரணமாக அவர்களை காக்க அல்குர்ஆன் பல ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் முன்வைப்பதோடு அவர்களது கரங்களுக்கு 99 அழகிய இறைத் திருநாமங்களை ஒப்படைக்கின்றது. இவ் எதிரிகளுக்கு முன்னால் நிலைகுலையாமல் உறுதியோடு இருக்க மிகக் கடுமையான ஏவல்களை அவர்களுக்கு ஒப்புவிக்கின்றது.
இந்த விடையில் மிக உயர்ந்த மகத்துவமிக்க உண்மையின் ஓர் பகுதியின், புத்தியை பேதழிக்கச் செய்துவிடும் மிகப் பெரும் விவகாரத்தின் அடிப்படையும் தோன்றுகின்றது. அது என்னவெனில் சுவனம் முழு பிரபஞ்சத்தினதும் அறுவடைகளைக் கொண்டிருக்கின்றது. அதுபோல உலகம் விதைத்த விதைகளை நிரந்தர கதிர்களாக சுவனம் ஆக்குகின்றது.
அவ்வாறே நரகமானது அழிந்து போகும் உலகின் மிகமோசமான வலிமிக்க விளைவுகளை காண்பிப்பதற்காக இல்லாமையின் அறுவடைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பயங்கரமிகு நரகமெனும் தொழிற்சாலை – அதன் பலதரப்பட்ட பணிகளோடு – உலகிலுள்ள அனைத்துப் படைப்புக்களையும் இல்லாமை எனும் உலகின் அழுக்குகளிலிருந்து சுத்தப்படுத்துகின்றது. இந்தப் பயங்கரமான விவகாரத்தின் வாயிலை இப்போது நாம் திறக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ் அது பின்னர் விளக்கப்படும்.
பின்னர, முன்கர், நகீர் போன்ற மலக்குமார்களை நம்புவதன் விளைவுகளில் ஒன்று, அனைத்து மனிதர்களும் நிச்சயமாக செல்ல இருக்கும் கப்ருக்குள் நானும் கற்பனையில் இப்போது நுழைகின்றேன். அனைத்திலிருந்தும் முற்றுமுழுதாக நான் நீக்கப்பட்டதனால் தனிரைமயை உணர்கிறேன். ஒடுக்கமான குளிரான இருளான அந்த கப்ர் எனும் தனிமைச் சிறையில் தன்னந்தனியாக நிராசையுற்று திகழ்கொள்கின்றேன். அப்போது அருள்பாளிக்கப்பட்ட முன்கர், நகீர் எனும் இரு நண்பர்கள் என்னடத்தில் தோன்றி, விசாரணைகளை மேற்கொள்கின்றனர். எனது கப்ர் விசாலித்தது. என் உள்ளமும் மகிழ்ந்தது. அவர்கள் ஒளிபெற்றிருந்தார்கள். அவர்களிடம் மென்மையிருந்தது. ஆன்மாக்களின் உலகை நோக்கி யன்னல்கள் திறந்துகொண்டன. என் சிந்தனையில் நான் கண்ட இந்நிலையை யிட்டு நான் அகமகிழ்ந்தேன். எதிர்காலத்தில் இதனை நான் உண்மையாகவே காண்பேன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன்.
அவ்வாறே அரபு இலக்கணத்தை கற்கின்ற மாணவன் ஒருவன் மரணித்த போது அவனிடம் முன்கர், நகீர் ஆகிய மலக்குகள் வந்து, 'உனது ரப்பு யார்?' என்று வினவினார்கள். அந்த மாணவன் தன்னை பாடசாலையில் இருப்பதாக எண்ணி 'யார்' என்பது முப்ததஉ (எழுவாய்), 'உனது ரப்' என்பது கபர் (பயனிலை) எனப் பதிலளி;த்தார். இதுதான் இலகுவான கேள்வியாயிற்றே. கஷ்டமான கேள்வியொன்றைக் கேளுங்கள் என்றான். இந்தப் பதிலை கேட்டதும் மலக்குகள், அங்கிருந்த ஆன்மாக்கள் சிரித்துவிட்டார்கள். இந்த பதில் இந்நிகழ்வைப் பற்றி அறிந்த இறைநேசரையும் சிரிப்பூட்டி, இறையருளை புன்னகைக்கச் செய்தது. அவன் வேதனையிருந்து தப்பிவிட்டான்.
