பத்தாவது விடயம்:
NAVIGATION
27. Page
பத்தாவது விடயம்:
உண்மையாளர்களான எனது கண்ணியத்துக்குரிய சகோதரர்களே!
ரமழானில் அற்புதமான அல்குர்ஆனை நான் ஓதிக்கொண்டிருந்த போது ரஸாலுந்நூரில் 'முதலாவது ஒளிக்கீற்றில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள 33 வசனங்களுள் ஒன்று என்னை கடந்து சென்றது. அவ்வசனம் இடம்பெற்றுள்ள தாளை, பக்கத்தை, அது சொல்லவரகின்ற கதையை ஆழ்ந்து நோக்கினேன். அதுவும் ரஸாஇலுந்நூரை, அதன் மாணவர்களை பார்ப்பதைப் போன்று எனக்குத் தோன்றியது. குறிப்பாக ஸூரா நூரில் இடம்பெற்றிருக்கின்ற 'நூர்' எனும் வசனம் 10 விரல்களாலும் ரஸாஇலுந் நூரையும், அதற்கு அடுத்த படியாக இடம்பெறுகின்ற இருள்களை குறித்துக்காட்டும் வசனங்கள் ரஸாஇலுந் நூரின் கருத்துக்களுக்கு எதிர்; நிலைப்பாட்டைக் கொண்டவர்களையும் சுட்டிக்காட்டுவதைப் போல் தோன்றியது. அவ்வசனங்கள் அவர்களைப் பற்றியே அதிகம் பேசுகின்றன. அவை கிளை விவகாரங்களிலிருந்து அடிப்படை விவகாரங்களைப் பேசுவதாகவே இருக்கின்றன. சம காலத்தில் இந்த அடிப்படை விவகாரங்களில் பூரண நிலைகொண்ட ஒரு தனிமனிதனாக ரஸாஇலுந் நூரையும், அதன் மாணவர்களையும் நான் கருதுகின்றேன்.
உண்மை தான், விசாலம், உயர்வு, ஆதியந்தமற்றவனது 'இறையியல்' என்ற விசாலமான தரத்திலிருந்து உருவாகும் அறிவு ஞானம் என்ற வகையில் குர்ஆன் ஓர் அற்புதம், உயர்ந்த பூரணத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. அது போல மனித சமூகத்தின் பெயரிலும பிரபஞ்சத்தில் பெயரிலும்; அது விழித்துப் பேசப்பட்ட நபியவர்களின் உயர்ந்த தரத்திலிருந்தும் அது அற்புதமிக்கது. அனைத்துக் காலங்களிலும் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்குமான வழிகாட்டல்களை கொண்டிருப்பதனாலும், இம்மை, மறுமை, வானங்கள், பூமி, ஆதி, அந்தம், பிரபஞ்சம், படைப்பினங்களது படைப்பாளனது இறைமை ஆகியவற்றின் திட்டமிடல்களோடு தொடர்பான இறை சட்டங்களுக்கான உயர்ந்த உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதனாலும் அது அற்பதமாக விளங்குகின்றது.
குர்ஆன் விழித்துப் பேசுகின்ற அதிகமானவர்களுள் மிகச் சாதாரண தரத்திலுள்ளவர்கது புரிதல்களோடு உடன்பட்ட வகையில் குர்ஆன் பேசுவதே அவர்களுக்க ஓர் உயர் தரத்தை கொடுப்பதாகவே அமைகின்றது. அது வெறுமனே ஒரு கதையையோ அல்லது வராற்று நிகழ்விலிருந்து பெறும் வெறும் ஒரு படிப்பினையையோ சொல்லவில்லை. மாற்றமாக எல்லாக் காலத்திலும் வாழந்த எல்லோருக்குமாக -அவர்கள் அனைவரும் ஓர் சட்டயாப்பின் உறுப்பினர்களைப் போல- உடனுக்குடன் பேசுவது போன்று இருக்கின்றது. குறிப்பாக 'அநியாயக்காரர்கள்', 'அநியாயக்காரர்கள்', என்று பல தடவைகள் அது மீட்டி மீட்டி அச்சுறுத்துவது, அவர்களது அநியாயத்துக்கான தண்டனையாக வானங்கள், பூமியின் மிகக் கடுமையான சோதனைகளைச் சொல்வதைக் குறிப்பிடலாம். இதன் மூலம் ஆத், ஸமூத் பிர்அவன் ஆகிய கூட்டத்தாருக்க இறங்கிய வேதனைகளின் வடிவங்களைச் சொல்லி இக்காலத்தவர்களுக்கு நிகரற்ற அநியாயங்களை எடுத்தக் காட்டகின்றது. அவ்வாறே இப்றாஹீம், மூஸா ஆகிய நபிமார்களது விமோசனத்தைக் கூறி அநியாயம் இழைக்கப்பட்ட விசுவாசிகளுக்கான ஆறுதலையும் தெரிவிக்கின்றது.
ஆம், அற்புதமான அல்குர்ஆன் கடந்த காலம் முழுவதைனையும் சினிமாத் திரையில் காட்சிப்படுத்துவதைப் போல காண்பிக்கின்றது. கடந்த காலங்கள், நூற்றாண்டுகள் என்பன பொடுபோக்கு, வழிகேடு ஆகியவற்றின் பார்வையில் மிகப் பயங்கரமான சுடுகாட்டை போன்றும் மரணத்தோடு எதுவுமற்ற நிலையில் முடிவுடையக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
குர்ஆன் ஒவ்வொரு காலத்தையும், அதில் வாழ்ந்த மனித குழுமத்தையும் படிப்பினைக்குரிய உயிர்ப்புமிக்க பக்கத்தைப் போல, முழுமையாக ஆட்சரியங்கள் நிறைந்த உலகைப் போல காண்பிக்கின்றது. அவ்வாறே அதனை தெய்வீக சாம்ராஜ்யமாகவும் எங்களோடு தொடர்புள்ள படைப்பாகவும் காண்பிக்கின்றது. இதன் மூலம் உயர்ந்த அற்புதத்துக்கான பாடத்தை எமக்குச் சொல்லித் தருகின்றது. அது எம்மை அக்காலத்துக்கு கொண்டு செல்வது போது அக்காலத்தையும் எம்மிடம் கொண்டுவருகின்றது.
