தெனிஸ்லி சிறைச்சாலை தந்த விளைச்சல்களில் ஒன்று: 11ம் ஒளிக்கீற்று

1. Page

தெனிஸ்லி சிறைச்சாலை தந்த விளைச்சல்களில் ஒன்று: 11ம் ஒளிக்கீற்று


இது இறை நிராகரிப்பு மற்றும் நயவஞ்சகத்தை எதிர்த்து ஷரஸாஇலுன் நூர்| முன்வைக்கும் மறுப்பு. அவ்வாறே இது நாம் சிறைப்பட்டிருக்கும் இந்த சிறைச்சாலையில் நாம் முன்வைக்கும் உண்மையான மறுப்பு, இங்கு நாம் அதற்காகவேயன்றி வேறெதற்கும் முயற்சிக்கவில்லை. இந்தக் கட்டுரை தெனிஸ்லி சிறைச்சாலை தந்த விளைச்சல்களில் ஒன்று, அதன் நினைவுகளில் ஒன்று, இது இரு ஜூம்ஆ தினங்களின் அறுவடை. 

بِسْمِ اللهِ الرَّحْنِ الرَّحِيمِ


فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.

அவர் சிறையில் சில வருடங்களைக் கழித்தார்|| (யூஸூப்: 42)

இந்த வசனத்தின் கருத்துப்படி நிச்சயமாக யூஸூப் (அலை) அவர்கள் சிறைக்கதிகளுக்கு ஓர் முன்னோடி. சிறைச்சாலை என்பது ஒரு வகையில் ஷயூஸூபின் பள்ளிக்கூடம்|. ரஸாஇலின் மாணவர்கள் இந்தப் பள்ளிக் கூடத்தில் இரு தடவைகள், பெருந்தொகையாக நுழைந்தார்கள். ஷரஸாஇலுன் நூர்| உறுதிப்படுத்துகின்ற விடயங்களுக்கான சுருக்கத்தை கற்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் பூரண தர்பிய்யத் பயிற்சி பெருவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. தர்பிய்யத்துக்காக திறக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில் அதன் சுருக்கமான கருத்துக்களுக்கும் சிறைச்சாலைக்குமிடையே நெருங்கிய உறவு இருக்கின்றது. அவற்றில் ஐந்து அல்லது ஆறு மையக்கருத்துக்களை சுருக்கமாக விளக்குகின்றோம்.