அவ்வாறே ரஸாஇலுந் நூருக்காக தனது உயிரையே அர்ப்பணித்த ஹாபிழ் அலி (ரஹ்) அவர்கள் சிறையில் 'விளைச்சல்' எனும் நூலை ஆசையோடும் ஆர்வத்தோடும் எழுதியும், வாசித்துக்கொண்டிருந்த போதே மரணதித்தார். நீதிமன்றத்தில் விடையளிப்பதைப் போன்று 'விளைச்சல்' எனும் நூலில் உள்ளதைப் போன்று மலக்குமார்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நானும் ரஸாஇலுந் நூரின் மாணவர்களும் எதிர்காலத்தில் இதே கேள்விகளுக்கு ரஸாஇலுந்நூரில் சொல்லப்பட்டுள்ள திட்டவட்டமான, பலமான ஆதாரங்களைக் கொண்டு விடையளிப்போம். இப்போது நாம் அக்கேள்விகளுக்கு கருத்தாகவே பதிலளிக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் அவர்களை நாம் உண்மைப்படுத்தல், சிறப்பாகக் காணல், வாழ்த்துதல் போன்றவற்றால் திருப்திப்படுத்துவோம்.
மலக்குகளை ஈமான் கொள்வதில் உள்ள உலக மகிழ்ச்சி பற்றி மிகச் சிறிய உதாரணத்தை பின்வருமாறு கூறலாம். மார்க்கப் பாடத்தில் ஈமான் தொடர்பான விடயத்தை கற்ற ஒரு குழந்தை தனது சகோதரனை இழந்ததன் காரணமாக அழுது சத்தமிடும் இன்னுமொரு குழந்தையிடம் இப்படிச் சொல்கின்றது: 'அழாதே! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து. உனது சகோரன் மலக்குகளோடு சுவனத்துக்குச் சென்றுவிட்டான். அங்கு உலாவித் திரிகிறான். எங்களை விட மிகச் சிறந்ததை அனுபவிப்பான். மலக்குகள் போல அங்கு பரவித் திரிவான். அங்கு அனைத்து இடங்களையும் கண்டு கழிப்பான்' இப்பேச்சு சத்தமிட்டுக்கொண்டிருந்த குழிந்தையின் அழுகையை மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் மாற்றிவிடுகின்றது. நானும் இக்குழந்தையைப் போன்றவனே. இந்த கவலையான மாரி காலத்தில் வலிகள் நிறைந்த இரு மரணச் செய்திகள் எனக்குக் கிடைக்கப பெற்றன. ஒன்று உயர் பாடசாலையில் முலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட எனது சகோதரனின் மகன் புஆதின் மரணச் செய்தி. அவர் ரஸாஇருந் நூரின் உண்மைகளைப் பரப்பியவர். மற்றையது ஹானிம் என அழைக்கப்படும் எனது சகோதரியின் மரணச் செய்தி. அவர் ஹஜ்ஜூக்காக சென்றிருந்தார். தவாபின் போது மரணத்தை தழுவினார். 'முதியோர்களின் தூது' – ரிஸாலதுஷ் ஷூயூஹ் எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் என்பவரின் மரணம் என்னை அழச் செய்ததைப் போன்று இவ்விரு உறவினர்களும் என்னை அழச் செய்தது.
38. Page
புஆதும், ஸாலிஹான பெண்ணாகிய ஹானிமும் மனிதர்களுக்குப் பதிலாக மலக்குகளுக்கும் ஹூர்லீன்களுக்கும் நண்பர்களாக மாறினர் என ஈமானின் ஒளியால் நான் உறுதியாக நம்புகிறேன். அவ்விருவரும் உலகின் அபாயங்கள் அதன் பாவங்களிலிருந்து தப்பிவிட்டார்கள். மிகக் கடுமையான கவலைக்குப் பதிலாக மகிழ்ச்சியை நான் உணர்ந்தேன். அவ்விருவரையும் நான் உளமாற வாழ்த்தினேன். புஆதின் தந்தையான எனது சகோதரர் அப்துல் மஜீதை நான் வாழ்த்தினேன். நான் என்னையே தேற்றிக்கொண்டேன். அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனுக்கு நன்றி செலுத்தினேன். மரணித்த அவ்விருவருக்கும் அருள் வேண்டி பிரார்த்திம் நோக்கிலே இது இங்கே பதியப்படுகிறது.
ரஸாஇலுந் நூரில் கூறப்படும் அனைத்து ஒப்பீடுகளும், ஒப்புவமைகளும் உலக, மறுமை மகிழ்ச்சியின் பிரதான வாயிலாகத் திகழும் ஈமானின் விளைவுகளை தெளிவுபடுத்துகின்றன. அனைத்து முஃமிக்களினதும் ஈமான் அவர்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை பெற்றுக்கொடுத்து, அதனை வளரச்செய்கின்றது என அவை அறிவிக்கின்றன. எப்படியெனில் வாழ்வின் மகிழ்ச்சி, வாழ்நாளின் இன்பத்திலிருந்து இந்த உலகிலேயே மொத்தமான, பெரிய அவ்விளைவுகள் தோன்றும். இந்த அமைப்பில் அது உணக்குக் கிடைக்கும்.