உயர் அந்தஸ்துமிக்க அல்குர்ஆன் அதன் அற்புதத்தின் மூலம் இப்பிரபஞ்சத்தினை எமக்குக் காண்பிக்கின்றது. வழிகேட்டின் பார்வையில் இப்பிரபஞ்சமானது அசைவற்றதாகவும் துரதிஷ்டம் நிறைந்ததாகவும் இறந்த உடலுக்கு ஒப்பானதாகவும் எல்லையற்ற வகையில் பயங்கரம் நிறைந்த இடமாகவும் பிரிவுக்கும் அழிவுக்கும் மத்தியில் தள்ளாடுவதாகவும் கருதப்படுகின்றது.
மகத்துவமிக்க அல்குர்ஆன் இப்பிரபஞ்சத்தினை ஓரல் ஏடாகவும், அருள் நிறைந்த நகராகவும், இறை படைப்புகளுக்கான கண்காட்சியாகவும் காட்டுகிறது. அதிலுள்ள அனைத்து சடப் பெருட்களிலும் அல்குர்ஆன் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறது. அவை ஒவ்வொன்ரும் மற்றவையோடு பேசுவதாகவும அவற்றுக்கு உதவுவதாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் மனிதர்களுக்கு, ஜின்கள், மலக்குகளுக்கு இன்பமிகு ஒளிபொருந்திய உண்மையான ஞானத்தின் பாடங்களை கற்பிக்கின்றது.
எனவே மகத்துவமிக்க இந்த அல்குர்ஆன் புனித் நிறைந்த சிறப்புப் பண்புகளைக் கொண்டது என்பதில் சந்தேகம் கிடையாது. அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நனன்மைகள், சில போது ஆயிரம் நன்மைகள், பல்லாயிரம் நன்மைகள் உண்டு. அது போல ஒன்றை மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும் கூட கொண்டு வர முடியாது. அது ஆதமுடைய மக்கள், பிரபஞ்சத்தை நோக்கி பொருத்தமான முறையில் பேசுகின்றது. மில்லியன் கணக்கானவர்களின் உள்ளங்களில் அதன் இனிமை படிந்துபோயிருக்கின்றது. என்னதான் திருப்பித் திருப்பி ஓதினாலும் சலிப்பற்றது.
குழந்தைகளது சிந்தனைகளால் புரிந்துகொள்ள முடியாத அதிகமான வசனங்கள் அதில் இருந்த போதிலும் அவர்களது உள்ளங்களில் ஆழ்ந்து வேறூண்டி விடுகின்றது. குறைந்த பேச்சினால் கூட அல்லலுரும் நோயாளிகளின் செவிகளுக்கு இதமானதாகவும் மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு ஸம்ஸம் நீரைப் போலவும் அது இருக்கின்றது. அல்குர்ஆனுக்கு இந்த புனிதத்துவ பண்புகள் இருக்கின்றன. அதன் மாணவர்களுக்கு ஈருலகிலும் மகிழ்ச்சியை அது கொடுக்கின்றது.
28. Page
அது பூரணமான இறை பராமரிப்பின் கீழ் இயல்பாக கொண்டிருக்கும் சரளமான தன்மையை வெளிப்படுத்துகிறது. அது நேரடியாக வானத்திலிருந்து இறங்கியது. அதில் வலிந்து உருவான, செயற்கைத் தன்மையான எதுவுமே கிடையாது.
அது வழிகாட்டுவதில் அன்பு செலுத்துவதில் உயர்ந்த பட்ச அற்புதத்தை வெளிக்காட்டுகிறது. வானங்கள், பூமியைப் போன்று மிகத் தெளிவானதாக – பெரும்பான்மையாக இருக்கும் பொது மக்களின் சிந்தனைகளுக்கு விளங்கும் வகையில் - அதனது பக்கங்களை அது கட்சிதமாக வெளிப்படுத்துகின்றது. மேலும் அதன் அற்புத் நிறைந்த வல்லமைகளையும், சாதாரண விடயங்களிலும் பொதிந்திருக்கின்ற கருத்துக்கள் நிறைந்த ஞான வசனங்களையும் வெளிப்படுத்துகின்றது.
குர்ஆன்; விழித்துப் பேசப்படுவோர் பலதரப்பட்ட படித்தரத்தில் இருக்கும் நிலையில் அழகிய முறையில் ஒரு விடயத்தை மீட்டி மீட்டி பேசுவதன் மூலம்; ஒரு வசனத்தில், ஒரு கதையில் பலதரப்பட்ட கருத்துக்களை புரிய வைப்பதனூடாக அதன் அற்புதங்களில் ஒரு வகையை வெளிப்படுத்துகின்றனது. இப்பின்னணியில் அது தான் ஒரு பிரார்த்தனை, அழைப்பு, நினைவுபடுத்தல், எகத்துவம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய ஓர் புத்தகம் என்பதை அறிவிக்கின்றது. எனவே இவையனைத்தும் ஒரு விடயத்தை மீட்டி மீட்டிக் கூறுவது இன்றியமையாத விடயம் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இஸ்லாத்தை நிறுவுதல், ஷரீஆவை பதிவு செய்தல் போன்ற நிகழ்வுகளில் நபித்தோழர்களது வாழ்வில் நடந்த பல அற்ப விடயங்களில் கூட கவனம் செலுத்துகின்றது. இதன் மூலம் இத்தகு அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் அருட் பார்வையின், அவனது திட்டமிடல், நாட்டத்தின் படியே நடக்கின்றது என்பதை அறிவிக்கின்றது.
இஸ்லாத்தையும் பூரணத்துவமும் பொதுமைத் தன்மையும் வாய்ந்த ஷரீஆவையும் கட்டியெழுப்புவதில் இவ்விடயம் முழுமையான அனைத்து இறை வழிகாட்டல்களும் கிளை அம்சங்களும் -விதைகளைப் போன்று- அதற்குள் அமையப் பெற்றிருக்கின்றது என்ற வகையில் அதன் அற்புதத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
உண்மைதான், மீட்டி மீட்டி சொல்வதற்கான தேவை இருப்பதால் மீட்டி மீட்டி சொல்லப்படுகின்றது. சில வசனங்கள் மீட்டி மீட்டி சொல்லப்படுவதானது ஆயிரக்கணக்கான விளைவுகள் கொண்ட ஓர் சக்தியைப் போன்றது. மேலும் இன்னும் சில வசனங்கள் மீட்டி மீட்டி சொல்லப்படுவதானது மிகப் பிரமாண்டமான , விசாலமான, அபாயகரமான ஓர் புரட்சியை உருவாக்குவதில் வரையறையற்ற பல ஆதாரங்களின் விளைவைப் போன்றது.
அவை பல வித்தியாசமான படித்தரங்களையுடைய மனிதக் குழுமங்களால் இருபது வருடங்களில் மீட்டி மீட்டி கேட்கப்பட்ட அதிகமான கேள்விகளுக்கு விடைகளையும் பாடங்களையும் கற்றுக்கொடுக்கின்றன. மேலும் அவை இப்பிமாண்டமான பிரபஞ்சத்தை அழித்து, அதன் தோற்றத்தை மாற்றுபவர் யார்?, இவ்வுலகை நீக்கிவிட்டு அதன் இடத்தில் மறுமையை ஏற்படுத்துபவர் யார்? அணு முதல் அண்ட சராசரங்கள் வரை அனைத்துமே யார் மூலம்? யாரின் கண்காணிப்பின் கீழ் இருக்கின்றது? என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
பிரபஞ்சம், வானங்கள், பூமியை கோபப்படுத்தும் மனித அநியாயங்களுக்கு முன்னால் இப்பிரஞ்சத்தில் நிகழும் பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறை கோபத்தையும் இவ்வசனங்கள் சொல்லிக்காட்டுகின்றன.
உண்மைதான், இவ்வசனங்கள் மீள மீள வருவதானது ஓர் குறைபாடன்று. மாற்றமாக அவை சக்தியின் உச்சத்தில் இருக்கும் அற்புதம், உயர்ந்த இலக்கு கொண்ட அணியிலக்கணம், நிலமைக்கேற்ற வகையில் அமைந்த நாவன்மை ஆகும்.
உதாரணமாக 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' எனற வசனம் 114 தடவைகள் மீள மீள கூறப்படுகின்றது. என்றாலும் அது ஒரேயொரு வசனம் தான். அது பூமியையும் வானுலகையும் இணைக்கும், பிரபஞ்சத்தை ஒளியூட்டும் ஓர் ஒளியாகும். அதன் பால் அனைத்து மனிதர்களும் எப்போதுமே தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள். இது தொடர்பில் ரஸாஇலுந் நூரில் 14வது மின்னல் எனும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது இவ்விடயம் மில்லியன் கணக்கான தடவைகள் மீள மீள கூறப்பட்டாலும் அதன் பால் இருக்கும் தேவை முடிவுறாது. அது ஒருவனுக்கு நாளாந்தம் தேவைப்படும் உணவுத் தேவையைப் போன்றதல்ல. மாறாக வளி, ஒளி போன்ற ஒவ்வொரு நிமிடமும் தேவைப்படும் ஒன்றாகும்.
உதாரணமாக
إِنَّ رَبَّكَ لَهوَ العَزِيزُ الرَّحِيمُ
'நிச்சயமாக உமது இரட்சகன் கண்ணியமானவனும் அருளாளனும் ஆவான்' என்ற வசனம் ஸூரா 'தா, ஸீன், மீம்' என்ற ஸூராவில் இல் எட்டுத் தடவைகள் மீள மீள வருகின்றது. இந்த ஸூராவோ பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் விளைவு, படைப்பாளனின் ருபூபிய்யத் பற்றி பேசும் ஒழுங்கில் நபிமார்களின் வெற்றி, அவர்களை எதிர்த்தோருக்கான தண்டனை பற்றியும் பேசுகின்றது.
இறைவனது சக்தி அந்த அநியாயக்கார சமூகங்களுக்கு தண்டனை கொடுப்பது அவசியம், இறையருள் நபிமார்களைக் காப்பற்றுவது அவசியம் என்பதை கற்றுக்கொடுப்பதற்காக இந்த வசனம் ஆயிரம் தடவைகள் மீள மீள குறிப்பிடப்பட்டாலும் அதன் பாலுள்ள தேவை ஒரு போதும் முடிவறாது. மாறாக மீள மீள குறிப்பிடுவதானது சுருக்கத்தையும் அற்புதத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்ற உயர் அணியலக்கணி முறைமையைச் சுட்டிக்காட்டுகின்றது.
29. Page
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
'நீங்கள் இரு சாராரும் உங்கள் இரட்சகனது அருள்களில் எதனைப் பொய்யாக்குவீர்கள்' என்ற ஸூரா ரஹ்மானில் வந்திருக்கின்ற வசனமும்,
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ
'அந்நாளில் பொய்ப்பித்தவர்களுக்குக் கேடுதான்' என்ற ஸூரா முர்ஸலாதில் இடம்பெற்றிருக்கின்ற வசனமும் காலங்கள், பூமி, வானங்கள் ஆகியவற்றுக்கு எச்சரித்த வண்ணம் பின்வரும் செய்தியைச் சொல்கின்றது. அதாவது மனித சமூகம், ஜின் வர்க்கத்தினது இறை மறுப்பு, இறைவனது அருள்களுக்க முரணாக நடத்தல், அவர்கள் புரியும் அநியாயம், அனைத்து படைப்பினங்களது உரிமைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் பிராஞ்சத்தினை கோபமூட்டுகின்றது. வானங்கள் பூமியினது கோபத்தை கிளரச் செய்கின்றது. உலகம் படைக்கப்பட்டதன் விளைவுகளை குழப்பிவிடுகின்றது. இறைவனது அதிகாரத்தின் மாட்சிமையை மறுத்து சிறுமைப்படுத்திவிடுகின்றது. இவ்விரு வசனங்களும் ஆயிரம் யதார்த்தங்களுடன் தொடர்பான முக்கிய விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு ஆயிரம் தடவைகள் மீள மீள கூறப்பட்டாலும் அதன் தேவை மடிவுறாது. அது சுருக்கமும் அழகிய அற்புதமும் கூட.