ஈமானின் மொத்தமான, அதிக விளைவுகளில் ஐந்தை 31 வது வார்த்தையின் இறுதியில் 'மிஃராஜின் விளைவு' எனும் நூலில் எழுதியுள்ளேன். அவ்வாறே 24ம் வார்த்தையில் '5ம் கிளையில்' மேலும் ஐந்தை விளக்கியுள்ளேன். நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று ஈமானின் ஒவ்வொரு அடிப்படைகளுக்கும் எண்ணற்ற பல்வகைப்பட்ட விளைவுகள் இருக்கின்றன. இந்த அதிக விளைவுகளில் ஒன்றுதான் சுவனம், இரண்டாவது நிரந்தர சந்தோசம், மூன்றாவது அல்லாஹ்வைப் பார்க்கின்ற அதியுயர்ந்த இன்பம். 32வது வார்த்தையில் ஈமானின் ஈருலக சந்தோசம் பற்றி ஒப்பிட்டு ஈமானின் நல்ல விளைவுகள் சில விரிவாகவே விளக்கப்பட்டுள்ளன.
கத்ரை விசுவாசித்தல் எனும் அடிப்படையின் உலகிலுள்ள பெறுமதியான விளைவுகளை காட்டும் ஆதாரங்களில் ஒன்றுதான் 'யார் கத்ரை விசுவாசிப்பானோ அவன் அனைத்துவிதமான குழப்பங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றவன்' எனும் வார்த்தை அனைவரிடத்திலும் பழமொழியாக மாறியிருப்பதாகும். 'காத்ரின் தூது' எனும் நூலின் இறுதியில் அதன் மொத்த விளைவுளில் ஒன்று ஒரு அற்புதமிக மாளிகைத் தோட்டத்தில் நுழையும் இரு மனிதர்கள் பற்றிய உதாரணத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
என் வாழ்வில் பல்லாயிரக்கணக்கான அனுபவங்களின் மூலம் கண்டு அறிந்துகொண்ட விடயம் என்னவெனில், கத்ர் ற்றிய நம்பிக்கையின்றி உலக வாழ்வின் மகிழ்ச்சி கெட்டு விடும் என்பதாகும். மிகவுமே வலிமிக்க சோதனைகளை கத்ர் மீதான நம்பிக்கை எனும் கோணத்தில் பார்க்கையில் அச்சோதனையின் வலி குறைவதைக் கண்டுகொண்டேன். ஒருவன் கத்ih விசுவாசிக்காமல் எப்படி வாழ முடியும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு.
இருபத்திரண்டாம் வார்த்தையின் இரண்டாம் கிளையில் மலக்குகளை விசுவாசித்தின் மொத்தமான விளைவுகளின் ஓர் விளைவு பின்வருமாறு சுட்டிக்காட்டப்படுகிறது :
இஸ்ராஈல் (அலை) அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தித்தார் : உயிர்களை கைப்பற்றும் பணியின் காரணமாக அடியார்கள் என்னைப் பிழையாகப் பார்ப்பதோடு என்னைச் சந்தேகிக்கவும் செய்வார்கள். அப்போது அவருக்கு இப்படி பதிலளிக்கப்பட்டது: நோய்களையும் சோதனைகளையும் உன் பணியை மறைக்கும் விதத்தில் நான் ஆக்குகின்றேன். அதன் மூலம் அடியார்கள் அவற்றை நோக்கி அவர்களது முறைப்பாடுகளை முன்வைப்பார்கள். உன்னைக் குற்றம் சொல்ல மாட்டார்கள்.
இந்த திரைகள் போன்ற இஸ்ராஈல் (அலை) இன் பணியும் ஓர் திரை தான். இதன் மூலம் போலியான குற்றச் சாட்டுகள் அல்லாஹ்வை நோக்கிச் செல்லாது. ஏனெனில், மரணத்தில் உள்ள ஞானம், அருள், அழகு, நலன் ஆகியவற்றை வெளிப்படையாகப் பார்க்கின்ற ஒருவருக்குப் புரியாது. அதனை அவர் மறுத்து விடுவார். அதனால் குற்றச்சாட்டுகளை , முறைப்பாடுகளை ஆரமப்பிப்பார். எனவே, பூரண அருளாளனை நோக்கி போலியான இநத முறைப்பாடுகள் வைக்கப்படாமலிருப்பதற்கான திரையாக இஸ்ராஈல் (அலை) அவர்கள் மாறிவிட்டார்கள். இவ்வாறு அனைத்து மலக்குகளது பணிகள் மாத்திரமன்றி அனைத்து வெளிப்படையான காரணங்களின் பணிகளும் இறைமையின் கண்ணியத்துக்கான திரையாகும். இதன் மூலம் இறை வல்லமையின் கண்ணியம், பரிசுத்தம், அனைத்து விடயங்களிலும் பொதிந்துள்ள அவனுடைய அருள் -அவற்றின் அழகு கண்டுகொள்ளப்படவும் மாட்டாது, அவற்றின் தாத்பரியங்கள் புரியப்பட மாட்டாது- பாதுகாக்கப்படுவதோடு அவை எவ்வித மறுப்புகளுக்கும் இலக்காக மாட்டாது. மிக அற்பமான இழிவான கடுமையான விடயங்கிலுள்ள இறை வல்லமையின் நேரடித்தன்மை வெளிப்படையான பார்வைக்கு தெரியவோ, புரியவோ மாட்டாது.