உதாரணமாக 'ஜவ்ஷன் கபீர்' எனும் பெயரில் அறியப்பட்ட நபியவர்களின் பிரார்த்தனை பேழையொன்று இருக்கின்றது. அது குர்ஆனின் பிரார்த்தனை வகைகளில் ஒன்றாகும். அது குர்ஆனிலிருந்து பெறப்பட்ட சுருக்கமான பிரார்த்தனையாகும். அது பிரபஞ்சத்தில் மிகப் பெரும் யதாரத்தத்தைக் கொண்ட 'தௌஹீத்' கோட்பாடு பற்றியும், ருபூபிய்யத்துக்கு முன்னால் படைப்பினங்களது மூன்று பணிகளான தஸ்பீஹ், தஹ்மீத், தக்தீஸ் ஆகியவற்றுள் மிக முக்கியமான விடயம் பற்றியும், மனித சமூகத்தின் மிகவும் முக்கியமான விடயமாக விளங்கும் நிரந்தர துரதிஷ்ட நிலையை விட்டும் மீட்சி பெறுவதை பற்றியும் அடிமைத்துவம், மனித இயலாமையின் மிக முக்கிய விளைவைப் பற்றியும் பேசுகின்றது. அதில்
'سبحانك لا إله إلا أنت الأمانُ الأمانُ خلِّصنا وأجِرنا ونجِّنا من النار'
என்ற வசனம் மீள மீள 100 தடவைகள் இடம்பெற்றுள்ளது. அவ்வசனம் ஆயிரம் தடவைகள் மீள மீள குறிப்பிடப்பட்டாலும் அது குறிப்பிடப்படாததைப் போன்றதே.எனவே அல்குர்ஆனில் மீள மீள வந்துள்ளவை இப்படியான அடிப்படைகளையே சுட்டிக்காட்டுகின்றது. அது மாத்திரமன்றி சில போது அவை தௌஹீதின் யதார்த்தத்தை மிகத்தெளிவாகவும் ஒரேபக்கத்தில் நிலமையின் தேவைக்கேற்ற வகையிலும் புரிதல்கள், அணியிலக்கணத்தின் தேவைக்கேற்ற வகையிலும் இருபது தடவைகள் மீள மீளவும் விளக்கியுள்ளது. இப்படி விளக்குவதானது சலிப்பை ஏற்படுத்தாது. மாற்றமாக ஓர் பலத்தையும் ஆசையையும் உருவாக்கிவிடுகின்றது.
அல்குர்ஆனில் மீள மீள கூறப்பட்டவை எந்தளவு பொருத்தமானது, அணியிலக்கண ரீதியில் எந்தளவு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது போன்ற விடயங்கள் ஆதாரங்களுடன் ரஸாஇலுந் நூரில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
அணியிலக்கணம், அற்புதம், சுருக்கம், விரிவாகக் கூறல் என்ற வகையில் அல்குர்ஆனிலுள்ள மக்கீ, மதனீ ஸூராக்களுக்கு மத்தியிலான வேறுபாட்டின் இரகசியத்தைப் பொருத்தவரை பின்வருமாறு கூட்டிக்காட்டலாம்:
அல்குர்ஆன் விழித்துப் பேசுகின்ற முதற்தரப்பினர், மக்காவிலிருந்த முரண்பட்டவர்கள் குரைஷி முஷ்ரிக்கள். எனவே அணியிலக்கண ரீதியில் உயர்ந்த பலமிக்க தோரணையில் அதேநேரம் ஆறுதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் சுருக்கமாகவும் பேசவேண்டிய தேவை இருந்தது. மேலும் கூறவரும் விடயத்தினை உறுதிப்படுத்துவதற்காக மீள மீள கூறவேண்டிய தேவையும் இருந்தது. இதன் காரணமாகவே மக்கீ ஸூராக்கள் அதிகமாக ஈமானின்அடிப்படைகளையும் ஏகத்துவத்தின் படித்தரங்களையும் மீள மீள பேசின. இதன் மூலம் அவ்விடயங்களை சுருக்கமாகவும் பலமிக்கதாகவும் உயர்ந்த தொணியிலும் அற்புதம் நிறைந்ததாகவும் தெரியப்படுத்தின. இந்த மீள மீளக் குறிப்பிடுகின்ற முறைமையானது ஆரம்பம், முடிவு, அல்லாஹ், மறுமை ஆகியவற்றை ஒரு பக்கத்தில், ஒரு வசனத்தில்,ஒரு சொல்லில் சிலபோது ஒரு எழுத்தில் கூட நிறுவுகின்றது. அவ்வாறே முற்படுத்துதல் (தக்தீம்), பிற்படுத்துதல் (தஃஹீர்), சொற்களில் அல் வருதல் (மஃரிபா), சொற்களில் அல் வராதிருத்தல் நகிரா, சில சொற்கள் நீக்கப்படுதல், இன்னும் சில சொற்கள் குறிப்பிடப்படுதல் போன்றவை அணியிலக்கணத்தின் மிகப் பெரும் ஜாம்பவான்களையே பிரமிக்கச் செய்யுமளவு அவற்றை உறுதிப்படுத்துகின்றது.
பொதுவாக ரஸாஇலுந் நூரும், அதிலும் குறிப்பாக அல்குர்ஆனின் அற்புதங்களில் நாற்பது வடிவங்களை உறுதிப்படுத்தியுள்ள 25ம் வார்த்தையும், அல்குர்ஆனின் போக்கிலுள்ள அதன் அற்புதங்களை உறுதிப்படுத்தும் 'இஷாராதுல் இஃஜாஸ்' எனும் அரபுமொழி நூலும் மக்கி ஸூராக்களும் அதன் வசனங்களும் அணியிலக்கணத்தின் முறைமைகளுள் மிக உயர்ந்த படித்தரத்தை, செறிவான உயர் அற்புதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மதனீ சூராக்களும் அதன் வசனங்களும் முதற்தரத்தில் விழித்துப் Nசுவோர் அல்லாஹ்வை உண்மைப்படுத்திய யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் அடங்கிய வேதம் வழங்கப்பட்டோராவர். எனவே இவ்விடத்தில் வேதம வழங்கபப்பபட்டோருக்கு மார்க்கத்தின் அடிப்படைகளையோ ஈமானின் தூண்களையோ விளக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. கருத்து முரண்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும் ஷரீஆவின் கிளை விடயங்களையும் சட்டங்களுக்கான காரணங்களையும் தெளிவான, ஆற்றொழுக்கான முறைமையில் நிலமைக்கு ஏற்ற வகையில் விளங்கப்படுத்துவதே தேவையானதாக இருந்தது.
30. Page
எனவே, அல்குர்ஆன் மதனீ வசனங்கள் மற்றும் ஸூராக்களில் ஏலவே கூறப்பபட்டவாறு அக்கிளை விடயங்களை அல்குர்ஆனுக்கே உரிய ஒப்பிலா முறையில் சொற் சுருக்கத்தோடும் பொருட் செறிவோடும் பேசுகின்றது. இதுவே முடிவாகும். இதுவே உயர்ந்த பலமிக்க ஆதாரமாகும். இதுவே தௌஹீத், ஈமான், மறுமை பற்றிய வசனமாகும். இதுவே குறித்த கிளை விடயத்தை பிரதான விடயமாக மாற்றிவிடுகின்றது. அல்லாஹ்வை ஈமான் கொள்வதன் மூலம் கட்டுப்படுவதை உத்தரவாதப்படுத்துகின்றது. இந்நிலையை ஒளியூட்டுகின்றது. மேலும் அதனை உயர்ந்ததாக மாற்றிவிடுகின்றது.
நிச்சயமாக ரஸாஇலுந் நூர் ஏகத்துவத்தையும் மறுமையையும் தெரிவிக்கும் சூராக்களின் கடைசியில் வருகின்ற
إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
إِنَّ اللهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ و ﴿وَهُوَ العَزِيزُ الحَكِيمُ﴾ و وَهُوَ العَزِيزُ الرَّحِيمُ
போன்ற வசனங்கள் கொண்டிருக்கும் அணியிலக்கணம், உயர்ந்த சிறப்பமசங்களை விளக்குகின்றது. அதுபோலவே அந்த சுருக்கங்களில் மறுப்பாளர்களுக்கு மிகப் பெரிய அற்புதம் இருக்கின்றது என்பதை தெரிவிக்கின்றது. அதாவது சூராக்களின் இறுதிப் பகுதியில் அமைந்திருக்கும் பத்துச்சிறப்பம்சங்கள் குறித்து 25ம் வார்த்தையில் இரண்டாவது அத்தியாயத்தில் இரண்டாவது பகுதியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மைதான், அல்குர்ஆன் தான் விழித்துப் பேசுவோருக்கு கிளை அம்சங்கள், சமூகவியல் சட்டங்களை விளக்குவதோடு உயர்ந்த சில விடயங்களை நோக்கி அவர்களை அழைத்துச் செல்கின்றது. சாதாரண நடையினை உயர் நடையாக மாற்றுகின்றது. அது விழித்துப் பேசுவோரின் பார்வையை ஷரீஆவை கற்றல் எனும் கட்டத்திலிருந்து தௌஹீதை கற்றல்; எனுமம் கட்டடத்தை நோக்;கித் திருப்புகின்றது. அது ஷரீஆ, சட்டங்கள், ஞானம் போன்றவற்;றை உள்ளடடக்கியிருப்பதைப் போன்று ஏககாலத்தில் அகீதா, ஈமான், திக்ர், துஆ, தஃவா, சிந்தனை போன்றவற்றையும் உள்ளடக்;கிய வேத நூலூகும். அது ஒவ்வொரு இடத்திலும் அதிகமான குர்ஆனிய வழிகாட்டல்களையும் இலக்குகளையும் கற்பிக்கின்றது. இதன் மூலம் மக்கீ வசனங்களில் பொதிந்திருக்கும் அணியிலக்கணத்தின் முறைமையை விட வித்தியாசமனதொரு ஒழுங்கை வெளிப்படுத்திக்காட்டுகின்றது.
உதாரணமாக, رَبُّ الْعَالَمِينَ و رَبُّكَ ஆகிய இரு வசனங்களில் رَبُّكَ என்பது 'அஹதிய்யா' என்ற கருத்தையும் رَبُّ الْعَالَمِينَ என்பது 'வாஹிதிய்யா' என்ற கருத்தையும் விளக்குகின்றது. 'அஹதிய்யா' என்பதற்குள் 'வாஹிதிய்யா'என்பதும் உள்ளடக்கப்படுகின்றது.
வானத்தில் சூரியனை கண்ணாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். அதைப் போல கண்ணில் கருவிழியிலுள்ள புள்ளியை படைத்திருக்கின்றான். இவையிரண்டும் அவனது சக்திக்கு ஒரே விடயமாகும்.
وَهُوَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
يُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ
خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ
உதாரணமாக 'உள்ளங்களில் உள்ளவற்றை அவன் நன்கு அறிந்தவன்' என்ற வசனம் 'பகலில் இரவை நுழைவிக்கின்றான். இரவில் பகலை நுழைவிக்கின்றான்' என்ற வசனத்தை தொடர்ந்து இடம்பொறுகின்றது. அவ்வசனமோ 'வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான்' என்ற வசனத்தை அடுத்து வருகின்றது. இந்த ஒழுங்குமுறைமையானது சாதாரண படிப்பறிவில்லாத மக்களது புரிதலை உயர்ந்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்கின்றது. அது போல இம்முறைமைக்குள் வழிகாட்டலும் பொதுத்தன்மையும் உள்ளடங்கியுள்ளது. இது பின்வருமாறு சொல்வதைப் போன்று அமைந்துள்ளது: 'வானங்கள், பூமியை படைக்த்து அவற்றை நிர்வகிக்கும் வல்லமை பெற்ற அவன் உள்ளங்களில் தோன்றுகின்ற எண்ணங்களைக் கூட அறிகின்றான்.'
வினா: மேலோட்டமான பார்வையினால் பிறக்கும் தெளிவின்மை காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை பற்றிய அறிவின்மை காரணமாகவும் அல்குரஆனில் குறைபாடுகள் உண்டு என ஒருவர் ஊகிக்கலாம். உதாரணமாக நபியூஸூப்(அலைதனதுசகோதரரை தன்னுடன்வைத்துக்கொள்ள ஓர் தந்திரத்தை கையாண்ட போது
وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ
என்ற வசனம் இடம்பெறுகின்றது. இதிலுள்ள அணியிலக்கணப் பார்வை மேலாட்டமாகப் பார்க்கும் போது வெளியே தெரியாது. இதன் இரகசியம் என்ன? இதன் யதார்த்தம் என்ன?