ரஸாஇலுந் நூர் எண்ணற்ற பல ஆதாரங்களின் மூலம் எந்தவொரு பௌதீக காரிக்கும் தாக்கம் செலுத்தும் திறன் கிடையாது என்றும் அவற்றுக்கு அதை உருவாக்குகின்ற திறனும் கிடையாது என்பதை நிறுவுகின்றது. ஒவ்வொன்ரும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற ஏகத்துவம் இதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றது. படைப்பதும் உருவாக்குவதும் அல்லாஹ்வோடு தொடர்புற்றவை. பௌதீகக் காரணிகள் வெறும் திரைகளே. மலக்குகள் போன்ற உணர்வுள்ளவர்கள் இறைகட்டளையை நிறைவேற்றுவதைத் தவிற வேறு தெரிவுகள் அவர்களிடத்தில் கிடையாது. இதுவே அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டுரீதியான வணக்கமாகும்.
உண்மை தான், நிச்சயமாக இறை கண்ணியமும் மாட்சிமையும் அறிவின் பார்வையில் அல்லாஹ்வின் சக்திக்கான திரைகளாக காரண காரியங்கள் இருக்க வேண்டும் என வேண்டிநிற்கின்றது. அல்லாஹ்வின் ஏகத்துவமும் தனித்துவமும் பௌதீ காரணிகளுக்கு எவ்வித தாக்க சக்தியும் கிடையாது என்பதை வேண்டிநிற்கின்றது.
அவ்வாறே மலக்குகளும், இருப்பு மற்றும் நன்மையான காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் வெளி பௌதீக காரணிகளும் கண்களுக்குப் புலப்படாத, யதார்த்தம் அறியப்படாத விடயங்களில் குறைவு, அநியாயங்களை விட்டும் இறை வல்லமையைப் பாதுகாக்கின்றன. இவை இறை புகழ், தூய்மைப்படுத்தலுக்கான வழிமுறைகளாகும். அவ்வாறே அழிவு மற்றும் தீங்கான விடயங்களில் மனித ஜின் இனத்திலுள்ள ஷைதான்களையும் தீங்குபயக்கக் கூடிய விடயங்களையும் பயன்படுத்துவதானது மோசடி செய்தல் எனும் பண்பிலிருந்து அல்லாஹ்வை பாதுகாப்பதோடு போலியான வாதங்களிலுருந்தும் முறைப்பாடுகளுக்கு இலக்காவதை விட்டும் அவனைப் பாதுகாக்கின்றது. இதன் மூலம் அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மை பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் குறைபாடுகளை விட்டும் அவனை தூய்மைப்படுத்தப்படுகின்றது. ஏனெனில் அனைத்துக் குறைகளும் இல்லாமை, பொருந்தாமை, அழிவு, பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை, இருப்பற்ற அழிவு செயற்பாடுகள் போன்றவற்றிலிருந்து உருவாகின்றன. இந்தக் குறைபாடுகளுக்கு அடிப்படையாக ஷைத்தானிய திரையே இருக்கும். இதனால் அனைத்து போலி வாதங்களும், முறைப்பாடுகளும் அதற்கே தகும். எனவே அவை அல்லாஹ் தூய்மையானவன் என்பதை பரைசாட்டும்.
39. Page
அழிவு, நாசகார செயற்பாடுகளுக்கு பாரிய சக்தியோ வல்லமையோ அவசியமன்று. சிறிய, எளிமையான செயலும் சாதாரண மனித பலமும் பொறுப்பை சரிவர மேற்கொள்ளாமல் இருப்பதுமே சிலபோது பெரிய நாசகார அழிவுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் தீங்ககை செய்யக் கூடியவர்கள் பலமிக்கவர்கள் என்று எண்ணப்படலாம். ஆனால் உண்மையில் அவர்களுக்கு எவ்வித சக்தியும் கிடையாது. சிறியதொரு பகுதியைத் தவிர மொத்தமாக எவ்வித பலமும் கிடையாது. என்றாலும் இந்த மோசமான விடயங்கள் அழிவிலிருந்து உருவாகின்றது. இந்தத் தீயவர்களே அத்தீங்கான விடயங்களுக்கு அடிப்படையானவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே இவர்கள் உணர்வுள்ளவர்களாக இருப்பின் அவர்கள் தண்டிக்கப்படத் தகுதியானவர்களே. இதனால் இத் தீங்கானவர்கள் பாவிகளே. என்றாலும் நன்மைகள், நற்செயல்கள், அவற்றை புரிபவர்கள் உண்மையான தாக்குதிறன் கொண்டவர்களல்லர். மாறாக அவர்கள் அந்நன்மையான செயல்களுக்கு சார்பாக இருப்பவர்கள். இறைபிரவாகத்தை நோக்கி விரைபவர்கள். அவர்களுக்கான கூலி அப்பழுக்கற்ற இறை பிரவாகத்தின் அருளாகும். அல்குர்ஆன் இதனை பின்வரும் வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகின்றது:
'உங்களுக்கு கிடைக்கும் நன்மை அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப் பெற்றதாகும். உங்களுக்கு ஏற்பட்ட தீங்கு உங்கள் மூலமாகவேயாகும்' (நிஸா: 4-79)
முடிவு: நன்மை உலகமும் தீங்கு நிறைந்த உலகமும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு சுவர்க்கம், நரகம் போன்ற விளைவுகளைத் தருகின்றன. நன்மை உலகம் 'அல்ஹம்துலில்ல்லாஹ்' 'அல்ஹம்துலில்ல்லாஹ்'
என்று சொல்லிக் கொண்டிருக்க தீங்குலகம் 'ஸூபஹானல்லாஹ்' 'ஸூபஹானல்லாஹ்' என்று சொல்கின்றது. மலக்குகள் ஷைத்தான்களோடு சண்டையிட நலவுகள் தீங்குகளோடு சண்டையிடுகின்றன. உள்ளத்தில் தோன்றும் இறையுதிப்பு ஷைதானால் உருவாக்கப்படும் குழப்பத்தோடு சண்டையிடுகின்றது. இந்நிலையில் மலக்குகலை விசுவாசிப்பதன் விளைவுகளில் ஓர் விளைவு வெளித்தோன்றி பிரச்சினையைத் தீர்க்கின்றது. அத்தோடு இருளடைந்த பிரபஞ்சத்தை ஒளியூட்டுகின்றது. 'அல்லாஹ் வானங்கள், பூமியின் ஒளியாவான்' (நூர்: 24:35) எனும் வசனத்தின் பல ஒளிகளுள் ஓர் ஒளியை எமக்கு வெளிப்படுத்துகின்றது. இவ்விளைவின் இனிமையை பூரணமாக எமக்கு சுவைக்கச் செய்கின்றது.
'கராமதுல் அல்பாத்' பற்றிப் பேசுகின்ற 24, 29 ஆவது வார்த்தைகள் அதன் விளைவுகளுள் ஓர் வேறொரு மொத்தமான விளைவை சுட்டிக்காட்டுவதோடு மலக்குகளின் இருப்பு, பணிகளை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன.
ஆம், அருள்மிக்க இறை மகத்துவம் பிரபஞ்சத்தின் அனைத்து பகுதிகளிலும், மொத்தமான, பகுதி பகுதியானவற்றிலும் அனைத்து வகைகளிலும் தன்னை அறிமுகப்படுத்தவும் தன்மீதான நேசத்தை உருவாக்கவும் விரும்புகின்றது. அந்த மாட்சிமை, அருள், அறிமுகம், ஆசையுட்டல் ஆகியவை விசாலமான அடிமைத்துவத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பது சந்தேகமற்ற விடயமாகும். அவ்விடிமைத்துவத்தில் நன்றியுணர்வு நிரம்பியிருத்தல் வேண்டும். இப்பணியினை உணர்வுகளற்ற சடப்பொருட்களால் நிறைவேற்றிட முடியாது. மாறாக வரையறையற்ற எண்ணிக்கையான மலக்குகளே அதனை நிறைவேற்ற வேண்டும். விண்ணிலும் மண்ணிலும் என அனைத்துப்பகுதிகளிலும் இறை அதிகாரத்துக்குரிய மகத்துவமும் நுணுக்கமும் மிக்க நடவடிக்கைகளை மலக்குகளே நிறைவேற்ற வேண்டும்.