விடை: நீண்டதும், நடுத்தரமானதுமான அதிகமான ஸூராக்களிலும் அவற்றின் அதிகமான பக்கஙகள், இடங்களிலும் இடமபெற்றுள்ள குர்ஆனின் யதார்த்தமானது இரண்டு அல்லது மூன்று இலக்குகளை மாத்திரம் உள்ளடக்கியிருக்கானது. மாறாக திக்ர், ஈமான், சிந்தனை, ஷரீஆ, வழிகாட்டல், ஞானம் போன்ற அதிகமான தனித்தனி நூல்களையே அது உள்ளடக்கியுள்ளது. யாவற்றையும் சூழ்ந்துள்ள இறை ஞானம், அவனுடைய படைப்புக்களின் பிரதிபலிப்புக்கள் ஆகியவற்றை வெளிக்காட்டும் 'பிரபஞ்சம் எனும் நூலை' வாசித்தலின் ஒரு வகையே அல்குர்ஆன் ஆகும். ஏனெனில் அது அல்லாஹ் பற்றிய அறிவை,ஏகத்துவத்தின் படித்தரங்களை, ஈமானின் யதார்த்தங்களை தேவைக்கேற்ப கற்பிக்கின்றது. சிலபோது ஒரேயொரு பக்கத்தில் அதிகமான இலக்குகளை அது கொண்டிருக்கின்றது.
31. Page
உதாணமாக புறத்தோற்றத்தில் பலவீனமானதாகத் தோன்றினாலும் கூட அவ்விடத்திலே வேறொரு புதியதொரு பாடத்தை அது பகிர்ந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் சிடையாது. இந்தப் பலவீனமான சந்தர்ப்பத்துடன் மிகவும் பலமான வேறு சந்தர்ப்பங்களும் இணைந்து கொள்ளும். இதன் மூலம் குறிந்த சந்தர்;ப்பம் அவ்விடத்துக்குப் பொருத்தமானதாகவும் அதனுடைய அணியிலக்கண முறைமை உயர்வானதாகவும் காணப்படும்
அடுத்த வினா: குர்ஆனில் பல்லாயிரம் தடவைகள் தெளிவானதாகவும் சூட்சுமமாகவும் மறுமை, ஏகத்துவம், மனிதர்களுக்கான வெகுமதிகள் ஆகியவற்றை நிறுவுவதிலும் அவற்றை நோக்கி மனிதனின் கவன்தை திருப்புவதிலும் அனைத்து ஸூராக்களிலும், பக்கங்களிலும், இடங்களிலும் அவற்றை கற்பிப்பதிலுள்ள தாத்பரியம் என்ன?
விடை: மிக முக்கிய விவகாரத்தை ஆய்வு செய்தல், சந்தேகங்களை நீக்குதல், தெளிவான விடயங்களோடு தொடர்பானவற்றை மறுப்பதையும் பிடிவாதம் கொள்வதையும் உடைத்தெரிதல், பிரபஞ்சத்தில் இடம்பெறுகின்ற இடம்பெறுகின்ற மாற்றங்களோடு தொடர்புடைய விடயங்களை மறுப்பதையும் பிடிவாதம் கொள்வதையும் தகர்த்தல், மனிதன் சுமந்திருக்கின்ற அமானிதம், கிலாபத் பணி - இப்பணியே மனிதனது நிரந்தர மபிகழ்ச்சிக்கும் துரதிஷ்ட நிலைக்கும் காரணமாக அமையக் கூடியது- ஆகியவற்றோடு தொடர்புற்ற மிக முக்கிய கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்றவற்றை நோக்கி பல்லாயிர் தடவைகள் கவனங்களை அல்குர்ஆன் திருப்புகின்றது என்பதில் சந்தேகம் கிடையாது. இதற்கான காரணம் மானிட சமூகம் இவ்வனைத்தையும் உண்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இவற்றை ஏற்றுக்கொள்வது மனித சமூகத்துக்கான கட்டாயத் தேவை என்பதற்காகவுமே. எனவே இவ்விடயங்கள் அனைத்தும் பல்லாயிரம் தடவைகள் அல்குர்ஆனில் மீள மீள சொல்லப்படுவதன் மூலம் சலிப்போ தெவிட்டலோ ஏற்படாது. அதுபோல அதற்கான தேவையும் முடிவடைந்து விடாது.
உதாரணமாக
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا
الصَّالِحاتِ لَهمْ جَنَّاتٌ تَجرِي مِن تَحتِهَا الْأنْهَارُ
و خَالِدِينَ فِيهَا أَبَداً
'நிச்சயமாக ஒவ்வொரு பொழுதிலும் மனித சமூகத்துக்கு தன்னை இனங்காட்டிக் கொள்ளும் மரணம் மனிதனையும் அவனது உலகையும் அவனது நேசர்கள் அனைவரையும் நிரந்த அழிவிலிருந்து காப்பாற்றி நிரந்தர வாழ்வை அவனுக்குப் பெற்றுக்கொடுக்கும்' என்ற கருத்தை கூறுவதன் மூலம் 'நிரந்தரமான மகிழ்ச்சி' எனும் சுபசோபனத்தின் உண்மையைக் வலியுறுத்தும் மேற்படி வசனங்கள் பல்லாயிரம் தடவைகள் மீள மீள சொல்லப்பட்டாலும், பிரபஞ்சத்தின் பருமனளவு மீள மீள வலியுறுத்தப்பட்டாலும் அது மேலதிகமானதாவோ, அதன் பெறுமானத்தை குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கமாட்டாது.