உயிரற்ற வரண்டுபோன தத்துவவியல் கோட்பாடுகள் பூமி படைக்கப்பட்டதனையும் அதன் உருவாக்கத்தையும் அநியாயமான, வெறிச்சோடிய வடிவில் உருவகிக்க மலக்குகளை ஈமான் கொள்வதன் விளைவானது பூமி படைக்கப்பட்டதை ஒளி நிரம்பியதாகவும் மனதுக்கு நெருங்கியதாகவும் ஆக்குகின்றது. எப்படியெனில் இந்தப் பூமிப் பந்தை இரு மலக்குகள் சுமந்துகொண்டிருக்கின்றனர். அதாவது அவர்களது கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது. இந்தப் பூமி சுவனத்திலிருந்து உருவாக்கப்பட்டு அதன் ஒரு பகுதியே (பாறை) நிரந்தர சுவனமாக மாற்றப்படும். அதுவே இந்த பூமியின் அடிப்படையாகும். அந்தப் பறையை இரு மலக்குகளும் ஏந்திக்கொண்டிருப்பார்கள். இக்கருத்து பனூ இஸ்ரவேலர்களைச் சேர்ந்த முன்னைய நபிமார்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இவ்வாறு உவமானமாக கூறப்பட்ட விடயம் காலப்போக்கில் பாமரர்கள் இதனை உண்மையாக கருதியதால் அறிவுக்க அப்பாற்பட்டதாக கொள்ளப்பட்டது.
மலக்குகள் காற்றில் சுற்றித் திரிவதைப் போன்று பூமியிலும் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் பூமியை சுமந்துகொண்டிருக்க அவர்களுக்கு வடிவங்களோ, உடல்களோ அவசியமன்று.
உதாரணமாக இந்தப் பூமிப்பந்து அதில் உள்ள அனைத்து வகைகளின் எண்ணிக்கையளவுக்கும் அவற்றின் கிளைகளின் எண்ணிக்கையினளவுக்கும் அவற்றிலிருந்து பிரியக் கூடியவைகளின் -இலைகள், கிளைகள், கனிகள்- அளவுக்கும் இறைவனைத் துதிக்கின்றது. எனவே இதனை பலமிக்க மலக்ககள் சுமந்துகொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த மலக்குகள் பல்லாயிரக்கணக்கான தஸ்பீஹ்களை அறிவோடும் உணர்வோடும் துதித்து இறைவனுக்கு சமர்பிக்க்கின்றனர். இந்த உண்மையை மாநபியவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
40. Page
நிச்சயமாக மலக்குகள் மிக ஆச்சரிமிக்க படைப்பாகும். உதாரணமாக ஜிப்ரீல் (அலை) அவர்கள் பிரபஞ்சத்தின் மிக முக்கிய படைப்பான மனிதர்களோடும், அவர்களது இரட்சகனோடும் தொடர்பை ஏற்படுத்தும் பணியை செய்கின்றனர். இஸ்ராபீல் (அலை), இஸ்ராஈல் (அலை) ஆகியோர் மீள எழுப்புதல், உயிர்கொடுத்தல், உயிரைப் பறித்தல் போன்ற படைப்பாளனோடு மாத்திரம் தொடர்புடைய பணிகளை மேற்கொள்கின்றர். இவ்விடயங்கள் மனித உலகில் மிகப்பாரிய பணிகளாகும். அவ்விருவரும் அவற்றை முறையாக நிறைவேற்றி அடிமைத்துவத்தை வெளிக்காட்டுகின்றார்கள். மீகாஈல் (அலை) இறை கொடைகளுக்கு முன்னால் நன்றியின் வகைகளை ஆழ்ந்த உணர்வோடும் புரிதலோடும் வெளிப்படுத்தி நிருவகிக்கின்றார். எனவேதான் மலக்குகள் ஓர் அற்புதப் படைப்பு எனக் கூறுகின்றேன். மலக்குகள்; இறையதிகாரம் மற்றும் அதன் மகத்துவத்தின் தேவைகளுக்கே. இவர்கள் சில பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பது திட்டவட்டமான தெளிவான விடயமாகும். இவ்விறையதிகாரமும் மாட்சிமையும் பிரபஞ்சத்தில் சூரியனைப் போல் மிகத்தெளிவான விடயமாகும். எனவே இதன் அடிப்படையில் மலக்குகள் பற்றிய ஏனைய உண்மைகளை அளவிட்டுக் கொள்ளுங்கள்.
ஆம் உண்மைதான். பூமியில் உயிருடைய நாற்பதாயிரம் வகைகளைப் படைத்த.. மாட்சிமையும் அழகும் கொண்ட சக்தியாளன அவர்களைக் கொண்டே அனைத்துப் பகுதிகளையும் வளப்படுத்தினான். அவன் உருவாக்கிய அற்புதங்களுக்கு முன்னால் 'மாஷா அல்லாஹ்', 'பாரகல்லாஹ்', 'சுப்ஹானல்லாஹ்' ஆகிய வார்த்தைகளை அவர்களது நாவுகள் சொல்லும் படி செய்தான். அந்த சிறிய விலங்குகளை 'அல்ஹம்துலில்லாஹ்', 'எல்லாப் புகழும அல்லாஹ்வுக்கே', 'அல்லாஹூ அக்பர்' என்று அவனது அருள்களுக்கு முன்னால் மொழியச் செய்தான். பிரமாண்டமான வானங்களுக்குப் பொருத்தமான , அவனுக்கு மாறு செய்யாமல் எப்போதும் இபாதத்துகளைச் செய்து கொண்டிருக்கும் மலக்குகளை அல்லாஹ் படைத்துள்ளான் என்பதில் சந்தேகம் கிடையாது. அவர்கள் மூலம் வானங்களை வளப்படுத்தியுள்ளான். அவற்றில் எந்தவொரு இடத்தையும் வெறுமையாக விட்டுவிட வில்லை. பலதரப்பட்ட வகைகொண்ட மலக்குகளையும் அவன் படைத்துள்ளான். வானிலிருந்து பொழியும் மழை, பனியிலும் இருக்குமளவு அளவில் சிறியவர்களாகவும் அவர்கள் இருப்பர். அவர்கள் இறையருளுக்கு முன்னால் இறைவனைத் துதிப்பர். அதுபோல ஓடிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஏறிப் பயணிக்கும் அளவுக்கானவர்களும் அம்மலக்குகளுள் இருப்பர். அவர்கள் இறை மகத்துவம், கண்ணியத்திற்கு முன்னிலையில் தக்பீரைக் கொண்டும் தஹ்லீலைக் கொண்டும் இறைப் புகழை உரக்கக் கூறுவர். இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
உண்மைதான், ஆதம் (அலை) முதலான இறைவேதங்களும், தெய்வீக மலக்குகளின் இருப்பையும், அவர்களது வணக்க வழிபாட்டையும் உறுதிப்படுத்துகின்றன. அதிகமான வழிமுறைகள் மூலம் அனைத்துக் காலங்களிலும் மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பல உரையாடல்கள், பேச்சுகள் இடம்பெற்றுள்ளதை பல அறிவிப்புக்கள் கூறுகின்றன. இது எதைப் போன்றெனில் நாம் அமெரிக்க மக்களை காணாவிட்டாலும் அவர்கள் இருக்கின்றனர் என்பதைப் போல திட்டவட்டமான முறையில் மலக்குகளுக்கும் எமக்குமிடையிலான உறவினை இவை உறுதிப்படுத்துகின்றன.
41. Page
இப்பொழுது நாம் முழுமையானதும் இரண்டாவதுமான இவ்விளைவினை ஈமானின் ஒளியின் மூலம் பார்த்து சுவைப்போம். அது இப்பிரபஞ்சத்தை ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரைக்கும் எப்படி வளப்படுத்தியுள்ளது, எப்படி அழகுபடுத்தியுள்ளது, எப்படி அதனை மிகப் பெரிய பள்ளிவாயலாகவும் வணக்கஸ்தலமாகவும் மாற்றியுள்ளதை நீ அறிந்துகொள்வாய். அது மனிதனுக்க முன்னால் உயிருள்ள உணர்வுள்ள ஒளி நட்பு இனிமை கொண்ட பிரபஞ்சத்தை காட்டும் அதேநேரம் தத்துவமும் விஞ்ஞானமும் உயிரற்ற குளிர்மையான இருள்கொண்ட பயங்கரமான பிரபஞ்சத்தை அவனுக்கு முன்னால் காட்டுகின்றது. எனவே மலக்குமார்கள் பற்றிய நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவரவர் தரத்துக்கேற்ப சுவனலோக நிரந்தர இன்பத்தை உலகிலேயே வழங்குகின்றது.
முடிவுரை: அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனது பரிபாலணம், அவனது படைப்பாற்றல், அவனது இறைத்தன்மை, அவனது தூய்மை ஆகிய இவையனைத்தையும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் படைப்பினமும் பரைசாற்றுகின்றது. அதுபோலவே அல்லாஹ் அனைத்து இடங்களிலும் மலக்குகளைப் படைத்துள்ளான். எவ்வாறு பிரபஞ்ச படைப்புக்கள் அனைத்தும் தன்நிலையில் அறைவனை துதி செய்து கொண்டிருப்பதைப் போன்று மலக்குகளையும் அவனை துதி செய்துகொண்டிருக்கும் நிலையிலே படைத்துள்ளான். மலக்குகள் இறை கட்டளைகளுக்க ஒருபோதும் மாறுசெய்வதில்லை. தூய்மையாக அல்லாஹ்வை வணங்குவதைத் தவிற வேறு எதுவும் அவர்களிடத்தில் இல்லை. இறை கட்டளையின்றி எவ்வித தலையீடுமில்லை. எந்தளவுக்கெனில் அனுமதியின்றி பரிந்துரைக்கவும் அவர்களால் முடியாது. 'கண்ணியமிக்க அடியார்கள்' (அந்பியா: 21-26) 'ஏவப்பட்டவற்றை அவர்கள் செய்கின்றனர்' (தஹ்ரீம்: 66-06) ஆகிய வசனங்களது இரகசியத்தினை உண்மையாகவே அவர்கள் பெற்றுக்கொண்டுவிட்டார்கள்.