ஏலவே குறிப்பிடப்பட்டது போல இவ்விவகாரங்களை அற்புதமிகு அல்குர்ஆன் மிக ஆழமாக ஆய்வு செய்கின்றது, ஏற்றுக்கொள்ளச் செய்கின்றது, நிறுவுகின்றது, பிரபஞ்சத்தை ஒரு வீட்டைப் போல மாற்றும் அதிசயத்தக்க புரட்சிகளை நிறுவுவதில் ஈமானை நோக்கித் தூண்டுகின்றது. இவ்வாறான விவகாரங்களை நோக்கி பல்லாயிரக் கணக்காண தடவைகள் கவனங்களை மிகத் தெளிவாகவும் சூட்சுமமாகவும் சிலேடையாகவும் திருப்புவது ஒருபோதும் மேலதிகமான விடயமல்ல. மாற்றமாக அது உணவு, மருந்து, காற்று, ஒளி போன்ற அத்தியவசிய தேவையை புதிப்பிப்பது போன்றதாகும்.
உதாரணமாக அல்குர்ஆனில் எச்சரிக்கை வசனங்கள் மிகக் கடுமையாகவும் தீர்க்கமானதாகவும் மீள மீள குறிப்பிடப்படுகிறது.
إِنَّ الْكَافِرِينَ فِي نَارِ جَهَنَّمَ
وَالظَّالِمِينَ لَهمْ عَذَابٌ أَلِيمٌ
இந்த வசனங்கள் இவ்வாறு கூறப்படுவதற்கான காரணம் மனித சமூகத்தின் இறை மறுப்பானது பிரபஞ்சத்தின், அதிக படைப்பினங்களின் உரிமைகளை மீறுகின்ற செயலாகும். - இதனைப் பற்றி ரஸாஇலுந் நூரில் திட்டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது- அது வானங்கள், பூமியின் கோபத்தை கிளரச் செய்து அநியாயக் காரர்களை துவம்சம் செய்கின்றது. நிச்சயமாக நரகம் அநியாயக் காரர்களை, நிராகரிப்பாளர்களைப் பார்த்து கோபமுற்று அவர்களோடு சேர்ந்து அதுவும் வெடித்துச் சிதருகின்றது. இதனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
إِذَا أُلْقُوا فِيهَا سَمعُوا لَها شَهِيقاً وَهِيَ تَفُورُ تَكَادُ تَميَّزُ مِنَ الْغَيْظِ
இப்படியான குற்றங்கள், வரையற்ற அத்துமீறல்களுக்கு முன்னால் இப்பிரபஞ்சததின் ஆட்சியாளன் அவனது கட்டளைகளில் இக்குற்றங்களையும் அவற்றுக்கான தண்டனைகளையும் மிகக் கடுமையாக மீட்டி மீட்டி சொல்வதானது மனிதனை சிறுமைப்படுத்துவதற்காகவோ, அவனை பாராமுகமாக விட்டுவிடுவதற்காகவோ அல்ல. மாறாக அவனது அநியாயமான குற்றங்களின் பாரதூரத்தை, இறை நிராகரிப்பெனும் அத்துமீறலின் பயங்கரத்தை உணர்த்துவதற்காகவே. மறுபுறத்தில் படைப்பினங்களது உரிமைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு அநியாயக்காரர்கள், மறுக்கின்றவர்களது நிராகரிப்பில் மறைந்திருக்கின்ற வரையரையற்ற அசிங்கத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். எனவே இவ்விடயம் ஆயிரம் தடவைகள் அல்ல பல்லாயிரம் தடவைகள் மீள மீளக் கூறப்பட்டாலும் அது மேலதிகமான விடயமோ குறைத்து மதிப்பிடத்தக்கதொன்றோ அல்ல. ஆயிரம் வருடங்களாக ஒவ்வொரு நாளும் பல மில்லியன் கணக்கான மக்கள் இதனை சலிப்பின்றி, தெவிட்டலின்றி ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓதிவருகின்றார்கள்.
32. Page
ஆம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவருக்குமான ஓர் உலகமாகும். ஒவ்வொரு புதிய உலகின் கதவும் அவருக்காக திறந்துகொள்கின்றது. அது போல 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற வார்த்தையை ஆசையோடும் ஆர்வத்தோடும் ஆயிரம் தடவை மீள மீள சொல்வதன் மூலம் மாற்றமுறும் எல்லா திரைகளுக்குமான 'ஒளி விளக்காக' அதனை ஆக்கிக்கொள்கின்றான். அதன் மூலம் அவனது அனைத்து தற்காலிக உலகங்களும் ஒளிபெறுகின்றன. அது போல அல்குர்ஆன் பல தாற்பரியங்களை உள்ளடக்கியதாக சில விடயங்களை மீள மீள குறிப்பிடுகின்றது. இதற்கான காரணம் நிரந்தரமான ஆட்சியாளனின் கடுமையான எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் மனிதன் அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் கண்ணியப்படுத்துவதற்கே. அந்த எச்சரிக்கை மிகப் பலமான பிடிவாதத்தை உடைத்தெரிகின்றது. இதன் மூலம் ஆன்மாவின் அத்துமீறல்களை விட்டும் மனிதன் விடுதலை பெறுகின்றான். இந்த தற்காலிக திரைகளையும் புதிது புதிதாக உருவாகும் படைப்பினங்களையும் இருளடையச் செய்யாமல் இருகின்றான்.
மனித வாழ்வு எனும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அதன் தோற்றத்தை உருக்குழைக்காமல் இருக்கின்றான். தனக்குச் சார்பாக இருக்கின்ற தற்காலிக நிலமைகளை எதிரானதாக ஆக்காமல் இருக்கின்றான். இவ்வாறு பலமாக மீள மீள வலியுருத்தப்படுகின்ற குர்ஆனுடைய எச்சரிக்கையை ஊகிப்பதை விட்டும் கூட ஷைத்தான் விரண்டோடுகின்றான். நிச்சயமாக நரக வேதனை அதனை செவிதாழ்த்தாத மறுப்பாளர்களுக்கு நீதியானது என்பதை அல்குர்ஆன் வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக, பல பாடங்களும் படிப்பினைகளும் கொண்ட மூஸா (அலை) அவர்களின் கதை – அவர்களின் தடி பற்றிய செய்தி- பல தடவைகள் மீட்டி மீட்டி கூறப்படுகின்றது. அதுபோல ஏனைய நபிமார்களின் கதைகளும் பல நோக்கங்களகை; கருத்திக்கொண்டு மீட்டி மீட்டி கூறப்படுகின்றது.