பழம் எனும் ஆக்கத்தில் இடம்பொரும் 11ஆவது விவகாரம் தொடர்பாக ரஸாஇலுந் நூரின் கதாநாயகர் ஹூஸ்ரவி எழுதிய கடிதத்திலிருந்து.... மிகத் தூய்மையானவனது பெயர் கொண்டு அரம்பிக்கின்றேன். அனைத்தும் அவனது புகழைத் துதிக்கின்றது. உங்கள் மீது என்றென்ரும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் பாக்கியங்களும் உரித்தாட்டும். அருடபேறு பெற்ற பெறுமதியான நேசத்துக்குரிய என் தலைவரே! எனது ஆசானே!
மேற்படி ஒன்பது விவகாரங்களைப் பற்றிப் பேசுகின்ற 'விளைச்சல்' எனும் ஆக்கம் நாட்டு மக்களுக்கும் தேசத்துக்கும் பயனளிக்கும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. என்றாலும் இந்தப் பயங்கரமான பாவிகளும் பரம எதிரிகளும் வாழும் மோசமான காலத்தில் ரஸாஇலுந் நூரின் மாணவர்களது ஈடேற்றத்துக்கு வழியாக இருக்க அது மாத்திரம் போதாது. அவ்வாக்கத்தில் இடம்பெறுகின்ற குறிப்பாபக 10, 11 ஆவது விவகாரங்கள் சத்தியத்தின் பாதையில் செல்லும் ரஸாஇலுந் நூரின் மாணவர்களுக்கு உற்சாகமூட்டுகின்றது. அதுபோல அது கப்ரின் பயங்கரங்களையும் அவர்கள் செல்ல இருக்கின்ற உண்மையான இடத்தையும் தேடுகின்றது. மண்ணுக்குகக் கீழே அவர்களை கண்காணிக்கும், அவர்களோடு பேசும் மலக்குகளோடு தோழமை கொள்ளவும் உரையாடவும் அவர்களுக்கு ஆசையூட்டுகின்றது. மண்ணறை வாழ்வு என்பது அனைவரையும் அச்சம்கொண்டு திகழ்கொள்ளச் செய்யும் பயங்கரமானதோர் இடம். அது பொடுபோக்காளர்களுக்கு அவலத்தையும் மிகவும் வலியையும் ஏற்படுத்தக்கூடியது.
இப்படியிருக்க, இவ்வாக்கம் ராஸாஇலுந் நூரின் மாணர்களை மண்ணறை வாழ்வை நேசிக்க வைக்கின்றது. இதனால் மறுமையின் வீடுகளில் முதலாவதும் பயங்காரமானதுமான அவ்வீட்டைப் பற்றிய கடுமையான அச்சத்தை நீக்கிவிடுகின்றது. அவர்களை பெருமூச்சுவிடச் செய்கின்றது. இவ்வாக்கம் அந்த உலகின் ஒளிமயமான வாழ்வை என்னைப போன்ற ஒருவரால் கூட காண முடியாதவரின் கைகளில் ஒளி விளக்காக இருக்கும். அது பல இலட்சம் வருட காலம் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும். எப்போதும் மணம் பரப்பும் பூக்களைக் கொண்ட சோலையாக அது மாறுகிறது.
ஒவ்வொரு நாளும் தனது பாடத்தினை தனது ஆசானிடம் வாசித்து ஒப்புவிக்கும் ஓர் மாணவனைப் போல ரஸாஇலுந் நூரின் மூலம் நாம் பெரும் மனப்பதிவுகளை எமது நேசத்துக்குரிய ஆசானிடம் நாமும் ஒப்புவிக்கின்றோம். என்றாலும் எமது அன்புக்குரிய ஆசான் தற்காலிகமாக பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
கண்ணியத்துக்குரிய ஆசானே! ரஸாயிலுந் நூரின் உண்மைத்தன்மை, இவ்வாக்கத்தின் அழகு, அதிலிருந்து நாம் பெற்ற மனப்பதிவு என அனைத்தும் எனது நகரம் சார்பாக மிக மகிழ்ச்சியோடு என்னை பேசவைத்தது. என்னைப் போன்று அதிகமான பேசும் உள்ளங்களை உற்சாகமூட்டியது. இப்பொழுது எனது பிரதேசத்தில் முன்னர் இருந்ததை விட ரஸாஇலுந் நூரை நோக்கிய எட்டுக்கள், அதை நோக்கி நீளும் கரங்கள் உறுதியடைந்துள்ளன. இதற்கான காரணம் இவ்வாக்கத்தின் 11 ஆவது விளைவே. இப்போது அது தெளிவாகி இயங்க ஆரம்பித்துள்ளது.
உங்களது மாணவன்
ஹூஸரவ்