உதாரணமாக அனைத்து நபிமார்களது நபித்துவங்களையும் முற்படுத்திக் கூறக் காரணம் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது நபித்துவத்தையும் உண்மைப்படுத்துவதற்காகவே. அதாவது இந்நபிமார்கள் அனைவரையும் மறுக்க முடியாத ஒருவரால நபியவர்களையும் அவர்களது நபித்துவத்தையும் மறுக்க முடியாமலேயே இருக்கும். ஏனெனில் ஒருவரால் முழுக் குர்ஆனையும் ஒரே நேரத்தில் முழுமையாக ஓதிவிட முடியாது. அதற்கான சந்தர்ப்பங்களும் இருக்காது. இந்தக் கதைகளை அல்குர்ஆன் மீட்டி மீட்டி கூறுவதானது ஈமானின் முக்கிய அடிப்படைகளை கூறுவது போன்று இருக்கி;ன்றது. இதன் மூலம் நீண்ட மற்றும் மத்திமமான அத்தியாயங்கள் சிறிய குர்ஆனைப் போன்று ஆகிவிடுகின்றன. இந்தக் கதைகள் மீட்டி மீட்டி கூறப்பட காரணங்களும் தாத்பரியங்களும் இருக்கின்றன. அது வீணானவையல்ல. அதில் அற்புதம் நிறைந்துள்ளது என்று நான் கூறுகின்றேன். அதுபோல நபி (ஸல்) அவர்களின் விவகாரம் முழு மனித சமூகத்துக்குமான முக்கிய விவகாரமாகும். அதேநேரம் இப்பிரபஞ்சத்துக்குரிய மிகவும் மகத்துவமிக்க விவகாரம் என்பதை அது நினைவூட்டுகின்றது.
உண்மைதான், அல்குர்ஆனில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உயர்ந்த இடம் குறித்து திட்டவட்டமான வடிவில் பல ஆதாரங்கள் மூலம் ரஸாஇலுந்நூரில் நிறுவப்பட்டுள்ளது. அதேநேரம் ஈமானின் அடிப்படைகளில் நான்கு அடிப்படைகளுடன் சேர்த்து 'லாஇலாக இல்லல்லாஹ்' என்ற அடிப்படைக்குச் சமமான 'முஹம்மத் ரஸூலுல்லாஹ்' என்ற யதார்த்தம் பற்றியும், முஹம்மதியத் தூது பிரபஞ்சத்துக்கான மிக மகத்துவமிக்க உண்மை, அனைத்துப் படைப்பினங்களை விடவும் முஹம்மத் என்பவர் மிகவும் மேன்மையானவர், நபியவர்களின் யதார்த்தத்தை சொல்லும் பூரணத்துவமிக்க கருத்தியல் ஆளுமையும் பரிசுத்த நிலையும் உலகத்தாருக்கு ஒளியூட்டும் இரு சூரியனைப் போன்றன எனவும், அதற்கு அவரும் மிகத் தகுதியானவும் என அதில் நிறுவப்பட்டுள்ளது.
சுவர்கத்துக்கு தூபா மரம் எப்படியோ அதுபோல எதிர்காலத்தில் இந்த சமூகத்துக்கு முஹம்மத் (ஸல்) அவர்களது தூதின் யதார்த்தம் இருக்கும் என்பதனை மறைவானவற்றi அறியும் அல்லாஹ்வுக்கு நன்கு தெரியும். அதாவது ஒரு நன்மையை காட்டிக்கொடுப்பவர் அதனைச் செய்தவரைப் போன்றே என்ற அடிப்படையில் அன்னாரது சமூகம் எக்காலத்திலும் செய்யும் அனைத்து நன்மைகளும் அவர்களை நோக்கியே மீளும். அவர் கொண்டுவந்த வழிகாட்டலின் மூலமே இப்பிரபஞ்சம் ஒளிபெறுகின்றது. அது ஜின், மனித சமூகம், மலக்குகள் ஆகியோருக்கு மாத்திரமல்ல. மாறாக இப்பிரபஞ்சம், வானங்கள், பூமி ஆகிய அனைத்துக்குமாகும். அதனாலே அவை அவருக்கு நன்றிசெலுத்துகின்றன. மில்லியன் கணக்கான நல்ல மனிதர்களது பிரார்த்தனைகள், தாவரங்கள், விலங்ககுகள் என பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தினதும் பிரார்த்தனைகள் ஒவ்வொரு நாளும் நபியவர்களைப் போய்ச் சேருகின்றது. அதுபோல அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் அதன் நன்மையும் நபியவர்களைப் போய் அடையும். காரணம் நபியவர்கள் தான் இவ்வேதத்தைக் கொண்டு வந்தவராவார். சுமாராக மூன்று இலட்சம் எழுத்துக்களைக் கொண்டுள்ள அல்குர்ஆனிலிருநத்து ஓதப்படுகின்ற ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து முதல் ஆயிரம் மடங்கு வரை நன்மைகள் நபியவர்களை சென்றடைகின்றன.
நபியவர்கள் வகிக்கும் இவ்வுயர் நிலையை கருத்திற்கொண்டு மறைவானவற்றை அறிந்த அல்லாஹ் அவனது திருமறையில் நபியவர்களுக்கு முக்கியமானதொரு இடத்தை வழங்கியிருக்கின்றான். அதேநேரம் அவனது வேதத்தில் அவரைப் பின்பற்றுதல், அதன் மூலம் கிடைக்கப் பெறும் அவரது சிபாரிசு ஆகிய இரண்டும் மனித சமூகத்தின் மிக முக்கிய விடயங்களாகும். ஏனெனில் குர்ஆன் மீட்டி மீட்டி சொல்லுகின்ற உண்மைகள் முக்கியத்துவமும் பெறுமானமும் கொண்டவை. மாசற்ற மனித இயல்பு இப்படி மீள மீள கூறப்படுவது விசாலமான பலமிக்க கருத்தியல் அற்புதம் என்பதற்கு சான்றுபகர்கின்றது. ஆனாலும் சடவாத தொற்று நோயால் உள்ளமும் உணர்வும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பின்வரும் அடிப்படைக்குள் அடங்குவர்
'கண்ணோயால் சூரிய ஒளியை ஒருவன் மறுக்கலாம்.
காய்ச்சலினால் தண்ணீரின் சுவையை வாய் மறுக்கலாம்'


